Monday, July 19, 2010

நான் களவாணி-1

களவாணி தலைப்பை பார்த்ததும் படவிமர்சனம்னு நம்ம்பி வந்தவங்கள் மன்னிக்கணும்.படத்தோட விமர்சனம் பார்த்தேன் அப்டியே எனக்கும் நான் செஞ்ச  களவானித்  தனங்கள் நினைவுக்கு வந்துச்சு  அதன்  தொகுப்புதான்   இது.  (பயபுள்ளைக்கு பேருமைய  பாத்தியா??)

முதல் களவாணித்தனம்...
அப்போ எனக்கு மூணு வயசு இருக்கும் அதெல்லாம் நியாபகம் இருக்கானு கேக்குறது புரியுது இது எங்க அத்தமா(பாட்டி)சொன்னது.
சின்னமனூர் அது நான் பிறந்த ஊர் தேனீ பக்கத்துல இருக்கு.ஒருநாள்  சாயங்காலம் என்னை சீவி சிங்கரிச்சு வீட்டு வாசல் முன்னாடி வேடிக்கை பார்க்க உட்கார வச்சுட்டு அம்மா ஏதோ வேலையா உள்ள போய்ட்டாங்களாம்.வந்து பார்த்தா எனைய காணோம்.(எந்த பொண்ணு பின்னால போனியோ??யாருக்குத் தெரியும்.)உடனே பதறிபோய் அம்மா ஒரு பக்கம்,  அத்தா(அப்பா)  ஒருபக்கம்,  அப்பா (தாத்தா) ஒருபக்கம்னு ஊர்முழுக்க தேடுறாங்களாம். அங்க தண்டோரா அடிக்குரவற கூப்பிட்டு இன்னார் பேரனை காணோம்னு தண்டோரா அடிச்சாங்களாம். ராத்திரி  ஒன்பது   மணியாச்சு ஒருதகவலையும் காணோம். அடுத்த கட்ட நடவடிக்கையா கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்தா சன்மானம் குடுக்குறதா தண்டோரா போட்டாங்களாம்.அதுக்கு அப்றம் ஒருத்தர் தூக்கிட்டு வந்து வீட்டுல விட்டாராம்.அங்க நடந்தத அவரு சொன்னாராம்.

நான் வீட்டுல இருந்து கிளம்பி நேரா நடந்து பஸ்டாண்டு வரைக்கும் போயிருக்கேன். அதுக்குமேல போகத்தெரியாம அங்கேயே நின்னு  அழுதுருக்கேன். அத பார்த்த ஒருத்தர் என்னை யாரு கேட்டுருக்காரு எனக்கு எதுவும் சொல்லதெரியல.அப்றம் பக்கத்துல இருந்த ஒரு டீகடைக்கு கூப்பிட்டு போய் என்ன வேணும்னு கேட்டுருக்காரு. நானும்  இதுதாண்டா  சான்ஸ்னு  நான்பாட்டுக்கு    பன்னு(BUN ), கேக்குனு  வாங்கி சாப்ட்டுட்டு அவரை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவர் பக்கத்துலையே உட்கார்ந்துட்டேனாம்.(பயபுள்ள ஒரு பன்ன பார்த்ததும் பல்ல ஈளிச்சுடானே!!)அப்றம் அவரு விசாரிச்சு வீட்டுல வந்து விட்டுட்டாரு.அவருக்கு எங்கப்பா(தாத்தா)எவ்ளவோ பணம் குடுத்து நன்றி சொன்னாராம்.

அடுத்தது  மூணாவது படிக்கும் பொது டூருக்குபோக நான் செஞ்ச களவாணி தனத்தை  இங்க படிக்கலாம் ஆனா விழுந்து விழுந்து சிரிக்கக்கூடாது.  ஐயம் பாவம் அப்போ நான் சின்னபுள்ள.

