தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் க(வி)தைமேல்...
புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தையின் எல்லா பாகமும் இங்கே..
ஆரம்பமானது அவள் நினைவுகளின் அழிச்சாட்டியம்...
நிஜங்களை தொலைத்து விட்ட-என்
நிசப்த்த இரவுக்குள்;
முத்த சத்தத்தோடு முதலாய் வந்துவிடுகிறது
அவளின் அசூர நினைவுகள்.
கவலைகளை கையமர்த்திவிட்டு;
இதயத்தின் அருகே அழுத்தமாய் அமர்ந்து கொண்டு;
இதயஅறுவை சிகிச்சை ஒன்றுக்கு ஆயத்தமாகிறது.
அறுத்த இருதயத்தின் பேருத்த குருதியை குடித்து விட்டு
அசைவமாகிறது அவளின் சைவநினைவுகள்.
ரத்தம் தீர்த்ததும் சத்தம் போடாமல்;
நாடுகளை பிரிக்கும் கோடுகளாய்;
நான்கு அறை இதயத்தை நூறு;கூறு போட்டு
விலாஎழும்புகளை எரித்து விளக்கேற்றி -அதில்
உயிர் உருக்கி ஒவ்வொரு துண்டுகளிலும்
ஊற்றி துடிக்கவிட்டு தொலைந்து போனது.
நூறு இதயத்தின் பேரு துடிதுடிப்பின் அதிர்வில்
நொறுங்கி விடும்போல் இருக்கு நெஞ்சாங்கூடு.
இம்சையில்; வந்த தூக்கம் வாசலிலே
உறங்கிவிட்டு திரும்புகிறது தினமும்.
எப்போதும் இருப்பாய் என்றபோது
இருந்த இடம் தெரியாத அழுகை-இனி நீ இல்லை என்றதும் இமைகளில்
இறங்கிவந்து என்னை இறந்துவிடச் சொல்கிறது.
இரவு நேரம் வந்துவிட்டால்
இதயக் காய்ச்சல் வந்து;
இறந்துவிடுகிறது ஒரு இதயம்.
எத்தனை முறைதான் செத்துப்போவேன்!!!???
எல்லோருக்கும் உயிர்வாங்க ஒருமுறை வரும் எமன்
எனக்குமட்டும் இன்னும் எத்தனை முறைதான் வருவானோ??
சரிதான் கணக்கு சரிதான்!!
நூறு இதயத்தை ஒவ்வொன்றாய்தானே
உயிர்வாங்க வேண்டும்..!!!
கூடாது! உன் இளமை இருளிலேயே
இருந்துவிடக்கூடாது!!!
கூடாது! நூறாவது இதயமும்
இறந்துவிடக்கூடாது!!-அதற்குமுன்;
''ஓடு அவள் இருக்கும் திசை நோக்கி! ஓடு''
மார்பை கிழித்தாவது -உன்
இதயத்துடிப்புகளின் இரைச்சலை அவளின்
இரவுகளில் பதிந்துவிட்டு வா''
சொன்னது காதல் சுலபமாய்.
இருந்தாலும் விரைந்தேன்
அவளின் விலாசம் தேடி..(தொடரும்)


















