(இந்த படம் வசந்தின் கைவண்ணம்)
நன்றி மாப்பி
முதலில் இந்தமாதிரி யோசிக்கவச்ச வசந்து மாப்பிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... (அடுத்த வருஷம் ஊருக்கு வருவேள...வா..)எப்படி இப்படி யோசிக்குறனு தெரியாத்தனமா கேட்டுபுட்டேன் அதுக்கு ஒரு பதிவ போட்டு நமக்கும் ஒரு தலைப்ப குடுத்து எழுது ராசான்னு பாசமா சொல்லிடாப்ள.(எதுவா இருந்தாலும் பேசியே தீர்துருக்கலாம்) நான் எப்பவும் எது எழுதுனாலும் கடைசியாதான் தலைப்பயோசிச்சு எழுதுவேன்.இப்போதான் தலைப்புக்கு எழுதுறேன் அதுவும் வித்யாசமா...(பாவம் சுசிக்கா என்ன பாடுபடுறாங்களோ???)அப்டின்னு நெனச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டாங்களே... நம்ம கைகள் இரண்டும் இருக்குள்ள அதோட ஆரம்பம் நம்ம தோள்பட்டையில இருக்குன்னு தெரியும் அதே கைகள் நம்ம வயிற்றோட பக்கவாட்டில் முளைத்திருந்தால் நம்ம அன்றாட வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடந்திருக்கும்?.......இதுதான் வசந்த் மாப்பி எனக்கு கொடுத்த சிந்தனை.(ஒரே ஊர்காறேனு கொஞ்சம்கூட யோசிக்காம)வசந்த் சிந்தனைய கொஞ்சம் என் முளை வழியா வாசிக்க போறீங்க.(என்னென்ன ரூபத்துல விதி விளையாடுது)கடைசியா ரெண்டு பேர் என்னோட சிந்தனைக்கு எழுதவும் போறிங்க.... (இந்த கொடுமை வேறயா??)சரி நீங்க மனச தேத்திகிட்டு மேல படிங்க...(படிக்கனுமா..??விதி)
உங்களுக்கு கை இறங்கி வயித்துக்கு பக்கவாட்டில் வந்துருச்சா...??
முதலில் நன்மைகள் பார்ப்போம்...
1) தூக்கத்தில் நமக்கு இடுப்புக்குகீழ அரிச்சா ஈசியா சொரிஞ்சுக்கலாம்.(ரெம்ப முக்கியம்)
2) தரைல எந்த பொருள் விழுந்தாலும் குனியாம எடுத்துடலாம்.(அப்போ மூவ் தடவுற செலவு மிச்சம் )
3) ரெம்பநேரம் நின்னு கால் வலிச்சதுனா கைய சபோட் குடுத்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.(சைக்கிள் ஸ்டாண்ட் மாதிரி)
4) வாண்டுங்க தப்புபண்ணா தலைல கொட்ட ரெம்ப வசதியா இருக்கும்.(பழிக்குபழி)
5) அடுத்தவங்க கால வாற ரெம்ப வசதியா இருக்கும்.(ஐயோ..!!!!)
6) பெண்கள் கோலம்போட வீடு பெருக்க ரெம்ப கஷ்ட்டபடமாட்டாங்க.
7) யாரும் அவ்ளோ ஈசியா நம்மல கண்ணத்துல அரைய முடியாது.
8) கிரிகெட்ல குனியாம பாடிங் பண்ணலாம்.
9) பெரிய தொப்பை இருந்தாலும் ஷூ லெஸ் ஈசியா முடிச்சு போடலாம்.(அட..)
10௦) கீபோர்டும் மவுசும் கிட்டத்தட்ட தரைலதான் வச்சு வேலைசெய்யணும்.
அடுத்து விபரீதமான சில நிகழ்வுகள் நடக்கலாம்...
