Saturday, March 27, 2010

இது காதல் கடிதம் அல்ல...7(தொடர் க(வி)தை)


கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...
பாகம் 4...
பாகம் 5...
பாகம் 6...இனி...

கைபேசி  காதல் பேசியாய் மாற தனியாய் தவமிருந்த தருணங்கள்.
கை குழந்தையாய் கவனிக்கப்பட்டது கைபேசி.

காதுகளை கைபேசிக்கு கடன் கொடுத்து விட்டு 
செவிடானது  இதயம்.

ஏய் கைபேசியே கோடிக்கணக்கான குரல்களை
இணைத்துவைக்கும் இறைவனே
இனியவள் குரல் தேடி  
இணைத்துவிட மாட்டாயா???

வழக்கமாய் வரும் வட்டி அட்டை
விற்கும் வங்கி அழைப்பும்
பாட்டு கேட்க சொல்லி பாடுபடுத்தும்
குறுஞ்செய்தியும் கூட வரவில்லையே
கைபேசியில் ஏதும் கலவரமோ??

நண்பனின் நம்பர்கள் அழுத்தி அன்பாய் பேசினேன்
அவனுக்கு ஆச்சரியம்!!
ஆடிக்கு ஒருதடவை அம்மாவாசைக்கு ஒருதடவை 
அழைப்பவன்  அடிக்கடி அழைத்து
அன்பு தொல்லைக்கு ஆளாக்குகிரானே...

அலுவலக வேலைகள் அயர்ந்து
ஆழ்தூக்கத்தில் கிடந்தன.
ஆடர் செய்த காப்பி ஐயோ பாவம்
ஆறியே விட்டது.
அனுப்பவேண்டிய கோப்புகள்
அக்கடா என்று அங்கேயே அமர்ந்து விட்டன.
காகிதத்தில் கருப்பு முத்தம் இடாமல்
கிறுக்கு பிடித்து கிடக்கிறது பேனா.

தொலைபேசி ஒலித்தால் கூட - முதலில்
கைபேசிதான் கைக்கு வருகிறது.
 கால்(call ) முளைத்த  கைபேசி எதிர் திசையில்
கரைவது காதல் இல்லை என்றதும்
கணநேரத்தில் ஊமையாகி ஊனமாகி போகிறது.
கால்(call ) துண்டிக்கப்பட்டு.


கொஞ்சம் கொஞ்சமாய் மின்கலத்தின் (Battery )உயிர் குடித்து
கொண்டிருந்தது கைபேசி.
கருணை கைபேசிக்கு கை முளைக்க வில்லை - இருந்தால்!!! 
அரைந்தே  சொல்லி இருக்கும் அழுத்தாதே  என்று.

இரண்டு நாட்களாய்...
இம்மி அளவும் உறங்க வில்லை
உணவும் இறங்கவில்லை
உலகம் இயங்கவில்லை.
இது எனக்கு அல்ல கைபேசிக்கு.

பெயர் தெரியாத ஒருத்திக்காய்
பித்து பிடித்து அலைகிறோம்.
காரணம் காதல்.

கழுத்தில்  கயிறு போட்டு
தலைகிழாய் தூக்கு மாட்ட பார்க்கிறது
கைபேசி கொலைபேசியாய்.

காற்றில் கண்விழித்துக்கொண்டே
கனாகாண்கிறேன் கதறியது கைபேசி
காதுகளை கட்டி போட கடைசியாய்
கரைந்தது காதல் குயில்
க....வி என்று.

கண் சிமிட்டி மின்கலத்தின்
கடைசி சொட்டு உயிரை உறிஞ்சி  விட்டு
காலமானது கைபேசி......(தொடரும்...)(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)

24 comments:

சுசி said...

//காதுகளை கைபேசிக்கு கடன் கொடுத்து விட்டு
செவிடானது இதயம்.//

//காகிதத்தில் கருப்பு முத்தம் இடாமல்
கிறுக்கு பிடித்து கிடக்கிறது பேனா.//

//கால்(call ) முளைத்த கைபேசி எதிர் திசையில்
கரைவது காதல் இல்லை என்றதும்
கணநேரத்தில் ஊமையாகி ஊனமாகி போகிறது.//

வர வர கடிதம் நல்லா இருக்கே சீமான்..

