Tuesday, June 1, 2010

பாரு பதிவு நூறு...


தலைப்ப பார்த்ததும் பயபுள்ளைக்கு   நூறு இடுக்கை போட்டதும் தலைகனம் வந்துருச்சுன்னு யாரும் தப்பா நினைக்காதிங்க இது என் எதிரி ஒருத்தனுக்காக வச்சது.இத படிக்கும் போதெல்லாம் அவன் மூக்கு முன்னூறு பீஸா  வெடிச்சு சிதறனும்.அவன் கதறி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேக்கணும்.உன்னை இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்னு என் கால பிடிச்சு கெஞ்சனும்...

நான் எந்த முயற்சி எடுத்தாலும் என்ன தடுக்காம இனி என் பாதைல அவன் வராம இருக்கணும். என்னோட விஷயத்துல இனி தலையிட கூடாது.என் பதிவுக்கு ஒட்டு  விழாம இருக்கும் பொது உனக்கு எழுத தெரியல இங்க இருந்து கெளம்புனு என்னை விரட்டாம இருக்கணும்.என் கவிதைகளை கிண்டல் பண்ணி என்னடா ரசனை இதுன்னு கடுப்பேத்த கூடாது.நான் மொக்கை பதிவு எழுதுனா வேணும்னே விழுந்து விழுந்து சிரிச்சு காயங்களோட கன்றாவியா வந்து முன்னால நிக்க  கூடாது. என் சகாக்கள் சகிக்களோட பதிவ படிக்கும் பொது சனியன் மாதிரி சவுடால் காட்ட  கூடாது.பின்னுட்டம் போடும்போது இவங்க உன் பதிவு பக்கமே வரலையேன்னு பாசாங்கு காட்டி பாசமில்லாம பேச கூடாது. புது பதிவர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணா உனக்கு இதெல்லாம் தேவையான்னு தேவை இல்லாம கேக்க கூடாது.தமிழ்மணம் என்னை தள்ளிவிட்ட போது தப்பு தாளம் போட்டானே அது கூடவே கூடாது.முக்கியமா என் பக்கத்துலையே அவன் வரகூடாது.இனிமேல் அவனோட ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயம் பதிலடி இருக்குனு அவன் புரிஞ்சுக்கணும்.அதுக்காகத்தான்.

இனிமேல் அவன் என்னை தொல்லை பண்ணா ஈரோடு கதிர் அண்ணே கம்முனு  இருக்க மாட்டாரு...
சுசிக்கா சும்மா இருக்க மாட்டாங்க....
ஸாதி(கா) அக்கா சாதரணமா இருக்க மாட்டாங்க...
அன்புடன் மலிக்கா அக்கா வம்புடன் வருவாங்க...
''என் மனதில் இருந்து''  பிரியா பிரிச்சு மேஞ்சுடுவாங்க.
ப்ரியமுடன் வசந்து வாங்கு வாங்குன்னு வாங்கிடுவான். தேனக்கா திட்டியே தீர்துடுவாங்க...
ஜலி அக்கா ஜக்கம்மா ஆய்டுவாங்க...
நிலாமதி அக்கா நிக்கவச்சு சுடுவாங்க...
பிரியாணி நாஸியா  உனக்கு அவங்க கையால பிரியாணி செஞ்சு பார்ஸல் அனுப்புவாங்க...
மித்திரன் சார் குத்தற சாரா ஆயிடுவாரு...
கமலேஷ் கடுப்பா ஆய்டுவாரு...
காமராஜ் அண்ணா உன்னை கடிச்சுருவாரு...
மங்குனி உனக்கு சங்கு ஊதிடுவாரு...
நிஜாம் அண்ணா நெருப்பா ஆயிடுவாரு...
சிறகுகள் சிவாஜி சீறும் சிங்கமா ஆயிடுவாரு...
ட்ரீமர் ஹரீஷ் சொல்லவே வேண்டாம் பேய் கதை  சொல்லியே உன்னை பீஸ்..பீஸா கிழிச்சுறுவாரு...
மச்சான் உன்னை உச்சா போக வச்சுடுவாரு...
பழனி சுரேஷ் அண்ணா சூப்பு வச்சு குடிச்சுருவாரு...  தமிளுதயம் ரமேஷ்ஜி  ரவ்டியோட வந்து ரணகளம் பண்ணிடுவாரு...
பல்லு டாக்டர் ரோகினி  உன் பல்ல உடச்சு  பல்லாங்குழி ஆடுவாங்க... பலா பட்டறை ஷங்கர்ஜி பதிவெல்லாம் ஒரே நாள் படிக்க வச்சு பழி வாங்குவாரு...
பாலாசி உன்னை பஸ்பம் ஆக்கிடுவாரு....
விழியும் செவியும் பிரபா உன்னை சிலோனுக்கு நாடு கடத்திடுவாரு...   