1) எதாவது தெரியாம முழிக்கும்போது தலைய சொரிய முடியாது முடிஞ்சா முதுக சொரிஞ்சுக்கலாம்.(ஆரம்பமே சரி இல்லையே)
2) ரஜினியோட சில முக்கியமான ஸ்டைல் பண்ணமுடியாமலே போயிருக்கும்.(இது உலகத்துக்கு ஒரு பெரிய இழப்பு)
3) சிவக்குமாரோட ஒரு முக்கியாமான டயலாக் பல சென்சார் காரணமா எழுதாம போயிருக்கலாம்.அந்த டயலாக் "கண்ணா உன்னை தோள்ல போட்டு வளர்த்தேன் மார்ல போட்டு வளர்த்தேன் ஆனா நீ என்னை நெஞ்சுல மிதிச்சுட்டு போறியே..."இத மாத்தி எழுதுனா... "கண்ணா உன்னை வயித்துல போட்டு வளர்த்தேன் தொப்பைல போட்டு வளர்த்தேன் ஆனா நீ என்னை சென்சார்....மிதிச்சுட்டு போறியே..."(ஒ... மை காட்...!!!)
4) பல்லு வெளக்குற பிரஸ் இப்போ இருக்குரதவிட ரெண்டுமடங்கு அதிகநீளமா இருக்கும்.சீப்பும் அதுபோலவே.
5) அடிதடி தகராறு வந்தா அடிக்குற அடி முதலில் படக்கூடாத இடத்துலதான் படும்.(உசுரே போகுதே...உசுரே போகுதே...நாட்டாம தீர்ப்ப மத்தி சொல்லு..)
6) யாரையாவது கண்ணத்துல அரைய ஆசைபட்டா ஒரு ஸ்டூல் போட்டுதான் அரையனும்.(அதுக்காக ஸ்டூலோடவா அலையமுடியும்)
7) பல்ல உடைச்சுடுவேன்னு ஈசியா சொல்ல முடியாது.இல்ல சொல்ல முடியும் செய்ய முடியாது.(கல்லெடுத்து அடிச்சு உடைக்கலாம்)
8) நம்ம ஆடைகளில் நிறைய மாற்றம் அதாவது சட்டை ரெம்ப வித்யாசமா இருக்கும்.காலருக்கும் கைக்கும் ரெண்டு அடி கேப் இருக்கும்.(நெனச்சு பாக்கவே பயமா இருக்கு)
9) பாடகர்களுக்கு நீளமான மைக் தேவைப்படும்.
10௦) பின்முதுகுக்கு மேல சொரிஞ்சுக்குறது ரெம்ப கஷ்ட்டம்.
11) மார்தட்டி சொல்வதற்கு பதிலா வயிர்தட்டி சொல்லுவோம்.
12) செல்போன ஸ்டைலா காதுலவச்சு பேசமுடியாது.
(புளு டூத் வாங்கி மாட்டுவோம்)
13) குனிஞ்சு கைய தரைல வச்சா நாளுகாலு மிருகம் மாதிரியே இருப்போம்.(ஓட்டகசிவிங்கி மாதிரின்னு தெளிவா சொல்லு)
14) சுகந்திரமா சோறு சாப்டமுடியாது.(தண்ணிகூட ஸ்ட்ரா போட்டு குடிக்கலாம்)
15) காலுமேல காலு போட்டு உக்காரும்போது கைமேல கை போட்டு உக்காருவோம்.
16) கல்யானத்துல உக்கார்ந்துகிட்டு தாலி கட்டகஷ்ட்டமா இருக்கும்.(நின்னுகிட்டு கட்டிக்கலாம்)
17) தோள்ல இருந்து கைஇருக்குறவங்கள பார்த்தா அதிசயமா,பாவமா பார்ப்போம்.
(ரெம்ப குஷ்ட்டம்பா...இது...கஷ்ட்டம்பா...போதும் ஆணியே புடுங்க வேண்டாம் போ...)
