Wednesday, December 30, 2009

பலூன்கள் விற்பனைக்கு அல்ல...

தலைப்பு எழுதி கவிதைக்காக காத்திருந்தேன்...
வெகு நாள் திருவிழாகாக  காத்திருந்து தன் மொத்த சந்தோசத்தையும் ஒரு ரூபாய் பலூனில் ஊத்தி தீர்க்கும் விளையாட்டு பிள்ளை போல் மணம் கடந்த நாட்களை மட்டுமே அசைபோடுகிறது, கவிதை வந்த பாடில்லை.

 என் நினைவுகளை ஊதி   பெரிதாக்கி வலை பூவில் அலங்கரித்து சேர்த்து புது வருடம் வரவேற்க தோன்றியது.

எப்படியும் விற்று விட வேண்டும் என்று கால கள்வன் கையில் இருக்கும் காற்றடைத்த பலூனும்,எப்படியும் வெடிக்கும் அல்லது ஓட்டை விழுந்து காற்று போகும் எனதெரிந்தும் விரும்பி வாங்கிவந்த பலூனை போலவே  அன்னையின் வயிர் ஊதி வாங்கிவந்த இந்த வழக்கை.

நாம் வெகு நாட்கள் ஆசையாய் ஊதி வைத்த நியாபகங்கள் அழுகையாய் வெடித்து சிதறும் தருணங்களும், கால சுழற்சியில் மெதுவாய் காற்று போய் இருந்த சுவடே தெரியாமல்   துவண்டு போகும் தருணங்களும், ஹைட்ரஜன் அடைத்து உயரே பறக்கும் சந்தோஷ தருணகளும்  கல்லடி பட்டு கடற்கரை மணலில் வெடித்து விழும் வண்ணம் பூசிய தருணங்களும்  எப்படி ஒத்து போகிறது.

பெரிதாய் ஊதி வீட்டுக்குள்  விட்டாலும் காற்றாடியில்   பட்டு கிழிந்து போகும். வெளியே விட்டாலும் கல்லோ முள்ளோ கிழித்து விடும் என்று பயந்து .பாசம் எனும் நூலில் கட்டி பத்திரமாய் பாதுகாத்து பறக்க வேண்டிய  தூரம் வரை பாதுகாப்பாய் நம்மோடு பறந்து பாதியில் விட்டு போகும் பந்தங்கள்.

போதும் என்ற மனமில்லாமல் ஊதி ஊதி பெரிதாக்கி வெடித்ததும் வெடித்து அழுது ,கிழிந்த ஒவொரு துண்டிலும் சிறு சிறு முட்டை செய்து மகிழ்ச்சி கொள்ளும் அதே சிறு பிள்ளை மணம்.

இதய  வடிவ பலூனை இனியவளுக்கு கொடுத்து அதை அவள் இன்னும் பத்திர படுத்தி  வைத்திருக்கிறாள் என்றதும் அந்த பலூனை போலவே பெரிதாய் துடித்த  இதயத்தின் சுகமும்,அவள் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பலூன் ஊதி அலங்கரித்த மேடையும்.அவள் பிள்ளை ''மாமா ஊதி கொடு'' என்று நீட்டிய அந்த பலூனும்.

வந்து போகிரதேன் நினைவில்.நினைவுகள் கனமில்லாம இருந்தாலும் நிறைய ரணங்களோடு வெடித்து முட்டி வெளியேற துடித்து கொண்டிருகிறது.

பி.கு :
ஒரு தலைப்பை எழுதி  விட்டு அத பில்டப் பண்ண நான்பட்டபாடு...
எப்பா...முடியல சமீயோவ்வ்வ்...கடைசியா என்ன  சொல்றனு கேட்டா எல்லோரும் நிறைய பலூன் ஊதி கட்டி அலங்காரம் பண்ணி  புதுவருடத்தை கொண்டாடுங்கோ....தலைப்பில் பாதி வைரமுத்து ஐயா கொடுத்தது...பதிவுக்கும் பலூனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில்  சொல்லவும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனைவருக்கும்.     