நல்லா பாத்துக்கடா எனக்கு இவ்ளோ சொந்தங்கள் இருக்கு இன்னும் லிஸ்ட்ல நிறைய பேர் இருக்காங்க அது மட்டும் இல்ல தமிளிஷ்,உலவு,திரட்டி,தமிழ் 10  ,தலைவன்... இப்படி பெரிய பெரிய பதிவ பாப்புலரா ஆக்குற பாசக்கார பங்காளிங்க இருக்காங்க...
டேய் என்னடா பேன்ட் ஈரமாகுது..!!! இதுக்கே நீ இடிஞ்சு போயிருப்ப பாவம் போழச்சுபோ...


ம்ம்ம்ம்...கேக்குது மக்களே அவன் யாருனுதானே கேக்குறீங்க..???அவன்தான்!!! பதிவு எழுத நினைக்கும் பொது இதெல்லாம் இது ஒரு பொளப்புன்னும்.வந்த புதுசுல என்னை ரெம்ப பயம் காட்டுன பய. என் சொந்தங்களின் பதிவ படிக்கும் பொது பேசாம தூங்குனு என்னுடைய எல்லா செயலுக்கும் முட்டு கட்டையா இருக்குறவன்.இருந்தாலும் அவன எனக்கு ரெம்ப பிடிக்கும்.அவன் கூட சண்டை போட்டு போட்டு தடைகளை ஒடச்சு முட்டி எழுந்துச்சு ஒவ்வொரு தடவையும் அவன் மூக்கை உடைக்கும் போதும் அவன எனக்கு ரெம்ப பிடிக்கும்.ஐ லவ் யு டா... நீ இல்லனா என்னால இவ்ளோ தூரம் வந்திருக்க முடியாது. நீ ஒவ்வொரு தடவ தோற்கும்  போதும் நான் ஜெய்க்குறேன்.நன்றி டா..

சரி சரி வந்துட்டேன்...அவன்தான் எனக்குள்ள இருக்குற சிங்கத்த ஏ/சி போட்டு தூங்க வைக்குற என்ன சோம்பேறியா ஆக்குற என் இன்னொரு  மணசு.நான் அவன நல்லா மொக்கை பண்ணிட்டேன் மக்கா  நீங்க கேக்காலாம் சாதுவா இருக்குற உனக்குள்ள  எப்படி இவ்ளோ கோபம், தையிரியம் வந்துச்சு எப்படி சமாளிச்சனு. எல்லாம் நீங்கள் கொடுக்கும் உற்சாக பின்னுட்டமும். என்னை எப்போ ஆன்லைன்ல பார்த்தாலும் பாசமா நலம் விசரிக்க்குறதும்.நீ தனி ஆள் இல நாங்க எப்பவும் உன் கூட இருக்கேன்னு சொல்றதும்,என்னை தம்பியாவும்,நண்பனாவும், அண்ணனாவும்,மாபிள்ளையாவும் பாசமா சொந்தம் கொண்டாடுற உங்களால் மட்டுமே இது சாத்தியம்.நன்றினு ஒரு வார்த்தைல சொல்ல விரும்பல...அன்பு...அன்பு...அன்புன்னு...என் மொத்த அன்பையும் பிராத்தனைகளையும்  உங்கள் அனைவருக்கும் கொடுக்கிறேன்...
37 comments:

கமலேஷ் said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே...
பயணங்களை தொடருங்கள்...
(இருந்தாலும் இவ்வளவு பீதிய கிளப்பி இருக்க வேண்டாம், யார் அந்த எதிரின்னு தெரியாம நானும் லேசா மிரண்டுதான் போயிட்டேன்...)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

முதல் போனி .......

100 வாழ்த்துக்கள்

(எங்கள விட்டுடிங்க)

seemangani said...

கமலேஷ் said...
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே...
பயணங்களை தொடருங்கள்...
(இருந்தாலும் இவ்வளவு பீதிய கிளப்பி இருக்க வேண்டாம், யார் அந்த எதிரின்னு தெரியாம நானும் லேசா மிரண்டுதான் போயிட்டேன்...)

ஹா..ஹா..ஹா..வாங்க கமல்ஜி...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

உலவு.காம் said...

முதல் போனி .......

100 வாழ்த்துக்கள்

(எங்கள விட்டுடிங்க)

உங்களை மறப்பேனா லீட் கிடைக்கல இப்போ பாருங்க... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி உலவு.காம்...

kamaraj said...

நானும் கொஞ்ச நேரம் ஆடிப்போயிட்டேன்.
அப்றம் ஆஹா..
வழ்த்துக்கள்...
அன்பை எப்படியெல்லாம் காட்றாங்க பாருங்க ?
சித்திரமும் கைப்பழக்கம்,எழுத எழுத அழகு. தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் சீமான்கனி.

DREAMER said...

நூறாவது பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..!

அடடே.. நானும் உங்க எதிரி யாரோ எவரோன்னு, தயாரா, ரெண்டு மூணு ஆவிங்களை எடுத்து வச்சிக்கிட்டு சண்டைக்கு தயாரா இருந்தேன்..! கடைசியில அது உங்களுக்குள்ளவே இருக்கிறவன்தானா..! பிரச்சினை என்னன்னா..! அந்த எதிரி எனக்குள்ளும் இருக்கிறாங்க..! அதனால ஆவிகளை மீண்டும் சமாதானப்படுத்தி ஜாடிக்குள் வைத்துவிட்டேன்..!

-
DREAMER

ப்ரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துகள் மாப்ள பட்டாசு கெளப்புங்க....

Sivaji Sankar said...

100வாழ்த்துக்கள் அனாத்த.. :)

soundar said...

வாழ்த்துகள்.... பாஸ்

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள் சீமான்கனி. நான் நூறை நெருங்கிட்டிருக்கேன்

கிறிச்சான் said...

வாழ்த்துக்கள் சீமான்கனி!!!

சுசி said...

ம்ஹூம்.. எனக்கென்னமோ அவன் இன்னும் உங்கள தொல்லை பண்ணனும்னு தோணுது. அப்போதான் நீங்க இன்னும் நல்லா எழுதுவிங்க.

வாழ்த்துக்கள் சீமான்.

//அன்பு...அன்பு...அன்புன்னு...என் மொத்த அன்பையும் பிராத்தனைகளையும் உங்கள் அனைவருக்கும் கொடுக்கிறேன்...//

ஆவ்வ்வ்..
இது ஆனந்த கண்ணீர்..

NIZAMUDEEN said...

நானும் வெறியோடு புறப்பட்டேன்.
ஆனால்...
இவன் தானா!
அவனை இங்கே அனுப்புங்க, நாங்க(?!)
பார்த்துக்கிடுறோம்.
என்ன... வேணாமா?
சரி வுடுங்க.
இருந்தாலும் பீதியை கொஞ்சம்
கிளப்பி விட்டிட்டீங்க. அப்பாடா!
மறந்துட்டேன், 100-க்கு
வாழ்த்துக்கள்!

seemangani said...

kamaraj said...

