தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் தொடர்ந்து கடைசி வரை படிக்கவும்.முந்தைய பாகங்கள் அனைத்தும் இங்கே....
விலாசம் பிடிக்க விசுக்கென்று புத்திக்கு எட்டியது
அவள் மயங்கி கிடந்த மருத்துவமனை.
வரவேற்ப்பு வட்டாரத்தில் அவளின் விபரம் சொல்லி
விலாசம் கேட்க வார்டு நம்பர் 307 என்றது பதிவேடு!!#@?*
எனக்குள்ளே எழுகிறது எத்தனை கேள்விகள்.
விடுபோய் சேரலையோ??ஏதும் விபரீதமோ??விபரம் சரிதானோ???
விறு விறுவென விரைந்தேன் வார்டு நம்பர் 307.
நரம்பியல் பிரிவு...
நரக தவிப்பிலிருந்து நடுக்கத்தோடு சில நரன்கள்.
நரம்புகள் நசுக்கப்பட்டு நகரத்துடிக்கும் - ஒரு
நான்குவயது பட்டாம்பூச்சி - சற்று தொலைவில் சக்கர
நாற்காலியில் சரிந்து கிடந்தது என் குலச்சாமி.
கொண்டுவந்த கோபத்தை
குப்பையில் கொட்டிவிட்டு.
குருட்டு கண் துடைத்து
குறுகுறுவென பார்கிறேன்.
தமிழா!!! ஆம், தமிழேதான் தனிமையில்.
என்னை கண்டதும் அவள் கண்ணங்களில்
நீர்தெளித்து நீண்ட கோலம் வரைகிறது கண்ணீர்த்துளிகள்.
சாலைகளில் சக்கரமாய் சுற்றித் திரிந்தவள் - நீ
எதற்கு சக்கர நாற்காலியில்?!.சத்தியம் சொல் என்றேன்.
சங்கடத்தோடு சன்னமாய் வாய்திறந்து - நான்
சபிக்கப்பட்டவள் என்றாய்.
கால்களை கட்டுப்படுத்தும் மூளைநரம்பு
நஞ்சு உண்டு நசுங்கி - மூச்சை
நிறுத்திகொண்டதாம் என்றாய்.
சலனமின்றி செத்துபோனேன் நான்.
கல்லூரிச்சலையில் - உன் கால்தடங்களை முத்தமிட
பூமரத்தின் பிடியிலிருந்து பூமிவரும்
புங்கை மலர்களுக்கு பதிலென்ன சொல்ல?-நீ
புடவை கட்டி புத்தகம் சுமந்து
வருடம்தோறும் வசந்தம் வீச - உன்
வாயுதிர்க்கும் புன்னகை பூக்களை
பொக்கிஷமாய் பாவிக்கும் பருவகாலத்துக்கு
பதிலென்ன சொல்ல?
உன் கைபிடிக்க காத்திருக்கும் பேருந்து
கம்பிகள் கேட்க்குமே பதிலென்ன சொல்ல.
நீ காத்திருக்கவே கார்பரேசன் கனவான்கள்
கட்டிவைத்த நிழற்குடை நிறுத்தாமல் கேட்க்குமே
பதிலென்ன சொல்ல?
ஏதோ ஒரு பேருந்தில் எப்போதுமே - உன்
ஸ்பரிசத்திற்காக அழும் அழகு குழந்தைக்கு
பதிலென்ன சொல்ல?
பாவை அவள் பாவையானால் எனவா?
பூமிக்கும் அவளுக்குமான பாத
பந்தங்களை பறித்துக் கொண்டான்
படைத்தவன் எனவா?
சக்கர நாற்காலியே சகலமும் என்று
சரனானால் எனவா?
என்ன சொல்ல யாரை சொல்ல???
நானே காரணம் என்று நானிபோனேன்.
நடுங்கும் கைகளை நறுக்கென்று பற்றி
நஞ்சு விழுங்கியது என் தவறு,
நானே காரணம் என்று கைகளை
நனைக்கிறாய் கண்ணீரால்.
இன்னும் நீங்கள் என்னை....???என்றாய்
என்றும் நீதான்..... என்றேன் நான்.
