Monday, March 8, 2010

அழகு குயில் அல்கா...

மகளிர் தின நல் வாழ்த்துகள்...
எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி...
இவள் அல்கா அஜித் ஓமன பெண்.
 தமிழ் படிக்க தெரியாதாம் ஆனால்...
அவ்வளவு அழகாய் அதரங்கள் வழியே  வழிகிறது தமிழ்.
விஜய் டிவி யில் வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ராணி இவள்.
இவள் மேடையேறி பாட கூட வேண்டாம் தமிழில் அவளுக்கு தெரிந்த சில வார்த்தைகள் பேசினால் போதும் அந்த மழலை தமிழை கேட்டு கொண்டே இருக்கலாம்.இந்த விடியோ வில் கவனிக்க ''தெரியாது''.

ஆரம்பத்தில் இருந்து  இன்னும் இனிமை கூடிகொண்டே இவளின் குரல். இவளின் குரல் தேனுக்கு சவால் விடுகிறது.இவள் குரலுக்கு நான் அடிமைஎன்றே சொல்லலாம். எனக்கு எப்போது  ஓய்வு கிடைத்தாலும் சரி நான் இணையத்தில் தேடும் ஒரே டிவி நிகழ்ச்சி இது. என்னை போல் என் நண்பர்களும் இந்த நிகழ்சியை பற்றி விரும்பினால் எழுதுங்கள்.இன்னும் சில குட்டி குயில்கள் இந்த நிகழ்ச்சியை இன்னும் அழகாய் அலங்கரித்து காதுகளில் கவி பாடுகின்றன.நேரம் கிடைக்கையில் அவர்களை பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்.
வெகு நாட்களாய் இதை பற்றி எழுத நினைத்து இபோதுதான் நேரம் கிடைத்தது.

என் நண்பர்களுக்கு எனக்கு பிடித்தவற்றை  பகிர்ந்து கொள்வதில்   மகிழ்ச்சி. இது போன்ற எங்கோ இருக்கும் திறமை சாலிகளை தேடி பிடித்து அவர்களை ஊக்குவிப்பதற்கு விஜய் டிவியை எவளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.

சினிமா செய்திகள் சாமியார் செய்திகள் பின்னால் ஓடி ஓடி களைத்து போன கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்து கிடைக்கும்.நீங்களும் உங்கள் கருத்துகளை பகிந்து கொள்ளுங்கள்..எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி என்று தொடர் பதிவாய் கூட நேரம் இருந்தால்  எழுதுங்கள்...
சரி இதை தொடர் பதிவாய் எழுத நான் அழைபவர்கள்...
1 ,என் மனதில் இருந்து...பிரியா.
2 ,தமிழுதயம்...ரமேஷ்.
3 ,சமையல் அட்டகாசங்கள்...ஜலீலா அக்கா...
4 ,பிரியமுடன் வசந்த்...மாப்பி.
5,ஆயிரத்தில் ஒருவன்
6 ,எல்லா புகழும் இறைவனுக்கே....ஸாதிகா
நீங்களும் நண்பர்களை அழைக்கலாம்.எந்த டிவி நிகழ்ச்சியாய்   இருந்தாலும் பரவாஇல்லை என்ன மொழியாய் இருந்தாலும் பரவாஇல்லை.20 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றாகத்தான் பாடுகிறார். நேரடியாகப் பார்க்க எனக்கு வாய்ப்பில்லை. இனிமேல் நானும் இணையத்தில் தேடி கேட்டுவிடுகிறேன்..,

seemangani said...

நன்றி அண்ணே கடகவென வந்து கருத்து சொன்னதுக்கு...தேடி பாருங்கள் அவளின் முதல் அறிமுகம் முதல் அனைத்தும் அசத்தலாய் இருக்கும் உங்க பதிவு போலவே...கண்டிப்பாய் பார்க்கவும்...

ஸாதிகா said...

உங்கள் பிளாக் மூலமாகத்தான் இவரைப்பற்றித்தெரிந்து கொண்டேன்.///சினிமா செய்திகள் சாமியார் செய்திகள் பின்னால் ஓடி ஓடி களைத்து போன கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்து கிடைக்கும்/// உண்மையான வரிகள்!

seemangani said...

நன்றி அக்கா...
மற்ற வீடியோ வையும் பாருங்க இந்த இளசுகள் இனிமையாய் இதயத்தை இம்சிக்கும்...

தமிழ் உதயம் said...

எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி என்று தொடர் பதிவாய் கூட நேரம் இருந்தால் எழுதுங்கள்...

நல்ல யோசனை. எல்லோரும் எழுதலாம்.

seemangani said...

நன்றி ரமேஷ்....
அப்போ நீங்க மாட்டிகிட்டீங்க...

A.சிவசங்கர் said...

கட்டாயம் எழுதுகிறேன் நீங்க சொல்லி நாங்க எழுதாமையோ .அடுத்த பதிவு இல்லாவிடின் அதட்ட்கு அடுத்து வரும் ..........இந்த நிகழசியிலும் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு இருக்கு

seemangani said...

ம்ம்ம்ம்....எழுதுங்க....வாழ்த்துகள்...
நன்றி சிவா...

