காத்திருக்கச் சொல்லிவிட்டு போனாய்
காதல் சொல்ல கவர்ந்துவந்த ஒற்றை ரோஜா - தன்
காத்திருப்பையும் கவனப்படுத்த
காத்திருக்கிறேன் என்று வானத்தில் எழுதச்சொல்லி
கத்தியாய் கைகீறி இரத்தம் காட்டுகிறது.
***
மாலை வந்ததும் மாறாமல் வரும் பூக்காரியிடம்
மலர் சூடிக்கொள்ள மங்கை இல்லை - அவளின்
மயிலிறகு பாதங்களின் மருக்கள் மட்டுமே
மிச்சமாய் இருக்கு என்னிடம் என்றதும்
கூடையிலிருந்து குதித்துவந்து என்மேல்
குண்டு எரிகிறது குண்டுமல்லி ரெண்டு.
***
ஏ!!கலாபக்காரியே - உன்
கார்கூந்தல் கூடும் கனகாம்பர பூக்கள் உன்னை
காணாத கோபத்தில் கண்ட இடத்திலெல்லாம்
கல்லெறிந்து காயப்படுத்துகிறது.
***
நீ ஊஞ்சல் கட்டி ஆடும் அழகை
உயரே இருந்து உற்றுப்பார்த்து விட்டு
உதிரும் வேப்பம்பூக்கள் - அங்கு
நீ சிதறிய சிரிப்புகளை சேமிக்க வரும் என்மேல்
விறகு எறிந்து விரட்டுகிறது.
***
அன்று நீ சரிந்த மண்ணில்
சிதறிய மல்லிகை பூக்களை தேடிஎடுத்து
மார்போடு வைத்துக் கொள்கையில்
மாமல்லபுரத்து மலையாய் மாறி
மல்லிகை என்னை கொல்லப்பாக்குது.
***
பசி பிசையும் வயிற்றுக்கு உணவுட்ட
தொண்டைக்குழியில் தங்கிவிட்டு
தர்ணா செய்கிறது காலிபிளவர்.
***
இப்படித்தான் இயல்புகளை இருத்திவிட்டு
திரிபுகளை தின்னக்கொடுக்கிறது
நின் நினைவுகள்.
உன் ராச்சஷா பூக்களால்
காதலன் பட்ட காயங்களுக்கு கட்டுப்போட
கல்லறை தகர்த்து எழுந்துவா.
வருவாயா??வரமாட்டாயா?
மீண்டு வருவாய் என்றுதான்
மீண்டும் மீண்டும் சொல்கிறது உன்
கல்லறை பூத்த கள்ளிப்பூக்களும் உன்
இறுதி ஊர்வலத்தில் இறைக்கப்பட்ட
கதம்பப்பூக்களும் கருகி காத்திருக்கிறது
என்னை போலவே
சீக்கிரம் வா....
28 comments:
யாரும்மா அந்த ஆவி இவன் தொல்லை தாங்கலை சீக்கிரமா ஏதாச்சும் முடிவ சொல்லிடும்மா...
ஒவ்வொரு வரியும் நன்றாக இருந்தது.
ஒரு ஃப்ளோவா வருது வரிகள் அருமை..
பாலைவனத்திலிருந்து ஒர் சோலைவனக் கவிதை
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
டெரரான தலைப்பு அதே போல் படம் கவிதை நயம் லயிக்க வைக்கின்றது.//அன்று நீ சரிந்த மண்ணில்
சிதறிய மல்லிகை பூக்களை தேடிஎடுத்து
மார்போடு வைத்துக் கொள்கையில்
மாமல்லபுரத்து மலையாய் மாறி
மல்லிகை என்னை கொல்லப்பாக்குது.
***// அழகு வரிகள்.
கவிதை நல்லாயிருக்கு சீமான்கனி.
ஒவ்வொரு வரியும் நன்றாக இருந்தது.
எல்லாம் நல்லாயிருக்குங்க.
