Friday, June 4, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள்...(தொடர் பதிவு)


முதலில் இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த ஹரீஷ்க்கு நன்றி...இந்த பதிவை எழுத ரெம்ப யோசிக்க வேண்டியதாபோச்சு.அதனால் தான் ரெம்ப தாமதமா இந்த பதிவு.காரணம் அதிகம், படம் பார்ப்பது இல்லை விமர்சிக்கவும் தெரியாது ஏதோ என் நியாபகத்தில் இருக்கும் எனக்கு பிடித்த (உங்களுக்கு..??)படங்கள் இதோ...

1 )ஜுராசிக் பார்க்
பிடித்த படம் என்பதைவிட வியந்த முதல் படம் என்று சொல்லலாம்.அதுவரை கற்பனைகூட செய்து பார்த்திராத ஒரு பெரிய விலங்கை நேரே பார்த்து விட்ட ஒரு முதல் பிரம்மிப்பை தந்த படம் என்று சொல்லலாம்.அந்த அருவி காட்சி இன்னும் கண்ணு முன்னாடி இருக்கு.சில காட்சிகளுக்கு அம்மாவின்  இருட்டு மடி தேடி குருட்டு பயம் புதைத்த முதல் அனுபவமும் தந்த படம்.டினோசர் படம் போட்ட ஸ்கூல் பேக் வாங்கித்தர சொல்லி  உண்ணா விரதம்லாம் இருந்ததுண்டு.அந்த நியாபகம் தான் வரும்.

2)அஞ்சலி:
1990 அந்த காலகட்டத்தில் அப்போ எனக்கு ரெம்ப பிடிச்ச படம்.ரேவதி ஷாம்லி ரெண்டுபேரோட உணர்வுகள், வாண்டுகளின் அட்டகாசம்.மணிரத்னம் சாரின் விதயாசமான இயக்கம், வசனங்கள் பாடல் எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது.படத்துல ஒரு காட்சி வரும் ஷாம்லி அம்மா ரேவதிய கண்ணு,மூக்கு,வாய் எல்லாம் தொட்டு பார்த்துத்து கடைசியா  அரஞ்சுட்டு  சிரிப்பா.  அந்த காட்சிய  மனசுல வச்சுகிட்டு அடுத்தநாள் ஸ்கூலுக்கு போய் நண்பர்கள ஒவ்வொருத்தனா கூப்பிட்டு கண்ணு,மூக்கு,வாய் ஒவ்வொன்ன தொட்டு பார்த்துட்டு அடுத்து (அதேதான்)  ஒரு அரைய  விட்டு ஓடியே போய்டுவேன்.அது எனக்கும்   நடந்தது வேற விஷயம்.

3)புதிய மன்னர்கள்:
இந்த படம் எத்தனை பேர் பாத்திங்கனு தெரியல.இளைய சமுதாயத்தால எதுவும் பண்ண முடியும் என்பதை சொல்ற படம்.விக்ரம்,மோகினி,தாமு,விவேக் இன்னும் நிறைய பேர் நடிச்சுருபாங்க.கலாட்டாவான கல்லூரில ஆரம்பிச்சு மாணவர்களின் மோசமான முடிவுகளின் விளைவுகளை சொல்லி, கடைசியா சரியான பாதைய காட்டும் படம். இசை ஏ.ஆர்.ரகுமான்.

4)மைகேல் மதன காமராஜன் :
இன்றும் டி.வி.ல இந்த படம் வந்தா முழுதாய் இருந்து பார்த்து விடுவேன்.ஒவ்வொரு காட்சியும் சிரிச்சு ரசிச்சு படம் எப்போ தொடங்குச்சு எப்போ முடிஞ்சுசுனே தெரியாது.(படம் பாக்காம தூங்கிட்டா  அப்டிதான் இருக்கும்).
ஒவ்வொரு  கட்சியும் திரும்ப திரும்ப பார்த்தாலும் அலுக்காது.அந்த பீம்பாய்..பீம்பாய் வசனம் அப்போ ரெம்ப பிடிச்ச வசனம்.

5)மகாநதி:
நான் உணர்ச்சிவசப்பட்ட முதல் படம்னு நினைக்குறேன்.ஆரம்பமே பாரதியார் கவிதையோட படம் ரெம்ப மகிழ்ச்சியா ஆரம்பிக்கும்.போக போக ஒவ்வொரு காட்சியும் மனச துளைச்சு உள்ளபோய் ஆழமா அழுத்தி ஒட்டிக்கும்.ஒரு ரெண்டு நாளைக்கு அந்த தாக்கம் போகாது.அந்த பொண்ணு தூக்கத்துல பேசும்போது ஒரு தகப்பனோட மனவேதனை,கோபம்  எல்லாமே பதிவு பண்ணிய எதார்த்தங்களை மீறாத படம்.

