பள்ளி நாட்களில் விடுமுறையில் (ஞாயிற்று கிழமை) வரும் பண்டிகை நாட்கள்மேல் வெறுப்பாய் வரும்.மணம் சிட்டு குருவியாய் சிறகடிக்காமல் கூட்டு குருவியாவே திரியும்
கொண்டாட்ட சந்தோசங்களை குழிதோண்டி புதைக்க சொல்லி கூப்பிடும் பள்ளி மணியோசை.கோடையில் அந்த வருடத்து மொத்த சந்தோசத்தையும் சுமந்து வரும் சித்திரை.
மதுரை, சினிமாவைதவிர எந்த ஒரு பொழுது போக்கு அம்சமும் இல்லாத என் பள்ளி பருவகால மதுரை.அந்த மதுரையின் கொண்டாட்டமான எட்டு நாள்களை சுமந்துவரும் மாதம் அது.400 வருட பழமையான வரலாற்று (வரலாறு எனக்கு தெரியாதுபா..)சிறப்பு மிக்க சித்திரை திருவிழா,தமிழ் புத்தாண்டு,தமுக்கம் மைதானத்து பொருட்காச்சி, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்சி என்று மதுரையே கலைகட்டி இருக்கும்.
என்னை இந்த நாட்களில் பிடிக்கமுடியாது.கோடை விடுமுறையின் முதல் வாரம் குற்றால ஸ்பரிசம்.அதை தொடர்ந்து சித்திரை எட்டு நாள் திருவிழா. அந்த எட்டு நாளும் மணசு ரெக்கைகட்டி பறக்கும்.நண்பர்கள் கேட்பார்கள் டேய்...நீ முஸ்லீம் பையன் நீ ஏண்டா எங்ககூட வர்ர?? இதெல்லாம் உங்க வீட்டுல தெரிஞ்சா அடி பின்னபோரங்கடா-னு.அம்மா,அத்தா(அப்பா)கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுதான் வர்றேன்டானு சொல்லுவேன்...அந்த சந்தோசங்களை யாருமே பறிக்கலா முழுசா அனுபவிச்சேன். அம்மா சில கன்டிஷன் போட்டு புது சட்டையும் போட்டு அனுப்பி வைப்பாங்க ஆனால் பொருட்காச்சிக்கு மட்டும் அவங்க கூடத்தான் போகணும் (தொலைந்து போயிருவேனாம் )அப்போதானே இஷ்ட்டபட்டத வாங்க முடியும்.அந்த நாட்கள் இன்னும் மனசவிட்டு போகல.
இன்று தமிழ் புத்தாண்டையும் மத்திபுட்டாங்க.வைகைல தண்ணியும் இல்லாம பண்ணிடாக.அந்த நியாபகங்களை சுமந்துகொண்டு சிறகொடிந்த சிட்டு குருவியாய் நானும் இங்கே....(அப்பாடா ஒருவழியா தலைப்புக்கு லிங்க் குடுத்தாச்சு) இன்ஷா அல்லா எனக்கும் சேர்த்து மாப்பி வசந்து நல்லா கொண்டாடிட்டு வருவான்.வந்து ஒரு பதிவு போட்டு வெறுப்பேத்துவான்.
நீங்கலாம் எப்டிதான் பெரிய பெரிய கட்டுரைலாம் எழுதுறீங்களோ???கட்டுரை சரி இல்லனா யாரும் என் கனவுக்குள்ள ஆள் அடியாள் அனுப்பதிங்க இங்கேயே... குனியவச்சு நல்லா குமுறலாம் அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு....ஆமா.