//நானும் கொஞ்ச நேரம் ஆடிப்போயிட்டேன்.
அப்றம் ஆஹா..
வழ்த்துக்கள்...
அன்பை எப்படியெல்லாம் காட்றாங்க பாருங்க ?
சித்திரமும் கைப்பழக்கம்,எழுத எழுத அழகு. தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் சீமான்கனி.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே...

DREAMER said...

//நூறாவது பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..!

அடடே.. நானும் உங்க எதிரி யாரோ எவரோன்னு, தயாரா, ரெண்டு மூணு ஆவிங்களை எடுத்து வச்சிக்கிட்டு சண்டைக்கு தயாரா இருந்தேன்..! கடைசியில அது உங்களுக்குள்ளவே இருக்கிறவன்தானா..! பிரச்சினை என்னன்னா..! அந்த எதிரி எனக்குள்ளும் இருக்கிறாங்க..! அதனால ஆவிகளை மீண்டும் சமாதானப்படுத்தி ஜாடிக்குள் வைத்துவிட்டேன்..!

-
DREAMER//


விரட்டிராடீங்க...ஹரீஷ்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹரீஷ் ...

seemangani said...

ப்ரியமுடன்...வசந்த் said...

//வாழ்த்துகள் மாப்ள பட்டாசு கெளப்புங்க....//

கெளப்பிருவோம்..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாப்ள...

Sivaji Sankar said...

//100வாழ்த்துக்கள் அனாத்த.. :)//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவா...

soundar said...

//வாழ்த்துகள்.... பாஸ்//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுந்தர்..பதிவுகள் பிடிச்சு இருந்த தொடர்ந்து வாங்க...

தமிழ் உதயம் said...

//வாழ்த்துகள் சீமான்கனி.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமேஷ்ஜி

//நான் நூறை நெருங்கிட்டிருக்கேன்//

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

கிறிச்சான் said...

//வாழ்த்துக்கள் சீமான்கனி!!!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிறிச்சான்...

seemangani said...

சுசி said...

//ம்ஹூம்.. எனக்கென்னமோ அவன் இன்னும் உங்கள தொல்லை பண்ணனும்னு தோணுது. அப்போதான் நீங்க இன்னும் நல்லா எழுதுவிங்க.

வாழ்த்துக்கள் சீமான்.///

//அன்பு...அன்பு...அன்புன்னு...என் மொத்த அன்பையும் பிராத்தனைகளையும் உங்கள் அனைவருக்கும் கொடுக்கிறேன்...//

ஆவ்வ்வ்..
இது ஆனந்த கண்ணீர்..//

அதான் கடைசில ''ஐ லவ் யு'' சொல்லி கம்ரமைஸ் ஆயடேன்ல சுசிக்கா...
அன்புக்கும் ஆனந்த கண்ணீருக்கும் நன்றி சுசிக்கா...

NIZAMUDEEN said...

//நானும் வெறியோடு புறப்பட்டேன்.
ஆனால்...
இவன் தானா!
அவனை இங்கே அனுப்புங்க, நாங்க(?!)
பார்த்துக்கிடுறோம்.
என்ன... வேணாமா?
சரி வுடுங்க.
இருந்தாலும் பீதியை கொஞ்சம்
கிளப்பி விட்டிட்டீங்க. அப்பாடா!
மறந்துட்டேன், 100-க்கு
வாழ்த்துக்கள்!//

பாவம் பொழச்சு போகட்டும் ....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிஜாம் அண்ணா...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே !

நிலாமதி said...