6)பம்பாய்:
ஒரு அழகான காதல்ல ஆரம்பிச்சு மனிதத்தை ஒன்னு சேர்க்கும் படம்.ஏ.ஆர்.ரகுமான் இசை எனக்கு அந்த படத்துல இருந்து ரெம்ப பிடிக்க ஆரம்பிச்சது.அதுல இருந்து ரஹ்மானோட எந்த படம் வந்தாலும் படத்தின் பாடல்கள் எங்க தெருவில் முதலில் எங்க வீட்டில்தான் கேக்கும்.அத்தா (அப்பா) கிட்ட அடம்பிடிச்சு கேசெட் வாங்கிட்டுவர சொல்லுவேன்.ஒரு கட்டத்துல அவருக்கும் பிடிச்சுபோய் தீவிர இளையராஜா ரசிகனா  இருந்தவர் ரகுமானுக்கும் ரசிகனா  மாறிட்டாரு.படத்துல அந்த இறுதி கட்சி அமைத்த விதமும் பின்னணி இசையும் மனதை ஏதோ செஞ்சுடும்.

7)உயிரே...:
முதல் முறையா அண்ணாசாலை தேவி தேட்டரில் டிக்கெட் புக் பண்ணி பார்த்த முதல் படம். டப்பிங் படம் என்பதலையோ என்னவோ கதை நிறைய பேருக்கு பிடிக்காம (புரியாம )போச்சு.தீவிரவாதம் எவ்வளோ கொடுமையானதுன்னு சொல்ல ஒரு காதலே அழிஞ்சு போய்டும். எனக்கு பிடிச்ச கதை. இசை, ஐயோ!!! இப்பவும் அந்த படத்தின் பாடல்கள் எங்க கேட்டாலும் அப்டியே நின்று விடுவேன்.முதல் முறையா சி.டி. ல கேட்ட பாடல்கள்.ஒவ்வொரு பாட்டின் வரிகளும் வைரமுத்து சார் ரசிச்சு எழுதி இருப்பாரு.எல்லா பாட்டையும் மனப்பாடம் பண்ணி பாடிட்டே இருப்பேன்.என் அக்கா கிண்டல் பண்ணுவாங்க ''ஏண்டா புஸ்தகத்துல இருக்குற பாடம் மனப்பாடம் பண்ண சொன்னா உனக்கு வலிக்கும் பாட்டு மட்டும் ஒருவரி விடாம பாடுவ'' னு.  வைரமுத்து சார் பாடல்களை அப்போ இருந்துதான் சுவாசிக்க ஆரம்பிச்சேன்.யாரவது பாட்டு வரிகளை தப்பா பாடுனா எனக்கு கெட்ட கோபம் வரும்.தெரிஞ்சா பாடு இல்லனா பாடதனு சொல்லுவேன்.

8)காதல்:
இந்த படம் பிடிக்க ஒரு முக்கிய காரணம் இருக்கு.இந்த படம் வர்றதுக்கு ஒரு வருடம் முன்னால இதே கதை என் நண்பன் வாழ்வில் நடந்துச்சு.அவன் மதுரைல இருந்து அடைக்கலம்  தேடிவந்தது சென்னைல என்கிட்டதான்.எனக்கு அப்போ விபரம் சரியா தெரியாது.நான் நேர எங்க அம்மா கிட்ட கூட்டிட்டு போய் விட்டுட்டேன்.  அப்பறம்  அவங்கள படத்துல வர்றமாதிரி பிரிச்சுடாங்க(அந்த பாவம் உன்னை சும்மா விடாது).ஆனால் அதுதான் சரியான முடிவுனு  அப்பறம் புரிய ஆரம்பிச்சது.அவன் கதைய அப்டியே பார்த்த படம்.(படத்த பத்தி ஒருவார்த்தை கூட சொல்லவே இல்லையே...)அட ஆமாம் உனக்கென இருப்பேன் பாட்டு ரெம்ப பிடிக்கும்.போதுமா...?!!!.

9)பசங்க:
படம் பாக்கும்போது மறுபடியும் பள்ளி பருவத்துக்கு திரும்பி போன அனுபவம் கொடுத்த படம்.நம்ம பண்ணுன குறும்ப எல்லாம் மறுபடியும் பண்ணா சொல்லி ஆசைய தூண்டி விட்ட படம்.கடைசிகட்ட காட்சி கண்கலங்க வச்சுடுச்சு.என்னையே அறியாம கைதட்டிட்டேன்.மறக்க முடியாத படம்.''மழை இன்று வருமா'' பாடல் ரெம்ப பிடிக்கும்.