காதல் கவிதைய இவ்ளோ பயங்கரமாவா எழுதறது :) கற்பனைகள் நல்லா இருக்கு..
nalla erukku pa but kadasiyil konjam sogam
//யாரும்மா அந்த ஆவி இவன் தொல்லை தாங்கலை சீக்கிரமா ஏதாச்சும் முடிவ சொல்லிடும்மா...//
:)
கவிதை கலக்கல்ஸ் மாப்பி...இன்னும் எவ்வளவு காதல்தான் வச்சிருக்கே....????
நல்லாயிருக்குங்க கனி
ப்ரியமுடன் வசந்த் said...
//யாரும்மா அந்த ஆவி இவன் தொல்லை தாங்கலை சீக்கிரமா ஏதாச்சும் முடிவ சொல்லிடும்மா...//
நன்றி மாப்பி ஆமா உனக்குத்தான் ஆவி பாஷை தெரியுமே பேசி ஒரு பதில கேட்டு சொல்லு மாப்பி...
தமிழ் உதயம் said...
//ஒவ்வொரு வரியும் நன்றாக இருந்தது.//
நன்றி ரமேஷ்ஜி...என்ன இப்போ ரெம்ப பிஸியா...
ஜெய்லானி said...
//ஒரு ஃப்ளோவா வருது வரிகள் அருமை.../
யார பாளோ பண்ணுதுன்னு தெரியுதா??தெரிஞ்சா சொல்லுங்க...நன்றி ஜெய்லானி...
மு.அ. ஹாலித் said...
//பாலைவனத்திலிருந்து ஒர் சோலைவனக் கவிதை
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள் //
அப்போ இது சொகக் கவிதை இல்லை.... அப்பாடா...உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...ஹாலித்
ஸாதிகா said...
//டெரரான தலைப்பு அதே போல் படம் கவிதை நயம் லயிக்க வைக்கின்றது.//அன்று நீ சரிந்த மண்ணில்
சிதறிய மல்லிகை பூக்களை தேடிஎடுத்து
மார்போடு வைத்துக் கொள்கையில்
மாமல்லபுரத்து மலையாய் மாறி
மல்லிகை என்னை கொல்லப்பாக்குது.
***// அழகு வரிகள்.//
உங்கள் ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா படத்துக்கு யோசிக்கும்போது இந்த தீம்தான் வந்தது ஸாதிகா அக்கா...
அக்பர் said...
//கவிதை நல்லாயிருக்கு சீமான்கனி. //
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்...
சே.குமார் said...
//ஒவ்வொரு வரியும் நன்றாக இருந்தது.//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க குமார்...
இராமசாமி கண்ணண் said...
//எல்லாம் நல்லாயிருக்குங்க. //
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணண்..
பிரசன்னா said...
//காதல் கவிதைய இவ்ளோ பயங்கரமாவா எழுதறது :) கற்பனைகள் நல்லா இருக்கு..//
அவ்வளோ பயங்கரமாவா இருக்கு!!!??
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரசன்னா..
sakthi said...
//nalla erukku pa but kadasiyil konjam sogam//
ரணப்பட்டவனின் மனக்காயம் சக்திகா...கற்பனைதான்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சிவன். said...
//யாரும்மா அந்த ஆவி இவன் தொல்லை தாங்கலை சீக்கிரமா ஏதாச்சும் முடிவ சொல்லிடும்மா...//
:)
//கவிதை கலக்கல்ஸ் மாப்பி...இன்னும் எவ்வளவு காதல்தான் வச்சிருக்கே....???? //
தெரியலையே மச்சான்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சான்.
ஈரோடு கதிர் said...
//நல்லாயிருக்குங்க கனி//
மிக்க நன்றிங்க கதிர் அண்ணா...
அழவைப்பாள் சிங்காரி, வெங்காய பெல்லாரி..!!
புலம்பு...
சீசீ..மா..ன்...க..னி.....ம்ம்..என்ன நடக்குது அங்க...
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...
தொடருங்கள்...
வார்ரே...வாவ்!!!