ஏதோ எனக்கு தெரிஞ்சதெல்லாம் எழுதிட்டேன். இப்போ நானும் ரெண்டுபேர மாட்டிவிடனும்...(யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்)
முதலில் பாசத்திற்குரிய ஸாதிகா அக்கா மனிதர்கள் எல்லோரும் கடலுக்குள்ள வசித்தால் எப்படி இருக்கும்னு எழுத போறாங்க.தலைப்பு தண்ணீர் தேசம்.
அடுத்தது...சலூன்கடை சகா அஹமது இர்ஷாத் நீங்க காத்தாடியா (பட்டம்) இருந்தா உங்கள் அனுபவம் எப்படி இருக்கும் பறக்கும்போது என்ன உணர்வீங்கன்னு எழுதுங்க...தலைப்பு ஆத்தாடி...காத்தாடி....
23 comments:
கலக்கிட்டிங்க பாஸ்.
வாழ்த்துக்கள். கை குடுங்க...
ஹஹஹா அருமை..
//கண்ணத்துல அரைய ஆசைபட்டா ஒரு ஸ்டூல் போட்டுதான் அரையனும்//
இதுக்கு அவசியம் இருக்காது.. ஏன்னா அப்போ வயித்துல அறையரது தான் பெரிய அவமானமாக கருதப்படும் :)
வசந்துக்கும், உங்களுக்கும் வாழத்துகள். வித்தியாசத்தை வித்தியாசமாகவே கொடுத்துட்டிங்க.
பின்னி பெடலேடுத்துட்டிகளே , ரொம்ப தான் யோசிகிரீக , சரியான தலிப்புதான் உங்களுக்கு
கலக்கல் சகா.. ஆனா என்னையும் தொ.பதிவுக்கு அழைத்தது எனக்கு கலக்கியது..(எதுன்னெல்லாம் சின்னப்புள்ளதனமா கேட்ககூடாது) நேரக்குறைவு.. இருந்தாலும் முயற்சிக்கிறேன்...
கனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ..
அசத்திட்டேப்பா.. சூப்பரு..
//(பாவம் சுசிக்கா என்ன பாடுபடுறாங்களோ???)அப்டின்னு நெனச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டாங்களே...//
அவ்வ்வ்..
நானு ஃபெயிலாம்..
ஆவ்வ்வ்..
ஆனாலும் அநியாயத்திற்கு சீமான்கனிக்கு கறபனை வளம்.
நிறைய யோசிப்புக்கள்...நல்லா இருக்கு...
நல்லா இருக்குங்க. கொஞ்சம் பிழைகள பாருங்க.
(நமைகள் மாதிரி).
அசத்திட்டீங்க சீமான்கனி.. என்னா ஒரு கற்பனை.
நானும் படிச்சிட்டேன்.
(நல்லவேளை என்னையக்
கூப்பிடல, தப்பிச்சேன்.)
கலாநேசன் said...
//கலக்கிட்டிங்க பாஸ்.
வாழ்த்துக்கள். கை குடுங்க...//
ரெம்ப கலக்கிடேனோ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலாநேசன் உங்களுக்கு என்மேல என்ன கோபம் இந்தபக்கம் அடிக்கடி வர்றது இல்லையே...
பிரசன்னா said...
//ஹஹஹா அருமை..
//கண்ணத்துல அரைய ஆசைபட்டா ஒரு ஸ்டூல் போட்டுதான் அரையனும்//
இதுக்கு அவசியம் இருக்காது.. ஏன்னா அப்போ வயித்துல அறையரது தான் பெரிய அவமானமாக கருதப்படும் :) //
அட ஆமா ஒருவேளை ஆசைபட்டா தேவைபடும்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சு இருந்தா தொடர்ந்து வாங்க பிரசன்னா...
தமிழ் உதயம் said...
//வசந்துக்கும், உங்களுக்கும் வாழத்துகள். வித்தியாசத்தை வித்தியாசமாகவே கொடுத்துட்டிங்க.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ்ஜி...
