Friday, December 18, 2009

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...


ரயில் நிலையத்தின் சந்தோஷ சங்கீதம்.மூன்று தடவை மூன்று மொழிகளில் முழங்கி விட்டு, தென்னகத்து அதிவேக சூப்பர் ஸ்டார் வைகை எக்ஸ்ப்ரஸின் வருகையை உறுதி செய்து ஒலிபெருக்கி ஊமையானது. முன்பதிவு சீட்டை உற்று பார்த்து விட்டு ''எஸ் '' 10 கோச் தேடி ஜன்னல் ஓரமாய் கம்பி பிடித்து அந்த ஆனந்த பயணத்திற்கு தயார் ஆனேன்.

கையில் அந்த வார ஆனந்தவிகடன்.இசை பிரியன் என்பதால் பாட்டுகள் அடைத்த பாகெட் பாட்டு பெட்டியும் கூடவே.கொஞ்ச நேரம் விகடனை புரட்டி முழிக்கி போகிறேன்.தீடீரென ரயிலின் வேகம் அதிகரிக்க உள் மனதில் ஒரு பூரிப்பு. நம்ம வைகை என்னமா காற்றை கிழித்து புயலாய் போகிறான்!!மாலைக்குள் மதுரை வந்துவிடும் போலிருக்கே...

முடி கலைத்த காற்றை ஏளனமாய் பார்த்துவிட்டு ஜன்னல் வெறித்தால் காட்சிகள் ஏதும் கண்ணில் சிக்கவில்லை வெள்ளை நிறத்தில் .ஒரே வெறுமை, ரயிலில் போகும் உணர்வே அற்று போனது...
சற்று நேரத்தில் டி.டி.ஆர். உடையில் ஒரு வெண்தாடி வேந்தர்,அருகே வந்தமர்ந்து அடடா இன்று நீ மாட்டி கொண்டாயா...சரி சொல் உன் கடைசி ஆசை என்ன??? ஒன்றும் புரியாமல் யார் நீங்கள்?? எதற்கு அப்படி கேக்குறிங்க? வழக்கமா டிக்கெட் தானே கேட்பீங்க,இது என்ன? கடைசி ஆசை!! கேட்குறீங்க? நீ டிக்கெட் எடுத்து விட்டாய் என்று தெரியும்,தெரிந்துதானே உன் ஆசையை கேட்டேன் . என்ன? சொல்றீங்க!! எனக்கு ஒண்ணுமே புரியல!!!???நீ இறந்து விட்டாய் நாம் இப்போது தேவலோகம் செல்கிறோம்,இடையில் ஒரு சிறு பயணம் அதில் உனக்கு எதாவது ஆசை இருந்தால் நிறைவேற்ற முயற்சிப்பேன்.

ம்ம்ம்ம்...சரி சரி சொல் என்றார்.ஐயோ !! என்னால் நம்ப முடிய வில்லை.பொய்  சொல்லாதிங்க நீங்க யாரு??அட என்னடா இவன்..சரி கொஞ்சம் கீழ பாரு...பார்த்தால் புள்ளி,புள்ளியாய் சில உருண்டைகள் அதை சுற்றி புள்ளி வைத்து  இணைக்காத கோலமாய் மின்னும் புள்ளிகள்.இதை எல்லாம் கிழித்து பறந்து கொண்டிருக்கு நான் இருக்கும் ஒரு ஹைடெக் வாகனம்.அருகே வெண்தாடி வேந்தர்.இந்த மாயா ஜாலங்களை பார்த்து உயிர் பிரிந்ததை உறுதி செய்து உலக வார்த்தைகளை எல்லாம் ஒன்று கூட்டி ஓ...வென அலறுகிறேன் வாய் திறந்திருக்க, வாய்ஸ் மட்டும் வரவே இல்லை...

அருகில் இருந்தவரின் கட்டை விரல் ஏதோ ஒரு பட்டனை அழுத்தி பிடித்திருகிறது.உற்று பார்த்தால் ''ம்யுட்'' என்று எழுதி இருக்கு.அவர் சிறு புன்னகை ஒன்றை எடுத்து வைத்து உன் ரிமோட் இப்போ என் கையில்...அடங்கு, என்றார்.
நேரம் முடிய போகிறது உன் ஆசையை சொல் இந்த தருணம் திரும்ப வராது என்றார்.சுதாரித்து கொண்டு எனக்கு என் உயிர் திரும்ப வேண்டும் என்றேன்.அடேய் உன் சேனலை ஆப் பண்ணி நேர நரகத்துல ஓபன் பண்ணி விட்டுருவேன்...ஒழுங்கா நடக்குறத பேசு.நமக்கு பேச்சு (கம்மி) சரியாய் வராது நான் ஒரு கடிதம் எழுதுறேன் என்றேன். எழுதுறதா!!? இந்தா, மெயில் பண்ணி விடு அது டெலிவெரி ஆய்டும் என்று , விரலால் என் எதிரே ஒரு கட்டமும் கையருகே ஒருகட்டமும் போட்டு விட அது லேப்டாப் போல் ஆனது.விசை பலகையில் எல்லா எழுத்துகளும் தமிழில் ஆ!!அலர்ஜி என்றதும் ஆங்கிலம் வந்து விழுந்தது. ஆரம்பித்தேன்...
-----------------------------------------------------------------------------------
அன்புள்ள அம்மா...சவ்கியமா..???
நானும் சாவை தொட்டு விட்டு சவ்கியமாய் தான் இருக்கிறேன்.
உன்னை சந்திக்க ஆசையாய் வந்த என்னை சாவு சந்தித்து விட்டது. என் வாழ்வின் எல்லா மீதி பக்கங்களையும் கிழித்து விட்டு கடைசி பக்கத்தில் கடைசி ஆசை கேட்டு பக்கத்திலே இருக்கிறான் சாவின் சகோதரன்.நீ ஆசையாய் கேட்ட தங்க சங்கிலி உன் தங்க கரம் தருவதற்குள் தட்டி கொண்டு வந்து விட்டானம்மா.உன்னை தாயாய் தந்த தாரணி படைத்தவன்.