ஆமா நிலாமதி அக்கா நிற்க வைத்து சுடுவாவா....அது தூக்கி பழக்க மிலைங்க.. வேணு மின்னா
அகப்பைக் கம்பால நாலு இழு இழுத்து விடுறேன்.

seemangani said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே !//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பனித்துளி சங்கர்..
பதிவுகள் பிடிச்சு இருந்த தொடர்ந்து வாங்க...


நிலாமதி said...

//ஆமா நிலாமதி அக்கா நிற்க வைத்து சுடுவாவா....அது தூக்கி பழக்க மிலைங்க.. வேணு மின்னா
அகப்பைக் கம்பால நாலு இழு இழுத்து விடுறேன்.//


நிலாமதி டீச்சர் அக்கா நிஜமாதான் சொல்லறீங்களா...அவன் பாவம் இல்லையா...ஹி...ஹி...ஹி...

அடிக்குற கைதான் அணைக்கும் நீங்க அடிங்ககா அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு....அவ்வ்வவ்வ்வ்.....

அன்புக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலாக்கா..

சி. கருணாகரசு said...

நூறாவது பதிவுக்கு எனதினிய வாழ்த்துக்கள்....

ஆரம்பத்தில்... ஏதோ என்னமோ என்று பயந்தேன்.

அன்புடன் மலிக்கா said...

ஏன்ம்மா என்னப்பாத்தா வம்பு பண்ணுறவுகபோல இருக்கா மக்கா. நான் பாவம் பச்சபுள்ள வேணுமுன்னா மச்சான கேட்டுப்பாருங்க !

ஆத்தா ஜலீ ஜக்கம்மா வந்துபோயிட்டீகளா இப்பக்கம்.

விருது கொடுத்துயிருக்கேன் வந்து வாங்கிக்கோங்க..http://niroodai.blogspot.com/2010/06/blog-post_02.html

அன்புடன் மலிக்கா said...

நூறாவதுக்கு வாழ்த்தோ வாழ்த்துக்கள்.

seemangani said...

சி. கருணாகரசு said...
//நூறாவது பதிவுக்கு எனதினிய வாழ்த்துக்கள்....

ஆரம்பத்தில்... ஏதோ என்னமோ என்று பயந்தேன். //

சும்மாகாச்சுக்கும்.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கருணா அண்ணா...


அன்புடன் மலிக்கா said...
//ஏன்ம்மா என்னப்பாத்தா வம்பு பண்ணுறவுகபோல இருக்கா மக்கா. நான் பாவம் பச்சபுள்ள வேணுமுன்னா மச்சான கேட்டுப்பாருங்க !//

ஆமாவா கா அது அப்டியே ப்லோவ்ல வந்துருச்சு கா மனசுல வச்சுகாதீக...


//ஆத்தா ஜலீ ஜக்கம்மா வந்துபோயிட்டீகளா இப்பக்கம்.//

ஜலி அக்கா இன்னும் வரலை அவக வாழ்த்துக்கும் வாழ்த்துக்கும் !!!காத்து இருக்கிறேன்...வாழ்த்துக்கும் அன்பு விருதுக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் அக்கா...

ஸாதிகா said...

நூறுக்கு வாழ்த்துக்கள்.நாங்கதான் முதல்லேயே கடைசி இரண்டு பாராவையும் படிச்சிட்டுத்தானே முதல் பாராவை படிச்சோம்.(தம்பியை பற்றி தெரிந்துதான்)

seemangani said...

ஸாதிகா said...

//நூறுக்கு வாழ்த்துக்கள்.நாங்கதான் முதல்லேயே கடைசி இரண்டு பாராவையும் படிச்சிட்டுத்தானே முதல் பாராவை படிச்சோம்.(தம்பியை பற்றி தெரிந்துதான்) //

அதானே பார்த்தேன்..அக்காவா கொக்கா..
அன்புக்கும், வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஸாதி(கா)...

ரோகிணிசிவா said...

