Friday, January 1, 2010

கோவம் வேண்டாமடி என் செல்லமே...


ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்கள் அவர்கள். வழக்கமான காலை பொழுது ...வந்துட்டியா, வந்துட்டேன்...இந்தா உம்ம்மஹா...தினமும் காலைல உனக்கு இதேவேலை  முதலாளி இருக்காரு சத்தம்  கேக்கும்ல...அவரு அதெல்லாம் கண்டுக்க  மாட்டாரு...
இப்படி அழகான வழக்கை இவர்களுடையது......   
                  
ஒரு வாரமாவே அவனை கண்டால் அவளுக்கு என்னவோ போல் இருக்கு.(ஈகோ )இபோதெல்லாம், அவன்தொடவரும்போதெல்லாம் அவன்மேல்  மேல்எரிந்து விழுகிறாள்....  

அரை  வாய்  திறந்து, ஓட்டை பல்லோடு, எந்நேரமும்  இளித்து  கொண்டிருக்கும்   ஒஜான்  ஒல்லி பயலே  உனக்கு மட்டும்  ஏன் அப்படி ஒரு ஒய்யார வாழ்க்கை!!?

 இரவெல்லாம் கண்விழித்து மழை வெயில் பாராமல் எவன் வருவனோ என்ன பண்ணுவானோ என்று வேலை பார்ப்பது    நான், ஆம்பளை என்பதால்   உனக்கு மட்டும் ஏ.சி ரூமில் ஏகபோக வாழ்க்கையா...!!??

 பிந்து கோஸ்  என்னை, ஓமகுச்சி நீ, என்னமாய் ஆட்டி வைகிறாய் திண்டுக்கல் குண்டம்மா கூட நீ சொன்னால்  வாய் மூடி ஊமையாய் போகிறாள்.
நீ மட்டும் என்ன அவ்வளோ ஒசத்தி??ஆம்பளை என்பதாலா??? 

'' செல்லம் என் மேல என்ன கோபம் உனக்கு??  நான் வேறு,  நீவேறு என்று ஏன் என்னை பிரித்து பார்க்கிறாய் நான் இல்லாமல் நீ இல்லை  நீ...இல்.......'' நிறுத்து !! பணக்காரனின் பையிலே பவனிக்கிறாய்  அல்லவா உனக்கு இதுவும் இருக்கும் இன்னமும் இருக்கும்.
என்ன சொன்ன??  நீ இல்லாமல் நான் இல்லையா... என் ஒரு அடிக்கு நீ தாங்குவாயா!!??அதை விடு என்னை விற்றால் கொஞ்சம் பேரிச்சம்பழமாவது தேறும், உன்னை எவன் சீண்டுவான்.அவன்''......................''

நீ வேறு, நான் வேறு இல்லை என்று சொல்கிறாயே; ஒரு நாள் ராத்திரியாவது  என்னோடு ஒன்னா  தனியா இருக்க முடியுமா  உன்னால் ??.அது சரியாகாது  செல்லம்... நான் ஜான் பிள்ளை  என்றாலும் ஆண் பிள்ளை இதுதான் நியதி.முதலாளிக்கு யார் பதில் சொல்ல முடியும்??

 இறுதியில் உன் ஆம்பள புத்தியை காமிசுட்ட பாத்தியா...!!எனக்கு நீ வேண்டாம் போய்விடு என்னால் தனியா வாழ முடியும்.
முடியாது!! உன்னை விட்டு என்னால இருக்க முடியாது செல்லம்... கொஞ்சம் கோபத்தை விட்டுட்டு  யோசிமா. நான் இல்லாம எப்படி உன்னால வாழ முடியும்!? நான் இல்லனா உன்ன யாரும் மதிக்க மாட்டங்க மா... சொன்னா கேளு... ப்ளீஸ் அமைதி.

இல்ல நான் முடிவு பண்ணிட்டேன், நாளைக்கு என் முகத்துல முழிக்காத இதுதான் லாஸ்ட் ப்ளீஸ் என்ன நிம்மதியா விடு...இருவரும் பிரிந்தார்கள்.அவன் முதலாளியோடு போனான்.

 வழக்கம போல் மறுநாள் காலை, அவன் வழக்கம் போல் வந்தான். ''ஹாய் செல்லம் கோபம் போயிருச்சா??'' அவள் ஏதும்  பேசவில்லை ஏ....ப்ளீஸ் வாயதொறந்து பேசுமா...ம்ம்ம்ஹும்ம்...அவள் ஊமையாய் இருந்தாள் அவன் என்னவோ தாஜா பண்ணி பார்த்தன் ஒன்னும் நடக்க வில்லை.

