என்னடா இவன் புதுவருஷம் வரபோகுது சோகமான தலைப்பு போட்டு இருக்கானேன்னு பார்க்க வேண்டாம்...இன்னும் ஆறு நாள் தான் இருக்கு அப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு (ஆமா யாருக்கும் தெரியாதத சொல்லிடியாக்கும்...)
அனால் இந்த தலைப்பு உள்மனசின் சோகம் கூட சொல்றமாதிரி இல்ல???(ஆமா...ஆமா..)இந்த வருடம் முடிய இன்னும் ஆறு நாள் தான் இருக்கு அனால் இங்க அந்த அறிகுறியே தெரியல...நம்ம ஊர்ல இருந்தா இப்போ இருந்தே ஆரமபிசுருபோம் நம்ம அழிசாடியத்தை.
அதெல்லாம் மிஸ் பண்றதால என் மறக்க முடியாத நியூ இயர் அனுபவம் சொல்ல ஆசை படுறேன்.(ஏன்டா படுத்துற சொல்லு...)
மூணு வருசத்துக்கு முன்னாடி நியூ இயர் டே...
வீட்டுல எல்லோரும் சேர்ந்து வெளிய போகலாம் முடிவு ,பீச் நிறைவாட்டி போயாச்சு வேற ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கணும்...அந்த பொறுப்பு எப்பவும் எனக்குத்தான்...நான் ரெம்ப யோசிச்சு கண்டு புடிச்ச இடம்தான் கிண்டி சிறுவர் பூங்கா...(என்னவோ நீயே கண்டுபிடுச்சமாதிரி சொல்லற...மேட்டருக்கு வா..)எனக்கு குழந்தைகளை ரசிக்க பிடிக்கும்(அது இல்ல உன் சொந்தகாரவங்க பாதி அங்கதான இருக்காங்க ) சோ என்னோட சாயிஸ் எப்பவுமே அதான்...
கூடவே மேல் வீட்டு அக்காவும் வர்றேன்னு சொன்னாங்க அவங்கதான் புஜ்ஜியோட அம்மா (புஜ்ஜி யாருன்னு தெரியணும்னா என்னோட இந்த பதிவ படிச்சு பாருங்க...)அம்மா,அக்கா,புஜ்ஜி குட்டி, (நான் அவளை தூக்கி கொண்டேன்),அவங்க அம்மா,அவங்க முத்த பொண்ணு கோபிகா அவளுக்கு அப்போ 2 /12 வயசு. டீம் ஹெட் நான் எல்லோரும் கெளம்பிட்டோம்.
அங்க போய் எல்லோரு சேர்ந்து ஒரு சின்ன விளையாட்டு போட்டி நடத்துனோம்.அதுல எந்த சுவாரஸ்யமும் இல்ல.அங்க வந்த மூணு குட்டி பசங்க இல்ல புட்டி பசங்க!!! ஆம் அரை போதையில் மூவரும் நியூ இயர் விஷ் பன்றேன்ற பேர்ல பெண்களை கிண்டல் பண்றதும் அவர்கள் அருகில் போய் ''ஹாய் மாமாக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லு....''னு சொல்லி தொல்லை குடுத்துட்டு இருந்தாங்க.இப்படி ஒரு பொது இடத்தில நகரீனம் இல்லாம நடந்த்துகிட்டது அனைவரையும் முகம் சுளிக்க செய்தது. அதை எதிர்த்து கேட்ட ஒருத்தருக்கும் அந்த பசங்களுக்கும் பெரிய சண்டையே வந்துருச்சு.எல்லோரும் அதையே வேடிக்கை பாத்துட்டு இருந்தோம்.திடீர்னு புஜ்ஜி அம்மா கோபிகா எங்கனு கேட்க எல்லோரும் அக்கம் பக்கம் பார்க்க கோபிகாவை காணோம்....
