Wednesday, December 16, 2009
களவு போன கன்னிக்கவிதை...
எனக்கே எனக்காய் எழுதிய கவிதை;
என் உயிர் தொட்ட அழகு கவிதை;
என்னை உயிர் தொட அனுமதித்த கவிதை;
ஏழு ஜென்மமும் இணைந்தே இருப்பேன் என்று,
எழுதி தந்த கவிதை.
காலம் காலமாய் என்
கனவுகள் சுமந்த கவிதை;
கனவில் புகுந்து,
காதல் சொன்ன கவிதை;
காதலின் கற்ப்பை கடைசிவரை,
காப்பாற்றிய கவிதை;
காதல் கலவர படும் பொது,
கரம் பற்றி காத்த கவிதை;
காற்றில் கலந்து,
சுவாச பையில் சுகந்தமாய்
சுற்றி திரிந்த கவிதை.
காணவில்லை...
காவு கொடுத்து விட்டோமோ என்ற கவலை...
கனவில் எழுதினால்
களைந்து விடும் என்றுதானே ஒவ்வொரு
அணுவிலும் எழுதி வைத்தேன்...
காமன் வந்து கடத்தி இருப்பானோ??இல்லை,
காதல் கதறினால் கவலை கொள்வானே அவன்.
கடவுள் கடத்தி இருப்பானோ??இல்லை,
கவிதை கண்டு கொடுத்தவனே அவன்தானே.
கலவர படுகிறதேன் காதல்...
கற்ப்பனை குதிரை ஏறி,
கடிவாளம் பிடித்து,
கனவுகளை கூட்டிக்கொண்டு,
காற்றில் விரைந்து போகிறேன்;
காணவில்லை.
கால்தடம் இல்லா
கடல் தீவெல்லாம்
கலைத்து தேடுகிறேன்
காணவில்லை...
பூமியில் புதையலாய்
புதைந்திருப்பாய் என்று;
பூமி பிழந்தும்- பிரபஞ்சம் அலைந்தும்
பார்கிறேன் காணவில்லை...
காதல் தேவனின்
காலை பிடித்து
கதறி கேட்டேன்;
கடைசியாய் கையில் வைத்திருந்த
காட்சி பேழையில் காட்டினான் காட்சிகள்...
கல்யாணம் என்ற
கள்வன் களவாடி
கணிசமான தொகைக்கு
கை மாற்றி விடுகிறான்.
கண்டதும் கலவரமாகி;
கள்வனை தேடி காணவில்லை;
கவிதை வங்கியவனை கண்டேன்-அவன்
கணவன் என்று சொந்தம் சொல்லி போனான்;
களவு போன கவிதை அவளை,
கண்டும் கரம் பற்ற முடியவில்லை.
காலம் பல கடந்தன...
காற்று வாங்குவது போல்
கவிதை அவளை கண்டுவர
கடந்து போனேன்...
நீ மலட்டு கவிதை -என
சில கிழட்டு கவிதைகள் கேலிபேச
கன்னி கவிதை நீ;
கண்ணிர் உடுத்தி
கரைந்திருந்தாய்...
இன்னும் கவிதைகளுக்கு இங்கே...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தலைப்பே ஒரு கவிதை மச்சான்...
//கல்யாணம் என்ற
கள்வன் களவாடி
கணிசமான தொகைக்கு
கை மாற்றி விடுகிறான்.//
நல்லாயிருக்கு...
//கால்தடம் இல்லா
கடல் தீவெல்லாம்
கலைத்து தேடுகிறேன்
காணவில்லை...//
மாப்பு ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கப்பா...
தொடர்ச்சியா இது போல சிறப்பா எழுத வாழ்த்துக்கள்...
சிவன். said...
//தலைப்பே ஒரு கவிதை மச்சான்...
//கல்யாணம் என்ற
கள்வன் களவாடி
கணிசமான தொகைக்கு
கை மாற்றி விடுகிறான்.//
நல்லாயிருக்கு...//
வருகைக்கும் கருத்துக்கும்... நன்றி மச்சான்...
பிரியமுடன்...வசந்த் said...
//கால்தடம் இல்லா
கடல் தீவெல்லாம்
கலைத்து தேடுகிறேன்
காணவில்லை...//
மாப்பு ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கப்பா...
தொடர்ச்சியா இது போல சிறப்பா எழுத வாழ்த்துக்கள்...
வாங்க மாப்ஸ்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாப்ஸ்....உங்க(உன்) தயவோடு...
கனவில் எழுதினால்
களைந்து விடும் என்றுதானே ஒவ்வொரு
அணுவிலும் எழுதி வைத்தேன்...
மிக சிறப்பான வரிகள்...
கவிதை நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்..
கமலேஷ் said...
//கனவில் எழுதினால்
களைந்து விடும் என்றுதானே ஒவ்வொரு
அணுவிலும் எழுதி வைத்தேன்...//
மிக சிறப்பான வரிகள்...
கவிதை நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்..//
உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ்...தொடர்ந்து வருக...
Post a Comment