Wednesday, January 6, 2010

புள்ளி இல்லாத புலம்பல்கள்...



புள்ளிகள் மட்டும் பொறுக்கி எடுத்த   
புத்தகம்; விரித்து - விழி
பிதுங்கி பார்கிறேன்.

சில - பால வார்த்தைகள்   
உயிர் (துளி) இல்லாத காரணத்தால்
அர்த்தமற்று போய் ஒவ்வொன்றும்
அனாதையாய் அலைகிறது.
புள்ளி இல்லாத வார்த்தைகள்  
என்னதான் சொல்ல காத்திருக்கு????

பூ-விடம் போய்...
உயிர் புள்ளி இல்லாத
ஒற்றை எழுத்து நீ...
என்ன தான் பெரிதாய் சாதித்து  விட்டாய்
வினாவினேன்.
பூ கேட்டது என்னை
பார்த்து உனக்கு என்ன தோன்றுகிறது??
நீ... அழகு என்றேன்...-அட
நான் கூறிய இரண்டு வார்த்தைளும்
உயிர் புள்ளி இல்லை...
பூ நகைத்து விட்டு  இதழ் திறந்து கேட்டது
உனக்கு என்னுள் என்ன தெரிகிறது??? 
விதை என்றேன்...ஆமாம் அதிலும் உயிர் புள்ளி இல்லை...
தன்னை உதிர்த்து ஆயிரம் ஆயிரம்
விதைகளை விதைத்து விட்டு விடை பெற்றது பூ.

அடுத்து கண்ணில் பட்டது
ஏழை பார்த்தால் பாவம்.
உன்னை பற்றி....
''வேலை இல்லாததால் - நான்,
ஏழை இன்னும் சந்திக்காதது  கோழை;
உறவு இல்லாததால் நான் அநாதை''
அதிலும் உயிர் புள்ளி இல்லை.
''எனக்கு தெரிந்ததெல்லாம் பசி,வறுமை
ஐயோ எதிலும்  உயிர் புள்ளி இல்லை.
உன் ஆசை? ''சீக்கிரம் சாவு.''
இதற்க்கு மேல் கேட்க மனமில்லை.

அடுத்து கும்மிட போகும் முன்பே
குறுக்கே  வந்தது சாமி. 
உயிர் புள்ளி இல்லாத நீ என்ன சாதித்து விட்டாய் ??
சிரித்து விட்டு ''நான் சாதித்தது சாதி என்றது''.
சாதியும்,சாதனை-யும்,சதியும்  தெரியாது   தெரியாது
ஆஹா... எதிலும் உயிர் புள்ளி இல்லை என்று ஓடி போனேன்.

பளபளப்பாய்  இளமை வந்து நின்றது.
நீ என்ன சொல்ல காத்திருக்கிறாய்???
''முதுமை வரும் வரை
கனவை நினைவு  ஆக்கி  புதுமை காண
காத்திருக்கிறேன் என்றது''.புள்ளி இல்லாமல். 

மது போதையோடு  வந்து நின்றது.
அது சரி உன் சாதனை என்னவோ???
என்னை அடிப்பவன் எனக்கு அடிமை-என்று
தத்துவம் தந்து போனது.

அடுத்து வேறுயாரு மாதுதான்
உங்கள் பங்குக்கு எதுவும்...???
மண்ணிக்கவும் உரிமை 
இன்னும் கிட்டவில்லை
இலவே இல்லை என்றது.

இன்னும் எத்தனை எத்தனையோ...
உயிர் புள்ளி
இல்லாத வார்த்தைகள்
இவ்வளவு அர்த்தம் சொல்கிறது.
உயிருள்ள நாம்  என்ன அர்த்தம் தர போகிறோம்???.......

இதையும் படிங்க பிடிக்கும்...                                 இதுவும்                                                           

5 comments:

அரங்கப்பெருமாள் said...

//தன்னை உதிர்த்து ஆயிரம் ஆயிரம்
விதைகளை விதைத்து விட்டு விடை பெற்றது பூ.//

//ஏழை இன்னும் சந்திக்காதது கோழை;
உறவு இல்லாததால் நான் அநாதை'' //

அருமை.

//சிரித்து விட்டு ''நான் சாதித்தது சாதி என்றது''.//

சாமியே நாம உருவாக்கினது. எனவே....

//உரிமை
இன்னும் கிட்டவில்லை//

போராட வேண்டியிருக்கு.

//உயிருள்ள நாம் என்ன அர்த்தம் தர போகிறோம்???......//

வந்து...வந்து....

தமிழ் உதயம் said...

புள்ளி இல்லாத புலம்பல்கள்...
சத்தம் இல்லாத அழுகைகள்

சீமான்கனி said...

அரங்கப்பெருமாள் said...
//தன்னை உதிர்த்து ஆயிரம் ஆயிரம்
விதைகளை விதைத்து விட்டு விடை பெற்றது பூ.//

//ஏழை இன்னும் சந்திக்காதது கோழை;
உறவு இல்லாததால் நான் அநாதை'' //

அருமை.

//சிரித்து விட்டு ''நான் சாதித்தது சாதி என்றது''.//

சாமியே நாம உருவாக்கினது. எனவே....

//உரிமை
இன்னும் கிட்டவில்லை//

போராட வேண்டியிருக்கு.

//உயிருள்ள நாம் என்ன அர்த்தம் தர போகிறோம்???......//

வந்து...வந்து....//

வாங்க ...உங்க கருத்துக்கு நன்றி.....
வந்து சொல்லறிங்களா...

tamiluthayam said...
//புள்ளி இல்லாத புலம்பல்கள்...
சத்தம் இல்லாத அழுகைகள்//

இதுவும் நல்ல இருக்கு நன்றி தமிழ்....

Paleo God said...

கனி, தினமும் வரதான் பார்க்கிறேன்..123 musiq என்ற தளம் வைரஸ் பரப்புவதாக கணினி சொல்கிறது இப்போது கூட அதை நிருத்திவிட்டுத்தான் இதை போடுகிறேன். தேவை இல்லாத widget நீக்கி விடுங்களேன் நண்பா..

சீமான்கனி said...

நன்றி பாலா...சிலவற்றை நீக்கி விட்டேன்...மீண்டும் வந்து பாருங்கள்...

Related Posts with Thumbnails