இன்னொரு தடவை உன் கருவில் உருவெடுக்க ஆசைதான்,நீதான் என்னை பெற்றதுமே கரு பையை களைந்து விடாயாமே??? ஏன்மா??கடவுள் எவ்வளவு கல் நெஞ்சகாரன் பார்மா...கடைசி ஆசை கூட கடிதத்தோடு முடித்து கொள்ள சொல்கிறான்.
அம்மா..கண் கலங்கி விடாதே,பெண்ணாய் பிறந்து நீ, அழுததெல்லாம் போதும்.உன்னை எத்தனை முறை நானே கலங்க வைத்திருக்கிறேன்... இன்னும் பாவம் செய்வது இறைவனுக்கு பொறுக்க வில்லை போல முன்னறிவிப்பு இல்லாமல் இழுத்து வந்து விட்டான்.உலக சொந்தங்களை எல்லாம் எனக்கு சொல்லி வைத்தாய். உன்னிடம் ஒன்று சொல்ல ஆசை மா...சொர்க்கம் சென்றாலும் உன் மடிக்காய் தலை தூக்கி காத்திருப்பேன் அம்மா...
உன் அன்பு,
மகன்.
-----------------------------------------------------------------------------------
அன்புள்ள அப்பா நலமா?
நீங்கள் இருக்கும் தைரியத்தில் மதில் பிடிக்காமல் நடை பழகிய நானும் நலமாய் இருக்கிறேன்.அதே தைரியத்தில் தான் இன்று, தாரணி பிடிக்காமல்.தாரணி காப்பவன் தந்தி அடித்தால் விரைகிறேன்.நீங்கள் அழ மாடீர்கள் என்று தெரியும்.ஆண்பிள்ளை அழும் கொள்கையில் உங்களுக்குதான் உடன்பாடு இல்லையே.உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நான் இறந்ததாய் ஒருபோதும் எண்ணி விட வேண்டாம்.நீங்கள் எனக்கு கொடுத்த அந்த தைரியத்தை திரும்ப உங்களிடமே விட்டு போகிறேன் உங்களை தேற்றும் வலிமை அதற்க்கு அதிகம்.
அன்பு,
மகன்.
--------------------------------------------------------------------------------
அன்புள்ள அக்கா.எப்படி இருக்கிறாய்??
எதிலும் நீதானே முந்தி கொள்வாய் இப்போது பார்த்தாயா நான் முந்தி கொண்டேன்.எனக்கு இரண்டாம் தாயாய் இறுதிவரை இருந்தவள் நீ...உன் ஒவொரு பருக்கைளும் பங்கு கொடுத்தவள் நீ...உன் பங்காய் ஒரு பாரத்தை விட்டு செல்கிறேன்.பார்த்துகொள்.நமக்கு உயிர் தந்த இரு ஜீவன்கள் உடைந்து விடாமல் பார்த்துகொள்.இன்னும் ஒன்று, மாமா எங்கே என்று மல்லிகை சிரிப்பில் மருமகள் கேட்பாள் மறுநாள் வருவதாய் சொல்லி வை.அந்த மறுமைநாள் வரும் வரை....
அன்பு,
தம்பி.
------------------------------------------------------------------------------
கடைசியாய்...
எவனோ ஒருவனுக்கு மனைவியாய் இருக்கும் இவளே...
உனக்கு ஒரு வேண்டுகோள்.காதல் கனவில் இருந்து மீழாமல், இன்னும் கன்னியாக இருப்பதாய் கேள்வி. ஒருவருக்கான மூச்சை இருவரும் பங்கு போட்டு திரிந்த தருணத்தை எல்லாம் தகர்த்து விடு.
பெண்மையின் எல்லா தகுதியும் உடையவள் நீ...
தாய்மைக்கு மட்டும் ஏன் தண்டனை போட்டு கொள்கிறாய்.யார் கண்டால் நானே உன் கருவாய் உருவாகும் வரம் வாங்கி வந்தாலும் வருவேன்.தாய்மையும் தரிசித்து வா.
வாழ்த்துகள்.
அவன்,
இவன்....
-------------------------------------------------------------------------
போதும் என்று,தலையில் தட்டி எழுப்பினான் பக்கத்து ரூம் பாஷா.
அரை உறக்கத்தில் ... எங்கோ ஒரு குரல்...
பயணிகளின்  கனிவான கவனத்திற்கு...

இதையும் படிங்க...நீ,நான் மற்றும் நமக்கான வானம்...

4 comments:

ஸாதிகா said...

அப்பா..சகோதரருக்கு என்னா லொள்ளு...?

seemangani said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும்...
நன்றி...ஸாதி(கா)....மீண்டும் வருக...

பூங்குன்றன்.வே said...

ஸ்ஸ்ஸ்..முடியல பாஸ்.

seemangani said...

என்ன பாஸ் கொஞ்சம் ஓவர் தானோ???வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூங்குன்றன் பாஸ்...

Related Posts with Thumbnails