மங்குனி அமைச்சர் said...
//பின்னி பெடலேடுத்துட்டிகளே , ரொம்ப தான் யோசிகிரீக , சரியான தலிப்புதான் உங்களுக்கு//
இப்படி யோசிக்க வைத்த வசந்துக்குதான் பாராட்டுகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமைச்சரே...
அஹமது இர்ஷாத் said...
//கலக்கல் சகா.. ஆனா என்னையும் தொ.பதிவுக்கு அழைத்தது எனக்கு கலக்கியது..(எதுன்னெல்லாம் சின்னப்புள்ளதனமா கேட்ககூடாது) நேரக்குறைவு.. இருந்தாலும் முயற்சிக்கிறேன்...//
முயற்சி பண்றீங்களா??நிச்சயம் ரசனையான பதிவு உங்களிடம் இருந்து வரும் வாழ்த்துகள்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷா...
சுசி said...
கனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ..
//அசத்திட்டேப்பா.. சூப்பரு..
//(பாவம் சுசிக்கா என்ன பாடுபடுறாங்களோ???)அப்டின்னு நெனச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டாங்களே...//
அவ்வ்வ்..
நானு ஃபெயிலாம்..
ஆவ்வ்வ்.. //
ஆமாம் சுசிக்கா... ரசனையா ஒரு பதிவ நானும் எதிர்பார்த்து ஏமாந்து போனேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசிக்கா...
ஸாதிகா said...
//ஆனாலும் அநியாயத்திற்கு சீமான்கனிக்கு கறபனை வளம்.//
உங்கள் தம்பின்னு காமிக்கவேண்டாமா ஸாதிகா அக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதி க்கா
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//super super //
அம்பூட்டு நல்லவரா நீங்க உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சு இருந்தா தொடர்ந்து வாங்க நன்றி ரமேஷ்...
ஜெய்லானி said...
//நிறைய யோசிப்புக்கள்...நல்லா இருக்கு...//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி இனி இணைந்திருப்போம்...
இராமசாமி கண்ணண் said...
//நல்லா இருக்குங்க. கொஞ்சம் பிழைகள பாருங்க.
(நமைகள் மாதிரி). //
பார்த்துட்டேன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணண்..
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//அசத்திட்டீங்க சீமான்கனி.. என்னா ஒரு கற்பனை.//
மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்...
NIZAMUDEEN said...
//நானும் படிச்சிட்டேன்.
(நல்லவேளை என்னையக்
கூப்பிடல, தப்பிச்சேன்.)//
இல்லை நீங்க தப்பிக்களை தயாராய் இருங்கள்...நிஜாம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மாப்பி கலக்கிட்ட போ இதுதான் எல்லார்கிட்டயும் எதிர்பார்த்தேன் ரெண்டு மூணு பேர் ஏமாத்திட்டாங்க நீ நான் எதிர்பார்த்த மாதிரியே எழுதிட்ட வாழ்த்துக்கள் இதே கண்டினியூ பண்ணி எனக்கு ஆப்பு வச்சுடாத மாப்ள...
லேட்ரல் திங்கிங்க் ஆல்வேஸ் கிவ் யூ குட் ரிசல்ட்.
அடைப்பு குறிக்குள்ள இருக்கிற சிவப்பு நிற கமெண்ட்டை குறைச்சுகிட்டா இன்னும் நல்லா இருக்கும்...
//கலாநேசன் உங்களுக்கு என்மேல என்ன கோபம் இந்தபக்கம் அடிக்கடி வர்றது இல்லையே..//
கோபம் எதுவும் இல்லைங்க. நேரம் கிடைக்கல. இனி அடிக்கடி சந்திக்க முயற்சிக்கிறேன்.
ப்ரியமுடன் வசந்த் said...
