Saturday, January 30, 2010

விரல் விந்தைகள்...தலைப்பை படிச்சுட்டு என்னடா இவன் சிம்பு ஆரம்பிக்குற புது கட்சிக்கு ஆள் சேக்குற வேலைல இறங்க்கிடானொன்னு  சந்தேக படுரவங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்க ஆசை படுறேன்...யாரு கட்சிக்கும் நான் ஆள் இல்லை என் கட்சில எந்த ஆளும் இல்ல...(என்ன மனசுல பஞ்ச் சொல்லறதா நெனப்பா??)இதெல்லாம் எதுக்கு நாம விஷயத்துக்கு போவோம்...வாங்க


எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த கல்யாண  மோதிரம் ஏன் மோதிர விரல்ல போடுறாங்கன்னு.சந்தேகத்தை தீர்க்க ஏன் ரூம்ல இருக்குற பெருசுங்க கிட்ட கேட்டேன் யாருக்கும் தெரியல ஒருத்தர் மட்டும் ரென்ப அறிவா சொன்னாரு ஏன்னா அது மோதிர விரல் அதுனால போடுறாங்கன்னு.நான் பொறுமையா இருந்துட்டேன்.(வேற என்ன பண்ண முடியும்...)
நம்ம ஆளுங்க காரணம் இல்லாம எதையும் பண்ண மாட்டங்கன்னு ஒரு பெரிய நம்பிக்கை.இத கண்டு பிடிக்காம விடகூடாதுன்னு தீவிரமா வலைல தேடுனேன்.கண்டுபிடுச்சு பார்த்தா அந்த காரணத்துல ஒரு லாஜிக்கே இல்ல.
அது என்னனா ....


மோதிர விரல்ல மட்டும்தான் ரெண்டு நரம்பு இருக்குதாம் அதுல ஒன்னு ஆம்பளை நரம்பாம்; இன்னொன்னு பொம்பளை நரம்பாம் அது ரெண்டும் சேர்ந்து இருக்குறதால அந்த விரல்ல கல்யாண மோத்திராம் போடுறாங்களாம்.இதுல லாஜிக் இடிக்குதேன்னு...மனசு கேக்கல இன்னும் தேடுனேன் ஒரு சூப்பர் மேட்டர் கண்ணுல மாட்டுச்சு.அத நீங்களும் கேளுங்க..இல்ல இல்ல நீங்களும் செஞ்சு பாருங்க...ரெடியா..


அதுக்கு முன்னாடி நம்ம விரல்களை பற்றி ஒரு விரிவுரை....
நம்ம கைல இருக்குற கட்டை விரல்தான் அம்மா,அப்பா விரல்,அடுத்த ஆள்காட்டி விரல்தான் நம்ம சகோதரன் ,சகோதரி விரல்,அடுத்த விரல் உங்களோட விரல்,(டேய் இது எல்லாமே என்னோட விரல்தாண்டா...அப்டின்னு கூட்டத்துல யாரோ கேக்குறாங்க ம்ம்ம்ம்...சொல்லறத மட்டும் கேக்கணும் நோ மொக்கை  கொஸ்டின் )அடுத்த மோதிர விரல் கணவன்,மனைவி விரல் (கவனமா கேக்கணும்...)அடுத்த சுண்டு விரல் குழந்தைகள் விரல்... புரிஞ்சுச்சா...புரியன ஒன்னும் பண்ண முடியாது...ஓகே ரெடி...


1...உங்க ரெண்டு கையும் வணக்கம் சொல்லற மாதிரி வச்சுகோங்க...(அதுக்கு முன்னாடி உங்களை யாராவது பாக்குராங்கலானு செக் பண்ணிகொங்க பாத்தா தப்பா நெனசுபாங்க...)
2...இப்போ எல்லா  விரல்களும் சரியா ஜோடி செந்துருச்சா...??
3...இப்போ உங்க விரல் இருக்குல...(நாடு விரல் )ஜோடியா பூமிய பாக்குற மாதிரி  உள்ள  மடிச்சு வச்சுகோங்க...
4...இப்போ எல்லா விரல்களும் ஜோடியா ஒட்டி இருக்கு ஓகே வா...
5...இப்போ அம்மா.அப்பா வா பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
6...சகோதரன் ,சகோதரிய பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
7...குழந்தைகளா பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
8...இப்போ கணவன் மனைவிய பிரிச்சு பாருங்க...பிருஞ்சுச்சா ??முயற்சி பண்ணி பாருங்க...முடியலையா...முடியாது ரெண்டு கையும்  தனியா பிரிக்காம கணவன் மனைவிய பிரிக்க முடியாது...
கணவன் மனைவி பிரியாம இருக்கணும்...அதுனாலதான் கல்யாண மோதிரம் அந்த விரலில் போடுறாங்களாம்...இது சீனர்களுடைய நம்பிக்கையாம்...லாஜிக் நல்லா இருக்குல...

