
இதோ மலரொன்று கண்ணீர் விடுகிறது ,
இல்லை இது அதிகாலை பனித்துளி இல்லை.,
தன் வெகுநாள் தேக்கிவைத்திருக்கும்
மழையின் நியபகதுளிகள் .,
இல்லை இது அதிகாலை பனித்துளி இல்லை.,
தன் வெகுநாள் தேக்கிவைத்திருக்கும்
மழையின் நியபகதுளிகள் .,
துளிகள் இதழ் வழி கசிய -ஒரு
மொட்டின் முகம் விழுந்து
கண்விழிக்கிறது மொட்டு.,
மலரின் மௌனகதறல்
காற்றை கிழிக்கிறது.
மழையை எதிர் பார்க்காவிட்டாலும்-சிறு
சாராலுக்காய் காத்திருந்தது...
மழையின் தோழன் என்று -வண்டு
வந்து தேன் குடித்து இதழ்களை
காயப்படுத்தி பறந்து போனது...
ரத்த சருகாய் -மலர்
மண்ணில் விதையாய் விழுந்தது...
9 comments:
விதையாய் விழுந்த மலர் பல நூறு மலர்களை தோற்று விக்கும். சற்று சோகமுடன் , வந்த கவிதை சுவைத்தேன் .....நிலாமதி
//விதையாய் விழுந்த மலர் பல நூறு மலர்களை தோற்று விக்கும். சற்று சோகமுடன் , வந்த கவிதை சுவைத்தேன் .....நிலாமதி//
நன்றி நிலா தோழி .....
//துளிகள் இதழ் வழி கசிய -ஒரு
மொட்டின் முகம் விழுந்து
கண்விழிக்கிறது மொட்டு.,
மலரின் மௌனகதறல்
காற்றை கிழிக்கிறது.//
மிகவும் அருமையான வரிகள் நண்பா... மிகவும் ரசித்துப்படித்தேன்...
தொடருங்கள்....வாழ்த்துக்கள்...
க. பாலாஜி said...
//மிகவும் அருமையான வரிகள் நண்பா... மிகவும் ரசித்துப்படித்தேன்...//
ரசித்து படித்ததிற்கு நன்றி நண்பரே...
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
கவிதை அருமை
////வண்டு
வந்து தேன் குடித்து இதழ்களை
காயப்படுத்தி பறந்து போனது...//
ரசித்த வரிகள்....
வாழ்த்துக்கள் நண்பா... தொடருங்கள்....
//வானம்பாடிகள் said...
கவிதை அருமை//
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி வானம்பாடிகள்....
//சப்ராஸ் அபூ பக்கர் said...
ரசித்த வரிகள்....
வாழ்த்துக்கள் நண்பா... தொடருங்கள்....//
நன்றி அபூ ...
தொடர்ந்து உற்சாகம் தருவதற்கு.....
//மழையின் தோழன் என்று -வண்டு
வந்து தேன் குடித்து இதழ்களை
காயப்படுத்தி பறந்து போனது...//
அருமையான வரிகள். பாராட்டுக்கள்
Post a Comment