Sunday, January 3, 2010

எவனோ சூனியம் வச்சுட்டாகே...

பாலாவும் நானும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். எங்கு  போனாலும் என்ன செய்தாலும் ஒன்னாதான் இருப்போம்.  எங்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இரட்டை பிள்ளைகள் என்றுதான் கூப்டுவாங்க. அதற்க்கு ஏத்த   மாதிரி உருவ ஒற்றுமையும் இருக்கும்.காலைல சண்ட போடுவோம் சாயங்காலம் ஒன்னா ஊர் சுத்துவோம். கோடை விடுமுறைக்கு அவங்க ஊருக்கு நானும் கூட போவேன், அவங்க வீட்டுல நானும் ஒரு பிள்ளை.

ஒருநாள் எங்க வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல ஒரு சின்ன ஓடை இருக்கும் கொஞ்சம் ஆழமாதான் இருக்கும்.அங்கு போனோம் எனக்கு நீச்சல் தெரியாது அவனுக்கு தெரியும்.நான் வேடிக்கை பார்த்து கால் நனைப்பதோடுசரி.

அவன் என்னையும் தண்ணிக்குள் அழைத்தான் ''எனக்கு பயமா இருக்குடா நான் வரல ''என்றேன்.''டேய்...ஒண்ணுமே இல்லடா  நான் இருக்கேன்ல'' என்றான். ''இல்லடா எங்க அப்பாக்கு தெரிஞ்சா என்னைய  கொண்டே போடுவாருடா நான் வரலை''.
''டேய் ஒன்னும் ஆகாது நான் பாத்துக்குறேன்  வா'' என்றான். ''ம்ம்ம்ம்...தெரியும்டா  அடிக்குறத நல்லா வேடிக்கை பார்ப்ப''. ''என்னடா இவ்ளோ பயந்தாகொலியா  இருக்க'' ஆஹா நம்மள  பயந்தாகொளினு சொல்லிட்டானே...  அப்படின்னு எனக்குள்ள இருந்த சிங்கம் என்னைய தண்ணில தள்ளி விட்டுருச்சு.உள்ள போய் கொஞ்சம் தண்ணிய குடிச்சு இரும்பிகிட்டே வெளிய வந்தேன் தோள் கொடுத்தான் தோழன். அடடா அப்போதான் சட்டை, பேன்ட்  எதையுமே கழட்டாம குதுசிடேன்னு தெரிஞ்சது. உள்ள இருந்த சிங்கத்த ஆளவே காணோம். ஒரு கொரங்கு வந்து கி..கி..கி...னு சிரிச்சுட்டு ''மகனே உனக்கு இன்னிக்கு   பொறந்தநாள் கொண்டாட போராங்காடி....''

அவ்வ்வ்வ்...நிஜமாவே அன்னிக்கு எனக்கு  பொறந்தநாள் புது சட்டை போச்சு (சட்டை மட்டும்தான் புதுசு.)நான் செத்தேன்.வேகமா கரைக்கு போய் சுத்தி முத்தி யாரும்  பொம்பள புள்ளைங்க வருதான்னு பாத்துட்டு  சட்டையும் பேன்டையும் கழட்டி ஒரு பாறைல காயவசேன்.அவன் ஆனந்தமா குளிச்சுட்டு வந்தான்.நல்ல வெயில் கொஞ்ச நேரத்துல மூனும்  நல்லா   காஞ்சுருச்சு.(என்னையும் சேர்த்து)...அப்பாடா தப்பிச்சேன்டானு ரெண்டையும் மாட்டிகிட்டு கெளம்புனோம்.

வீடு வந்தாச்சு அப்பா ரெடியா இருக்காரு.?? ஆமாங்க அதேதான் எந்த சொறி புடிச்வனோ சூனியம் வச்சுட்டு எக்ஸ்ட்ரா ரெண்டு எழுமிச்சம் பழத்த  புளிஞ்சு விட்டுட்டு எங்கள போட்டு குடுத்துட்டு போயிருக்கான்.அப்பா என் முடிய பிடிச்சு இழுத்து அடி பின்னி எடுக்குறாரு...நண்பன் சொன்ன சொல்லை கரெக்ட்டா காபாதிட்டான்  கிரிகெட்  மேச் பாக்குற மாதிரி கடைசி பால் வரைக்கும் சேனல மாத்தாம நின்னு பாக்குறான்.

