அன்பெடுத்து அம்பு செய்து
ஆழமாய் தைத்தாய்.
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?
ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு சாயம் பூசுவாய்.
துடிக்கும் இதயத்தை துப்பட்டாவால்
துடைத்துக் கட்டுவாய்.
அமில மழையில் அல்லாடும்
அக்கினி பறவையின் சிறகு வாங்கி
ஆறாத காயம் ஆற்றுவாய் .
வளையல்கள் நொறுக்கி
கொலுசு மணிகளை குலுக்கி
இதயத்தின் இட வலது
இருபக்கமும்
இறுக்கிக் கட்டி எந்நேரமும்
இனிமையாய் இம்சிப்பாய்.
பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.
ஒவ்வொரு பகலின்
ஆரம்பத்திலோ,
அல்லது இரவின்
தொடக்கத்திலோ
தூக்கம் என்ற ஒன்றை
தொல்லையாக்குவாய்.
சேற்றுக்குள் புதைந்திருக்கும்
கலப்பை போல என்
சோற்றுக்குள் புதைந்து கொண்டு
தொண்டைகுழியில் குத்துவாய்.
உன் வியர்வை துளியை
விலைக்கு கேட்கவும்
கண்ணீர் துளியை
தொலைக்க கேட்கவும்
செய்வாய்.
கண்விழிக்க கனவு காட்டி
காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்.
ஊருக்கும் பெருக்கும் மட்டும்
உருவாய் விட்டுவிட்டு
உனக்கானவனாய் என்
உயிர் மட்டும் மாற்றுவாய்.
இவ்வளவுதானே....
இதையெல்லாம் எப்போது
செய்வதாய் உத்தேசம்??
28 comments:
me...........the first
சீக்கிரம் சுப காரியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு பாஸ் :)
நிலாமதி said...
// me...........the first //
//சீக்கிரம் சுப காரியம் நிறைவேற வாழ்த்துக்கள்//
ஐ...வாங்க நிலாக்கா...வாழ்த்துக்கு நன்றி அக்கா...ஆமாம் எந்த சுப காரியம்னு சொல்லவே இல்லையே...
இராமசாமி கண்ணண் said...
//நல்லா இருக்கு பாஸ் :)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்...
//
அன்பெடுத்து அம்பு செய்து
ஆழமாய் தைத்தாய்.
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?
// சீமான் கனி அசத்துறீங்க
நல்ல முயற்சி! வாழ்த்துகள்
தட்டச்சு பிழைகள் சரி பாருங்க நண்பா
ஸாதிகா said...
//
அன்பெடுத்து அம்பு செய்து
ஆழமாய் தைத்தாய்.
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?
// சீமான் கனி அசத்துறீங்க //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...
குட்டி ரெம்ப குட்டியா தெரியுது அக்கா..
நேசமித்ரன் said...
//நல்ல முயற்சி! வாழ்த்துகள்
தட்டச்சு பிழைகள் சரி பாருங்க நண்பா //
ஏதோ கொஞ்சமா... நன்றி மித்திரன் அண்ணே...சரி....பார்கிறேன்..அண்ணே...
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.//
ரசித்தேன் வரிகளை..
அருமையான வரிகள்..
ரசித்தேன்..
//காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்//...கவிதையான வரி.
பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்//
அருமையான வரிகள்
ஒவ்வொரு வரி எழுதும் போதும்,ஆர்வத்துடனும், வித்தியாசப்படவும் எழுதுகிறிர்கள்.
துடிக்கும் இதயத்தை துப்பட்டாவால்
துடைத்துக் கட்டுவாய்.
அமில மழையில் அல்லாடும்
அக்கினி பறவையின் சிறகு வாங்கி
ஆறாத காயம் ஆற்றுவாய் .
நல்லாயிருக்கு சீமான் வரிகள்
இன்னமும் மெருகேற்று முயலுங்கள் வரிகளை
வாழ்த்துக்கள்
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.
//
:))))
//இவ்வளவுதானே....
இதையெல்லாம் எப்போது
செய்வதாய் உத்தேசம்??
//
இத நான் எதிர்பார்க்கலை..
அசத்திட்டிங்க சீமான்..
//கண்விழிக்க கனவு காட்டி
காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்//
ம் ..நடத்துங்க..நடத்துங்க ..
//ஊருக்கும் பெருக்கும் மட்டும்
உருவாய் விட்டுவிட்டு
உனக்கானவனாய் என்
உயிர் மட்டும் மாற்றுவாய்.//
சீமான்...இந்த வரிகள் மனதில் பதிந்தது.
அத்தனையுமே பிரிந்துவிட்ட அல்லது
பிரியப்போகும் உயிரிடம்
எதிர்பார்த்திருக்கும் வரமாக !
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.//
நல்லாயிருக்குங்க நண்பா... (இன்னுமா கல்யாணம் ஆகல...)
குட் டச்..!
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.//
:-))))))))
ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு சாயம் பூசுவாய்.
//கற்பனை அதி பயங்கரம் மச்சான்...//
கலக்குங்க கவிஞரே...!!!
பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.
எங்கயோ போய்ட்டிங்க ....
அருமை சீமான்கனி.
பதில் வந்ததும் அதை எனக்கு
ஃபார்வர்ட் செய்யவும்.
Sangkavi said...
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.//
//ரசித்தேன் வரிகளை..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி...
வெறும்பய said...
