Sunday, December 19, 2010

நானும், ப்ளாக்கானந்தாவும்...

நம்ம பட்டறைல உட்கார்ந்து ரெம்ப தீவிரமா என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்(ஈ ஓட்டுறதுக்கு இப்படியும் சொல்லலாம்).முன்ன மாதிரி நேரம் கிடைக்க மாட்டீங்குதே...(கிடச்சுடாலும்...)இப்படியே போனா...(முடிவே பண்ணிடீயா??) பட்டறை பாழடைஞ்சு பாம்பு பல்லிலாம் வந்து குடியிருக்க ஆரம்பிச்சுரும் போலிருக்கே. நானும்தேன் கட்டிங்கு வச்சுருக்கேன் ஆனா கொஞ்சம் கூட கிக்கு ஏறவே மாட்டிங்குதே.இப்படியே யோசிச்சுகிட்டே மௌச தேச்சுகிட்டே இருந்தேன். திடீர்னு !!கிபோர்ட்ல இருந்து பொகையா கேளம்பீருச்சு...(ஆவி வந்துருக்குமோ??)ஆஹா நம்ம பொலம்பல் கேட்டு கம்ப்யுட்டரே பொசிங்கிருச்சு எவண்டா தீயவச்சதுன்னு திருதிருன்னு முழிக்குறேன்.பக்கத்துல பார்த்தா பளபளன்னு  ஒரு உருவம் எந்திரன் சிட்டி மாதிரி உட்கார்ந்து இருக்கு.(யாரோ சூனியம் வச்கிருபாங்களோ....) 


ஏய்! யாருப்பா  நீ !!! எப்படி  ரூமுக்குள்ள  வந்த?னு கேட்டா ப்ளீஸ்  செலெக்ட் லாங்குவேஜ்னு நாக்க லாங்கா நீட்டுச்சு.(அத நாக்கலையா வப்பாங்கே..) நானும் தமில தேடி கண்டுபிடிச்சு  தொட்டேன்.சர்ர்ர்ர்ருன்னு நாக்கு  உள்ள  போயிருச்சு.வணக்கம் வெளிய வந்துச்சு.(வாந்தி வராத வரைக்கும் சந்தோசம்) நான்தான் ப்ளாக்கானந்தா பவர்ட் பை கூகுள் உன் ப்ளாக் பத்தி எல்லாம் தெரியும் எனக்கு (அட இங்கேயுமா??).யோவ் எப்படா இப்படி ஒருத்தன் மாட்டுவான்னு காத்துகிட்டு இருப்பிங்களா?? நானே நொந்து போய் இருக்கேன் நீவேற வந்து காமெடி பண்றியா ஒழுங்கா ஓடி போயிரு(அவ்வ்வ்வவ்வ்வ்..).ஏய்!!! உன் பேரு சீமான்கனி கனவு பட்டறைன்னு ஒரு ப்ளாக் எழுதுற.இருவரைக்கும் மொத்தம் ஐம்பதாயிரம் பேரு வந்து உன் ப்ளாக்க வந்து பாத்துருக்காங்க.நீ மொத்தம் 125 பதிவு எழுதி இருக்க.அதுல....



 இப்படி பலரகமா பிரிச்சு ரணகளம் பண்ணி வச்சிருக்க...இன்னும் மூணு கவிதை போஸ்ட் பண்ணாம டிரப்ட்டுல கிடக்கு மொத்தம் கணக்கு 128.அப்டி இப்டின்னு ஒரு தொண்ணுறு பேரு உனக்கு 1400  பின்னுட்டம் போட்டு இருக்காங்க."ஆத்தாடி...!!!" ஆதாடியாவது காதாடியாவது இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ...கொஞ்சநாளாவே நீ சரியா ப்ளாக் பக்கம் வர்றது இல்ல.யாரு பதிவையும் சரியா படிக்குறதும் இல்ல.கடமைக்கு ஒரு கவிதைய போட்டுட்டு கம்பிய நீட்டிடுற.உன்னை நிறையா பேரு தேடுறாங்க அதுல பாதிப் பேரு கட்டையோடு தேடுறாங்க(இனி மண்டைல ஹெல்மெட் போட்டு தாண்டி போகணும்).இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா??ம்ம்ம்ம்.....ன்னு விஜயகாந்த் மாதிரியே நாக்கக் கடிக்குது.ஆஹா..நீங்க உண்மைலேயே மகான்தான் நான் ஏதும் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிருங்க  ப்ளாக்கானந்தா.(ஏய் பவர்ட் பை கூகுள்-ல விட்டுட்டியே...)மறுபடியும் சாரிங்க.ஆமா இப்போ எதுக்கு என்ன தேடி வந்தீங்க???உன் கனவு பட்டறைல ஏதோ தோஷம் இருக்கு அத சரி பண்ணத்தான்(வந்துடாகே டா....).எங்க உன் விரல காட்டு ரேக பார்க்கணும். காட்டுனேன்...