அனைவரும் பதறி போய் ஆளுக்கொரு திசையாய் தெறித்து ஓடினோம்.புஜ்ஜி அம்மா அழுது கொண்டே தேடுறாங்க. நான் பூஜ்ஜிய தூக்கிட்டு தேடுறேன்.எந்த ஒரு குட்டி பொண்ண பார்த்தாலும் அது கோபிகா மாதிரியே தெரிது.ரெம்ப நேரமா கிடைக்கவே இல்லை.அங்க இருந்தா எல்லோரிடமு விசாரிச்சு பாக்குறோம் ம்ம்கும்...
அங்க இருக்குற அலுவலகத்தில் புகார் கொடுத்து அவங்களும் தேடுறாங்க.நான் ஒரு ரவுண்ட் அடிச்சு மீண்டும் நாங்க அமர்ந்த இடத்துக்கே திரும்பினேன்.யாரோ ஒரு ஆள் ஒரு குட்டி பொண்ணுக்கு ஐஸ்க்ரீம் குடுக்குறான் அவ வாங்காம அழுதுட்டே இருக்கா.அது கோபியோனு சந்தேகத்துல கிட்ட போய் பார்த்தா அவளேதான்.கோபின்னு கூப்பிட்டதும் ஓடிவந்து என் கால்களை கட்டி பிடிசுகிட்டா. அப்பாடா... அப்போதான் உயிரே வந்துச்சு.''என்ன விட்டது எங்க போன ...''மழலையில் கேட்க நான் அவளை கட்டி கொண்டேன்.அந்த ஆள் எங்கனு பார்த்தா அவன் மாயம்...நல்லவேளை இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டேன்.
பின் மற்றவர்களுக்காய் காத்திருந்து யாரும் அங்கு வரவில்லை மீண்டும் அலுவலகம் போய் எல்லோரும் ஒன்று சேர்ந்தோம். அப்போது அந்த ஆள் பற்றி யாரிடமும் சொல்லவில்லை மேலும் பயந்து விடுவார்கள் அல்லவா?இன்னும் யாருக்கும் தெரியாது...
இப்படி அந்த வரும் பரபரப்பாய் வந்த வருடம். இப்போ அந்த நியபகங்களோடு இதோ எந்த ஆரவாரமும் இல்லாமல் இன்னொரு வருடம் வரவேற்க தயாராய்...
3 comments:
அவிங்கள சும்மாவா விட்ட மாப்ஸ் சே நம்மூர்க்காரன்னு உன்னைய சொல்ல வெட்கமா இருக்கு ரெண்டு இழுப்பு இழுத்துருக்கலாம் அவிய்ங்கள....
வரலின்னு கோச்சுகிடாத மாப்ஸ் ஓவர் வொர்க் லோட் அதான் முடில இனி மிஸ் பண்ண மாட்டேண்டா....
பிரியமுடன்...வசந்த் said...
//அவிங்கள சும்மாவா விட்ட மாப்ஸ் சே நம்மூர்க்காரன்னு உன்னைய சொல்ல வெட்கமா இருக்கு ரெண்டு இழுப்பு இழுத்துருக்கலாம் அவிய்ங்கள....//
வா மாப்ஸ்...நலமா???
அட அந்த வேகம் இல்லாம இருக்குமா....நம்ம கிட்ட மாட்டுறதுக்கு முன்னாடியே யாரோ நம்ம ஊர் சிங்கம் அவிகல கடிச்சுருச்சு மாப்ஸ்...அதுவும் இல்லாம, என் கூட இருந்த அனைவரும் பெண்கள்...அதையும் ஒசிக்கணுல....
பிரியமுடன்...வசந்த் said...
வரலின்னு கோச்சுகிடாத மாப்ஸ் ஓவர் வொர்க் லோட் அதான் முடில இனி மிஸ் பண்ண மாட்டேண்டா....
அட என்ன மாப்ஸ் நமக்குள்ள என்ன இருக்கு.
நீ எப்டியும் படிப்பனு தெரியும் இனி நீ மிஸ் பண்ணாலும் நான் உனக்கு மெயில் பண்ணறேன் ஓகே வா...
பாம்பின் கால் பாம்பறியும்....
Post a Comment