Sunday, July 25, 2010

நான் களவாணி-2

நான் களவாணி-1

முதல் பாகத்திற்கு ஆதரவுதந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

அடுத்தது பயங்கரமான அனுபவம்.இன்றும் அதை நினைத்தால் அந்தநாளின் ஒவ்வொரு காட்சியும் கண்ணு முன்னாடி வந்து போகுது.(எதுக்கு இவ்வளோ பில்டப்பு??)

அன்று எங்கள் ஐ.டி.ஐ யின் கடைசி வகுப்பு.(ஃபெர்வேல்டே) அனைவரும் ரெம்ப குதுகலமாய் இருந்தோம்.எங்களுக்கு வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வாங்கி பகிர்ந்தோம்.நண்பர்களிடம் முகவரி பகிர்ந்தோம். அந்த  இன்ஸ்டியுட்டில்   யாருக்குமே பிடிக்காத பெருசு ஒருத்தர்  இருக்கார்  அவர் பெயர்  ஹுசேன் முக்கிய  பதவியில் இருப்பவர்.எங்கள் டிபார்மென்ட் பசங்களை கண்டாலே அவருக்கு பிடிக்காது. ஐந்து நிமிடம் தாமதமா வந்தாலும் அப்டியே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்  சும்மா இல்லை நாலு  அடிய போட்டுதான் அனுப்புவார். ரெம்பநாளா அவர்மேல எங்க எல்லோருக்கும் பயங்கர கோபம். அன்றுதான்  பழி தீர்க்கும் நாள்.

நிகழ்ச்சியெல்லாம் முடிய மாலை ஏழு  மணி நல்லா இருட்டிருச்சு எல்லோரும் வெளிய வந்துட்டோம்.அவரும் அவரோட ஓட்டை வண்டிய ஓட்டிட்டு வந்தார்.அவர் கேட்டை நெருங்கும்போது கூட்டத்தில் இருந்து ஒருத்தன் "டேய் ஹுசேன் சொட்டதலையா" னு சத்தமா சொல்ல.எல்லோரும் பயந்து  (மனசுக்குள்ள   சத்தமா சிரிச்சுட்டு) ஆளுக்கொரு பக்கமா ஓடிபோயிட்டோம்.நான் என்நண்பர்கள் ரிஸ்வான், அரவிந்த் மூணு பெரும் ஒன்னாதான் பஸ்ல போவோம்.சிம்சன் சுரங்கபாதை வழியாதான் அந்த ரோட்டை கடந்து போவோம்.அதே போல் அன்றும்  நடந்ததை பேசி சிரிச்சுட்டு சுரங்கபாதைக்குள்ள நடந்து போறோம் எதிரே ஹுசேன் சார்... (ஹாய் ஆப்பு)ஆக்ரோஷத்தோட எங்களை நோக்கி வர்றார்.கைல இருந்த கடிகாரத்தை கழட்டி பைக்குள்ள வச்சுகிட்டே கேட்டார்(மனுசே  தெளிவா  ஸ்கெச்  போட்டுருக்காரு)  "யாரு டா அப்படி சொன்னது??"நாங்க தெரியல சார்னு சொல்லி அடுத்தநொடி ரைட்டு லேப்ட்டுன்னு அடி பின்னி எடுக்குறார். ஆமாம்  ரிஸ்வான்னும் அரவிந்தும் எனக்கு ரைட்ட்ளையும் லேப்ட்டுளையும் நடுவுல  சேஃப்பா நான். (மகனே ஜஸ்ட்டு மிஸ்டா)

படத்துல வில்லன் ஹீரோவ அடிக்கிற மாதிரி அடினா அடி அந்தமாதிரி அடி அங்க எங்களை வேடிக்கை பார்த்து கடந்து போகுது ஒரு கூட்டம்.(சினிமா சூட்டிங்க்னு நெனச்சுருப்பாங்க) சிலபேர் அவரை தடுக்க முயற்சி பண்றாங்க ம்ம்ம்ஹும் முடியல (சினம் கொண்ட சிங்கம் சும்மா இருக்குமா??).அரவிந்துக்கு உதடு கிழிஞ்சு இரத்தம் வர்ர வரைக்கும் அடி நிக்கவே இல்லை.மகனே டி.சி வாங்க வருவீங்கல அப்போ வச்சுக்குறேன் டா. அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டார்.வலி தாங்கமுடியாம அரவிந்த் "எவோனோ கத்துனதுக்கு நம்மல அடிச்சுட்டு போறானே  இந்தாளுனு" சொல்லிட்டு ஒரு சமதம் எடுத்தான். "அவன கண்டு பிடிச்சு இதே அடிய அவனுக்கு குடுக்கலை நான் ஆம்பளையே இல்லடா".(அதுக்கு ஏன்டா இந்த முடிவு)எல்லோருக்கும் கொஞ்சநாள் இழுத்தடிச்சு டி.சி குடுத்தாங்க.கடைசி வரைக்கும் யாருனே கண்டு பிடிக்க முடியல அரவிந்த் சபதமும் நிறைவேரலை.

