Wednesday, March 17, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள் தொடர் பதிவு...

முன்னுரை தேவையில்லை என நினைக்கிறேன்...

அன்னை தெரசா:
உலகுக்கெல்லாம் அன்னை இவர்.
அன்னை என்றதும்  முதலில் - என்
நினைவில் வருபவர் இவர்.
சுயநலச் சூரவளிகளுக்கு நடுவே
பொதுநல தென்றலாய்
புறப்பட்டு வந்தவர் இவர்.
கருணையின் கடவுள் உருவம் இவர்.
-----------------------------------------------------------------------------------
சின்மயி:
''ஒரு தெய்வம் தந்த பூ -வை'' தந்த குயில் இவர்.
ஒரு துறையில் சேர்க்க முடியாது
பல துறை பைகுயில் இவர்.
அவர் குரல் கலந்த காற்றையே
பல பட்டாம் பூச்சிகள் பருகி
மோட்சம் அடைவதாய் ஒரு செய்தி.
தேன் குரல் தேவதை.
-----------------------------------------------------------------------
தமிழச்சி தங்கபாண்டியன்:
கவி பேசும் தமிழச்சி இவர்.
கவியெல்லாம் பேசும் தமிழச்சியும் இவரே.
புது கவிதை புனைவதால் புதுத் தமிழச்சியும் இவரே.
பாரத கலையாம் பரத கலை படித்தவர்.
அரசியலும் அத்துபடி.
பெண்ணியத்திற்குள் பிராந்தியம் பார்ப்பவர்.
''எஞ்சோட்டு பெண்''பிடித்த கவிதை தொகுப்பு.
---------------------------------------------------------------------------------------
ரேவதி:
பாரதிராஜாவின் பார்வைக்குள் வந்த நடிகை.
மண் வாசனைக்கு பெண்வாசனை தந்தவர்.
நடிப்பு பிடிக்கும்,நடனம் பிடிக்கும்.
மிக பிடித்த நடிகை.
---------------------------------------------------------------------------
தாமரை:
தமிழ்ப்பாட்டுக்கு  வசீகரிக்கும் வார்த்தைகள் தந்த கவி இவர்.
இவர் வார்த்தைகளில் வசீகரிக்க பாட்ட பல பேரில் நானும் ஒருவன்.
பொறியியல் படித்த புலவர்  இவர்.
தமிழ் படத்துக்கு தமிழ் பாட்டு தந்து கொண்டே இருங்கள் தமிழும்  இருக்கும் கேட்டு கொண்டே...
----------------------------------------------------------------------------------------- 

அஜித் அல்கா:
இவரை பற்றி இந்த பதிவில் பதிந்து விட்டேன்.
சமீபகாலமாய் பாட்டு பாடி உள்ளத்தில் பதிந்து போனவர்.
குரலில் பல பரிமாணங்கள் காட்டும் பாவை.
இவர் பாடும்போது பத்திர படுத்த முடியவில்லை மனதை.
பாட்டிலும் போட்டியிலும்  வெற்றி பெற வாழ்த்துகள்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------
ராணி (அக்கா)
இவர் ஒரு திருநங்கை.
சென்னை மெட்ரோ ரயிலில் சிறு வணிகம் செய்பவர்.நான் பார்த்த எத்தனையோ பேரிலிருந்து வித்தியாசமானவர்.அயராத உழைப்பாளி. கனிவான பேச்சு.உடன் இருப்பவர்களுக்கு உதவிசெயும் மணம்.பல நேரம் பார்த்து வியந்த பெண்.இந்த வரிசையில் இவரை சேர்ப்பதில் பெருமை கொள்கிறேன்.இவருக்காக தனி பதிவே போடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அலமேலு (அக்கா):
நண்பன் ஒருவனால் அறிமுகமானவர்.போலியோவால் பதிக்க பட்டவர்.துணிச்சலான பெண்.அவரிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்.எதையும் முயன்று பார்த்து முடிப்பவர்.பேசும்போது நிறைய உற்சாகம் தந்தவர்.என்னை தட்டி கொடுத்த சிற்பி என்றே சொல்லலாம்.என் நட்ப்பு வட்டத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். தேடிகொண்டிருகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
லத்திகா சரண்:
கேரளாவைச் சேர்ந்தவர்.சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவியேற்ற முதல் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி லத்திகா சரண் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் தலைமையககூடுதல் டிஜிபியாக இருந்து வந்தார். 150 ஆண்டு காலபாரம்பரியம் மிக்க சென்னை மாநகர காவல்துறையின் 90வது ஆணையர் என்றபெருமை லத்திகா சரணுக்குக் கிடைத்துள்ளது.சென்னை மாநகரின் முதல் பெண் ஆணையர் லத்திகா சரண் என்பதும் விசேஷமானஅம்சம். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் பெண் போலீஸ் கமிஷனரும் லத்திகா சரண்தான் என்பது இன்னும் சிறப்பான விஷயம்.தேர்தல்சமையத்தில்   சிறப்பான கடமையாற்றியவர். தற்போது இவர் தமிழக காவல்துறையின் தலைவர். காவல் துறையில் என்னை கவர்ந்தவர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் தமிழ்  பெண்கள்:
எத்தனையோ போராட்டங்கள்.எவ்வளவோ இழப்புகள்.எவ்வளவோ தடைகள்.அனைத்தும் தாண்டி என் முண்டாசு கவிஞகன் கண்ட புதுமை பெண்ணாய் புரச்சி பெண்ணாய். தாயாய்,சகோதரியாய்,நட்பாய்,காதலியாய்,மனைவியாய்,மகளாய்  ஒவ்வொரு வெற்றிக்கும் உறுதுணையாய்  இருக்கும் அணைத்து மங்கையரும்.


இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த நண்பர் Dreamer - (ட்ரீமர்) அவர்களுக்கு நன்றி...எனக்கு தெரிந்து அனைவரும் எழுதி விட்டார்கள்...எழுதாதவர்கள் தொடரலாம்.
19 comments:

Sangkavi said...

உங்களுக்கு பிடித்த 10 பெண்களை நான் வழிமொழிகிறேன்...

thenammailakshmanan said...

Good selection Seeman..!!!
Arumaiyana pathivu.. vaazththukkaL..!!!

ஈரோடு கதிர் said...

ஒரு திருத்தம்

லத்திகா சரண் தமிழக காவல்துறையின் தலைவர்...

Sivaji Sankar said...

அத்தனையும் அருமையான தேர்வுகள்..

ஸாதிகா said...

அருமை.

seemangani said...

Sangkavi said...
//உங்களுக்கு பிடித்த 10 பெண்களை நான் வழிமொழிகிறேன்...//

''மகிழ்ச்சி'' நன்றி சங்கவி...

thenammailakshmanan said...
//Good selection Seeman..!!!
Arumaiyana pathivu.. vaazththukkaL..!!!//

வாங்க தேனம்மை....
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...இனி இணைந்திருப்போம்...

ஈரோடு கதிர் said...
//ஒரு திருத்தம்
லத்திகா சரண் தமிழக காவல்துறையின் தலைவர்...//

வாங்க அண்ணே...நலமா??
இணைத்து விடுகிறேன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

Sivaji Sankar said...
//அத்தனையும் அருமையான தேர்வுகள்..//

வாங்க சிவாஜி ஜி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

ஸாதிகா said...
//அருமை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஸாதி(கா)...

Jaleela said...

வாவ் பத்து பெண்களின் தேர்வும் அருமை

seemangani said...

Jaleela said...
//வாவ் பத்து பெண்களின் தேர்வும் அருமை//

வாங்க அக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அன்புடன் மலிக்கா said...

அருமையான தேர்வுகள்.
நானும் லத்திக்கா சரண் அவர்களைதேர்வுசெய்தேன்..

vidivelli said...

உங்களுக்கு பிடித்தவர்கள் பலர் எனக்கும் பிடிச்சிருக்கு.
நல்ல தெரிவுகள்.....
நன்று.........

DREAMER said...

அருமையான தேர்வு...

-
DREAMER

seemangani said...

அன்புடன் மலிக்கா said...
//அருமையான தேர்வுகள்.
நானும் லத்திக்கா சரண் அவர்களைதேர்வுசெய்தேன்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மல்லிகா என்ன ரெம்ப நாலா ஆளை காணோம்...


vidivelli said...
//உங்களுக்கு பிடித்தவர்கள் பலர் எனக்கும் பிடிச்சிருக்கு.
நல்ல தெரிவுகள்.....
நன்று.........//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விடிவெள்ளி...


DREAMER said...
//அருமையான தேர்வு...//

-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி DREAMER...

Priya said...

அழகான தேர்வுட‌ன் மிக இயல்பா இருக்கு!

seemangani said...

Priya said...
//அழகான தேர்வுட‌ன் மிக இயல்பா இருக்கு!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா....

shanmugapriyan said...

ungal manathil pattavargalil silar en manathilum pattanar. athilum ungalin muthamai pen Poovulaga matha "Annai Theresa". Avarai kadavulin thoothuvar endre sollalam.

பிரியமுடன்...வசந்த் said...

தாமரை சின்மயி ம்ம் எனக்கும் பிடிக்கும் மாப்ள....

seemangani said...

சண்முக பிரியன்... said...
//ungal manathil pattavargalil silar en manathilum pattanar. athilum ungalin muthamai pen Poovulaga matha "Annai Theresa". Avarai kadavulin thoothuvar endre sollalam.//

வாங்க சண்முக பிரியன்...
உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...இனி இணைந்திருப்போம்...


பிரியமுடன்...வசந்த் said...
//தாமரை சின்மயி ம்ம் எனக்கும் பிடிக்கும் மாப்ள....//

வா மாப்ளே...நன்றிடா...

இரசிகை said...

alga ajeeth thai thervu seithathu mikavum pidiththathu......:)

seemangani said...

தேன் குரல் தேவதையை எப்படி மறப்பேன்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...இரசிகை

Related Posts with Thumbnails