Tuesday, January 5, 2010

மாமனாருக்கு நேரம் சரி இல்லை...


மாமனாரே  உஷார்...
கொலை  வெறியோடு அலையும் ஒரு மருமகனின் நேரடி ரிபோர்ட்...

அவனுக்கு நேரம் நல்லா இருக்கு இல்லனா ஒவ்வொரு நிமிஷமும் என்கிட்ட இருந்து தப்பிபானா...இருக்கட்டும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் ஒரே போடா போட்டுற வேண்டியதுதான்.வேற வழியே இல்லை.பின்ன எனங்க இப்டி ஒரு மாமனார் இருந்தா யாருக்குத்தான் கொலவெறி வராது நீங்களே சொல்லுங்க.

புருஷன் பொண்டாட்டின்னு  தான் பேரு, ஆனால் ஒரு நாளைக்கு ரெண்டு தடவைக்குமேல அவளை கட்டி பிடுச்சுக்க  முடியால. இந்த மாமனாரு வீட்டவே சுத்தி சுத்தி வர்றான்.பார்க்க நோஞ்சான் மாதிரி இருக்கான் நானும் இன்னைக்கு போவான் நாளைக்கு போயிருவனு பார்த்தா  இவனுக்கு ஒரு எம கண்டம்  வந்து தொலைய மாட்டிங்குது.வீட்டோட மாபிள்ளையா வந்தா இது ஒரு தொல்லை.

என்ன பண்றது ஒரு வேலைக்கும் போகாம வீட்டையே சுத்தி சுத்தி வந்தா இப்டிதான். மாமனார்  உழைப்புலதான்  நம்ம வாழ்கையே  ஓடுது ஹும்ம்ம்ம்..... என்ன செய்ய?? சரி ஒரு நாளைக்கு ரெண்டுதடவதான் சேர்ந்து  இருக்க விடுறான் அதுவும் எங்களுக்கு கடைசி ரூமா பார்த்து குடுத்துட்டு; நிமிஷத்துக்கு ஒருதடவ வந்து எட்டி,எட்டி பார்த்து மூட கெடுத்து விடுறான்.இவ்ளோ வயசு ஆய்டுச்சு கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லை.

இந்த குள்ளம்மா இவளுக்காவது புத்தி  வேண்டாம்.புருஷன் முந்தானைய பிடிச்சுட்டு பின்னாடியே சுத்துறானே இவன கொஞ்சம் கவனிக்கனும்னு தோணுதா??எங்க.....  பக்கத்துல போகும் போதெல்லாம் எங்க அப்பா வர்றாருனு வெளக்கி வெளக்கி போறா.ஒரு புள்ளைய பெத்து குடுடீன்னு சொன்னா.... வேணாங்க   குடும்பத்துல  குழப்பம் வந்துரும்னு சொல்றா.இந்தா கொடுமைய நான் எங்க போய் சொல்லுவேன்???இப்போ புதுசா கல்யாணம் முடிச்சவங்கலாம் ரெண்டு  பிள்ளை  மூணு பிள்ளையோட சந்தோஷமா இருக்காகே...

என் மாமனார் ஒருநாள் படுத்த படுக்கையா இருந்தான் ஆஹா  போய்  செந்துடானு  நெனச்சா. பழாபோன டாக்டர் வந்து ஏதோ நீட்டமா ஒரு மாத்திரைய போட்டு சரி பண்ணிட்டு போட்டாரு.இவனுக்கு எப்போ கெட்டநேரம்னு தெரியல எனக்கு எப்போ நல்லநேரம்னும் தெரியலை.

வீட்ட சுத்தி ரூமா கட்டி வச்சு இருக்கான். நேரம் போகலைனா ஒவ்வொரு ரூமா போய் வேடிக்கை பாக்குறதே வேலையா போச்சு.பொண்ணு கொஞ்சம் குள்ளமா இருந்தாலும் பரவா இல்லை வீடு நல்லா பெருசா இருக்கே நிறையா ரூம் இருக்கே கல்யாணம் பண்ணுனா வாடகைக்கு விட்டு பொழச்சுக்கலாம்னு பார்த்தா.ஒன்னும் முடியலையே...வழிய வந்து இப்டி மாட்டி கிட்டேனே...

என் பாட்டன் பூட்டன் எல்லாம் மாமனார போட்டு தள்ளிட்டு நல்ல எலக்கடையா  பார்த்து பொண்டாட்டியோட செட்டில் ஆய்டாகே.சிலபேர் நல்ல பொருட்காட்சியா பார்த்து செட்டில் ஆய்டாகே.என் பொழப்பு இப்படி நாறிபோச்சு.என்னைய பார்த்துட்டு இனிமேல்  வர்ரவன்கேலாவது திருந்தட்டும். 

ஆஹா...உங்ககூட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. இருங்க மணி பண்ணண்டு  ஆகபோகுது நான் போய் என் ஆளுக்கு ஒரு கிஸ்...அடிச்சுட்டு வர்றேன்...டிங்...டிங்...டிங்...டிங்... நொடி பொழுதில் வந்தாரு மாமனார்...

இன்னும்  கொஞ்சம் கதை கேளுங்க...

5 comments:

அன்புடன் மலிக்கா said...

நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com/

Jaleela Kamal said...

ஆஹா ஏன் இந்த கொலவெறி, அப்ப எல்லா வீட்டோட மாப்பிள்ளைக்கும் இதே கதி தானா? யாரோ உங்கள் கிட்ட வந்து புலம்பி இருக்காங்க..... ஹி

தமிழ் உதயம் said...

கவுண்டமணி ஒரு படத்துல, மாமனாரால இப்படி தான் அல்லாடுவாரு. ஆனா கடைசில ஒரு ஷாக் கொடுத்திட்டீங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

குட்...இன்னும் கொஞ்சம் மெருகேத்துங்க மாப்பு சூப்பரா வரும்...இடையில அங்க இங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு அதையும் கொஞ்சம் கவனிங்க சரியா வர்ட்டா......!

சீமான்கனி said...

அன்புடன் மலிக்கா said...
//நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com///

வந்துட்டா போச்சு...
வருகைக்கு நன்றி மல்லி(கா)...

Jaleela said...
//ஆஹா ஏன் இந்த கொலவெறி, அப்ப எல்லா வீட்டோட மாப்பிள்ளைக்கும் இதே கதி தானா? யாரோ உங்கள் கிட்ட வந்து புலம்பி இருக்காங்க..... ஹி//


கடிகாரத்தில் நிமிட முள் நிஜமாவே பாவம்தான் அக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

tamiluthayam said...
//கவுண்டமணி ஒரு படத்துல, மாமனாரால இப்படி தான் அல்லாடுவாரு. ஆனா கடைசில ஒரு ஷாக் கொடுத்திட்டீங்க.//

வாங்க தமிழ் நலமா???
ஷாக் எவ்ளோ வோல்ட் அடிச்சு???
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்...

பிரியமுடன்...வசந்த் said...
//குட்...இன்னும் கொஞ்சம் மெருகேத்துங்க மாப்பு சூப்பரா வரும்...இடையில அங்க இங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு அதையும் கொஞ்சம் கவனிங்க சரியா வர்ட்டா......!//

நன்றி மாப்ளே...இன்னும் கொஞ்சம் பாயிண்ட் எழுத நெனச்சேன் ரெம்ப நீளமா போய்டும்னுதான் எடிட் பண்ணிட்டேன் மாப்ஸ்...அப்றம் ஏன் இந்த வாங்க போங்க???வேண்டாம்னு நினைக்குறேன்...

Related Posts with Thumbnails