Monday, March 15, 2010

இது காதல் கடிதம் அல்ல...6(தொடர் க(வி)தை)

(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...
பாகம் 4...
பாகம் 5... இனி...

ஊட்டி தெரியும் ஊட்டிவிடுவது...?? தெரியாதே...


அடுத்த வீட்டு குழந்தைக்கு அவளின்
அம்மா ஊட்டுவதை பார்த்திருக்கிறேன்.


அம்மாவிடமும் அடிக்கடி ஆசையாய்
ஊட்ட சொல்லி உண்டது உண்டு.


என்றோ ஒருநாள் கோபத்தில் கொக்கரித்து
உணவு வெறுத்து உறங்குகையில் - உடன் பிறந்தவள் ஊட்டிவிட உறக்கத்தில் உண்டது...


''அடே..யாருக்குடா கிடைக்கும் இந்த
திருச்செயல் ம்ம்ம்...ஆரம்பி''...
காதல் கட்டளை போட்டது.


இட்டிலியில் ஆவிபறந்தது
இதய கூட்டிளிருந்தும்
பட்டாம் பூச்சியாய் பறந்தது ஆவி.


ஆரியபவன் இட்லி இன்னும்
ஆறவே இல்லை.
தொட்டதும் சுட்டது.


இப்படியே    ஊட்டினாள் இவளின்
இதழ்கள் இம்சைபடுமே???


நீ கத்து கொடுத்த வித்தை நினைவுக்கு வந்தது!!!
பேருந்து குழந்தையை குளிரூட்டினாயே!! -அதே
சூத்திரத்தில் சூடான இட்லி
சுகமான பனித்துளியாய்  மாற்றப்பட்டது.


ஐயோ வேண்டாம் ...!!!அலறினாய்.
''உன்னை விருந்துக்கு சாப்பிட சொல்லவில்லை
மருந்துக்குத்தான்!! தம்பி தாராளமாய் ஊட்டுங்க''
இது ! வெள்ளை தேவதை.
தேவதை அப்போதே அக்கா ஆனது.
ஓ...இதுதான் நாத்தனார் அதிகாரமோ!!!????


அப்பா வந்ததால் ஆபத்து....
வெறுப்பு காட்டுவதாய் நினைத்து கொண்டு
வெட்கம்  மட்டுமே காட்டினாய்.

இதழ் விரலை விழுங்கி கொண்டிருந்தது;
விழி இவனை விழுங்கி கொண்டிருந்தது;

மௌனமாய் மன்றாடினாய்.
காது  கேட்காமல் கதறினாய்.

இருந்தாலும் விறு விறுவென விழுங்கிவிட்டாய்
இரண்டு இட்லி.
பாவம்! பொதும்! காதலுக்கு கருணை வந்தது.
தீர்த்த பருகளோடு தீர்ந்தது திருச்செயல்.


உன்னை மடியில் கிடைத்த மதி  இருந்தது
பயம் காட்டி கொண்டு விதி இருந்தது.


வார்த்தை வர வாய்  இல்லை
விழிகளுக்கும் விரல்களுக்கும்
வாய் முளைத்து கொண்டது..


ஒரு காகிதத்தில் க...வி??!!என்று  எழுதி பத்து இலக்க
கணக்கு போட்டு  கையில் கொடுத்து விடை பெற்றேன்...
காதல் கசிந்தது இருவரின்  கண்களில்...(தொடரும்...)

(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)







 

11 comments:

kamaraj said...

வாழ்வின் ருசியான தருணங்களை ருசிக்கக்கொடுத்த வரிகள்
கவிதைச் சாயம் பூசிக்கொண்டு வந்திருக்கிறது.ரசித்தேன்.

சீமான்கனி said...

kamaraj said...
//வாழ்வின் ருசியான தருணங்களை ருசிக்கக்கொடுத்த வரிகள்
கவிதைச் சாயம் பூசிக்கொண்டு வந்திருக்கிறது.ரசித்தேன்.//

வாங்க காமராஜ் உங்கள் முதல் வருகைக்கும் ரசித்து கருத்து தந்ததிற்கும் நன்றிகள்....இனி இணைந்திருப்போம்...

க.பாலாசி said...

//இருந்தாலும் விறு விறுவென விழுங்கிவிட்டாய்
இரண்டு இட்லி.
பாவம்! பொதும்! காதலுக்கு கருணை வந்தது.
தீர்த்த பருகளோடு தீர்ந்தது திருச்செயல்.//

நல்லாருக்குங்க கவிதை... அப்டி ஒன்னும் நீளமா இல்லையே...

ஸாதிகா said...

///வார்த்தை வர வாய் இல்லை
விழிகளுக்கும் விரல்களுக்கும்
வாய் முளைத்து கொண்டது/// கவிதை களைக்கட்டுது.

தமிழ் உதயம் said...

வெறுப்பு காட்டுவதாய் நினைத்து கொண்டு
வெட்கம் மட்டுமே காட்டினாய்.

காதலை காதலுடன் சொன்ன வரிகள்


தொடர் கவிதை என்ற போதும், தொடர்ந்து படிக்கிறேன்.

சுசி said...

//வார்த்தை வர வாய் இல்லை
விழிகளுக்கும் விரல்களுக்கும்
வாய் முளைத்து கொண்டது//

அருமைங்க.. ரொம்ப நல்லாருக்கு கடிதம்.

சீமான்கனி said...

க.பாலாசி said...
//நல்லாருக்குங்க கவிதை... அப்டி ஒன்னும் நீளமா இல்லையே...//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாசி...

ஸாதிகா said...
///வார்த்தை வர வாய் இல்லை
விழிகளுக்கும் விரல்களுக்கும்
வாய் முளைத்து கொண்டது///

//கவிதை களைக்கட்டுது.//


உங்கள் தொடர் ஆதரவிற்கும், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸாதி(கா )...

தமிழ் உதயம் said...


//வெறுப்பு காட்டுவதாய் நினைத்து கொண்டு
வெட்கம் மட்டுமே காட்டினாய்.

காதலை காதலுடன் சொன்ன வரிகள்


தொடர் கவிதை என்ற போதும், தொடர்ந்து படிக்கிறேன்.//


தொடர்ந்து வந்து உற்சாகம் தருவதற்கு நன்றி...ரமேஷ்...

சுசி said...
//வார்த்தை வர வாய் இல்லை
விழிகளுக்கும் விரல்களுக்கும்
வாய் முளைத்து கொண்டது//

//அருமைங்க.. ரொம்ப நல்லாருக்கு கடிதம்.//

ஐ..சுசி வாங்க..
உங்கள் ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி..

Priya said...

ரசித்து படித்தேன், அழகான வார்த்தைகள்!

சீமான்கனி said...

Priya said...
//ரசித்து படித்தேன், அழகான வார்த்தைகள்!//

மறக்காமல் படித்து கருத்து தந்ததிற்கு..நன்றி பிரியா...

vidivelli said...

ரசித்தேன் அத்தனையும் சுப்பர்

சீமான்கனி said...

நன்றி விடிவெள்ளி...உங்கள் கருத்துகள் என்னை மேலும் உற்சாகமுட்டுகிறது..

Related Posts with Thumbnails