//அருமையான வரிகள்..
ரசித்தேன்..//
ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
Priya said...
//காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்//...கவிதையான வரி.
உங்கள் ஓவியத்தை விடவா??ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா...
சௌந்தர் said...
பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்//
அருமையான வரிகள் //
தொடர் உற்சாகத்திற்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்...
தமிழ் உதயம் said...
//ஒவ்வொரு வரி எழுதும் போதும்,ஆர்வத்துடனும், வித்தியாசப்படவும் எழுதுகிறிர்கள்.//
நன்றி ரமேஷ்ஜி எல்லாம் உங்களின் ஊக்கம்தான்...
sakthi said...
//துடிக்கும் இதயத்தை துப்பட்டாவால்
துடைத்துக் கட்டுவாய்.
அமில மழையில் அல்லாடும்
அக்கினி பறவையின் சிறகு வாங்கி
ஆறாத காயம் ஆற்றுவாய் .
நல்லாயிருக்கு சீமான் வரிகள்
இன்னமும் மெருகேற்று முயலுங்கள் வரிகளை
வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி அக்கா நிச்சயமாய் முயற்சிக்கிறேன்...
சுசி said...
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.
//
:))))
//இவ்வளவுதானே....
இதையெல்லாம் எப்போது
செய்வதாய் உத்தேசம்??
//
இத நான் எதிர்பார்க்கலை..
அசத்திட்டிங்க சீமான்..//
கொஞ்சம் வித்யாசமாய் முடிக்க முயன்றேன் சுசிக்கா...நல்லா இருக்கா???? நன்றி...சுசிக்கா.
ஹேமா said...
//ஊருக்கும் பெருக்கும் மட்டும்
உருவாய் விட்டுவிட்டு
உனக்கானவனாய் என்
உயிர் மட்டும் மாற்றுவாய்.//
சீமான்...இந்த வரிகள் மனதில் பதிந்தது.
அத்தனையுமே பிரிந்துவிட்ட அல்லது
பிரியப்போகும் உயிரிடம்
எதிர்பார்த்திருக்கும் வரமாக ! //
ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா
க.பாலாசி said...
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.//
//நல்லாயிருக்குங்க நண்பா... (இன்னுமா கல்யாணம் ஆகல...) ///
உங்களுக்கெல்லாம் சொல்லாம அந்த காரியத்தை செய்வென பாலாசி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
ப்ரியமுடன் வசந்த் said...
குட் டச்..!
//பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.//
:-)))))))) //
நன்றி மாப்பி அதுக்கு எதுக்கு ஒரு அசட்டு சிரிப்பு....
சிவன். said...
ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு சாயம் பூசுவாய்.
//கற்பனை அதி பயங்கரம் மச்சான்...//
கலக்குங்க கவிஞரே...!!!
பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.
எங்கயோ போய்ட்டிங்க ....//
நீங்கள் எல்லோரும் இருக்கும் தைரியத்தில் எவ்வளோ தூரம் வேண்டுமானாலும் போகலாம் மச்சான் நன்றி மாப்பி
அக்பர் said...
//அருமை சீமான்கனி.//
ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்ஜி..
NIZAMUDEEN said...
//பதில் வந்ததும் அதை எனக்கு
ஃபார்வர்ட் செய்யவும்.//
எதுக்கு நிஜம் அண்ணே ஏதும் பிளான் பண்ணலையே... நன்றி
நன்றாக உள்ளது நண்பரே
சேற்றுக்குள் புதைந்திருக்கும்
கலப்பை போல என்
சோற்றுக்குள் புதைந்து கொண்டு
தொண்டைகுழியில் குத்துவாய்.//
அட இது நான் எதிர்பார்க்கலை.. வித்யாசமா இருக்கனி..:))
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html
rajan said...
//நன்றாக உள்ளது நண்பரே//
முதல் முறையா தந்த கருத்துகக் நன்றி ராஜன் பதிவுகள் பிடிச்சிருந்த தொடர்ந்து வாங்க...
thenammailakshmanan said...
சேற்றுக்குள் புதைந்திருக்கும்
கலப்பை போல என்
சோற்றுக்குள் புதைந்து கொண்டு
தொண்டைகுழியில் குத்துவாய்.//
அட இது நான் எதிர்பார்க்கலை.. வித்யாசமா இருக்கனி..:)) //
நன்றி தேனக்கா உங்களிடம் இருந்து வந்த வாழ்த்து மிக்க மகிழ்ச்சியா இருக்கு தேனக்கா நன்றி...
சிநேகிதி said...
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html //
விருதுக்கு நன்றி பாயிஷா உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்....
//ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு சாயம் பூசுவாய்.//
அருமை.
1 ஆகஸ்ட், 2010 2:19 am
சீமான்கனி சொன்னது…
எனக்குதான் முதல் பிரண்ட்ஷிப் பேன்ட் ...
உங்களுக்கே கட்டியாச்சு நண்பா. வாழ்த்துக்கள்.
கலாநேசன் said...
//ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு சாயம் பூசுவாய்.//
அருமை.
1 ஆகஸ்ட், 2010 2:19 am
சீமான்கனி சொன்னது…
எனக்குதான் முதல் பிரண்ட்ஷிப் பேன்ட் ...
உங்களுக்கே கட்டியாச்சு நண்பா. வாழ்த்துக்கள். ////
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நேசன் உங்களுக்கும் வாழ்த்துகள்...
Post a Comment