10 )அங்காடிதெரு:
இந்த பத்து தடவைக்கு மேல பார்த்துட்டேன்.இன்னும் பாத்துடே இருக்கேன்.ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்குற படம்.அத ஒரு ஜவுளி கடைல நடக்குற கதையா பார்க்க முடியால. எல்லா இடத்துலையும் ஏன் சொல்ல போன வெளிநாட்டுல வேலை செய்றவங்களுக்கும் இந்த கதை பொருந்தும்.கால் சென்டர் ஆளுக்கும் இது பொருந்தும்.எனக்கு அப்டித்தான் பார்க்க தோணுது.எதார்த்தங்களை மீறாத படம்.படம் முடியும் பொது உங்கள் பின்னுட்டம் போல ஒரு உற்ச்சாகம் கொடுக்குற படம்.''கருங்காலி'' தவிர எல்லா பாடல்களும் பிடிக்கும்.   
 உங்களுக்கு பிடிச்சிருக்கா??
 இதுவரை பொறுமையா படிச்ச அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் நன்றியோ...நன்றி.எனக்கு தெரிஞ்சு அனைவரும் எழுதிட்டாங்க.(அவ்ளோ நாளா நான் யோசிச்சுகிட்டே  இருந்திருக்கேன்...)தொடர விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம்.
12 comments:

soundar said...

எல்லாம் நல்ல படங்கள்.

தமிழ் உதயம் said...

இதில் சில படங்கள்,எனக்கும் பிடித்த படங்கள்.

சுசி said...

இதில அங்காடித் தெரு நான் இன்னமும் பாக்கல. மீதி எல்லாம் எனக்கும் பிடிக்கும்.

நல்லா எழுதி இருக்கீங்க சீமான்.

ஸாதிகா said...

ஆஜர்.

Priya said...

உங்க தேர்வில் உள்ள அனைத்துப் படங்களும் நல்ல படங்கள்தான். இதில் எனக்கு மிகவும் பிடித்த படம் அஞ்சலி.சந்தோஷம் வேதனை என எல்லா உணர்வுகளின் கலவையாய் இருக்கும் படம்.

seemangani said...

soundar said...
//எல்லாம் நல்ல படங்கள். //
சுடசுட வடை வாங்கிய சௌந்தர் க்கு நன்றிகள்...

தமிழ் உதயம் said...
//இதில் சில படங்கள்,எனக்கும் பிடித்த படங்கள்.//

உங்களுக்கு எல்லாமே பிடிக்கும்னு நெனச்சேன்...நன்றிகள்...ரமேஷ்ஜி...

சுசி said...
//இதில அங்காடித் தெரு நான் இன்னமும் பாக்கல. மீதி எல்லாம் எனக்கும் பிடிக்கும்.

நல்லா எழுதி இருக்கீங்க சீமான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி அக்கா...அங்காடித் தெரு கண்டிப்பா பாருங்க...

ஸாதிகா said...
//ஆஜர்.//

ரைட்டு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

Priya said...
//உங்க தேர்வில் உள்ள அனைத்துப் படங்களும் நல்ல படங்கள்தான். இதில் எனக்கு மிகவும் பிடித்த படம் அஞ்சலி.சந்தோஷம் வேதனை என எல்லா உணர்வுகளின் கலவையாய் இருக்கும் படம்.//

ஆம் அக்கா...என்னக்கும் மறக்க முடியாத படம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ப்ரியா...

சிவன். said...

நல்ல படங்கள் மச்சான்...உயிரேதான் என்னுடைய...all TIME FAVOURITE

seemangani said...

சிவன். said...

//நல்ல படங்கள் மச்சான்...உயிரேதான் என்னுடைய...all TIME FAVOURITE//

ஆம் இசைக்காகவே எத்தனை முறைவேண்டுமானாலும் பார்க்கலாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சான்..

அஹமது இர்ஷாத் said...

சரியான தொகுப்பு சகா.. எனக்கும் இந்தப் படங்கள் பிடிக்கும்..

seemangani said...

அஹமது இர்ஷாத் said...
//சரியான தொகுப்பு சகா.. எனக்கும் இந்தப் படங்கள் பிடிக்கும்.. //


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷா...

DREAMER said...

அசத்தல் தேர்வுகள்ங்க... அழைப்பை ஏற்று எழுதியமைக்கு மிக்க நன்றி!

-
DREAMER

seemangani said...

DREAMER said...
//அசத்தல் தேர்வுகள்ங்க... அழைப்பை ஏற்று எழுதியமைக்கு மிக்க நன்றி!//

-
DREAMER
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஹரீஷ்...

Related Posts with Thumbnails