Thursday, March 4, 2010

இது காதல் கடிதம் அல்ல...(4)

(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)
புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...

எங்கோ ஒரு மூலையில் சன்னமாய்-என்

உயிர் துடிக்கும் ஓசை ஒலிக்க-உன்
திசை காட்டி ஓடுகிறது உயிர்.


ஒரு கருப்பு கண்ணடி வட்ட முகம் காட்டி
ஐ.சி.யு என்று ஆங்கிலம் பேசியது.
கண்ணடி வழியே கண்களை

கடத்தி விட்டேன்.
வெள்ளை படுக்கையில் பச்சை போர்வை போர்த்தி
வாடா மல்லி வதங்கி கிடந்தது...


தலைகீழ் தவம் செய்து சொட்டு சொட்டாய்-உன்
உடலுக்குள் உயிர் ஊற்றி கொண்டிருக்கிறது ஒரு குடுவை.
அடிக்கடி இதய துடிப்பை அளந்து அளந்து
அறிக்கை வழங்குகிறது ஒரு இயந்திரம்.
படுக்கைக்கு பக்கவாட்டில் ஒரு பையில் இருந்து
குழல் ஒன்று நீண்டு போர்வைகுள் போனது!!


இரு உயிர் காக்கும் தேவதைகள் அங்கும்
இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.


கொஞ்சநேரத்தில் தேவதை ஒன்று வெளியே வந்தது
விபரம் கேட்டேன் விஷம் விழுங்கியதாய் விளக்கம் தந்தது.


அந்த நிமிடத்தின் என் கடைசி மூச்சு
முழூ உருவம் பெற்று - உன்
அருகே போய் அமர்ந்து கொண்டது.


ஐ.சி.யு கண்னாடி வழியே ’’I SEE YOU’’
இலக்கன சுத்தமாய் ’’I SAW YOU…’’


உள்ளே என் உயிர் அங்குளம் அங்குளமாய் அசைகிறது
வெளியே என் உடல் அங்குளம் அங்குளமாய் எரிகிறது.


உலகின் ஒட்டு மொத்த கடவுளின்
உருவமாய் கண்முன்னே காதல்.


நிலம்,நீர்,தீ,ஆகயம்,காற்று ஐந்தும் கூடி
ஆறாவது பூதமாய் காதல்.


கதறுகிறேன் கதலின் கால் கவ்வி.
கதலியாய் கூட வரவேண்டாம்...
கல்லுரிக்கு வந்தால் போதும்?!!


காதலிடம் கடைசி விண்ணப்பம்.


வெளியே வந்த தேவதை உள்ளே போகும்பொது
ஐ.சி.யு-குள் அனுமதி கேட்டேன்
முதலில் ’’நோ’’ என்று பின் ’’வா’’ என்றது.
வரிசையான  கேள்விகளோடு
’’நீ யார்?இவளுக்கு என்ன வேண்டும்?பெயர்???


’’நான்…. க…..வி. சொந்தம் என்றேன்.


காதல் காக்கும் தேவதை ஐந்து நிமிட
அவகாசம் தந்து அனுப்பிவைதது.
ஐ சி யுவின் வட்டமுகம் மூட


வசதியாய் ஒரு திரை. திரை மூடபட்டது.


பனிதுளியெல்லாம் பூ மீது படித்துறங்கும்-இந்த
பூவொ ஒரு பனிதுளிக்குள் படுத்துகிடந்தது.


அதுவரை அங்கு அமர்ந்திருந்த என் மூச்சு
இடம் மாறி இமைகளில் இதமாய் இருந்து கொண்டது.


அங்கு ஒரு வாசகம் ’’சத்தம் போடதே’’ என்று
காதல் காதில் சத்தமாய் சொன்னது ’’ஸ்பரிசம் பேசு’’ என்று.


ஸ்பரிச சிறகுகளில் இருந்து-ஒரு
இறகு எடுத்து விரல்களுக்குள் வைத்து வருடினேன்.


யார் சொன்னது வாழை எரியாது என்று
வளை உருகும் அளவுக்கு எரிந்தது அவளின் வலக்கை!!


சிறு விசும்பலுடன் விழித்து கொண்டாய்.
இப்பொது இமைகளில் இருந்த மூச்சு
இடம் பெயர்ந்து உன் மூச்சோடு கலந்தது.


ஒரு குட்டி புன்னகை குதித்து வந்தது
இரு இதழ்களுக்கு இடையே.


ஐ சி யு கதவு அதிர்ந்தது….(தொடரும்….)

(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)

5 comments:

தமிழ் உதயம் said...

தொடர்ந்து படிக்கிறேன்.

ஸாதிகா said...

இன்னும் முடிக்கலியா?தொடருங்க..தொடருங்க..நானும் தொடர்ந்து படித்து,தொடர்ந்து பின்னூட்டமும் போட்டுவிடுகிறேன்.

seemangani said...

தமிழ் உதயம் said...
//தொடர்ந்து படிக்கிறேன்//
தொடர்ந்து வந்து ஊக்கம் தருவதர்க்கு நன்றி ரமேஷ்..

ஸாதிகா said...
//இன்னும் முடிக்கலியா?தொடருங்க..தொடருங்க..நானும் தொடர்ந்து படித்து,தொடர்ந்து பின்னூட்டமும் போட்டுவிடுகிறேன்.//

இன்னும் கொஞ்சம் தான் அக்கா...காதல் கூடியதும் முடியும்...
மறக்காம படிங்க...நன்றி

DREAMER said...

அருமை, கவிதை நடையில் கதை எழுதுவது மிகச் சிலரே, வைரமுத்து சாரின் ஸ்பெஷல் திறமையில் இதுவும் ஒன்று, நீங்களும் அந்த முயற்சியைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நான் இந்த 4ஆம் பாகத்தைத்தான் முதலில் படித்தேன். மற்ற 3 பாகங்களை (சரியான ஆர்டரில்) படிக்கிறேன்.

வாழ்த்துக்கள் கனி, தொடர்ந்து எழுதுங்கள்...

seemangani said...

நன்றி நண்பரே...ஆம்...எனக்கும் வைரமுத்து அவர்கள்தான் இன்ச்ப்ரேசன் ஆனால் அவரை போல் எழுதுவது கடினம்....ஏதோ முயற்சிசெய்கிறேன்...

நீங்களாவது தொடர்ந்து படித்து குறைகளை சுட்டி காட்டவும் எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்... இது ஏன் அன்பான வேண்டுகோள்...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...இனி இணைந்திருப்போம்...

Related Posts with Thumbnails