இனி என்னால் நடக்க முடியாது என்றாய்
நரம்பு மட்டுமல்ல - உன்
நம்பிக்கையும் நசுங்கிபோய் இருந்தது
உன்னிடம்...
(தொடரும்...)
விலாசம் பிடிக்க விசுக்கென்று புத்திக்கு எட்டியது
அவள் மயங்கி கிடந்த மருத்துவமனை.
வரவேற்ப்பு வட்டாரத்தில் அவளின் விபரம் சொல்லி
விலாசம் கேட்க வார்டு நம்பர் 307 என்றது பதிவேடு!!#@?*
எனக்குள்ளே எழுகிறது எத்தனை கேள்விகள்.
விடுபோய் சேரலையோ??ஏதும் விபரீதமோ??விபரம் சரிதானோ???
விறு விறுவென விரைந்தேன் வார்டு நம்பர் 307.
நரம்பியல் பிரிவு...
நரக தவிப்பிலிருந்து நடுக்கத்தோடு சில நரன்கள்.
நரம்புகள் நசுக்கப்பட்டு நகரத்துடிக்கும் - ஒரு
நான்குவயது பட்டாம்பூச்சி - சற்று தொலைவில் சக்கர
நாற்காலியில் சரிந்து கிடந்தது என் குலச்சாமி.
கொண்டுவந்த கோபத்தை
குப்பையில் கொட்டிவிட்டு.
குருட்டு கண் துடைத்து
குறுகுறுவென பார்கிறேன்.
தமிழா!!! ஆம், தமிழேதான் தனிமையில்.
என்னை கண்டதும் அவள் கண்ணங்களில்
நீர்தெளித்து நீண்ட கோலம் வரைகிறது கண்ணீர்த்துளிகள்.
சாலைகளில் சக்கரமாய் சுற்றித் திரிந்தவள் - நீ
எதற்கு சக்கர நாற்காலியில்?!.சத்தியம் சொல் என்றேன்.
சங்கடத்தோடு சன்னமாய் வாய்திறந்து - நான்
சபிக்கப்பட்டவள் என்றாய்.
கால்களை கட்டுப்படுத்தும் மூளைநரம்பு
நஞ்சு உண்டு நசுங்கி - மூச்சை
நிறுத்திகொண்டதாம் என்றாய்.
சலனமின்றி செத்துபோனேன் நான்.
கல்லூரிச்சலையில் - உன் கால்தடங்களை முத்தமிட
பூமரத்தின் பிடியிலிருந்து பூமிவரும்
புங்கை மலர்களுக்கு பதிலென்ன சொல்ல?-நீ
புடவை கட்டி புத்தகம் சுமந்து
வருடம்தோறும் வசந்தம் வீச - உன்
வாயுதிர்க்கும் புன்னகை பூக்களை
பொக்கிஷமாய் பாவிக்கும் பருவகாலத்துக்கு
பதிலென்ன சொல்ல?
உன் கைபிடிக்க காத்திருக்கும் பேருந்து
கம்பிகள் கேட்க்குமே பதிலென்ன சொல்ல.
நீ காத்திருக்கவே கார்பரேசன் கனவான்கள்
கட்டிவைத்த நிழற்குடை நிறுத்தாமல் கேட்க்குமே
பதிலென்ன சொல்ல?
ஏதோ ஒரு பேருந்தில் எப்போதுமே - உன்
ஸ்பரிசத்திற்காக அழும் அழகு குழந்தைக்கு
பதிலென்ன சொல்ல?
பாவை அவள் பாவையானால் எனவா?
பூமிக்கும் அவளுக்குமான பாத
பந்தங்களை பறித்துக் கொண்டான்
படைத்தவன் எனவா?
சக்கர நாற்காலியே சகலமும் என்று
சரனானால் எனவா?
என்ன சொல்ல யாரை சொல்ல???
நானே காரணம் என்று நானிபோனேன்.
நடுங்கும் கைகளை நறுக்கென்று பற்றி
நஞ்சு விழுங்கியது என் தவறு,
நானே காரணம் என்று கைகளை
நனைக்கிறாய் கண்ணீரால்.
இன்னும் நீங்கள் என்னை....???என்றாய்
என்றும் நீதான்..... என்றேன் நான்.
