Sunday, January 24, 2010

''குட்டி'' கனவுலகம்...


திரும்பிய திசைகளெல்லாம்
தேவதை  தோழிகள்;
அவளுக்கும் எனக்கும் மட்டும்
தெரிந்த தேவ பாஷை - இங்கு
அனைவருக்கும் சரளமாய்.
பறக்க வசதியாய் சிறகுகள்,
பந்தாட பிரபஞ்சம்,
பால் குடிக்க நிலா.

பறந்து வந்தாள் ஒரு
பருவ தேவதை;
மின்மினி பூச்சிகள்
மின்னி தெறித்தன
அவள் சிரிப்பில்.
''கனவுலகம் வரவேற்கிறது''
வரவேற்றாள்.

வண்ணத்து பூச்சிகளின்
சிறகுகள் திருடி வந்து
ஆளுகொரு பக்கமாய்
விசிறிவிடும் இரண்டு
பூக்களுக்கு நடுவே நான்.

இறக்கைகளை களைந்து இளைப்பாற
இசை தட்டுகளை சுழற்றி கொண்டு
இறங்குகிறாள் இனியவள் ஒருத்தி.

நேற்று நிலா காட்டி  ஊட்ட; 
இன்று பால்சோறு ஊட்ட 
பால்நிலவே பக்கத்தில்.
சிதறிய சோற்றில்
குட்டி குட்டி நிலவாய்
எட்டி எட்டி பார்த்து வீண்மீன்.

நீர் பருக  வாய்திறந்தால் 
தேன் பாய்ச்சி தினரடிக்கிறாள்
தெவிட்டாத தேனருவி.
விருந்து முடிந்தது.

 சிறகுகள்  பூட்டி விட்டு
சிரிக்கிறான் சிங்கார தேவன்; 
இடுப்பு துணி ஈரமாக
விடிய வருகிறது...

கண்விழித்தால்,
பருவதேவதை தவிர அனைவரும்
பகல் விடுப்பு வாங்கி
பறந்து போனார்கள்.

சிறகுகள் தேடி துலாவுகையில்
அது அவளின் விரல்களாய் மாறி இருந்தது.
தேவ பாஷையில் ஒரு முத்தமிட்டு
அணைத்து கொண்டாள் அன்னை அவள் .
                                                                                                                                                                                                   

10 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//திரும்பிய திசைகளெல்லாம்
தேவதை தோழிகள்; //

//சிறகுகள் பூட்டி விட்டு
சிரிக்கிறான் சிங்கார தேவன்;
இடுப்பு தூணி ஈரமாக
விடிய வருகிறது...//


அழகு...,

சீமான்கனி said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி சுரேஷ் அண்ணே...

Gayathiry said...

வண்ணத்து பூச்சிகளின்
சிறகுகள் திருடி வந்து
ஆளுகொரு பக்கமாய்
விசிறிவிடும் இரண்டு
பூக்களுக்கு நடுவே நான்.

அழகிய வரிகள் ....

சீமான்கனி said...

வாங்க காருண்யா...
முதல் முறையா வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி....இனி இணைந்திருப்போம்...

தமிழ் உதயம் said...

அழகிய ரசனைகளுடன் வந்துள்ள அழகிய கவிதை. நீங்கள் எழுதிய கவிதைகளில் இதை மிக சிறந்தது என்பேன்

சீமான்கனி said...

வாங்க தமிழ்....உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி....தமிழ்....

ஸாதிகா said...

//அவளுக்கும் எனக்கும் மட்டும்
தெரிந்த தேவ பாஷை - இங்கு
அனைவருக்கும் சரளமாய்.
பறக்க வசதியாய் சிறகுகள்,
பந்தாட பிரபஞ்சம்,
பால் குடிக்க நிலா.//
அருமை அருமை.

சீமான்கனி said...

வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஸாதி(கா).....

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்பி தெளிந்த கவிஞன் நீரய்யா...

இதுபோன்ற சிறப்பான படைப்புகள் படைக்கவே அதிக நாட்கள் எடுத்து கொள்கிறீர்களா?

youthful@vikatan.com

av@vikatan.com

இந்த ரெண்டி மெயிலுக்கும் அனுப்புங்க மாப்ள இந்த கவிதையை சிறந்த படைப்புகள் வீணாக கூடாது...!

சீமான்கனி said...

வசந்த் மிக்க நன்றி மாப்ஸ்....
(உன்)உங்கள் வாழ்த்துக்கும், ஊக்கத்திற்கும்...
இது போல் நட்புக்கு
நன்றி இறைவனுக்கு...
என்றும் அன்போடு...

Related Posts with Thumbnails