 அடுத்து இரு ஒரு பயங்கரமான அனுபவம்.இத, தானா தற்கொலைனு சொல்லலாம் அந்த மாதிரி.மதுரைல ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும்போது நடந்தது.நான் ஸ்கூலுக்கு போற வழில ஒரு குளம் இருக்கும்.அனால் அந்தபக்கமே நான் போனது இல்லை. ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சு வந்துகிட்டு இருக்கும்போது அந்த குளத்தை சுத்தி ஒரே கூட்டம்.அப்பவும் எதுவும் கண்டுக்காம நான் வீட்டுக்கு போயிட்டேன்.என் நண்பன் பாலா வந்து டேய் அந்த குளத்துல யாரோ ஒருத்தன் ஒரு சின்ன பிள்ளைய கொலபன்னி  வீசிட்டு போயிட்டானாம் டா.வா போய் பாக்கலாம்னு கூப்பிட்டான்.அம்மா அத கேட்டதும் டே அந்தப்பக்கம் போன... கொண்டேபோடுவேன். ஒழுங்கா அடக்கமா இங்கே இருன்னு சொல்லிட்டு எங்கயோ போய்ட்டாங்க.அப்போ நண்பன் சொன்னான் டே  அம்மா சொன்னா அதெல்லாம் சும்மா டா வாடா பார்த்துட்டு வருவோம்னு சொல்ல யாருக்கும் தெரியாம  அந்த குளத்துக்கு போனோம்.அங்க....

 ஒரு சின்ன பொண்ணு மிதக்குது கை, கால்  எல்லாம் வீங்கி இருக்கு பார்க்கவே பயங்கரமா பயமா  இருந்துச்சு.யாரோ ஒரு படுபாவி நகைக்காக கொலை பண்ணிருக்கான்.அங்க இருந்து ஒரே ஓட்டமா வீட்டுக்கு வந்துட்டேன்.அவ்ளோதான் ராத்திரி முழுசும் தூக்கம் வரலை கை கால்லாம் நடுங்குது காயிச்சல் வந்துருச்சி.டாக்டர், ஊசி,மந்திரிக்குறது எதுவும் கேக்கல.அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அத மறந்தேன் சரியா போச்சு.
அடுத்து எனக்கு அத்தா(அப்பா) கொண்டாடுன வித்யாசமான  பிறந்தநாள் இங்கே இருக்கு.இதையும் படிங்க.   (ஏண்டா இப்டி கொன்னு கொலைய அக்குற...)

அடுத்து அத்தாவின் (அப்பா)வேலை காரணமா சென்னை வந்துட்டோம்.  ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது.அப்போ சென்னை,மெட்ரோ ரயில்,பீச்சு எல்லாம் எனக்கு புதுசு.பீச்சுக்கு போகரெம்ப ஆசை ரெம்பநாளா வீட்டில் யாருமே கூப்பிட்டு போகலை.என் நம்பன் அவனை அப்படிதான் சொல்லணும் அவ்வளோ நம்புனேன் அவனை.அவனும் நானும்  பீச்சுக்கு போக  திட்டம் போட்டு வீட்டுல கிரவுண்டுக்கு போறேன்னு சொல்லிட்டு கூழ் ட்ரிங்க்ஸ் குடிக்க அம்மாகிட்ட காச ஆட்டைய போட்டு கேளம்பிட்டோம்.நான் அவனை கேட்டேன் ரயில் பீச்சுக்கு போகுமான்னு.(கப்பல்தானே போகும்)அவன் சொன்னான் ஓ... போகுமே.அப்போ அதுலயே போகலாம்னு முடிவு பண்ணியாச்சு.சைதாப்பேட்டை ஸ்டேசன்ல டிக்கெட் எடுத்துட்டோம்.பீச்சு எத்தனாவது ஸ்டேசன்னு கவுண்டர்ல கேட்டோம் அவரு கடைசி ஸ்டேசன்னு சொன்னாரு.நாங்களும் அடுத்து வந்த ரயிலில்  ஏறி கதை பேசிட்டே போறோம். ரெம்பநேரம் ஆச்சு.கடைசியா ஒரு ஸ்டேசன்ல எல்லோரும்  இறங்குனாங்க.அப்போ ஒருத்தர் கிட்ட இதுதான்  லாஸ்ட்டானு   (அப்பகூட பீச்சு ஸ்டேசன்னு  கேக்கத் தெரியால ஹையோ..ஹையோ..) கேட்டோம் அவரும் ஆமான்னு சொல்ல எறங்கி பார்த்தா அது தாம்பரம்.டே என்னடா தாம்பரம்னு போட்டிருக்கு அப்போ பீச்சு  இல்லையா??டேய் லூசு(யாரு லூசு???) இங்கதாண்ட பீச்சு இருக்கு வா... எனக்கு     தெரியும்-னு   நடக்குறான் நானும் அவன் கூடவே நடந்து போறேன்.ரெம்ப தூரம் வந்தும் பீச்சுக்கு உண்டான ஒரு அறிகுறியும் தெரியல.ரெம்ப நொந்து போய் கேட்டேன் டேய் தெரியாதுன சொல்லிருடா இப்டியே போய்டுவோம்.முடியல ரெம்ப வலிக்குது(அவ்வ்வ்வ்....)அவன் சொன்னான் தெரியலடா...மறந்து போச்சி.அப்போதான் எனக்கு தெரியும் பயபுள்ள இதுவும் இப்போதான் முதல் முறையா ரயிலில் வருதுன்னு.அப்றம்  அலஞ்சு திருஞ்சு வீட்டுக்கு போனா...எங்க அத்தா (அப்பா)எனக்கு ரெண்டாவது பொறந்தநாள் கொண்டாடினாரு.நான் கூட கேட்டேன் போன மாசம்தானே எனக்கு பொறந்தநாள் வந்துச்சு இப்போ எதுக்குன்னு.இம்ஹும்.. அவரு கேக்கவே இல்லையே.வெடி வெடிச்சு ரெம்ப அமர்களமா கொண்டாடுனாரு.(தொடரும்)