ம்ம்ம்ம்...மொக்க ரேகை மொடங்கி போச்சு.கும்மி ரேக குறுகிபோச்சு.தொடர் கவித ரேக தொடராம போச்சு.கவித ரேக கொஞ்சம் கனமா இருக்கு.மத்த ரேகை எல்லாம் செத்த ரேக.ம்ம்ஹும்ம்ம்...இது தேறாது.இப்படியே போச்சுனா கூகுளே ப்ளாக்க மூடிட்டு போடான்னு சொல்லிடும்.ஐயோ!! இதுக்கு ஏதும் பரிகாரம் இல்லையா???

இருக்கு டெய்லி ஒரு பதிவு போடணும்,மொக்கை போட்டு அதுல கும்மியடிக்கனும்,எல்லோருக்கும் ப்ளாக் லிங்க் அனுப்பனும்,சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கும்.

நான் என்ன வச்சுகிட்டு  வஞ்சனயா பண்ணுறேன் முன்ன மாதிரி நேரம் கிடைக்குறது இல்ல....ஹும்ம்ம்ம்...இருந்தாலும் முயற்சி பண்றேன்.உங்க டிப்ஸுக்கு ரெம்ப நன்றி  ப்ளாக்கானந்தா.சரி!சரி உன்னை மாதிரி யாரோ பொலம்புற சத்தம் கேட்ட்குது நான் அங்க போறேன்னு மறஞ்சு போயிட்டாரு.இதனால மக்களே என்ன சொல்ல வர்றேன்னா.... உங்க ப்ளாக் பக்கம் வரலையேன்னு யாரும் என்மேல கோபப்படாதீங்க.சீக்கிரமே முன்ன மாதிரி வந்து ஒரு கை பார்ப்போம்.ம்ம்ம்ம்..இருங்க இருங்க எங்க எஸ்கேப் ஆகுறீங்க...இப்போ இது தொடர் பதிவா வலம் வர போகுது நான் இப்போ நண்பர்கள் சிலரை இந்த பதிவ தொடர அழைக்கிறேன்.ஒன்னும் இல்ல இந்த ப்ளாகானந்தாஉங்களை பார்க்க வந்திருந்தா என்ன நடந்திருக்கும் அப்டின்னு....பதிவுல எழுத போறீங்க.நீங்களும் நாலு பேர ப்ளாக்கானந்தா கிட்ட மாட்டி விடப்போறிங்க....
நான் மாட்டி விட்டது....

3 .சிரிப்பு போலீஸ் நண்பர் ரமேஸ்...
4 .ஜெய்லானி அண்ணாத்தே...

விருப்பம் உள்ளவர்களும் தொடரலாம்...நன்றி...












Sunday, December 12, 2010

தித்திக்கும் தீ ...





எப்போதும் காதலோடு காத்திருக்கும்-நீ
இன்று கொஞ்சம் காய்ச்சலோடும் காத்திருந்தாய். 
கண்டதும் வந்து கட்டிக்கொள்ளும் 
காதல் கன்னுக்குட்டி நீ! இன்று ஏனோ !?
கட்டிலே கதியாய் கிடக்கிறாய்.

 உஷ்ணம் யாசிக்கும் உன்னை முத்தமிட்ட - என் 
இதழ்மாணி சொல்லியது - உன் 
அனல் மேனியின் வெப்ப அளவை.

வைரஸ்க்கு வாக்கப்பட்ட - உன் 
திசுக்கலேல்லாம் தீக்குளித்து  
தேகக்கூட்டில் தேவைக்கு அதிகமாய் உஷ்ணம். 
அதற்க்கு அடையாலமாய் - உன் 
இரவு உடையில் இறந்துகிடந்தது சில லட்சம் பூக்கள். 
கால் கொலுசு சிரிக்காமல் அறையில் எதோ குறை.

"என்ன?" என்றேன் "
ஒன்றும் இல்லை கொஞ்சமாய் காய்ச்சல்" .
"மருந்து எடுத்தாயா?"  
”இல்லை...உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" 
"எனக்காகவா!!எதற்கு?? " 
நீதானே சொன்னாய் ”நீ பாதி நான் பாதி” என்று
எனக்கு காய்ச்சல் என்றால் என்னுள் இருக்கும் 
உனக்கும் தானே உஷ்ணம் தாக்கி இருக்கும் 
அப்படி இருக்க நான் மட்டும் மருந்து எடுத்தால் 
காதல் பழிக்கும் இல்லையா ?”என்றாய். 
"ஓ...அப்படியா!!?சரி கசக்காத மருந்து கொடு" .

