Monday, January 4, 2010

இது ரவுடிகள் ராஜியம்...


பெயர் : கடவா குரூப்ஸ்  மற்றும் நண்பர்கள்.
தொழில் : இவர்களிடம் வருபவர்களை அடித்து உடைத்து பல நேரம் கடித்து உரு தெரியாமல் ஆக்குவது...
பிடித்தது : தொழிலை சுத்தமாக செய்வது.
பிடிக்காதது : டாக்டர்களை.
பயப்படாதது : எந்த  காக்கி சட்டைக்கும். 
பயப்படுவது : இவர்களை போலவே இருக்கும் போலி குரூப்புகளை..
எங்களின்  தினசரி வாழ்வில் ஒரு நாள்....


ஒல்லியாய் சிக்கென்று கலர் கலரா  இருப்பாள்.கொடி  இடைனு சொன்னா அதுதான் கொடி இடை. இவனுக்கு மட்டும் எப்படி மாசம் ஒருத்தி  மாட்றாளோ??தெரியல... டேய் கடவா  பசங்களா  எங்க எல்லாத்தையும் விட  பெரியவன் நீங்கதான்   உங்க கிட்டதான் அவ ரெம்ப நேரம் கொஞ்சி கொழாவுறா... அவ பேரு என்னனு கேளுங்கடா... இவள் ஒருத்திதான் நம்ம மேல அக்கறைய இருக்கா பேர கேட்டு அப்டியே மடக்கி  போட்டா கொஞ்சநாளக்கு நாங்களும் ஜாலியா இருப்போம்ல....


அட போங்கடா தினமும் யாருடா அதிகமா வேலை செய்றா??நாங்கதான் அதான் எங்கள   கொஞ்ச அதிகமா கவனிக்குறா,  அது உங்களுக்கு பொறுக்கலையா??அதுவும் கொஞ்சம் லேட்டா ஆய்டுச்சுனா  அவள அனுப்பாம வெறும் தண்ணி மட்டும்தான்  குடுக்குறான்  அந்த ''இத்து''  போனவன்.
நாங்க  பாட்டுக்கு ஒரு ஓரமா எங்க  வேலைய பாத்து கிட்டு இருக்கோம்.எதாவது பொண்ணு வந்தா   எப்பவும் முன்னாடி நின்னு ஈ...னு ஈளிசுகிட்டு   போய்டுரீங்க  யாரு  அடிச்சாலும்  எங்க சைடு தான்  அடிக்கிறாகே...  .;


அதுவும் இந்த ரப்பர் தலையன் வந்தா யார அதிகமா  வேலை வாங்குறான்?? எங்களைதான்... தினமும் ஒருதடவையாவது கவனிப்பான்னு  பார்த்தா இந்த ''இத்து'' போனவன் இவ்ளோ  சோம்பேறியா இருக்கான். போன வாரம் என் நண்பன டாக்டர்கிட்ட காமீக்குரேன்னு  கூட்டி போய்    என்னவோ ஆபரேசன் பண்ணறேன்னு அவனையும்  கொன்னுடான் .இந்த ''இத்து'' போனவனுக்காக கஷ்ட்ட படுறது நாங்க;ஆனால்  எங்கள சரியாய் கவனிக்க மாட்டிங்குறான்.எத்தன நாள் வெறும் தண்ணி மட்டும் காட்டிருக்கான்  தெரிமா??அவ்வவ்வ்வ்வ்....நீங்கதான் அவனுக்கு எப்பவும் ஸ்பெஷல்.


அட போட இவனே..
 இந்த ''இத்து'' போனவன் யார்கிட்டயாவது வம்பு இழுத்து சண்டை போட்டா யாருடா அவனுக்காக  அடிவங்குறது...பன்ச்சு விட்டு எங்கலதாண்டா  மோதல அடிச்சு உடைக்குறாங்கே  நாங்க நிக்குறது டேஞ்சர் சோன் மாப்ளே.


ஒவ்வோறு தடவயும் உலகத்த பார்க்கும்போது பக்கு பக்குன்னு இருக்கு தெரிமா..!! எவளையாவது கிண்டல் பன்னிருவானோ என்னவோ ஏதோனு பயமா இருக்கும்.