இனி என்னால் நடக்க முடியாது என்றாய்
நரம்பு மட்டுமல்ல - உன்
நம்பிக்கையும் நசுங்கிபோய் இருந்தது
உன்னிடம்...
(தொடரும்...)
20 comments:
கவிதை கலோக்கோ கலக்கல்...வாழ்த்துகள்
//நரம்பு மட்டுமல்ல - உன்
நம்பிக்கையும் நசுங்கிபோய் இருந்தது
உன்னிடம்..// த்சோ...
கவிதை அருமை தொடருங்கள்...!!
நல்ல எழுதியிருக்கீங்க பாஸ்.
கொண்டுவந்த கோபத்தை
குப்பையில் கொட்டிவிட்டு.
வார்த்தை ஜாலங்கள்... அற்புதம்.
சீமான் வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் வலைப்பக்கம் வருகிறேன் நல்ல முன்னேற்றம்
நரம்பு மட்டுமல்ல - உன்
நம்பிக்கையும் நசுங்கிபோய் இருந்தது
உன்னிடம்...
நம்பிக்கையில்லை எனில் வாழ்வே இல்லை எனவே என்றும் நம்பிக்கையிழக்க வேண்டாம்
கனம் நிறைந்த வரிகள்
Arumaiyana kavithai.. Vaalthukkal..
வணக்கம் உங்கள் பக்கம் முதன் முதலாக வருகிறேன்.முன் பக்கத்திலிருந்த பதிவுகள் பார்த்தேன்.அருமை.மாறிய கைகளின் சிந்தனை அருமை அருமை.
இந்தக் கவிதையும் அழகாகத் தொடங்கியிருகிறது.தொடரும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.துணிவு கொடுக்கும் நம்பிக்கையோடான வரிகள்.இன்னும் வருவேன் சீமான்.இந்தப் பெயரில்கூட ஒரு நம்பிக்கை !
மனதைத் தொடும் உணர்வுகளின் தொகுப்பாய்...
க(வி)தை! கருப்பு-வெள்ளையில் இருட்டு
நிறத்தில் அந்தப் படம்...
கவிதைக்குப் பொருத்தம்.
rk guru said...
//கவிதை கலோக்கோ கலக்கல்...வாழ்த்துகள் //
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குரு...பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...
ஸாதிகா said...
//நரம்பு மட்டுமல்ல - உன்
நம்பிக்கையும் நசுங்கிபோய் இருந்தது
உன்னிடம்..// த்சோ... //
எல்லாம் சுபமாய் முடியும்... நோ பீலிங்க்ஸ்...ஸாதிகா அக்கா நன்றி...
ஜெய்லானி said...
//கவிதை அருமை தொடருங்கள்...!!//
முந்தய பாகங்களையும் படித்தால் புரியும்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அஹமது இர்ஷாத் said...
//அருமை நண்பா...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷா...
அக்பர் said...
//நல்ல எழுதியிருக்கீங்க பாஸ்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்...
தமிழ் உதயம் said...
//கொண்டுவந்த கோபத்தை
குப்பையில் கொட்டிவிட்டு.
வார்த்தை ஜாலங்கள்... அற்புதம்.//
உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றிகள் ரமேஷ்ஜி...
sakthi said...
//சீமான் வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் வலைப்பக்கம் வருகிறேன் நல்ல முன்னேற்றம்//
நன்றி சக்தி கா..
//நரம்பு மட்டுமல்ல - உன்
நம்பிக்கையும் நசுங்கிபோய் இருந்தது
உன்னிடம்...
நம்பிக்கையில்லை எனில் வாழ்வே இல்லை எனவே என்றும் நம்பிக்கையிழக்க வேண்டாம்//
சக்தி கா இது கதையில் வரும் ஒரு காட்சிதான் முந்தய பாகங்களையும் படித்தால் புரியும்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி கா..
யாதவன் said...
//கனம் நிறைந்த வரிகள்//
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி யாதவன்...பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...
SHAMIMA said...
//Arumaiyana kavithai.. Vaalthukkal..//
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஷமீமா...என் சகோதரியின் பெயரும் உங்கள் பெயர்தான். பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...
