Friday, December 11, 2009

ஒப்பனைகாரன்...


செத்த முடிகளை சேகரித்து
சிகைகொரு வகையாய் சேர்த்து தைத்து
சிரத்தில் சிக்கென பொருத்தி
சின்ன வயசு கிழவரையும்
சிறப்பாய் காட்டி விடுகிறான்...

செத்த முடிகள் போக
மத்த முடிகளும்
சீக்கிரம் செத்துவிட சொல்லி
டை(சாவ)அடிக்கிறான்...

சுருட்டை முடிகளையேல்லாம்
சுருட்டி இழுத்து
சுண்ணாம்பு தடவி-கொஞ்சம்
சூடு போட்டு மீண்டும்
சுருட்டி விடுகிறான்...

முகத்திற்கு மாவு போட்டு
மூச்சுக்கும் பூட்டு போட்டு
முடிந்தவரை ரேட்டு போட்டு
முக்கால் மூஞ்சியை கூட
முழு மூஞ்சிஆக்கி விடுகிறான்...

முக்கிய பிரமுகர்களின்
மொத்த குடுமியும் அடிக்கடி

மாட்டிகொள்வது
இவன் கை பிடியில் தான்...

5 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

செம்ம...

க.பாலாசி said...

//முகத்திற்கு மாவு போட்டு
மூச்சுக்கும் பூட்டு போட்டு
முடிந்தவரை ரேட்டு போட்டு
முக்கால் மூஞ்சியை கூட
முழு மூஞ்சிஆக்கி விடுகிறான்...//

ஆமாம்...ஆமாம்....

//மாட்டிகொள்வது
இவன் கை பிடியில் தான்..//

உண்மை நண்பா....

நல்ல கவிதை....

சீமான்கனி said...

//பிரியமுடன்...வசந்த் said...
செம்ம...//
இவ்ளவு வேலைகுக்கு நடுவே என்னையும் வசித்து வாழ்த்துவதற்கு மிக்க நன்றி வசந்த்...


///க.பாலாசி said...
//முகத்திற்கு மாவு போட்டு
மூச்சுக்கும் பூட்டு போட்டு
முடிந்தவரை ரேட்டு போட்டு
முக்கால் மூஞ்சியை கூட
முழு மூஞ்சிஆக்கி விடுகிறான்...//

ஆமாம்...ஆமாம்....//
என்ன பாலாசி நிறைய அனுபவ பட்டதுபோல் தெரிகிறது...


//மாட்டிகொள்வது
இவன் கை பிடியில் தான்..//

உண்மை நண்பா....

நல்ல கவிதை....

நெஜமாவா???

உங்கள் வாழ்த்துக்கு நன்றி ...பாலாசி

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல கவிதை....
வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

//நினைவுகளுடன் -நிகே- said...
நல்ல கவிதை....
வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி...நிகே.
தொடர்வோம் நட்போடு...

Related Posts with Thumbnails