டிஸ்கி:எனக்கும் ஆசைதான் இதே தலைப்ப வச்சு நாம சின்ன வயசுக செய்த களவாணி (குறும்பு)  தனத்த தொடர் பதிவா எழுதனும்னு ஆனா எல்லோருக்கும் தொடர் பதிவுனாவே அலர்ஜியா இருக்கு.அதான் நானே தொடர்ந்து இன்னும் சில குறும்புகளை எழுதுறேன் இத பயப்படாம படிக்கணும் சரியா...
இங்கே படிக்கலாம்...30 comments:

இராமசாமி கண்ணண் said...

சேட்டைகாரப்புள்ளயா இருந்துருப்பீங்க போலிருக்கு :)

நேசமித்ரன் said...

சீமானே செம சேட்டை போலருக்கு

நான் கம்பத்துக் காரந்தான்
சின்னம்னூர் சிவகாமி மெட்ரிகுலேஷன்லயும் படிச்சேன் :)

சீமான்கனி said...

இராமசாமி கண்ணண் said...
//சேட்டைகாரப்புள்ளயா இருந்துருப்பீங்க போலிருக்கு :) //


சேட்டைகாரந்தான் சேர்த்து அடிவாங்குறதும் நான்தான்..அவ்வ்வ்வவ்...


நேசமித்ரன் said...
//சீமானே செம சேட்டை போலருக்கு

நான் கம்பத்துக் காரந்தான்
சின்னம்னூர் சிவகாமி மெட்ரிகுலேஷன்லயும் படிச்சேன் :) ///

ஐ மித்திரன் அண்ணே கம்பமா...ரெம்ப சந்தோஷமா இருக்கு சிவகாமிலதான் அண்ணே, அக்கா எல்லோரும் படிச்சாங்க இன்னும் என் தங்கச்சி(சித்தி பொண்ணு) படிக்கிறா... அப்போ அங்கு வந்ததும் கண்டிப்பா சந்திப்பேன்...நன்றி அண்ணே...

ஹேமா said...

பாவம் நீங்க.சின்னப்பிள்ளைல ப்ண்ணிணதுதானேன்னு
நினைச்சாலும் சிரிப்பு அடக்க முடில !

நிலாமதி said...

இழுக்க இழுக்க இன்பம் என்பது போல .. வாசிகக் வாசிக்க ...சிரிப்பு தாங்கலை.
.....ஆஹா ...களவாணிப்பயலே

சீமான்கனி said...

ஹேமா said...
//பாவம் நீங்க.சின்னப்பிள்ளைல ப்ண்ணிணதுதானேன்னு
நினைச்சாலும் சிரிப்பு அடக்க முடில !//

மகிழ்ச்சி உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா ...


நிலாமதி said...
//இழுக்க இழுக்க இன்பம் என்பது போல .. வாசிகக் வாசிக்க ...சிரிப்பு தாங்கலை.
.....ஆஹா ...களவாணிப்பயலே//

நிலாக்கா நலமா??ஆமா அது என்னது "இழுக்க இழுக்க இன்பம்!!!"

வருகைக்கும் கருத்துக்கும் சிரிப்புக்கும் நன்றி... நிலாக்கா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thiruttu payale

பிரசன்னா said...

//அவருக்கு எங்கப்பா(தாத்தா)எவ்ளவோ பணம் குடுத்து நன்றி சொன்னாராம்//

இது புனைவுதான (தொலைக்கலாம்னு பாத்தா கரெக்டா கூட்டிட்டு வந்துட்டியேனு திட்டி இருப்பார் ஹீ ஹீ )

thenammailakshmanan said...