ஹேமா said...
//வணக்கம் உங்கள் பக்கம் முதன் முதலாக வருகிறேன்.முன் பக்கத்திலிருந்த பதிவுகள் பார்த்தேன்.அருமை.மாறிய கைகளின் சிந்தனை அருமை அருமை.//
நன்றி...
//இந்தக் கவிதையும் அழகாகத் தொடங்கியிருகிறது.தொடரும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.துணிவு கொடுக்கும் நம்பிக்கையோடான வரிகள்.இன்னும் வருவேன் சீமான்.இந்தப் பெயரில்கூட ஒரு நம்பிக்கை !//
வணக்கம் ஹேமா வாங்க நலமா?? வசந்தின் பக்கத்தில் உங்கள் கருத்துகளை பார்த்திரிக்கிறேன்...இது தொடக்கம் இல்லை இதை ஒரு தொடராய் எழுதுகிறேன் நேரம் இருந்தால் படித்து பாருங்க.உங்கள் வருகை எனக்கு உற்ச்சகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.
NIZAMUDEEN said...
//மனதைத் தொடும் உணர்வுகளின் தொகுப்பாய்...
க(வி)தை! கருப்பு-வெள்ளையில் இருட்டு
நிறத்தில் அந்தப் படம்...
கவிதைக்குப் பொருத்தம்.//
நன்றி நிஜாம் அண்ணா. என்ன ரெம்ப வேலை பளுவோ??பதிவுகளை காணோம்??
என்ன இப்டி ஒரு ட்விஸ்டு??
நல்லா இருக்கு.
சுசி said...
//என்ன இப்டி ஒரு ட்விஸ்டு??
நல்லா இருக்கு. //
சுபமாக முடிக்கத்தான் இந்த ட்விஸ்டு சுசிக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசிக்கா...
ஆஜர் சார் , நமக்கு கவிதா சே .... கவிதை ரொம்ப தூரம் (அது என்னமோ வரவே மாட்டேங்குது சார் )
/////கால்களை கட்டுப்படுத்தும் மூளைநரம்பு
நஞ்சு உண்டு நசுங்கி - மூச்சை
நிறுத்திகொண்டதாம் என்றாய்.
சலனமின்றி செத்துபோனேன் நான்.////
வால் வீசும் வார்த்தைகள் . கவிதை மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி
உன் கால்தடங்களை முத்தமிட
பூமரத்தின் பிடியிலிருந்து பூமிவரும்
புங்கை மலர்களுக்கு பதிலென்ன சொல்ல?-//
எதையும் இட்டு நிரப்ப முடியாத அழகு இருக்கிறது இதில் கனி
மங்குனி அமைச்சர் said...
//ஆஜர் சார் , நமக்கு கவிதா சே .... கவிதை ரொம்ப தூரம் (அது என்னமோ வரவே மாட்டேங்குது சார் ) //
கவலை படாதிங்க அமைச்சரே கவிதா வந்துட்டா கவிதை தானா வரும்...வருகைக்கு நன்றி ....
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/////கால்களை கட்டுப்படுத்தும் மூளைநரம்பு
நஞ்சு உண்டு நசுங்கி - மூச்சை
நிறுத்திகொண்டதாம் என்றாய்.
சலனமின்றி செத்துபோனேன் நான்.////
//வால் வீசும் வார்த்தைகள் . கவிதை மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி//
நன்றி ஷங்கர்...உங்களை நான் தொடர்கிறேன் ஆனால் உங்கள் புதிய பதிவுகள் எனக்கு தெரிவதில்லையே என்???
thenammailakshmanan said...
//உன் கால்தடங்களை முத்தமிட
பூமரத்தின் பிடியிலிருந்து பூமிவரும்
புங்கை மலர்களுக்கு பதிலென்ன சொல்ல?-//
//எதையும் இட்டு நிரப்ப முடியாத அழகு இருக்கிறது இதில் கனி//
வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி நன்றி தேனக்கா...
நல்லா இருக்கு.
கலாநேசன் said...
//நல்லா இருக்கு.//
வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி நன்றி கலாநேசன்....
Post a Comment