//என் எதிரி ஒருத்தனுக்காக வச்சது//

mudiyala ethiri ya vara sollunga
motha pallum ututhu thareen

seemangani said...

உங்க சின்சியாரிட்டி எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு டாக்டர்...ரெம்ப பிடிச்சிருக்கு
வருகைக்கும் உங்க பாசத்துக்கும் மகிழ்ச்சி டாக்டர்...

அக்பர் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

நமெக்கு எதிரி வெளியில இல்லைங்கிறதை அழகா சொல்லியிருக்கீங்க. அருமை.

seemangani said...

அக்பர் said...

//100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

நமெக்கு எதிரி வெளியில இல்லைங்கிறதை அழகா சொல்லியிருக்கீங்க. அருமை.//

நன்றி அக்பர் உங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு பெரிய உற்ச்சாகம் தருது...பதிவுகள் பிடிச்சு இருந்த தொடர்ந்து வாங்க...

ஸாதிகா said...

வாழ்த்துக்கள். இன்னும் பலசதங்கள் தொட வாழ்த்துக்கள்.கவிஞ்ர் சீமாகனி வித்தியாசமாகவும்,கலர்கலராகவும் இட்ட இவ்விடுகை கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

ஸாதிகா said...

இரண்டு முறை வாழ்த்திவிட்டேன்.

seemangani said...

ஸாதிகா said...
//இரண்டு முறை வாழ்த்திவிட்டேன். //

வர போகிற ௦200க்கு சேர்த்து வாழ்த்தோ...
என் அன்பான அக்காக்கு நன்றிகள்...

Jaleela Kamal said...

ரொம்ப ரொம்ப சாரி லேட்டா வந்துட்டேன்.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் பல 100 போட வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

ஐய்யோ இதென்ன ஆளுக்கொரு பேர வச்சி பயங்காட்டுரீங்க.

100 வது பதிவு வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

seemangani said...

Jaleela Kamal said...

//ரொம்ப ரொம்ப சாரி லேட்டா வந்துட்டேன்.//

நீங்க வந்துதான் வாழ்த்து சொல்லனுமா கா மனசுல நெனச்சாலே போதும் தம்பி புரிஞ்சுக்குவேன்

//ஐய்யோ இதென்ன ஆளுக்கொரு பேர வச்சி பயங்காட்டுரீங்க.//

எல்லோரும் பயப்படனும்னுதான்...

//100 வது பதிவு வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் //

வாழ்த்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி..
நன்றி ஜலிக்கா ...

Jaleela Kamal said...

அன்று இந்த பதிவ படிச்சிட்டே இருக்கும் போது அபப்டியே குளோஸ் ஆகிவிட்டது.
சரியான சிரிப்பு ,பையன் எனன் மம்மி அத ப்கம்பியுட்டர பார்த்து சிரிக்கிறீஙக் என்றான்.

அவ்வளவு பேரையும் தராசுல நிருத்து வைத்து இருக்கீங்களா.

இரண்டாவது முறை 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

சிவன். said...

வாழ்த்துக்கள் மச்சான்..!!!

seemangani said...

Jaleela Kamal said...
//அன்று இந்த பதிவ படிச்சிட்டே இருக்கும் போது அபப்டியே குளோஸ் ஆகிவிட்டது.
சரியான சிரிப்பு ,பையன் எனன் மம்மி அத ப்கம்பியுட்டர பார்த்து சிரிக்கிறீஙக் என்றான்.

அவ்வளவு பேரையும் தராசுல நிருத்து வைத்து இருக்கீங்களா.

இரண்டாவது முறை 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.//

தராசுதான் அக்கா ஆனால் அந்த தராசில் முள் இல்லை...
மூன்று முறை , வருகைக்கும்,அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜலிக்கா ...


சிவன். said...
//வாழ்த்துக்கள் மச்சான்..!!!//

வாழ்த்துக்கும் வருகைக்கும்

Related Posts with Thumbnails