களவாணிப்பய ன்னு சொன்னவுடனே படம்னு நினைச்சேன் கனி.. தன்னைத்தானெ சொல்லிக்க ரொம்பப் பெரிய மனசுதான்..:))

சீமான்கனி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//thiruttu payale//

இதான் சாக்குன்னு திட்டுறீங்களா??நீங்க ரெம்ப நல்லவருக ரமேஷ்ஜி...நன்றி...


பிரசன்னா said...
//அவருக்கு எங்கப்பா(தாத்தா)எவ்ளவோ பணம் குடுத்து நன்றி சொன்னாராம்//

//இது புனைவுதான (தொலைக்கலாம்னு பாத்தா கரெக்டா கூட்டிட்டு வந்துட்டியேனு திட்டி இருப்பார் ஹீ ஹீ ) //

பதிவுலகம் ஒரு பெரிய பதிவர இழந்திருக்குமே பிரசன்னா அத பாட்டி கொஞ்சமாவது கவலைப் பட்டீங்களா?நன்றிங்க ..

சீமான்கனி said...

thenammailakshmanan said...
//களவாணிப்பய ன்னு சொன்னவுடனே படம்னு நினைச்சேன் கனி.. தன்னைத்தானெ சொல்லிக்க ரொம்பப் பெரிய மனசுதான்..:)) //


கர்ர்ரர்ர்ர்...தேனக்கா நீங்களுமா...???
நன்றி தேனக்கா...

தமிழ் உதயம் said...

களவாணித்தனத்தை வைச்சு நானொரு பதிவு எழுதிடுறேன். யோசனைக்கு நன்றி சீமான்கனி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதான் சாக்குன்னு திட்டுறீங்களா??நீங்க ரெம்ப நல்லவருக ரமேஷ்ஜி...நன்றி...//

பாத்தீங்களா தப்பா நினைச்சிட்டீங்களே. நான் என்னோட புது பதிவு திருட்டு பயலே அப்டின்னு சொன்னேன்.(அப்பாடா சமாளிச்சாச்சு)

அருண் பிரசாத் said...

ரைட்டு, படிச்சுடுவோம்

க.பாலாசி said...

அதுசரி... எல்லாருமே நம்மளாட்டம் களவாணிப்பசங்களாத்தான் இருக்காய்ங்க... வேற என்னல்லாம் செஞ்சிங்க...??

அஹமது இர்ஷாத் said...

நல்ல ஆளுப்பா... சுவராஸ்யம்.

Priya said...

அப்புறம் கனி... இன்னும் என்னவெல்லாம் பண்ணியிருக்கிங்க? எழுதுங்க..

படிக்க சுவாரஸியமா இருந்தது.

Priya said...

என்ன கனி... கமெண்ட் பாக்ஸ்ல //ஆத்திரமா?...கும்மியா?// எல்லாம் வெறும் டெர‌ர் உண‌ர்வுக‌ளாவே சொல்லி இருக்கிங்க‌ளே... கொஞ்ச‌ம் புன்ன‌கையா? சிரிப்பா? ச‌ந்தோஷ‌மா?... இந்த‌ மாதிரி உண‌ர்வுக‌ள் வ‌ர‌க்கூடாத‌!!!

அக்பர் said...

அட இவ்வளவும் அனுபவங்களா சூப்பர். அப்படித்தான் இருக்கணும் :)

ஜெய்லானி said...

அப்ப தாம்பரத்துல கடல் இல்லையா..???. நா போவலாமுன்னுஇல்ல இருந்தேன் . நல்ல வேளை இப்பவே சொல்லிட்டீங்க ...ஹி..ஹி...

சீமான்கனி said...

தமிழ் உதயம் said...
//களவாணித்தனத்தை வைச்சு நானொரு பதிவு எழுதிடுறேன். யோசனைக்கு நன்றி சீமான்கனி.//

சூப்பர் ரமேஷ்ஜி...வாசிக்கதயாராய் ...நான் இருக்கேன்... நன்றி ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பாத்தீங்களா தப்பா நினைச்சிட்டீங்களே. நான் என்னோட புது பதிவு திருட்டு பயலே அப்டின்னு சொன்னேன்.(அப்பாடா சமாளிச்சாச்சு)//

ஹி..ஹி..ஹி...நன்றி...நல்லவரே

அருண் பிரசாத் said...
//ரைட்டு, படிச்சுடுவோம்//

படித்தால் மட்டும் போதுமா??வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண் பிரசாத்...