எழுத்து பிழைகளையும் கவனிச்சீங்கனா படிக்க இன்னும் நல்லா இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து :))

சுசி said...

அய்.. மீ த ஃபர்ஷ்டா.. :))))

seemangani said...

சுசி said...


//வர வர கடிதம் நல்லா இருக்கே சீமான்..

எழுத்து பிழைகளையும் கவனிச்சீங்கனா படிக்க இன்னும் நல்லா இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து :))//

கவனிச்சேன் ஆனா கவனிக்கல...
:)))

ஃபர்ஷ்டா வந்து ஃபாஷ்டா கருத்து தந்ததிற்கும் கவனிப்புக்கும் நன்றிங்க சுசி...

சுசி தொடர்ந்து வருவது உற்சாகமாய் இருக்கு...

ஸாதிகா said...

///காதுகளை கைபேசிக்கு கடன் கொடுத்து விட்டு
செவிடானது இதயம்.///அட்றா சக்கை...தம்பி கிளப்புறீங்க தூள்....

seemangani said...

வாங்க ஸாதிகா இந்த நேரத்திலும் வந்து தந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி...மகிழ்ச்சி அக்கா...

ஹாய் அரும்பாவூர் said...

கவிதை எனக்கு கொஞ்சம் தூரமான விசயம்
:காகிதத்தில் கருப்பு முத்தம் இடாமல்
கிறுக்கு பிடித்து கிடக்கிறது பேனா. "
நல்ல வரிகள் தொடரட்டும் உங்கள் கவிதை சேவை

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

யோவ் வசந்த் அன்னிக்கே சொன்னேனே இந்த புள்ளைய கொஞ்சம் பார்த்துகப்பான்னு ..

அய்யோ இந்த பீலிங்க்ஸ் கேக்க ஆருமே இல்லியா ?? மகா முனி ஆயிடும் போல இருக்கே..

கனி, ரொம்ப கனிஞ்சிடிச்சி ...:))

தமிழ் உதயம் said...

வரிகளை செதுக்குகிறிர்கள்

Priya said...

//காதுகளை கைபேசிக்கு கடன் கொடுத்து விட்டு
செவிடானது இதயம்//

//கண் சிமிட்டி மின்கலத்தின்
கடைசி சொட்டு உயிரை உறிஞ்சி விட்டு
காலமானது கைபேசி....//
நைஸ்!

Sivaji Sankar said...

;)

பிரியமுடன்...வசந்த் said...

//காகிதத்தில் கருப்பு முத்தம் இடாமல்
கிறுக்கு பிடித்து கிடக்கிறது பேனா.//

இந்தவரி அழகான ஓவியமா வந்திருக்கு கவிஞரே...

கொஞ்சம் டெம்ப்லேட் மாத்துனா இன்னும் நல்லாருக்கும்......

நிலாமதி said...

கை பேசியும் காதலும் நடை முறை சம்பவங்கள் அழகாய் இருக்கிறது....

seemangani said...

ஹாய் அரும்பாவூர் said...
//கவிதை எனக்கு கொஞ்சம் தூரமான விசயம்
:காகிதத்தில் கருப்பு முத்தம் இடாமல்
கிறுக்கு பிடித்து கிடக்கிறது பேனா. "
நல்ல வரிகள் தொடரட்டும் உங்கள் கவிதை சேவை//

காதலுக்கு தூரம் இல்லைதானே...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...இனி இணைந்திருப்போம்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//யோவ் வசந்த் அன்னிக்கே சொன்னேனே இந்த புள்ளைய கொஞ்சம் பார்த்துகப்பான்னு ..

அய்யோ இந்த பீலிங்க்ஸ் கேக்க ஆருமே இல்லியா ?? மகா முனி ஆயிடும் போல இருக்கே..

கனி, ரொம்ப கனிஞ்சிடிச்சி ...:))//

வாங்க தல நலமா??என்ன பன்ன சொல்லறீங்க சொன்னா கேட்டாதானே...வசந்து பய ஊருக்கு போற நெனப்புல பிசியா இருக்கான் தல..
நன்றி சங்கர் ஜி..

