தலைப்பை பார்த்தவுடனே தினமும் ஒரு கவிதை எழுதிருவானொன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது...அதெல்லாம் ஒன்னும் இல்ல இது ஒரு வலை பக்கம்.எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்வதற்கான ஒரு முயற்சி அவ்ளோதான்...
காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல
சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை!
கவிதைப் படிப்பதும் அது போலதான்!
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :)
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :)
அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி
உங்கள் நாளை இனிமையாக்க இதுவொரு முயற்சி...
இப்படிதான் ஒரு அழகான வர்ணனையோடு ஆரம்பிக்குது பக்கம்.ஒரு இதமான இனிமையான விஷயத்தை தினமுக் காலைல அனுபவிச்சா எப்படி இருக்கும் அந்த அனுபவத்தை குடுக்குது இந்த பக்கம்.நிறைய புது கவிதைகள் ,இலக்கண கவிதைகள்,நம் தமிழ் இலக்கிய நுல்களில் இருக்கும் கவிதை,நம்ம ஆசான்களின் கவிதை,அழகிய தமிழ் பட பாடல்கள். இப்படி தினமும் ஒரு சுவையோடு வருது கவிதைகள்...
இங்கு நுழையவோ படைப்புகளை அனுப்பவோ (யூசெர் நேம் ,பாஸ் வோர்ட் ) எந்த தடையும் இல்லை...
தினமும் நிறைய பேர் வந்து போறாங்க,அதுவும் இல்லாம நம் கவிதையும் அனுப்பினா அதுவும் சில நாட்களில் ஒரு நாள் கவிதையா வெளியே வருது.அடியேனின் படைப்பும் வந்து இருக்கு.நம் நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கவே இந்த பதிவு.நண்பன் வசந்து விகடனுக்கு என் கவிதைய அனுப்ப சொன்னாரு நானும் அனுப்பி அனுப்பி அனுப்பிட்டே இருக்கேன் என் நேரமோ என்னவோ தெரியல ஒன்னும் அவங்க கண்ணுல பட்டதா தெரியல அதுக்கு வேற எதாச்சும் வழி இருக்காணும் தெரியல...
கவிதை எழுத்தும் நண்பர்களும்... கவிதை பிடித்த நண்பர்களும் இங்க போய்தினமும் ஒரு புத்துணர்வு பெற வாழ்த்துக்கள்...
9 comments:
Not Found
Error 404
இதுதான் நீங்க சொன்ன அந்த புத்துணர்வா கனி..??:)
லின்க் வேல செய்யுதா பாருங்க.
நன்றி ஷங்கர் ...இப்போ பாருங்க சரி பண்ணிட்டேன்...
விகடனின் பிரபலத்தால் நிறைய படைப்புகள் குவியும். தேர்வு செய்வதே அவர்களுக்கு மிகப் பெரிய பணியாக இருக்கும். முயற்சி திருவினையாக்கக்கூடும்.
இப்பதான் படம் ரொம்ப தெளிவா தெரியிது..:) நன்றி கனி. ஆமாம் மெக்கா அடிக்கடி போவதா சொன்னீங்களே, அத ஒரு போட்டோவா போடக்கூடாதா?? போகும் வழி, என்ன என்ன ஊர்கள், சில குறிப்புகள் .. போடலாம் என்றால் பதியலாமே.
தமிழ் உதயம் said...
//விகடனின் பிரபலத்தால் நிறைய படைப்புகள் குவியும். தேர்வு செய்வதே அவர்களுக்கு மிகப் பெரிய பணியாக இருக்கும். முயற்சி திருவினையாக்கக்கூடும்.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்..முயற்சியை இன்னும் கை விடவில்லை...
பலா பட்டறை said...
//இப்பதான் படம் ரொம்ப தெளிவா தெரியிது..:) நன்றி கனி. ஆமாம் மெக்கா அடிக்கடி போவதா சொன்னீங்களே, அத ஒரு போட்டோவா போடக்கூடாதா?? போகும் வழி, என்ன என்ன ஊர்கள், சில குறிப்புகள் .. போடலாம் என்றால் பதியலாமே.//
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...ஓய்வில் முயற்சிப்பேன்...கண்டிப்பாய்...அன்புக்கு நன்றி..
விரைவில் உங்கள் படைப்பு விகடன்.காமில் வரும்.வாழ்த்துக்கள்.நானும் அனுப்பி இருக்கிறேன்.ஆனால்
//The message you sent to vikatan.com/av was rejected because it would exceed the quota for the mailbox.
The subject of the message follows:
Subject: =?UTF-8?B?RndkOiDgrpXgrp/gr43grp/gr4HgrrDgr4g=?=//
இவ்வாறு பதில் வருகிறது.எந்த முறையில் அனுப்ப வேண்டும்?விளக்கம் சொல்லுங்களேன்.
எனக்கும் இதே போல் தான் வருது ஸாதி(கா)..
நம்ம ஜமால் அண்ணா கிட்ட கேட்டா சரியா சொல்லுவாரு கா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...ஸாதி(கா)
யூத்ஃபுல் விகடனுக்கு நமது பதிவை நோட் பேடில் காப்பி செய்து கூடவே தொலைபேசி எண்,மற்றும் முகவரியை(ஒரு முறை அனுப்பினால் போதும்)அனுப்பி வைத்தால் பரிசீலனை செய்வார்கள்.இந்த முறையில் நான் அனுப்பி வைத்த "பாரதத்தின் முதல் பெண்கள்" என்ற எனது இடுகை குட் பிளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நல்லது அக்கா கண்டிபாய் நானும் முயர்சிகிறேன்....மிக்க நன்றி அக்கா
Post a Comment