Monday, April 26, 2010

நீ அழுக்கான அழகி...


இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட  அழ(ழுக்)கையெல்லாம்  
குடித்துவிட்டு நாள் முழுதும் என்னை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது.
******************

உன் அழகு தாக்கிய குளியலறை
கதறுகிறது கடவுளிடம் என்னை ஏன்
கல்லாய் படைத்தாய் என்று. 
********************


தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!
********************
பொதிகையிலிருந்து புறப்படும்
தென்றல் என்பதெல்லாம் பொய் ; 
குளித்து விட்டு நீ முடி உலர்த்தும் 
சாரலில்லிருந்து புறப்படும் என்பதே மெய். 
******************* 

நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து  விடுகிறேன்.
*******************

குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி.
******************

15 comments:

காமராஜ் said...

சீமான் அதென்ன இந்த இளங்காலை வேலையில் பூராம் தண்ணிச்சாத்திரத்தையே பேசிக்கிட்டு.மனுஷங்க பாடு சோலி பாக்கவேவண்டாம் ?

அழகிய திவலைகள்.

சீமான்கனி said...

காமராஜ் said...
//சீமான் அதென்ன இந்த இளங்காலை வேலையில் பூராம் தண்ணிச்சாத்திரத்தையே பேசிக்கிட்டு.மனுஷங்க பாடு சோலி பாக்கவேவண்டாம் ?

அழகிய திவலைகள்//

ஹ..ஹ...ஹ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே....

ஈரோடு கதிர் said...

//நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்.//

ஹ..ஹா...

சூப்பரப்பு

Priya said...

//நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்//.....இது கொஞ்சம் ஓவர்தான்;)

//குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி.//.........க‌விதை முழுதும் அழகு எனினும் என்னை மிகவும் கவர்ந்த ரசனையான வரிகள் இது!

நிலாமதி said...

கவிதைகள் குளிர்ந்த நீர் போல சில்லு ன்னு ...இருக்கு

சீமான்கனி said...

ஈரோடு கதிர் said...
//நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்.//

//ஹ..ஹா...

சூப்பரப்பு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர் அண்ணே...

Priya said...
//நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்//.....இது கொஞ்சம் ஓவர்தான்;)//

அவளுக்காக நிலவையே எட்டிப் பிடித்தவனுக்கு இது ஒன்னும் ஓவர் இல்லீங்கோ...

//குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி.//.........க‌விதை முழுதும் அழகு எனினும் என்னை மிகவும் கவர்ந்த ரசனையான வரிகள் இது!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா......

நிலாமதி said...
//கவிதைகள் குளிர்ந்த நீர் போல சில்லு ன்னு ...இருக்கு//

வருகைக்கும் கருத்துக்கும் சில்லுன்னு நன்றி நிலா கா...

அன்புடன் மலிக்கா said...

//நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்//

ஹையோடா இதபாருங்கப்பூ என்ன ஒரு கனவு..

சூப்பரப்பு மத்த்தெல்லாம்..

சீமான்கனி said...

அன்புடன் மலிக்கா said...
//நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்//

ஹையோடா இதபாருங்கப்பூ என்ன ஒரு கனவு..

சூப்பரப்பு மத்த்தெல்லாம்.. //

கனவுல கூட நடக்ககூடாத ஏன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா கா...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு தோழரே...எல்லா வரிகளும் குளியலரையையே சுற்றி சுற்றி வந்திருக்கே...ஏதாவது விசேசமா...

சீமான்கனி said...

கமலேஷ் said...
//ரொம்ப நல்லா இருக்கு தோழரே...எல்லா வரிகளும் குளியலரையையே சுற்றி சுற்றி வந்திருக்கே...ஏதாவது விசேசமா...//

வாங்க கமல்ஜி...உங்க கவிதை கேட்டு ரெம்ப நாள் ஆச்சு...என்ன ரெம்ப வேலையோ??
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

Thenammai Lakshmanan said...

தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!//


இது ரொம்ப அழகு சீமான் கனி

சீமான்கனி said...

thenammailakshmanan said...
//தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!//


இது ரொம்ப அழகு சீமான் கனி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...தேனக்கா....

இரசிகை said...

//நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்//

ada!!


//தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!//

:)

nallaayirukku......

ragav kavithai onnu ninaivukku varukirathu........

sarkkarai thanneeril karainthuvidume?
kuliththu vittu appadiye
varukiraai!!

(varikal konjam maariyirukkum but,karuththu maarala)

சீமான்கனி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இரசிகை...தொடர்ந்து வாங்க..

சிவாஜி சங்கர் said...

நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து விடுகிறேன்.//

கிகிகி....... :)

Related Posts with Thumbnails