இது கசக்காது சுடும் என்று 
இமைகளை மூடச்சொல்லி 
இதழ்களால் இதழ்களை தீமூட்டி
மருந்து ”ரெம்ப சுட்டதா” என்றாய்.
ஆம் காய்ச்சல் சூட்டை விட 
காதல் சூடு கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் 
இந்த தித்திக்கும் தீயால்
இன்னும் கொஞ்சம் இதழ்சுடு”
நம் காதல் காலத்தில் 
இனி காய்ச்சல் அடிக்கடி வரட்டும்.

காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.  



கம்.


Sunday, November 28, 2010

தம்மடித்தால் கோடி நன்மை....


 புகை பிடிப்பதால் பல நன்மைகள்‏ !!!



புகை பிடிப்பது கேடு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கேடு தனக்கு
வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான்
நினைப்பார்கள். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும்
தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. எனவே புகை
பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.


 தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைக்காரர்கள்,
பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை
உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். இதனால் பிறருக்கு
உதவும் சந்தோசம் கிடைக்கிறது.

(ரெம்ப சந்தோசம்...)
 சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.(இதுல எந்த ராசாவுக்கு நன்மையோ தெரியல!! # டவுட்டு.)
 சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப்புறத்தின் எந்த
நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும்
ஒன்றும் பெரிதாகத் தெரியாது.
(சத்தியமா இதுல உள் குத்து இருக்கு)
 சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின்
தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
(நன்பேண்டா...)
 எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்
வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும். 
(குறிப்பா நம்ம ஊருக்கு ரெம்பவே...)
 சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம்
இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும்
கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
(அட்ரா சக்க...அட்ரா சக்க...)
 பிரச்சனைகள் வந்தால் டென்சனே தேவையில்லை. ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்போதும்.சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல்
ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். 
(அவ்வவ்வ்வ்வ்..அப்போ அதெல்லாம் வெறும் கற்பனைதானா??)
 லொக் லொக்கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை, கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம். 
(அப்போ இழுக்க!இழுக்க மட்டும் இல்ல இரும!இருமவும் இன்பமா???)
 அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்.
முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும்.
பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது. 
(அட பாவிகளா காலியா இருக்குற பஸ்ல ஏறுனா இடம் கிடைக்கபோகுது அதுக்கு இப்டியா??)
  தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும்
நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

(நாய்களுக்கு மட்டும்தானா..???)
  இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும்
பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
(கைப்புள்ள இது தேவையாடா உனக்கு!?)
 வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில்
உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.

(அட பார்ர்ர்ர்ரா.....)
 புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையைப் பார்க்கும்போது
பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக் கொண்டு அதன் பக்கமே
போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும். 
(இதுதாண்டா தியாகம்..)
 சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைல்களை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில்
நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம். 
( இப்டி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே....)
 வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி
அள்ளி தந்து வள்ளலாகலாம்.

(நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல...அ..ஆஅ.....)
 நாட்டின் பொறுப்பற்ற மக்களின் ஆயுளைக் குறைத்து மக்கள் தொகை
கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

(இருந்து என்னத்த சாதிக்க போகுதுங்க??)

" எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ
அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?


நன்றி முஸ்தபா மற்றும் எம்.பி.எம் நண்பர்கள்...

Monday, November 8, 2010

ஈரச் சிறகு...


மேல்நாட்டு அஃறினையாய்
வாழ்வோடு போராடும் வாலிபகாலம்.

கண்ணீர் எனும்   கள்ளக் காதலியின்
கன்னத்து முத்தங்களும்.

தாளில் எழுதி வைத்த என் 
தனிமைத் தவிப்புகளால் 
தற்கொலை செய்து கொண்ட தமிழும்.

இறந்துபோன சொந்தங்களுக்கு
இங்கிருந்தே அழும் அப்பாவி
ஆன்மாக்களின் ஒப்பாரி அலறல்களும்.

அந்நியச் செலாவணியில்
அந்நியமாகிப்போன ஆசைகளும்.

கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.

என்றோ செத்த கறிக் கோழியில்
இன்று வைத்த குருமாவும் அதை
திண்று செரிக்காத குடலும்.

நினைவுகள் அலையும் நிசப்த்த இரவுகளில்
நெருப்பாய் கொதிக்கும்
நிலவின் வெளிச்சமும்.

எவரஸ்ட் ஏறுவதாய் சொல்லிவிட்டு 
எரிமலை விளிம்பில் எரிந்து 
கருகிப்போன என் லட்சியக் கனவுகளும்.

