Sunday, June 6, 2010

இது காதல் கடிதம் அல்ல...10(தொடர்க(வி)தை)


தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் க(வி)தைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தையின் எல்லா பாகமும் இங்கே..

ஆரம்பமானது அவள் நினைவுகளின் அழிச்சாட்டியம்...
நிஜங்களை தொலைத்து விட்ட-என்
நிசப்த்த இரவுக்குள்;
முத்த சத்தத்தோடு முதலாய் வந்துவிடுகிறது
அவளின் அசூர நினைவுகள்.


கவலைகளை கையமர்த்திவிட்டு;
இதயத்தின் அருகே அழுத்தமாய் அமர்ந்து கொண்டு;
இதயஅறுவை சிகிச்சை ஒன்றுக்கு ஆயத்தமாகிறது.


அறுத்த இருதயத்தின் பேருத்த குருதியை குடித்து விட்டு
அசைவமாகிறது அவளின் சைவநினைவுகள்.

ரத்தம் தீர்த்ததும் சத்தம் போடாமல்;
நாடுகளை பிரிக்கும் கோடுகளாய்;
நான்கு அறை இதயத்தை நூறு;கூறு போட்டு
விலாஎழும்புகளை எரித்து  விளக்கேற்றி -அதில்
உயிர் உருக்கி ஒவ்வொரு துண்டுகளிலும்
ஊற்றி துடிக்கவிட்டு தொலைந்து போனது.


நூறு இதயத்தின் பேரு துடிதுடிப்பின்  அதிர்வில்
நொறுங்கி விடும்போல் இருக்கு நெஞ்சாங்கூடு.

இதயங்கள் இடம்மாறிமாறி  துடிக்கும்
இம்சையில்; வந்த தூக்கம் வாசலிலே
உறங்கிவிட்டு திரும்புகிறது தினமும்.

எப்போதும் இருப்பாய் என்றபோது
இருந்த இடம் தெரியாத அழுகை-இனி நீ
இல்லை என்றதும் இமைகளில்
இறங்கிவந்து என்னை இறந்துவிடச் சொல்கிறது.

இரவு நேரம் வந்துவிட்டால்
இதயக்  காய்ச்சல் வந்து;
இறந்துவிடுகிறது ஒரு இதயம்.

எத்தனை முறைதான் செத்துப்போவேன்!!!???
எல்லோருக்கும் உயிர்வாங்க ஒருமுறை வரும் எமன்
எனக்குமட்டும் இன்னும் எத்தனை முறைதான் வருவானோ??

சரிதான் கணக்கு சரிதான்!!
நூறு இதயத்தை ஒவ்வொன்றாய்தானே
உயிர்வாங்க வேண்டும்..!!!


கூடாது! உன் இளமை இருளிலேயே
இருந்துவிடக்கூடாது!!!
கூடாது! நூறாவது இதயமும்
இறந்துவிடக்கூடாது!!-அதற்குமுன்;
''ஓடு அவள் இருக்கும் திசை நோக்கி! ஓடு''
மார்பை கிழித்தாவது -உன்
இதயத்துடிப்புகளின் இரைச்சலை அவளின்
இரவுகளில் பதிந்துவிட்டு வா''
சொன்னது காதல் சுலபமாய்.
இருந்தாலும் விரைந்தேன்
அவளின் விலாசம் தேடி..(தொடரும்)


20 comments:

சுசி said...

//எப்போதும் இருப்பாய் என்றபோது
இருந்த இடம் தெரியாத அழுகை-இனி நீ
இல்லை என்றதும் இமைகளில்
இறங்கிவந்து என்னை இறந்துவிடச் சொல்கிறது.//

பிரமாதம் சீமான்..

புது வீடும் சூப்பர்.

சுசி said...

மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

ப்ரியமுடன்...வசந்த் said...

//கவலைகளை கையமர்த்திவிட்டு;
இதயத்தின் அருகே அழுத்தமாய் அமர்ந்து கொண்டு;
இதயஅறுவை சிகிச்சை ஒன்றுக்கு ஆயத்தமாகிறது.//

அழகு...ரணமாய்...

ஆவ்வ்வ் மாப்ள இன்னும் இந்த தொடர் முடிக்கலியா நீ இருந்தாலும் அழகான வார்த்தைகள் கவிதை முழுதும்.....

seemangani said...

சுசி said...
//மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்..//

ஆமாம் நீங்கதான் பஸ்ட்டு...உங்களுக்கு ஒரு ஜெட் விமானம் அனுப்பப்படும்...இரவு கனவில்...

//எப்போதும் இருப்பாய் என்றபோது
இருந்த இடம் தெரியாத அழுகை-இனி நீ
இல்லை என்றதும் இமைகளில்
இறங்கிவந்து என்னை இறந்துவிடச் சொல்கிறது.//

//பிரமாதம் சீமான்..

புது வீடும் சூப்பர். //


வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சுசிக்கா

ப்ரியமுடன்...வசந்த் said...
//கவலைகளை கையமர்த்திவிட்டு;
இதயத்தின் அருகே அழுத்தமாய் அமர்ந்து கொண்டு;
இதயஅறுவை சிகிச்சை ஒன்றுக்கு ஆயத்தமாகிறது.//

//அழகு...ரணமாய்...

//ஆவ்வ்வ் மாப்ள இன்னும் இந்த தொடர் முடிக்கலியா//

அட போ மாப்ளே கன்னி தீவு ரேஞ்சுக்கு கொண்டு போகலாம்னு பார்த்தா பத்துக்கே தாங்க முடியலையா...(சும்மா..)


நீ இருந்தாலும் அழகான வார்த்தைகள் கவிதை முழுதும்.....//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மாப்ளே...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

seemangani said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சங்கர்...