ஒரு வேலை இந்த பதிவை அவன் படிக்க நேர்ந்தால் அவன் சபதம் இனி நிறைவேறலாம். ஆமாம் அந்த கூட்டத்துல "ஹுசேன் சொட்டதலையானு" கத்துன நல்லவன்  நான்தான்.இப்போ நினைத்தாலும் சிரிப்போடு அந்த நியாபகங்கள் ஒரு பக்கம் வர இப்போ கொஞ்சம் பயமாவும் இருக்கு.

பயஸ்க்கி:
        மாப்பள அரவிந்து எப்போவாவது இந்த பதிவ படிக்க நேர்ந்தால் கொலைவெறியோடு கத்திய கித்திய தூக்கிகிட்டு வந்துராதே.ஐ யம் ரெம்ப பாவம்.
ஏதோ அறியா வயசுல தெரியாம பண்ணிட்டேன்.மக்களே நீங்களும் யாரும் போட்டு குடுத்துறாதீங்க.ப்ளீஸ்............

23 comments:

இராமசாமி கண்ணண் said...

ஒவர் வில்லத்தனம்ல இதெல்லாம். பாவம் அரவிந்த்.

வெறும்பய said...

தொடரட்டும் நினைவுகள்...

தமிழ் உதயம் said...

ஆசிரியரை பெயர் சொல்லி அழைத்து, அடி வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.

ஜெய்லானி said...

அரவிந்த் அட்ரஸ் வேனுமே எனக்கு...!!

பிரசன்னா said...

நம் பாதை எப்போமே நடுப்பாதை.. அடி விழாம எஸ் ஆகிடலாம் :)

சௌந்தர் said...

இவர் உதட்டை கிழிக்க வருகிறார் அரவிந்த்

ராசராசசோழன் said...

ஒப்புதல் வாக்குமூலம்...அதுவும் பதிவுல...முடிஞ்சது...அரவிந்த்...எங்க இருக்கீங்க..

ஹேமா said...

//ஏதோ அறியா வயசுல தெரியாம பண்ணிட்டேன்.//

நம்பாதீங்க யாரும்.அந்த வயசு தெரியாத வயசா ?மாட்டிக்கமாட்டோம்ன்னு தைரியமான வயசு !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ஒரு வில்லத்தனம்

sakthi said...

இப்போ நினைத்தாலும் சிரிப்போடு அந்த நியாபகங்கள் ஒரு பக்கம் வர இப்போ கொஞ்சம் பயமாவும் இருக்கு.


flashback ::))))

சீமான்கனி said...

இராமசாமி கண்ணண் said...

//ஒவர் வில்லத்தனம்ல இதெல்லாம். பாவம் அரவிந்த்.//

ஆமாம் கண்ணன் அவனும் பாவம் ஆனால் அந்த இடத்தில் நான் ஹீரோவா மாறி இருந்த நான் ஜிரோவா ஆயிருப்பேன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்...

வெறும்பய said...
//தொடரட்டும் நினைவுகள்...//

உங்கள் ஆதரவோடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

தமிழ் உதயம் said...
//ஆசிரியரை பெயர் சொல்லி அழைத்து, அடி வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.//

உங்கள் பகிர்வுக்காக தான் காத்திருக்கிறேன் ரமேஷ் ஜி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...
//அரவிந்த் அட்ரஸ் வேனுமே எனக்கு...!!//

நானும் அதைத்தான் தேடுறேன் கிடைத்ததும் கண்டிப்பா சொல்றேன் என்ன ஒரு வில்லத்தனம்...

பிரசன்னா said...
//நம் பாதை எப்போமே நடுப்பாதை.. அடி விழாம எஸ் ஆகிடலாம் :) //

அட அப்போ நம்ம கூட்டுன்னு சொல்லுங்க...

சௌந்தர் said...
//இவர் உதட்டை கிழிக்க வருகிறார் அரவிந்த்//

அரவிந்த் மாப்பிளே ரெம்ப நல்லவன் உங்களைமாதிரி இல்லை...ஆமாம்.நன்றி சௌந்தர்...

ராசராசசோழன் said...
//ஒப்புதல் வாக்குமூலம்...அதுவும் பதிவுல...முடிஞ்சது...அரவிந்த்...எங்க இருக்கீங்க..//


ஆத்தி நம்மளுக்கு கெரகம் சரி இல்லையோ...இனிமேல் ஹெல்மெட் போட்டுதான் வெளியபோகனும் போல...ஒரு குரூப்பு சேந்துருச்சே ...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசராசசோழன்.

ஹேமா said...
//ஏதோ அறியா வயசுல தெரியாம பண்ணிட்டேன்.//

//நம்பாதீங்க யாரும்.அந்த வயசு தெரியாத வயசா ?மாட்டிக்கமாட்டோம்ன்னு தைரியமான வயசு ! //

ஆஹா விட்டா கோட்டுல கேசு போட்டு வாதடுவீங்கபோல...நன்றி ஹேமா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்ன ஒரு வில்லத்தனம்//

அதானே...வாங்க நல்லவரே...

sakthi said...
//இப்போ நினைத்தாலும் சிரிப்போடு அந்த நியாபகங்கள் ஒரு பக்கம் வர இப்போ கொஞ்சம் பயமாவும் இருக்கு.


flashback ::))))//
ஆமாம் சக்தி வாங்க நலமா??நன்றி...

