Monday, January 18, 2010

ஏண்டி...???


காற்றில்  கைநழுவி
கடந்து போன குடையை - ஏன் 
குற்ற படுத்துகிறாய்?
குழலிட்டு தேன்
குடித்த கருவண்டு
மலரின்  மது உண்ட  
மயக்கத்தில்;
திக்கு முக்கு தெரியாமல்
திணறுவதுதானே நியாயம்...

உன் உதடு சுட்ட தேநீரை - ஏன்
உதறி தள்ளுகிறாய்?
மலரே வந்து செவ்விதழ்  குவித்து  
தேன் எடுக்க; முதலில் 
கோப்பைக்கு  முத்தம் தந்தால்!   
சுட்டு வைக்காமல்
சும்மாவா இருக்கும்...

சூரியன் சுள்ளென்று
சுட்டதும் ஏன் - முகம்
சுளிக்கிறாய்?பார் நீ
சுளித்த சுளியலில் இன்னும் கொஞ்சம் 
சூடாகி எங்களைத்தான் சுட்டுஎடுக்கிறான்... 

காய்கிற நிலவை - ஏன்
கரைய விடுகிறாய்?
உலகே நிலவொளி குடித்திருக்க;
நீ மட்டும் பால் குடித்து
பால் நனைத்த  உதடோடு
படுக்க போனால்...

சும்மா  இருக்கும்  தென்றலை - ஏன்  
சூறாவளி  ஆக்கிவிடுகிறாய்?
கார்குழல் கலைத்த தென்றலை
கையமர்த்தி விட்டு காதலன்
விரல்கள் விளையாட கொடுத்தால்...

அடிக்கடி கழண்டு விழுவதாய்  
கால் கொலுசை - ஏன்
கடிந்து கொள்கிறாய்?
கொஞ்சி கொஞ்சி பேசும்
கொலுசொலியை
சின்ன சின்ன சிணுங்களில்
சிரிக்கின்ற சாக்கில் சிதறடித்தால்...

''போடா திருடா''...ஏன் திட்டுகிறாய்?
போதி  மர புத்தனாய்
பொறுமையாய் இருந்த உயிரை
புலம் பெயர்த்து  விட்டு
தொடதே  என்றால்...                                                                           

18 comments:

ஈரோடு கதிர் said...

கடைசி வரிகள் அழகு

சீமான்கனி said...

ஈரோடு கதிர் said...
//கடைசி வரிகள் அழகு...//
வாங்க அண்ணே...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே.....பார்த்து ரெம்ப நாள் ஆச்சு....

Deepan Mahendran said...

மச்சான்....யாரு மச்சான் அந்த புள்ள...???
இம்புட்டு உருகுறீங்க ..?

//போதி மாற புத்தனாய் // - மாத்தீடுங்க மச்சான், அர்த்தமே மாறிடும்.

//கார்குழல் கலைத்த தென்றலை
கையமர்த்தி விட்டு காதலன்
விரல்கள் விளையாட கொடுத்தால்...//
அழகான வரிகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்ள வர வர ரொம்ப கவித்துவமா எழுதுறீங்க சின்ன சின்ன பிழைகள் தெரியுது //தினரு//

செவிதழ்// செவ்விதழ் இதெல்லாம் ஒரு பிழையே கிடையாது போக போக சரியாயிடும் மாப்ள ஏன் ரொம்ப நாள் கேப் விட்டு எழுதுறீங்க?

நிலாமதி said...

good

Paleo God said...

கனி ம்ம்ம்ம்..:::))

சீமான்கனி said...

சிவன். said...
//மச்சான்....யாரு மச்சான் அந்த புள்ள...???
இம்புட்டு உருகுறீங்க ..?//

வாங்க மச்சான்...
அந்த புள்ள பேரு தெரியல மச்சான் கேட்டு சொல்றேன்...

//போதி மாற புத்தனாய் // - மாத்தீடுங்க மச்சான், அர்த்தமே மாறிடும்.//

நல்ல வேலை மாத்திட்டேன் மச்சான்...

//கார்குழல் கலைத்த தென்றலை
கையமர்த்தி விட்டு காதலன்
விரல்கள் விளையாட கொடுத்தால்...//
அழகான வரிகள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சான்...

பிரியமுடன்...வசந்த் said...
//மாப்ள வர வர ரொம்ப கவித்துவமா எழுதுறீங்க//
அப்டியா மாப்ளே....

சின்ன சின்ன பிழைகள் தெரியுது //தினரு//
செவிதழ்// செவ்விதழ் இதெல்லாம் ஒரு பிழையே கிடையாது போக போக சரியாயிடும் மாப்ள//

ஆமா மாப்ளே நிறைய பிழை வருது...இனிமேல் கொஞ்சம் கவனமா இருப்பேன்..