//மாப்பி கலக்கிட்ட போ இதுதான் எல்லார்கிட்டயும் எதிர்பார்த்தேன் ரெண்டு மூணு பேர் ஏமாத்திட்டாங்க நீ நான் எதிர்பார்த்த மாதிரியே எழுதிட்ட வாழ்த்துக்கள் இதே கண்டினியூ பண்ணி எனக்கு ஆப்பு வச்சுடாத மாப்ள...
லேட்ரல் திங்கிங்க் ஆல்வேஸ் கிவ் யூ குட் ரிசல்ட்.//
அட என்ன மாப்பி இப்படி சொல்லிட்ட என்னதான் இருந்தாலும் உன் அளவுக்கு யோசிக்க முடியுமா ???டிப்புக்கும் கருத்துக்கும் நன்றி மாப்பிளே உன் எதிபார்ப்பை பூர்த்தி செய்ததே எனக்கு மகிழ்ச்சி...
Anonymous said...
//அடைப்பு குறிக்குள்ள இருக்கிற சிவப்பு நிற கமெண்ட்டை குறைச்சுகிட்டா இன்னும் நல்லா இருக்கும்... //
அட இவ்வோ தூரம் வந்துட்டு பேர சொல்லாம போறிங்களே...??இனி கவனத்தில் கொள்கிறேன்...நன்றி...
கலாநேசன் said...
//கலாநேசன் உங்களுக்கு என்மேல என்ன கோபம் இந்தபக்கம் அடிக்கடி வர்றது இல்லையே..//
//கோபம் எதுவும் இல்லைங்க. நேரம் கிடைக்கல. இனி அடிக்கடி சந்திக்க முயற்சிக்கிறேன்.//
ஆமாவா!!! அதானே பார்த்தேன்...இனி இணைந்திருப்போம்... நன்றி கலாநேசன்...
என்னாமா யோசிக்கிறாங்கப்பா. எம்மாடியோ இதெல்லாம் நமக்கு வராதுங்கோ பாவம் நான் சிகப்புப்புள்ள. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
ம்ம்..பிரி கட்டி அடிக்கிறீங்க போல..
பழைய பதிவு மா கோலமும் படிச்சேன் ரொம்ப நல்லா இருந்தது..
எங்க இப்ப ஆன்லைன்ல பார்க்கவே முடியலை..
ரொம்ப பிஸியா..
அன்புடன் மலிக்கா said...
//என்னாமா யோசிக்கிறாங்கப்பா. எம்மாடியோ இதெல்லாம் நமக்கு வராதுங்கோ பாவம் நான் சிகப்புப்புள்ள. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்//
மலிக்கா அக்கா எத்தன வருசமா இதே சொல்லிட்டு இருப்பீங்க இருங்க இந்த தொடர் பதிவுக்கு உங்களுக்கும் அழைப்புவர ஏற்பாடு பண்ணறேன்.,..
கமலேஷ் said...
//ம்ம்..பிரி கட்டி அடிக்கிறீங்க போல..
பழைய பதிவு மா கோலமும் படிச்சேன் ரொம்ப நல்லா இருந்தது..
எங்க இப்ப ஆன்லைன்ல பார்க்கவே முடியலை..
ரொம்ப பிஸியா..//
அப்படிலாம் ஒன்னும் இல்ல கமல்ஜி...நீங்கதான் காலைல ஆன்லைன்ல வர்றதே இல்லை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அட உங்க வேலதானா அது.. ஸாதிகாவை படிச்சிட்டுத்தான் வர்றேன்..
இது ரொம்ப அருமை பாஸ்
thenammailakshmanan said...
//அட உங்க வேலதானா அது.. ஸாதிகாவை படிச்சிட்டுத்தான் வர்றேன்..
இது ரொம்ப அருமை பாஸ்//
எல்லாம் அவன் (வசந்து மாப்ளே) செயல்...நன்றி தேனக்கா...
ஆமாம் இது என்னக்கா புதுசா பாஸ் னுலாம் கூப்பிட்டுகிட்டு
Post a Comment