அக்பர் said...

சந்தேகப்பட்டதுக்குத்தான் அந்த அடி. மகனே நீங்கதான்னு உறுதியா தெரிஞ்சிருந்தா அடி இன்னும் பலமா இருந்திருக்கும். :)

சுவாரஸ்யமான பகிர்வு.

ஸாதிகா said...

ரொம்ப சுவாரஸ்யமாக இருந்த்து.லின்க் கொடுத்த அனைத்துப்பதிவுகளையுமே மிக சுவாரஸ்யமாக படித்து முடித்தேன் சீமான்கனி.

NIZAMUDEEN said...

//"டேய் ஹுசேன் சொட்டதலையா" //

அந்த ஹுசைன் சார் அட்ரஸ் மட்டும்...
எனக்கு வேணும்! (எங்க இருக்காரு?)

புல்லாங்குழல் said...

சீமான் கனியின் அந்த நாள் ஞாபகம் ஒரு புறம் சிரிப்பை வரவழைத்தது என்றால் அந்த முகம் தேடும் தலையில்லா மனிதனின் படம் ஒரு கவிதையான முகப்பு.

ஒ.நூருல் அமீன்

சீமான்கனி said...

அக்பர் said...
//சந்தேகப்பட்டதுக்குத்தான் அந்த அடி. மகனே நீங்கதான்னு உறுதியா தெரிஞ்சிருந்தா அடி இன்னும் பலமா இருந்திருக்கும். :)

சுவாரஸ்யமான பகிர்வு.//

அடியா...!!!என் கனவுல மண்ணள்ளி போட்டு இருப்பாரு அக்பர்ஜி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ஸாதிகா said...
ரொம்ப சுவாரஸ்யமாக இருந்த்து.லின்க் கொடுத்த அனைத்துப்பதிவுகளையுமே மிக சுவாரஸ்யமாக படித்து முடித்தேன் சீமான்கனி.


NIZAMUDEEN said...
//"டேய் ஹுசேன் சொட்டதலையா" //

//அந்த ஹுசைன் சார் அட்ரஸ் மட்டும்...
எனக்கு வேணும்! (எங்க இருக்காரு?)//

நிஜாம் அண்ணா உங்களுக்கு என் இந்த கொலைவெறி...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...


புல்லாங்குழல் said...
//சீமான் கனியின் அந்த நாள் ஞாபகம் ஒரு புறம் சிரிப்பை வரவழைத்தது என்றால் அந்த முகம் தேடும் தலையில்லா மனிதனின் படம் ஒரு கவிதையான முகப்பு.

ஒ.நூருல் அமீன்//

வாங்க அமீன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..பதிவுகள் பிடிச்சிருந்த தொடர்ந்து வாங்க...

மங்குனி அமைசர் said...

சார் அந்த வாத்தியாருக்கு இப்போ எவ்ளோ முடி இருக்கு ????

சீமான்கனி said...

அப்போ உங்களுக்கு தெரிஞ்ச சார் ஹுசேன் பெயரில் இருக்காரா??சரி முதலில் அவர் மண்டைல எவ்ளோ முடி இருக்குனு எண்ணி சொல்லுங்க ரெண்டும் மேச் ஆகுதா பார்க்கலாம்...

நன்றி மங்குனி ...

siva said...

ஏன் சாமி
நீங்க நம்ப ஊரு ராசாவ???

நல்ல இருக்கு..
வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

siva said...
//ஏன் சாமி
நீங்க நம்ப ஊரு ராசாவ???

நல்ல இருக்கு..
வாழ்த்துக்கள் //

ஐயோ இப்டிவேற புரளிய கெளப்பி விட்டிருக்காங்களா யாரு அது??

வங்க சிவா முதல் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சிருந்த தொடர்ந்து வாங்க...நன்றி...

siva said...

ஆத்திரமா? அழுகையா?கண்ணீரா? கவலையா?சோகமா? சோர்வா?தனிமையா? தவிப்பா?தோல்வியா? துயரமா?வலியா? வருத்தமா?வெறுமையா?வெறுப்பா?ஏமாற்றமா?ஏக்கமா?குத்தா?கும்மாங்குத்தா?கும்மியா?
நீங்க உணர்வது என்ன?---nan unarvathu enna vendrall...

overa mokkai podama orupidiya athavathu....seman kani pola nachnu oru pativu podavenum..varata...

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்ள பங்காளி அரவிந்தோட அட்ட்ரஸ் கொடுக்க முடியுமா?

சீமான்கனி said...

ப்ரியமுடன் வசந்த் said...

//மாப்ள பங்காளி அரவிந்தோட அட்ட்ரஸ் கொடுக்க முடியுமா?//

கிடைத்ததும் முதலில் உனக்கு மெயில் பண்ணுறேன் ஒ.கே வா...

அஹா குரூப்பா வருவாங்கே போல...

Related Posts with Thumbnails