10 comments:

ஸாதிகா said...

அடடா..அடடா..அடடடா..என்னா கண்டு பிடிப்பு..காலங்காத்தாலே கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்துகொண்டு அபிநயம் பண்ண வைத்த புண்ணியம் சீமான் கனிக்கு கிடைத்துவிட்டது.விரல்களுக்கு மட்டமல்ல வாய்க்கும் (சிரித்து,சிரித்து தான்)நல்ல எக்ஸசைஸ்.கண்டு பிடிப்புக்கு யாரவது நம்ம சக பதிவர்கள் நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணலாம்.ரெடியா இருங்க .லாஜிக் சூப்பரா இருக்கு தம்பி.

seemangani said...

வாங்க ஸாதி(கா)பதிவு போட்ட உடனே வந்தது க்கு
நன்றி...நோபல் பரிசுலாம் குடுப்பாங்களா...ஆமாவா??ஸாதி(கா)....

உங்கள் முதல் கருத்துக்கு நன்றி...

தமிழ் உதயம் said...

விரல்களுக்குள்ள இத்தனை விஷயங்களா.

பிரியமுடன்...வசந்த் said...

மாப்பு அஞ்சுநிமிஷம் கைவிரல்களை வைத்து வித்தை செய்ய வச்சுட்டீக....வாழ்க வளர்க நின் ஆராய்ச்சி...

NHM ரைட்டர் இன்னும் யூஸ் பண்ணலைன்னு நினைக்கிறேன் பதிவில் தெரியுது ......

seemangani said...

தமிழ் உதயம் said...
//விரல்களுக்குள்ள இத்தனை விஷயங்களா.//

ஆமாம்...ஆமாம்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்...

பிரியமுடன்...வசந்த் said...
//மாப்பு அஞ்சுநிமிஷம் கைவிரல்களை வைத்து வித்தை செய்ய வச்சுட்டீக....வாழ்க வளர்க நின் ஆராய்ச்சி...

NHM ரைட்டர் இன்னும் யூஸ் பண்ணலைன்னு நினைக்கிறேன் பதிவில் தெரியுது ....//.

வா மாப்பி...நன்றி மாப்பி...
ஆமாம் மாப்பி...பயிற்சி எடுத்துகிட்டு இருக்கேன் ...பதிவுக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு மாப்பி....

அக்பர் said...

ரொம்ப அருமையான மேட்டர்.

நானும் செஞ்சு பார்த்தேன்.

Jaleela said...

அப்ப இப்ப தான் புரிந்தது விரல்களை பற்றி,

எனன் ஒரு பாயின்ட்.

ஹாஹா, ஒரெ சிரிப்பு தான் ,,,, கெக்கெ பொக்கே

seemangani said...

அக்பர் said...
//ரொம்ப அருமையான மேட்டர்.

நானும் செஞ்சு பார்த்தேன்.//


வாங்க அக்பர் முதல் முறைய வந்தமைக்கு மகிழ்ச்சி...
நன்றி இனி இணைந்திருப்போம்...


Jaleela said...
//அப்ப இப்ப தான் புரிந்தது விரல்களை பற்றி,

எனன் ஒரு பாயின்ட்.

ஹாஹா, ஒரெ சிரிப்பு தான் ,,,, கெக்கெ பொக்கே//


வாங்க அக்கா...ரெம்ப சந்தோசம்...சமையால் செயும் கைகளை..கொஞ்சம் ஏன் பதிவுக்கும் நேரம் ஒதுக்கியதிர்க்கு...

Jaleela said...

நேரமின்மையால் வர முடியல. ஆனால் கண்டிப்பா வருவேன்.

Priya said...

mm...interesting!

Related Posts with Thumbnails