அப்பாவோட அடுத்த எய்ம் பாலா.அவன் கிட்ட போனாரு அப்போதான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருதுச்சு. அவன் கண்ணுல ஒரு பயம் தெரிஞ்சது.''இவன் கூட செந்தா நீயும்  கெட்டு குட்டி செவுரா போயிருவ... போடா  உங்க வீட்டுக்கு'' என்றார். அவன் ஓடி போய்ட்டான்.ஆஹா பயவுள்ள எஸ்கேப் ஆய்ட்டானே.அப்பா அவரோட செகேண்டு  இன்னிங்க்ஸ்  ஆரம்பிச்சுடாரு...

கொஞ்ச நேரத்துல பாலா அம்மா,அப்பா ரெண்டு பெரும் வந்தாங்க.தப்பிச்சுட்டோம்னு நெனச்சேன்.ரெண்டு பெரும் சண்டை போடுறாங்க.''என் புள்ளைய எப்படி நீங்க கெட்டவன்னு சொல்லலாம்...'' இது பாலா அம்மா.''என் புள்ளைய நீங்க எப்படி அடிக்கலாம்...'' இது பாலா அப்பா...எனக்கு புல்லரிச்சு போச்சு..ஆனால் அப்றம் தான் தெரிஞ்சது அவங்க பாலாவ பத்தி பேசுறாங்கனு.

பயவுள்ள அங்க போய் உல்ட்டாவா   போட்டு விட்டுட்டான்.ரெண்டு பெரும்  சண்டை போட்டு போய்ட்டாங்க.உள்ளுக்குள்ள இன்னொரு இன்னிங்க்ஸ் ஆடுவாரோனு பயம் நல்லவேளை இல்லை.மேச் முடிச்சுட்டு   போயிட்டாரு. ரெண்டு குடும்பமும் பேசாம கொஞ்ச நாள் இருந்தாங்க.அனால் அன்னிக்கு  சாயங்காலம் டேய் எங்க மாமா அல்லவா வாங்கிட்டு வந்துச்சுடா இந்தா...ஹாப்பி  பர்த்டே டா...னு ஊட்டி விட்டான். ரெண்டு பெரும் பாதி பாதி சாப்டோம்.
     
இதையும் படிங்க பிடிக்கும்...                                                                                                       


                                                      

6 comments:

ஸாதிகா said...

வழக்குத்தமிழில் அப்படியே எழுதி இருக்கீங்களே சீமான் சார்.இது கற்பனைகதையா?இல்லே உங்க மீள் பதிவா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பயவுள்ள அங்க போய் உல்ட்டவா போட்டு விட்டுட்டான்.//

உண்மையச் சொல்லுங்க..., நீங்கதானே அது .. இங்கயும் உல்டாவா எழுதியிருக்கீங்க..,

ப்ரியமுடன் வசந்த் said...

happy birthday seeman...!

சீமான்கனி said...

ஸாதிகா said...
//வழக்குத்தமிழில் அப்படியே எழுதி இருக்கீங்களே சீமான் சார்.இது கற்பனைகதையா?இல்லே உங்க மீள் பதிவா?//

வாங்க ஸாதி(கா)இது கற்பனை இல்லை...ஆறாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம்...சிரிப்புக்காக சில வாக்கியங்களை சேர்த்தேன்...என் மறக்க முடியாத பிறந்தநாள் அதுதான்...உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா...அமாம் அந்த சீமான் சார் யாரு????
SUREஷ் (பழனியிலிருந்து) said...


//உண்மையச் சொல்லுங்க..., நீங்கதானே அது .. இங்கயும் உல்டாவா எழுதியிருக்கீங்க..,//

பிழை திருத்தி விட்டேன்...அனால் எதையும் உல்ட்டாவா எழுதவில்லை...என்னை காப்பாற்ற அப்படி செய்திருப்பானோ ???இருக்கலாம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...சுரேஷ்... அண்ணே..


பிரியமுடன்...வசந்த் said...
//happy birthday seeman...!//

வா மாப்ஸ்...வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி மாப்ஸ்...பதிவு எப்படி இருக்கு மாப்ஸ்....சொல்லவே இல்லையே...

Jaleela Kamal said...

ஹாப்பி பர்த்டே தம்பி,

பரவாயில்லை மலரும் நினைவுகள் இந்த பிலாக் மூலம் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

சீமான்கனி said...

ஆமாம்...கா...வாழ்த்துக்கும் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி அக்கா...

Related Posts with Thumbnails