ஏன் ரொம்ப நாள் கேப் விட்டு எழுதுறீங்க?//


நேரம் இப்போ கொஞ்சம் குறைவா கிடைக்குது மாப்ளே...

என்மீது அதிக கவனம் எடுக்குறீங்க நன்றி மாப்ளே...


நிலாமதி said...
//good//
Thanks அக்கா...


பலா பட்டறை said...
//கனி ம்ம்ம்ம்..:::))//

நன்றி நண்பா...

கமலேஷ் said...

எழுத்துக்களில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது தோழா...எழுதும் போது மனசு இறக்கை கட்டி பறந்திருக்கு எனபதினை கவிதையின் வரிகள் சொல்லுகிறது வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்....


உங்களின் எழுதுகோல் எண்ணங்களை காகிதப் படுக்கையில் புணரும் போது கசிந்த இந்திரியம் கருப்பையில் நிறைகிறது கவிதைகளாய்....

வாழ்த்துக்கள்....

சீமான்கனி said...

கமலேஷ் said...
//எழுத்துக்களில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது தோழா...எழுதும் போது மனசு இறக்கை கட்டி பறந்திருக்கு எனபதினை கவிதையின் வரிகள் சொல்லுகிறது வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்....//

வாங்க கமல் உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...நண்பரே....

//உங்களின் எழுதுகோல் எண்ணங்களை காகிதப் படுக்கையில் புணரும் போது கசிந்த இந்திரியம் கருப்பையில் நிறைகிறது கவிதைகளாய்....//
வாழ்த்துக்கள்....


இந்த கவி வரிகள் எனக்கே எனக்கா...???அழகு...அருமை...மகிழ்ச்சி...

ஆமாம் நீங்களும் சவுதி இல் இருக்கீங்களா???

ஸாதிகா said...

புதியதாக என்னென்ன பதிவுகள் வந்து இருக்கிறது என்று பார்ப்பதற்காக தமிழிஷ் போய் பார்ப்பேன்.அதில் "ஏண்டி"என்ற தலைப்பைப்பார்த்ததும் சீமான் கனியாகத்தான் இருக்கு என்று நினைத்து கீழே பார்க்க ..சீமான் கனியே தான்.எங்கே இருந்து சார் தலைப்பை பிடிச்சுட்டு வர்ரீங்க?கவிதை நன்றாக உள்ளது

சீமான்கனி said...

ஸாதிகா said...
//புதியதாக என்னென்ன பதிவுகள் வந்து இருக்கிறது என்று பார்ப்பதற்காக தமிழிஷ் போய் பார்ப்பேன்.அதில் "ஏண்டி"என்ற தலைப்பைப்பார்த்ததும் சீமான் கனியாகத்தான் இருக்கு என்று நினைத்து கீழே பார்க்க ..சீமான் கனியே தான்.எங்கே இருந்து சார் தலைப்பை பிடிச்சுட்டு வர்ரீங்க?கவிதை நன்றாக உள்ளது//

ஒரு அழுத்தமா...இருக்கட்டும்னுதான்....
அப்படி... :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.... ஸாதி(கா)..

கமலேஷ் said...

அமாம் நண்பா..நானும் ஜுபைலில் இருக்கிறேன்...நீங்கள்...

sathishsangkavi.blogspot.com said...

வரிகள் அழகு...

சீமான்கனி said...

Sangkavi said...
//வரிகள் அழகு...//

முதல் முறையாக வந்திருக்கும்...Sangkavi அவர்களே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இனி இணைந்திருபோம்........

Priya said...

//''போடா திருடா''...ஏன் திட்டுகிறாய்?
போதி மர புத்தனாய்
பொறுமையாய் இருந்த உயிரை
புலம் பெயர்த்து விட்டு
தொடதே என்றால்... //........அழகிய வரிகள்...கொண்ட அழகான கவிதை!

சீமான்கனி said...

Priya said...
//''போடா திருடா''...ஏன் திட்டுகிறாய்?
போதி மர புத்தனாய்
பொறுமையாய் இருந்த உயிரை
புலம் பெயர்த்து விட்டு
தொடதே என்றால்... //........

//அழகிய வரிகள்...கொண்ட அழகான கவிதை!//

வணக்கம் பிரியா ..வாங்க...முதல் முறையா வந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் கருத்துக்கு நன்றி...இனி இணைந்திருப்போம்...

உமாபதி said...

நெறைய சொல்லணும் ஆனா என்ன சொல்லனும்னு தெரியல
புடிச்சிருக்கு

சீமான்கனி said...

உமாபதி said...
//நெறைய சொல்லணும் ஆனா என்ன சொல்லனும்னு தெரியல
புடிச்சிருக்கு //

எதையாவது சொல்லிட்டு போயிருக்கலாம்ல இப்போ பாருங்க நான் குழம்பி போயி இருக்கேன்...

Related Posts with Thumbnails