Sivaji Sankar said...
//அழவைப்பாள் சிங்காரி, வெங்காய பெல்லாரி..!!
புலம்பு...//
வாங்க சிவா என்ன ரெம்ப பிஸியா...???வெங்காயம் எண்ணம் விலையேறி போச்சுங்க..நீங்கவேற...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா
கமலேஷ் said...
//சீசீ..மா..ன்...க..னி.....ம்ம்..என்ன நடக்குது அங்க...
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...
தொடருங்கள்...//
அதவிடுங்க முதலில் உங்களுக்கு என்ன ஆச்சு என்னை இப்படி பிச்சு பிச்சு போட்டு இருக்கீங்க...ஹி...ஹிஹிஹி கமல்ஜி..
வருகைக்கும் கருத்துக்கும் கமல்ஜி
NIZAMUDEEN said...
//வார்ரே...வாவ்!!! //
எங்க வர?? வருகைக்கும் கருத்துக்கும் நிஜாம் அண்ணா...
காதல் சில சமயம் ஏமாற்றும்.சிலசமயம்
இல்லாமல் போகும். இரண்டுமே இழப்புத்தான்.ஒன்றில் எதிர்ப்பார்ப்பு இல்லை.மற்றையதில் எதிர்பார்ப்பு
தொடர்ந்தபடியே இருக்கும்.
அருமையான வரிகள் சீமான்.
nice one sir
ஹேமா said...
//காதல் சில சமயம் ஏமாற்றும்.சிலசமயம்
இல்லாமல் போகும். இரண்டுமே இழப்புத்தான்.ஒன்றில் எதிர்ப்பார்ப்பு இல்லை.மற்றையதில் எதிர்பார்ப்பு
தொடர்ந்தபடியே இருக்கும்.
அருமையான வரிகள் சீமான்.//
கருத்துக்கும் ஊக்கத்திற்கும் வருகைக்கு நன்றி ஹேமா....
மங்குனி அமைசர் said...
//nice one sir //
Thank you sir...
இதெல்லாம் அவங்க சாகறதுக்கு முன்னாடி சொல்லவேண்டியது ஏன் சீமான் இப்டி லேட் பண்ணிடிங்க/........ செம காமெடி
எல்லாப் பூக்களும் ராட்சசிப் பூக்களாயிருச்சே கனி அருமை..
pooranikarthick said...
//இதெல்லாம் அவங்க சாகறதுக்கு முன்னாடி சொல்லவேண்டியது ஏன் சீமான் இப்டி லேட் பண்ணிடிங்க/........ செம காமெடி //
வாங்க பூரணி "அவங்க இன்னும் சாகவில்லைங்க..."!!!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...பூரணி கார்த்திக்...
thenammailakshmanan said...
//எல்லாப் பூக்களும் ராட்சசிப் பூக்களாயிருச்சே கனி அருமை..//
வாங்க தேனக்கா ஆமாம் அக்கா..அவள் நினைவில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கா...
ரொம்ப நல்லாயிருக்கு சகா...அசத்துங்க தொடர்ந்து..
காதல் காதல் காதல்...
காதலி காதலி காதலி....
ஹ்ம்ம்.. ரொம்ப நல்லா இருக்குங்க...
படம் தான் பயமுறுத்துது...
வாழ்த்துக்கள்...
//கூடையிலிருந்து குதித்துவந்து என்மேல்
குண்டு எரிகிறது குண்டுமல்லி ரெண்டு.//
அழகுங்க... நண்பரே... எத்தனைமுறை நாற்நாறாக பிரித்து எழுதினாலும் இந்த காதலும், ஊடலும் மணக்கத்தானே செய்கிறது.. அத்தனை கவிதைகளையும் ரசித்துப்படித்தேன்....
ரசித்து படித்தேன்
தியாவின் பேனா said...
//ரசித்து படித்தேன்//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியா பதிவுகள் பிடிச்சிருந்த தொடர்ந்து வாங்க....
Post a Comment