க.பாலாசி said...
//அதுசரி... எல்லாருமே நம்மளாட்டம் களவாணிப்பசங்களாத்தான் இருக்காய்ங்க... வேற என்னல்லாம் செஞ்சிங்க...??//

செஞ்சது எல்லாம் சொல்லனுமா...!!!ஐயோ...நன்றி பாலாசி...

அஹமது இர்ஷாத் said...
//நல்ல ஆளுப்பா... சுவராஸ்யம்.//

அப்போ நானும் நல்லவனா .. நன்றி இர்ஷா...


Priya said...
//அப்புறம் கனி... இன்னும் என்னவெல்லாம் பண்ணியிருக்கிங்க? எழுதுங்க..

படிக்க சுவாரஸியமா இருந்தது.//

படிக்க நீங்க ரெடியா பிரியா அப்போ எழுதிருவோம்...
நன்றி பிரியா...

//இந்த‌ மாதிரி உண‌ர்வுக‌ள் வ‌ர‌க்கூடாத‌!!! //

பதிவு எழுதிட்டு எனக்கு வர்ர உணர்வுகள்...அவைகள் :)

அக்பர் said...
//அட இவ்வளவும் அனுபவங்களா சூப்பர். அப்படித்தான் இருக்கணும் :)//

அப்படியே இருப்போமா???ஓகே..
நன்றி அக்பர்ஜி...

ஜெய்லானி said...
//அப்ப தாம்பரத்துல கடல் இல்லையா..???. நா போவலாமுன்னுஇல்ல இருந்தேன் . நல்ல வேளை இப்பவே சொல்லிட்டீங்க ...ஹி..ஹி...//

நல்லவேளை உங்களை காப்பாத்திட்டேன்...ரெம்ப சந்தோசம்...நன்றி ஜெய்லானிஜி...

Sivaji Sankar said...

பலே கில்லாடி கனியண்ணே....!! :)

கலாநேசன் said...

ஒரு பதிவுக்குள்ள ரெண்டு பழைய பதிவா? தலைப்பு சரிதான்.

சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...

Sivaji Sankar said...
//பலே கில்லாடி கனியண்ணே....!! :) //


வாங்க சிவா நலமா...கில்லாடிதான் ஆனால் அதுக்கு பின்னாடி எவ்வளோ அடி....ஐயோ....!!!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா......

கலாநேசன் said...
//ஒரு பதிவுக்குள்ள ரெண்டு பழைய பதிவா? தலைப்பு சரிதான்.//

வாங்க நேசன் சார்...அஹா...தலைப்பின் காரணத்தை கண்டுபிடிசிடீன்களே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நேசன் சார்...

Riyas said...

அடடா மூனு வயசிலேயே ஆரம்பிச்சிட்டிங்களா..

நல்ல ரசிச்சு சிரிக்கும்படியான பதிவுங்க

சிநேகிதி said...

குறும்புகார பதிவு...படிக்க படிக்க இனிமையாக இருக்கு சீமான்..

சீமான்கனி said...

Riyas said...
//அடடா மூனு வயசிலேயே ஆரம்பிச்சிட்டிங்களா..

நல்ல ரசிச்சு சிரிக்கும்படியான பதிவுங்க//

நாங்கலாம் யாரு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரியாஸ்..

சிநேகிதி said...

//குறும்புகார பதிவு...படிக்க படிக்க இனிமையாக இருக்கு சீமான்..//

மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாயிஜா..

ப்ரியமுடன் வசந்த் said...

//எங்க அத்தா (அப்பா)எனக்கு ரெண்டாவது பொறந்தநாள் கொண்டாடினாரு.நான் கூட கேட்டேன் போன மாசம்தானே எனக்கு பொறந்தநாள் வந்துச்சு இப்போ எதுக்குன்னு.இம்ஹும்.. அவரு கேக்கவே இல்லையே.வெடி வெடிச்சு ரெம்ப அமர்களமா கொண்டாடுனாரு.//

ஹ ஹ ஹா...! டேய் சேட்டக்கார பய புள்ள..

சீமான்கனி said...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹ ஹ ஹா...! டேய் சேட்டக்கார பய புள்ள.. //

என்ன ஒரு ஆனந்தம்...

வா மாப்பிளே என்ன ஆணி அதிகமோ???
நன்றி டா......

Related Posts with Thumbnails