Jaleela said...

இது ஆடியோ கேட்க முடியல‌

நானும் நேரம் கிடைக்கும் போது அப்ப அப்ப பார்த்து இருக்கிறேன்.இந்த சூப்பர் சிங்கர் ரொம்ப நல்ல இருக்கும்.

ஆஹா என்னையும் மாட்டி விட்டுட்டீஙகளா அக்கா என்ன புரோக்கிராம் பார்க்கிறாங்க‌ என்று, ம்ம்ம்ம் ஓகே முடிந்த போது எழுது கிறேன்

Priya said...

இந்த நிகழ்ச்சியை என்னால நேரடியா பார்க்க முடியலைன்னாலும், நெட்ல நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன். அதிலும் இந்த பெண்னுக்கு என்னா குர‌ல், அவ்வளவு அழகு, இனிமை அவள் குரலில்!

//சினிமா செய்திகள் சாமியார் செய்திகள் பின்னால் ஓடி ஓடி களைத்து போன கண்களுக்கும் காதுகளுக்கும்//....ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க‌.

உங்க அழைப்பிற்கு மிக்க நன்றி. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்!

vidivelli said...

நண்பரே நான் விரும்பி பார்க்கும் சிங்கர் இதுவே தான்.
நன்று.................
தொடருங்கள்

seemangani said...

Priya said...
//இந்த நிகழ்ச்சியை என்னால நேரடியா பார்க்க முடியலைன்னாலும், நெட்ல நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன். அதிலும் இந்த பெண்னுக்கு என்னா குர‌ல், அவ்வளவு அழகு, இனிமை அவள் குரலில்!

//சினிமா செய்திகள் சாமியார் செய்திகள் பின்னால் ஓடி ஓடி களைத்து போன கண்களுக்கும் காதுகளுக்கும்//....ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க‌.

உங்க அழைப்பிற்கு மிக்க நன்றி. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்!//

வாங்க பிரியா...
இங்கும் நேரடியாய் பார்க்க முடியாது நானும் இனையத்தில்தான் பார்பேன்.
நல்லது எழுதுங்கள்....
நன்றி...

vidivelli said...
//நண்பரே நான் விரும்பி பார்க்கும் சிங்கர் இதுவே தான்.
நன்று.................
தொடருங்கள்//

அப்போ நீகளும் எழுதலாமே....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே...

seemangani said...

Jaleela said...
//இது ஆடியோ கேட்க முடியல‌

நானும் நேரம் கிடைக்கும் போது அப்ப அப்ப பார்த்து இருக்கிறேன்.இந்த சூப்பர் சிங்கர் ரொம்ப நல்ல இருக்கும்.

ஆஹா என்னையும் மாட்டி விட்டுட்டீஙகளா அக்கா என்ன புரோக்கிராம் பார்க்கிறாங்க‌ என்று, ம்ம்ம்ம் ஓகே முடிந்த போது எழுது கிறேன்//

வாங்க அக்கா...ஆடியோ ஏன்?? வரலை மீண்டும் முயர்ச்சி பன்னவும்...
சரி அக்கா நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்....

NADESAN said...

ஒரு அருமையான குரலை அறிமுகம் செய்த உங்களுக்கு என் பாராட்டுக்கள்

நடேசன்
துபாய

seemangani said...

NADESAN said...
//ஒரு அருமையான குரலை அறிமுகம் செய்த உங்களுக்கு என் பாராட்டுக்கள்

நடேசன்
துபாய//

வாங்க நடேசன் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்...இனி இணைந்திருப்போம்....

சினிமா ரசிகன் said...

நான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவன் மற்றவர்களை பற்றியும் எழுதுங்கோ குறிப்பா ரோஷன்,ஸ்ரீனிஷா,ஸ்ரீகாந்த் மற்றும் நித்யஸ்ரீ போன்றோரை பற்றி எழுதுங்கோ

seemangani said...

சினிமா ரசிகன் said...
//நான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவன் மற்றவர்களை பற்றியும் எழுதுங்கோ குறிப்பா ரோஷன்,ஸ்ரீனிஷா,ஸ்ரீகாந்த் மற்றும் நித்யஸ்ரீ போன்றோரை பற்றி எழுதுங்கோ//

எழுதிருவோம்...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினிமா ரசிகன்...
இனி இணைந்திருப்போம்...

ambeth said...

valththukkal................

இரசிகை said...

inthaa vaaram nila sutrula kooda...........

chithra ammata irunthu superb comment vaanginaanga anth then kural thevathai...:)

ithai jaanaki amma kettaanganna remba santhoshap paduvaangannu sonnathum hiyo asanthuttennaga!!

seemangani said...

ambeth said...
//valththukkal................//

நன்றி...ambeth


இரசிகை said...
//inthaa vaaram nila sutrula kooda...........

chithra ammata irunthu superb comment vaanginaanga anth then kural thevathai...:)

ithai jaanaki amma kettaanganna remba santhoshap paduvaangannu sonnathum hiyo asanthuttennaga!!//


ம்ம்ம்ம்....நானும் பார்த்து ரசித்தேன்...
முதல் வருகைக்கும் நன்றி ....

Related Posts with Thumbnails