அருண். இரா said...

சிறப்பு ! சிறப்பு !
அருமையான நடை , அழகிய வார்த்தை தொடுப்பு !

மச்சி , இப்படியேல்லாம் சொல்றத விட , சிம்ப்ளா ..
நேத்துலேர்ந்து மறக்கலாம் , நெனைச்சா உடனே பழைய ஞாபகத்த கிளறி விட்டுட்டே தல ..

-- மச்சான்ஸ்
www.machaanblog.blogspot.com

seemangani said...

அருண். இரா said...

//சிறப்பு ! சிறப்பு !
அருமையான நடை , அழகிய வார்த்தை தொடுப்பு !

மச்சி , இப்படியேல்லாம் சொல்றத விட , சிம்ப்ளா ..
நேத்துலேர்ந்து மறக்கலாம் , நெனைச்சா உடனே பழைய ஞாபகத்த கிளறி விட்டுட்டே தல ..//

ஐயோ பழைய நியாபகம் வந்துருச்சா...
கப்புன்னு கவுந்தடிச்சு படுங்க மச்சான்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...அருண் மச்சான்..அடிக்கடி வாங்க..

காமராஜ் said...

எத்தனை முறைதான் செத்துப்போவேன்!!!???
எல்லோருக்கும் உயிர்வாங்க ஒருமுறை வரும் எமன்
எனக்குமட்டும் இன்னும் எத்தனை முறைதான் வருவானோ??//

இதுவும் நல்லாருக்கு. இந்தக்காதல் எப்டீல்லாம் யோசிக்க வைக்குது. நடத்துங்க தம்பி.

seemangani said...

காமராஜ் said...
//எத்தனை முறைதான் செத்துப்போவேன்!!!???
எல்லோருக்கும் உயிர்வாங்க ஒருமுறை வரும் எமன்
எனக்குமட்டும் இன்னும் எத்தனை முறைதான் வருவானோ??//

இதுவும் நல்லாருக்கு. இந்தக்காதல் எப்டீல்லாம் யோசிக்க வைக்குது. நடத்துங்க தம்பி. //

கற்பனைதானே அண்ணே...கவிதைக்கு அழகு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காமராஜ் அண்ணே...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

தமிழ் உதயம் said...

தவிப்புகளும் தவிப்புகளின் கவிதையும் எங்களை தவிக்க வைக்கின்றன சீமான்கனி.

அக்பர் said...

கலக்குறீங்க பாஸ். காதல்! வேதனை கலந்த இன்பம்.

ஸாதிகா said...

//அவளின் விலாசம் தேடி// appuram.....?

க.பாலாசி said...

யப்பா.............. என்னா லவ்வு....

seemangani said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

//மிக அருமை//

நன்றி உலவு உங்கள் கருத்து எனக்கு இன்னும் உற்சாகம் தருது...நன்றி...

தமிழ் உதயம் said...
//தவிப்புகளும் தவிப்புகளின் கவிதையும் எங்களை தவிக்க வைக்கின்றன சீமான்கனி.//

வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி ரமேஷ்ஜி...

அக்பர் said...
//கலக்குறீங்க பாஸ். காதல்! வேதனை கலந்த இன்பம்.//


சரிதான் அக்பர்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

ஸாதிகா said...
//அவளின் விலாசம் தேடி// appuram.....? //

ஒரு பயங்கரமான சந்திப்புதான்...
நன்றி அக்கா...

க.பாலாசி said...
//யப்பா.............. என்னா லவ்வு.... //

வலிகளை வாழ்த்தும் ...லவ்வு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாசி...

Sivaji Sankar said...

அண்ணா..,
காதல் தான் சிவப்பாக்குகிறது
ரத்தத்தை.,
நினைவுகள் தான் இயங்க வைக்கிறது
ஹிருதயத்தை..
ரணம் கண்ட காதல் போல வலியான சுகம் வேறெதும் இல்லை
கல்லறை காற்றை தான் சுவாசிக்கிறீர் போல :)
தொடருங்கள்..

seemangani said...

Sivaji Sankar said...

//அண்ணா..,
காதல் தான் சிவப்பாக்குகிறது
ரத்தத்தை.,
நினைவுகள் தான் இயங்க வைக்கிறது
ஹிருதயத்தை..
ரணம் கண்ட காதல் போல வலியான சுகம் வேறெதும் இல்லை
கல்லறை காற்றை தான் சுவாசிக்கிறீர் போல //:

வாங்க சார் ஐயோ உங்களுக்கு இதவிட பயங்கர அனுபவம்லாம் இருக்கும் போலவே...கல்லறை காற்றைத்தான் சுவாசிக்கிறேன் ஆனால் காதல் கல்லறை இல்லை...இங்கு வெறும் கான்க்ரீட் கல்லறைகள் மட்டும்தான் இருக்கு... சுகமான ரணத்தோடு கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்...சிவா தம்பி...

NIZAMUDEEN said...

//இரவு நேரம் வந்துவிட்டால்
இதயக் காய்ச்சல் வந்து;
இறந்துவிடுகிறது ஒரு இதயம்//

இதுதான் வலி(மை)யான காதல் படு(த்து)ம் பாடு என்பதோ!

*புதிய தோற்றம், கவர்கிறது.

seemangani said...

NIZAMUDEEN said...
//இரவு நேரம் வந்துவிட்டால்
இதயக் காய்ச்சல் வந்து;
இறந்துவிடுகிறது ஒரு இதயம்//

//இதுதான் வலி(மை)யான காதல் படு(த்து)ம் பாடு என்பதோ!

*புதிய தோற்றம், கவர்கிறது.//


ஆமாம் நிஜாம் அண்ணா அப்போ காதலர்கள்...பாவம்தானே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

Related Posts with Thumbnails