அது சரி என்னடா... இவ்வளோ நேரமாச்சு இன்னும் தூங்குறான் எவ்ளோ நேரம்தான் மூக்க பிடிச்சுட்டு நிக்குறது?? தாங்க முடியல.  ''இத்து''  போனவன் நைட்டு என்னத்த தின்னான்னு  தெரியல...
 அவளை சீக்கிரம் கண்ணுல காட்டுடா... முடியல....


அவன் கொஞ்சமா கண்ணு முழிச்சு பார்த்தான்.டேய் முழிசுடாண்டா ...ரெடியா இருங்கடா...ஆனால் அவன் அவளை கூப்டாம உள்ள  போய் வெறும் தண்ணி மட்டும் குடுத்துட்டு வந்துட்டான்.. டேய்  இன்னைக்கும் தண்ணி மட்டும் தாண்டி மாப்ளே...நம்ம குடுத்து வச்சது அவ்ளோதான்.இப்படியே போச்சுனா  நம்ம எல்லோரும் சீக்கிரம் செத்துடுவோம்   போல. நாம எல்லாம் எவ்வளோவோ  பரவாஇல்லடா  எங்க அப்பன்  ''பால்''  உயிரோட   இருக்கும்போது  ரெம்பநாள் தண்ணிகூட குடுக்காம  இருந்துருகான். புண்ணியவான்  அல்பாயிசுலையே போய் சேந்துட்டான்... அட விடுடா...என்னைக்குனாலும் சாவு வரத்தான் போகுது. நாம என்ன இவன் பொறக்கும்போது இவன் கூடவே வா பொறந்தோம்.விடுங்கடா...


அவனுக்கு மனசு மாறியது அவளையும் கூப்ட்டு அவ கைல கொஞ்சம்  சரக்கை குடுத்து போய் அவேன்கேள நல்லா   கவனிச்சுட்டுவானு  அனுப்பி  வச்சான். (நாங்க பேசுனது அவனுக்கு கேட்டுருச்சோ??)

அவ வந்ததும் முதலில் கடவா  குரூப்ப  கவனிச்சா. அவ என்ன சரக்கு கொண்டு  வந்தானு தெரியல நல்ல வாசனை ,செம்ம நுரை.
அவ எங்களையும் நல்லா கவனிச்சுட்டு  போயிட்டா.


அவன் மறுபடியும் கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு  வழக்கம் போல ஆரம்பிச்சான்.முதலில் கருப்பா ரெண்டு குண்டனுகள அனுப்பி வச்சான் அவகேள  அடிச்சு ஒடச்சு உள்ள தூக்கி போட்டோம். அவகே  பேரு சீடையாம்.வரிசையா வேற வேற ஐட்டம் வழக்கம் போல ஆரம்பிச்சுட்டான் அந்த ''இத்து'' போன சாப்பாட்டு ராமன்.
இதையும்  படிங்க பிடிக்கும்...      இதுவும்...      


                                                  

4 comments:

PNS said...

Pallu Bathiram Annne...
-Pranav

பிரியமுடன்...வசந்த் said...

ஹ ஹ ஹா

மாப்பு ம்ம்ம்ம்ம்ம் இது நம்ம ரூட்டு....

கலக்குங்க உங்களுக்கும் நல்லா கற்பனைதிறன் அசத்துங்க....

seemangani said...

வாங்க ப்ரணவ் வணக்கம்...நன்றி வருகைக்கு தொடர்ந்து வாங்க...

seemangani said...

பிரியமுடன்...வசந்த் said...
//ஹ ஹ ஹா

மாப்பு ம்ம்ம்ம்ம்ம் இது நம்ம ரூட்டு....

கலக்குங்க உங்களுக்கும் நல்லா கற்பனைதிறன் அசத்துங்க....//

வா மாப்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்ஸ்...சாரி மாப்பு உன் ரூட்ல வந்துட்டேனா??அந்த பூட்டு ரூட்லே யோசிச்சேன்...இதுவும் தோனுச்சு...
இன்னும் ஒன்னு கூட இருக்கு....அடுத்து அதுதான்..மறக்காம படி மாப்ஸ்....

Related Posts with Thumbnails