தமிழ் உதயம் said...
//வரிகளை செதுக்குகிறிர்கள்//

நன்றி ரமேஷ் உங்கள் வருகை எனக்கு உற்சாகமாய் இருக்கு...


Priya said...
//காதுகளை கைபேசிக்கு கடன் கொடுத்து விட்டு
செவிடானது இதயம்//

//கண் சிமிட்டி மின்கலத்தின்
கடைசி சொட்டு உயிரை உறிஞ்சி விட்டு
காலமானது கைபேசி....//


//நைஸ்!//

பிரியமுள்ள ப்ரியாவின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி...நன்றி

seemangani said...

Sivaji Sankar said...
//;)//

வருகைக்கும் கருத்துக்குக்கும் நன்றி...சிவாஜி...

பிரியமுடன்...வசந்த் said...
//காகிதத்தில் கருப்பு முத்தம் இடாமல்
கிறுக்கு பிடித்து கிடக்கிறது பேனா.//

//இந்தவரி அழகான ஓவியமா வந்திருக்கு கவிஞரே...

கொஞ்சம் டெம்ப்லேட் மாத்துனா இன்னும் நல்லாருக்கும்......//


நல்ல டெம்ப்லேட் இருந்த சொல்லு மாப்பி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டா...

நிலாமதி said...

//கை பேசியும் காதலும் நடை முறை சம்பவங்கள் அழகாய் இருக்கிறது....//

ஐ...நிலா கா வாங்க...நலமா??வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

இதயமுன்னா அப்படிதான் செவிடாகும். சூப்பர்
கவனிச்சி கவனிக்காததை கவனிங்க..

/வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மல்லிகா என்ன ரெம்ப நாலா ஆளை காணோம்//

இத நாங்களும் கேட்கனும் கேட்கலாமுல்ல..

seemangani said...

மன்னிக்கவும் மல்லிகா கா..நான் உங்களை தொடர்கிறேன் ஆனால் உங்கள் பதிவு எனக்கு தெரிவதில்லை இனி விடமாட்டேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவனிக்கிறேன்...அக்கா...

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

seemangani said...

நன்றி தீபிகா சரவணன்....

Priya said...

ஒவ்வொரு வரிகளும் மிக அற்புதமாய் வந்து இருக்கு!ரசித்து படித்தேன்!


(புது template எல்லாம் மாத்தி க‌ன‌வு ப‌ட்ட‌றை புதுசா அயிடுச்சு, நைஸ்!)

Priya said...

உங்களுக்கு ஒரு விருது காத்துக்கிட்டு இருக்கு! வாங்க‌ http://enmanadhilirundhu.blogspot.com

Priya

ஸாதிகா said...

தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html

Jaleela said...

மலிக்கா சந்தடி சாக்குல என்ன சொல்லிட்டு போறீஙக‌

Jaleela said...

/கை குழந்தையாய் கவனிக்கப்பட்டது கைபேசி//

கை குழநதய கூட அந்த அளவிற்கு பாதுக்காக்க மாட்டாங்க ஆனா கை பேசி கையோடு ஒட்டி, காதோடு இனைத்து வேறு இப்ப ரோட்ட்டில் பேசி கொன்டு நடந்து போகும் போது, எனக்கு சிப்பா சிப்பா வரும். (லூஸு என்று நினைக்க தோனும்ம்)

வண்டி சிக்னல்லில் நின்றது மக்கள் எல்லாம் பொருப்பா சாலை கடக்குறாஙக் , ஒரு ஆள் நடுவில் நின்று கொண்டு ஆக்ஷனுடன் ஒரு வருடருன் ரூட்ட சொல்லி கிட்டு நின்னா எபப்டி இருக்கும். அப்பரம் சிக்னல் விழுவத பார்த்து ஓட்டம்) ஐயோ ஹைய்யோ எங்க போய் முட்டிக்கிறது

seemangani said...

நன்றி ஜலி அக்கா...
நானும் அவர்களை கவனிப்பது உண்டு..
ஏன் நண்பன் ஒருவன் காதில் வைத்தால் நேர நடந்து போய்கொண்டே இருப்பான்.ஆட்டோ பிடித்து வரும் துரம் கூட போய்விடுவான்னா பார்த்துகோங்க...

Related Posts with Thumbnails