Monday, March 1, 2010

தேநீர் தேவதை...


நீ தேநீர் கோப்பையோடு அடிக்கடி என் முன்
தோன்றும் போதுதான்
நிலவில் கரை படிந்ததின்
காரணம் விளங்குகிறது.

தேநீர் கோப்பை உன் மீது புகார் வாசிக்கிறது
நீ குடித்து வைத்ததும் பெரிய  சர்க்கரை கட்டி என்று
எறும்புகளால் கடத்த படுகிறதாம்.

நீ தேநீர் குடிப்பதாய் சொல்லிவிட்டு
கோப்பையின் விளிம்பில்
கவிதை ஒன்றை பதித்து விட்டு போகிறாய்.
''இது தேவதை குடித்த தேநீர்  கோப்பை'' என்று.

நீ குடித்து மீதியை உன் வீட்டு
நாய் குட்டிக்கு பகிர்ந்தாய்
அது இன்று வரை தேநீர் தீவிரவாதியாய்
கோப்பைகுள்ளே குடிஇருக்கு. 

நீ குடித்த தேநீர்
கழிவுகள் உற்றி வளர்ந்த
காகித பூச்செடி
காதல் பூச்செடியாய் மாறி போனதாம்.





19 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காதல் என்பது பொது உடமை..,

ஸாதிகா said...

தேநீர் செடியாய் மாறிய விந்தையை கவிதையை வடித்து இருக்கும் சீமான்கனிக்கு வாழ்த்துக்கள்!இந்த முறை கவிதை "நச்" என்று உள்ளது!

சீமான்கனி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//காதல் என்பது பொது உடமை..,//

வாங்க அண்ணே... அட...பார்ரா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ஸாதிகா said...
//தேநீர் செடியாய் மாறிய விந்தையை கவிதையை வடித்து இருக்கும் சீமான்கனிக்கு வாழ்த்துக்கள்!இந்த முறை கவிதை "நச்" என்று உள்ளது!//

வாங்க ஸாதி(கா)...
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

sarvan said...

காதல் நிரம்பி வழிகிறது!

அன்புடன் நான் said...

உங்க தேனீர் அருந்தினேன்... மிக போதை...
வாழ்த்துக்கள்.

Unknown said...

அடடடடா.. தேநீர் குடிக்கும் தேவதையா..

பொருத்தமா படங்களும் சூப்பரா இருக்கு.

எறும்பு சூப்பர்.

Priya said...

மிகவும் ரசித்துப் ப‌டித்தேன்... படங்களும் மிக பொருத்தமாக இருக்கிறது!
வாழ்த்துக்கள்!!!

தமிழ் உதயம் said...

புகார் வசிக்கிறது

புகார் வாசிக்கிறதுன்னு இருக்கணும்மா

SUMAZLA/சுமஜ்லா said...

//அது இன்று வரை தேநீர் தீவிரவாதியாய்
கோப்பைகுள்ளே குடிஇருக்கு.// ஹாஹ்ஹஹ்ஹா வரிகள்!

சீமான்கனி said...

sarvan said...
//காதல் நிரம்பி வழிகிறது!//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணா..தொடர்வோம்...

சி. கருணாகரசு said...
//உங்க தேனீர் அருந்தினேன்... மிக போதை...
வாழ்த்துக்கள்.//

வாங்க கருணாகரசு உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி தொடர்வோம்...

susi said...
//அடடடடா.. தேநீர் குடிக்கும் தேவதையா..

பொருத்தமா படங்களும் சூப்பரா இருக்கு.

எறும்பு சூப்பர்.//

ஐ...சுசி வந்தாச்சு...வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Priya said...
//மிகவும் ரசித்துப் ப‌டித்தேன்... படங்களும் மிக பொருத்தமாக இருக்கிறது!
வாழ்த்துக்கள்!!!//

வாங்க பிரியா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

தமிழ் உதயம் said...
//புகார் வசிக்கிறது

புகார் வாசிக்கிறதுன்னு இருக்கணும்மா//

திருத்தி விட்டேன்...நன்றி ரமேஷ்...

SUMAZLA/சுமஜ்லா said...
//அது இன்று வரை தேநீர் தீவிரவாதியாய்
கோப்பைகுள்ளே குடிஇருக்கு.//

//ஹாஹ்ஹஹ்ஹா வரிகள்!//

வாங்க அக்கா நலமா??
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்பி இன்னும் செதுக்கிருந்தா ரொம்ப ரசனையா இருந்திருக்கும்....தேநீர் சுவை திடம் உண்டு மணம் எங்கே?

சரி வுடு அடுத்தவாட்டி பாத்துகிடலாம்...!

சீமான்கனி said...

பிரியமுடன்...வசந்த் said...
//மாப்பி இன்னும் செதுக்கிருந்தா ரொம்ப ரசனையா இருந்திருக்கும்....தேநீர் சுவை திடம் உண்டு மணம் எங்கே?

சரி வுடு அடுத்தவாட்டி பாத்துகிடலாம்...!//

சரி...

இதையும் அப்டித்தான் எழுத நெனச்சேன் மாப்பி...
ஆனால் எல்லோரும் நீளம் அதிகம்னு சொல்லிடங்க அதான் இப்டி...
இரண்டாம் பகுதி எப்படி மாப்ளே சொல்லவே இல்லையே???

vidivelli said...

நல்ல கற்பனை நிறைந்த வரிகள்........
பிரமாதமுங்க........
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

DREAMER said...

தேநீர் அருமை...

-
DREAMER

சீமான்கனி said...

vidivelli said...
//நல்ல கற்பனை நிறைந்த வரிகள்........
பிரமாதமுங்க........
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு//

முதல் முறையா வருகை தந்திருக்கும் விடிவெள்ளி அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....இனி இனைந்திருபோம்...

DREAMER said...
//தேநீர் அருமை...//

முதல் முறையா வருகை தந்திருக்கும் DREAMER அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....இனி இனைந்திருபோம்...

Jaleela Kamal said...

தேநீர் செடியாய் மாறியது

இதை பார்த்ததும் என் மாமியார் டீயிலை வடிகட்டிய கப்பிய மருதாணி செடிக்கு ஊற்றுவார்கள் நல்ல வளரும். அந்த ஞாபகம் வந்துவிட்டது

சீமான்கனி said...

Jaleela said...
//தேநீர் செடியாய் மாறியது

இதை பார்த்ததும் என் மாமியார் டீயிலை வடிகட்டிய கப்பிய மருதாணி செடிக்கு ஊற்றுவார்கள் நல்ல வளரும். அந்த ஞாபகம் வந்துவிட்டது//

வாங்க அக்கா...மறக்காமல் வந்து மாமியார் மேல் இருக்கும் ஞாபக காதலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

நட்புடன் ஜமால் said...

காகிதம் காதலாக

ஆஹா! காதல் காதல்

சீமான்கனி said...

ஐ...ஜமால் அண்ணா வந்தாச்சு...
நன்றி ஜமால் அண்ணே...
வருகைக்கும் கருத்துக்கும்...

Related Posts with Thumbnails