Tuesday, January 26, 2010
விதவை விருட்ஷம்...
(மொட்டை மரம்... இந்த தலைப்பும் சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.)
வெந்நீர் வார்த்து வளர்ந்த விருட்ஷம்;
காதல் காற்றின் கைகள் தழுவாது
தானாய் தற்கொலை செய்ய
உடல் உலுக்கி உதிர்த்து விட்டது
உயிர் துளிகளை.
வெட்டை வெளி மொட்டை மரமாய்
வெறித்து கிடக்கு முகவரி தொலைத்து.
சூரிய கதிர்கள் தட்டி கொடுத்தும்
மழை மகளுக்கு மணம் வர மார்க்கமில்லை.
மத்தியான மஞ்சள் மாறி
மாலை நேரம் மருகி நிற்கையில்
மலைக்காடு கடந்த மைனா கூட்டம்
இளைப்பாற இடம் தேடி
இரவு தூக்கம் இறக்கி வைக்க மரம்
இறங்கி ஆளுகொரு இடம் பிடித்து கொண்டன.
மொட்டை மர கிளைகளில்
இப்பொதுஇலைகளுக்கு பதிலாய்
மைனா குஞ்சுகள் முளைத்து;
வானவில்லின் வண்ணம் போர்த்தி
புது வகை புணர்ந்து நிற்கிறது.
விசித்திரம் விறுவிறுவென பரவி
விந்தயை வேடிக்கை பார்க்க
விரைந்து வருகிறாள் மழைமகள்
கார்கூந்தல் தலை விரிக்க.
கார்மேகம் கண்ட கானமயிலாய்
தொகை விரித்து தொலைவாய்
நிற்கிறது மொட்டை மரம்.
மயில் பார்த்து மதி மயங்கி
மழை துளிகளை துப்பத்
தொடக்கி விட்டாள் மழை மகள்.
மழை சூட்டில் கண்விழித்து
மறைவிடம் தேடி மறைந்து போனது
மைனா குஞ்சுகள்.
வண்ணம் கொட்டி வகை தோகையாய்
வரைந்த கோலம்; தண்ணீர் கொட்டி துடைத்த
வெறும் தரையாய் மீண்டும் வெறித்து போனது.
மொட்டை மரம்
விதி போட்ட விதவை கோலமாய்....
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வழக்கம் போல் உங்கள் பாணியில் "தலைப்பு"கவிதை அழகு.
கவிதை படித்ததும் மனது வழிக்கிறது..
ஸாதிகா said...
//வழக்கம் போல் உங்கள் பாணியில் "தலைப்பு"கவிதை அழகு.//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ஸாதி(கா)... எந்த தலைப்பு பிடித்திருக்கு??
Sangkavi said...
//கவிதை படித்ததும் மனது வழிக்கிறது..//
வாங்க சங்கவி.... வந்து உங்கள் கருத்தும்,உணர்வும் பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி...
நல்லா இருக்கு கனி, கொஞ்சம் உங்க ஊர் சமாச்சாரம், இப்ப இருக்கிற இடத்துல ரசிச்ச இடங்களோட படங்கள் முயற்சியுங்களேன்.:)
நேரமிருந்தால் மட்டும்..
//இந்த தலைப்பும் சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.)//இப்படி வினா எழுப்பிய தலைப்பை சொன்னேன்.
அறிவான சந்ததிகள் என்ற எனது பதிவுக்கு தாங்கள் அளித்த பின்னூட்டத்திற்கு நான் தந்த பதிலை மறுபடியும் இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்.
//ஒரு டவுட்.என் பெயரை குறிப்பிடும் பொழுது "கா" வை ஏன் பிராக்கெட்டினுள் (paranthesis)அடைத்து விடுகின்றீர்கள் ??//
ஸாதிகா said...
//ஒரு டவுட்.என் பெயரை குறிப்பிடும் பொழுது "கா" வை ஏன் பிராக்கெட்டினுள் (paranthesis)அடைத்து விடுகின்றீர்கள் ??//
மன்னிக்கவும் உங்களை ''அக்கா'' என்று அழைக்க விரும்பினேன் உங்கள் பெயரிலே ''கா'' இருப்பதால் அப்படி... வேறே ஒன்னும் இல்லை....
பலா பட்டறை said...
//நல்லா இருக்கு கனி, கொஞ்சம் உங்க ஊர் சமாச்சாரம், இப்ப இருக்கிற இடத்துல ரசிச்ச இடங்களோட படங்கள் முயற்சியுங்களேன்.:)//
நன்றி ஷங்கர் இங்கு கடற்கரை தவிர காண்பதற்கு ஏதும் இல்லை நண்பரே...
நேரம் இருந்தால் மெக்கா சென்று வருவதோடு சரி....ரூம்மும் அலுவலகமும் தான் இப்பொது என்னுலகம்....
பிற்காலத்தில் இது மாதிரியான சிறந்த கவிதைகளை புத்தகமாக போட்ருலாம்டா மாப்பி எதுக்கும் எல்லாத்தையும் காப்பி பண்ணி வைடா வாழ்க வளர்க...
நன்றி மாப்பி....உன் ஊக்கம் எனக்கு தேம்பாய் இருக்கு மாப்ளே....புக் போட்டுறலாமா மாப்பி...
Vithavaiyan en manathai sonna kavithai,
vaalthukal.
Anonymous said...
//Vithavaiyan en manathai sonna kavithai,
vaalthukal.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி ......அதிக நாட்கள் என் மனதை வருத்திய நிகழ்வுகள்...இப்போதுதான் வார்த்தைகளை சேர்த்து கொடுக்க முடிந்தது...எழுதி முதல் முறையாய் படிக்கும் பொது நானும் உடைந்து போனேன்....
உங்களுக்கு என் அன்பும் பிராத்தனைகளும்...
அன்புடன்,
சீமான்...
Post a Comment