 ''ஹே இங்க பாரு டா..நீ வாயதொரக்கலனா நம்ம ரெண்டு பேரையும் கொன்னுடுவாங்க ப்ளீஸ்....''ரெம்ப நேரம் ஆகியும் அவள் வாய் பூட்டியே இருந்தாள்.அவன் கெஞ்சி கெஞ்சி சோர்ந்து போனான்...

திடீர் என்று யாரோ  சுத்தியால் அவளின்  தலையில் ஓங்கி அடிக்க  அவள் மயங்கி போனால் யார்!!?? என்று பார்த்தால்; அவனின்  முதலாளி அவனையும் அவளையும் பிரித்து வைத்து விட்டு அவளை மட்டும்  கூறு கூறாக அறுத்து  வீசி எறிந்தார்  முதலாளி.

 அவனை மட்டும் முதலாளி கையேடு அழைத்து   போனார். அங்கு வேலை பார்க்கும் பையன் இதையும் தூக்கி போடுங்க முதலாளி. ''பழக்க தோஷம் டா.......காலங்காதாலயே     ஒரு செலவு...சரி சரி நீ போய் நல்ல பூட்டா பார்த்து வாங்கிட்டு சிக்கிரம் வா...''அப்போ சாவி வேண்டாமா முதலாளி!!??
டேய் .....சாவி இல்லாம பூட்டு  எதுக்குடா...போட...கிறுக்கு பயலே...               

                                                                      

7 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இப்படி ஒரு முடிவை நினைச்சுக் கோட பார்க்கல..,

பூட்டுக் கதை..,

பிரியமுடன்...வசந்த் said...

superu....! மாப்பி ட்விட்ஸ்ஸ்ஸ்ட்...சூப்பரு...

seemangani said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இப்படி ஒரு முடிவை நினைச்சுக் கோட பார்க்கல..,

பூட்டுக் கதை..,//

வாங்க சுரேஷ் முதல் முறைய வந்து முதலாவதாய் கருத்து தந்ததற்கு நன்றி தொடர்ந்து வருக ....

பிரியமுடன்...வசந்த் said...
//superu....! மாப்பி ட்விட்ஸ்ஸ்ஸ்ட்...சூப்பரு...//

வா மாப்ஸ்...அருக்காணி சவ்கியமா??
கருத்துக்கு நன்றி மாப்ஸ்...மெயில் செக் பண்ணி பார்த்தாயா??

nirmal said...

usually i read the blogs for time pass only..so that i dont want to post the comments for anyone..but first time i write a comment to ur article..because good comments only encourage the creater& make efforts to create a better one..keep it up..we are expecting more from u..

Regards,
Nirmal-Indonesia

seemangani said...

nirmal said...
//usually i read the blogs for time pass only..so that i dont want to post the comments for anyone..but first time i write a comment to ur article..because good comments only encourage the creater& make efforts to create a better one..keep it up..we are expecting more from u..Regards,
Nirmal-Indonesia//

welcome & happy new year nirmal sir,
Thanks for ur valuable comment.
Every comment is valuable for as. I try to full fill ur expectations. Keep support as...
Thanks for ur genuine comments...
Welcome.
Regards,
Seemangani.

ஸாதிகா said...

எதற்கு இத்தனை பில்ட் அப் என்று கதை ஆரம்பத்தில் யோசித்தேன்..அப்புறம்தான் தெரிந்தது பூட்டு சாவி.பொடி வைத்து கதை சொல்வதில் மன்னர் பட்டத்திற்கு சீமான் கனியை சிபாரிசு செய்யலாம்

seemangani said...

ஸாதிகா said...
//எதற்கு இத்தனை பில்ட் அப் என்று கதை ஆரம்பத்தில் யோசித்தேன்..அப்புறம்தான் தெரிந்தது பூட்டு சாவி.பொடி வைத்து கதை சொல்வதில் மன்னர் பட்டத்திற்கு சீமான் கனியை சிபாரிசு செய்யலாம்//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மன்னர் பட்டமா!!!! ஐயோ நன் வரல அந்த விளையாட்டுக்கு...திண்டுக்கல் குண்டம்மா கோவப்படுவா...:))

Related Posts with Thumbnails