13 comments:

Paleo God said...

::)) happy new Year..Kani.

சீமான்கனி said...

thanks & wish you same bala :)

Deepan Mahendran said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மச்சான்...!!!

அன்புடன் மலிக்கா said...

கனி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

சின்ன திருத்தங்கள். கொஞ்சம் எழுதிய பலூனை மறுமுறை பார்த்தால் சிறு திருத்தங்கள் செய்யலாம் சகோ..

ஸாதிகா said...

பலூனில் இவ்வளவா??புத்தாண்டு வாழ்த்துக்கள் சீமான் கனி.

தமிழ் உதயம் said...

சீமான்கனி அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

காற்றடைத்த பலூன் கவிதையென்றால்

நீ காற்றில்லா பலூன் மாப்ள...

ம்ம்ம் நெம்ப ஃபீல்ங்க் ஆயிடுச்சு மாப்ள..

சீமான்கனி said...

சிவன். said...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மச்சான்...!!!

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நன்றி...மச்சான்..

அன்புடன் மலிக்கா said...
கனி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

சின்ன திருத்தங்கள். கொஞ்சம் எழுதிய பலூனை மறுமுறை பார்த்தால் சிறு திருத்தங்கள் செய்யலாம் சகோ..

உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..நன்றி மல்லி(கா)...திருத்தியாச்சு...

ஸாதிகா said...
பலூனில் இவ்வளவா??புத்தாண்டு வாழ்த்துக்கள் சீமான் கனி.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸாதிகா நன்றி... அவ்வளவா இருக்கு...!!!

சீமான்கனி said...

tamiluthayam said...
//சீமான்கனி அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..//

வருகைக்கு நன்றி தமிழ்...
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிரியமுடன்...வசந்த் said...
காற்றடைத்த பலூன் கவிதையென்றால்

நீ காற்றில்லா பலூன் மாப்ள...

ம்ம்ம் நெம்ப ஃபீல்ங்க் ஆயிடுச்சு மாப்ள..

நோ ஃபீல்ங்க்ஸ் மாப்ள...வருகைக்கு நன்றி இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மாப்ள...

SUMAZLA/சுமஜ்லா said...

//எப்படியும் விற்று விட வேண்டும் என்று கால கள்வன் கையில் இருக்கும் காற்றடைத்த பலூனும்,எப்படியும் வெடிக்கும் அல்லது ஓட்டை விழுந்து காற்று போகும் எனதெரிந்தும் விரும்பி வாங்கிவந்த பலூனை போலவே அன்னையின் வயிர் ஊதி வாங்கிவந்த இந்த வழக்கை.//

அருமையான கருத்துக்கள்! வாழ்க்கை என்று இருக்க வேண்டுமே?!

சீமான்கனி said...

SUMAZLA/சுமஜ்லா said...
//எப்படியும் விற்று விட வேண்டும் என்று கால கள்வன் கையில் இருக்கும் காற்றடைத்த பலூனும்,எப்படியும் வெடிக்கும் அல்லது ஓட்டை விழுந்து காற்று போகும் எனதெரிந்தும் விரும்பி வாங்கிவந்த பலூனை போலவே அன்னையின் வயிர் ஊதி வாங்கிவந்த இந்த வழக்கை.//

//அருமையான கருத்துக்கள்! வாழ்க்கை என்று இருக்க வேண்டுமே?!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...சரிதான் அக்கா திருத்தி விடுகிறேன்...புதிய பதிவுகள் படித்து சிரிக்க அழைக்கிறேன்...

புல்லாங்குழல் said...

சின்ன பலுனில் இத்தனை வித்தைகளா?கவிதை மனசு கொண்ட கனி. நீங்கள் நேசிக்க தகுந்த இதயக்கனி!

சீமான்கனி said...

உங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி அமீன் ஐயா...

Related Posts with Thumbnails