சூரியன் தொட்டுப்பார்த்து
சுருக்கிப்போன தோலை  
உற்றுப்பார்த்து   ஒதுங்கிப்போகும்
பார்வைக்களுமாய்;

கண்ணீர் காயாத ஈரச்சிறகின்
இத்தனை இறகுச் சுமைகளையும்; 
வண்டு துளைத்த முங்கில் மரத்தின்
முனங்களுக்கு பதில் சொல்ல  
செல்(ல) குயிலாய் கூவும் அவளின் ஆசைக் குரலுக்கு!!

அந்திவரை அம்மணத்தை மறைக்கும்
அனாதைச் சிறுமியாய்  
அத்தனையும் மறைத்துக் விடுகிறேன்...





Monday, November 1, 2010

வெள்ளைக்காரி...

 


ஊதி விட்டவனின் உள்ளுக்குள்
உமிழ்ந்து விட்டுப் போகும்
உத்தமி இந்த வெள்ளைக்காரி.
 
சத்தமில்லா முத்தங்களை
சலிக்காமல் தந்தாலும்
இதழ்களுக்கிடையே இருந்துகொண்டு
ஈரக் கொலையில் ஈட்டி எரியும்
இன்ப வெள்ளைக்காரி.

காகித சட்டையோடு
காசுக்கு கை வந்து  
காற்றை சாக்கடையாய்
கற்பகூட்டுக்குள்ளே கலந்துவிடும் 
கண்ணிய  வெள்ளைக்காரி. 

மூச்சுபைக்குள்ளே
நிக்கோடின்  நெடி வீசி
கார்பன் கரி பூசி
கேன்சர் புற்று விற்கும் 
ஸ்பான்சர் வெள்ளைக்காரி. 

சூரியக் கங்கின் சூடு தாங்காத
சுவாசக் கூட்டுக்குள்ளே கொள்ளிவைக்க 
விரல் இடுக்கில் விறாகாய் முளைத்த
கொள்ளிவாய் வெள்ளைக்காரி.

விரட்டி விட்டோம் 
வெள்ளையனை என்ற
அறியாத மூடர் மூளையை 
அடிமையாக்கி வைத்திருக்கும்  
அழகான வெள்ளைக்காரி.



                                           




Sunday, October 17, 2010

காட்சி...நீட்சி...



கரண்ட் போனதும் தலையில் தீயேந்தி கதறியழும் மெழுகு 
தேநீர் கறைபடிந்த கோப்பையின் விளிம்பில் தேடிவந்தமரும் ஈ 

உப்பு சப்பில்லாத உவமைகளை உமிழ்ந்து விட்டு உறங்கும் பேனா
கன்னங்களில் கடன் காரனாய் காத்திருக்கும் உள்ளங்கை ரேகைகள்
சபலப்பட்டு அடுத்த முறையும் சாகத்துடிக்கும் புகைக்கூடு
சாக்கடையில் பிறந்தாலும் சாதிமத பேதமின்றி சரளமாய் கடிக்கும் கொசு 
அர்த்தம் விளங்காது அடித்துத் திருத்தப்பட்ட அவளுக்கான எழுத்து 
வசை பாட வந்துவிட்டு சிரிக்கும்போது சிறைபட்டுக் கிடக்கும் நாக்கு
வைரஸ்கள் தின்றுவிட்ட என் வலைப்பக்கங்கள்...









Monday, September 20, 2010

ரா 'திரி' யின் ரகசிய தீ...


எரிமலையின் முகவரி தேடும் பனித்துளி;
கடலலையில் கால் நனைக்கும் கங்கு;
சாயங்காலம் முதல் சலசலத்து  சாகக்கிடக்கும்   மெழுகு தீ;
சபிக்கப் படாத சாத்தானாய்  காதல்.


நிசப்த்த இரவில் நிராகரிக்கப்பட்ட ஆடைகள்;
இருவருக்குமிடையே பலவந்தமாய் நுழையும் காற்று;
கூந்தல் காட்டுக்குள் விரல்களின் குருட்டு யுத்தம்;
தேகக் கூட்டுக்குள் தேடி தந்த திருட்டு முத்தம்.


முத்தத்தில்  முறிந்து போன வளையல்;
சிணுங்களில் சிதறிப்போன கொலுசு மணி;
காற்றோடு கலந்து விட்ட காகித கனங்கள்;
பல்லிடுக்கில் பட்டுவிட்ட இதழின் முனங்கள்.


ஈரமுத்தம் காயும் ;
தீரா யுத்தம் ஓயும் ;
கிழக்கு தீபிடிக்கும்;
விளக்கு தீ குடிக்கும். 

வெட்கம் வற்றிய நீயும்;
பக்கம் ஒற்றிய நானும்;
அதுவரை .....
பத்திரமாய் பிரிந்திருப்போம்.






 


Related Posts with Thumbnails