Monday, June 14, 2010

அன்பு மகன் தமிழுக்கு அப்பா எழுதுவது...(ஒரு பக்க கதை)


என் பெயர் தமிழ் வாணன்.அப்பாதான் ஆசையா வச்சாராம் அம்மா சொல்லுவாங்க. இப்போ அவரே இல்ல...சமீபத்தில்  காலமாயிட்டார்.  அவரு சும்மா போகல எனக்கும் உங்களுக்கும் ஒரு பாடம் சொல்லீட்டு போய்ட்டார்....


அது மரண ஓலம் அடங்கி இருந்த   வீடு...கிராமம் என்பதால் நிறைய சொந்தங்களும் அறிந்தவரும் அறியாதவரும் கூட வந்து எனக்கு ஆறுதல்கூறி  சென்றார்கள்.என் மனைவிக்கு, நெருங்கிய சொந்தங்களைகூட தெரியவில்லை,அடிக்கடி வந்து இவர் யார் அவர் யார் என்று கேட்டுகொண்டே இருக்கிறாள்.அவளுக்கு மாமனார் இறந்ததை விட இது பெரிய கவலை.பிள்ளைகள் இருவரும் ஒரு மூளையில்; தாத்தா இறந்து விட்டார் என்பதை தவிர அங்கு நடப்பதையும் அங்கு வருபவர்களையும் புதுசா பார்த்து தங்களுக்குள் ஏதோ   பேசிக்கொள்கிறார்கள்.


பிள்ளைகளுக்கு இது கோடை விடுமுறை என்பதால்  ஆகவேண்டிய   காரியங்களை  இருந்து  ஆற அமர செய்யறேன் நான்.மனசுக்கு அது ஒரு ஆறுதல்.என் மனைவிக்கு அதுவே ஒரு பெரிய கவலை மனுஷன் இங்கே டேரா போட்டுருவாரோனு. தூரத்தில்  ஒரு ''பெருசு'' பேசுவது காதில் விழுந்தது.''ஒத்த ஆம்பலபுள்ளைய பெத்துட்டு பெருசு இவ்ளோ காலமா தனி கட்டையவே இருந்து, போயும் சேந்துருச்சு''.....''நல்ல மனுஷன் பா கடைசி காலத்துல பேரன் பேத்திகளோடு இருக்க ஆசை பட்டுச்சு பாவம் அதுக்கு தான் குடுத்து வைக்கல''.எனக்கு மனசுல ஏதோ  சுருக்குனு  குத்துன மாதிரி இருந்துச்சு.!!


 மனைவி அவளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள். வீட்டில் இருந்த பழைய பொருளையெல்லாம் எடுத்து வீசிவிட்டு சுத்தம் செய்ய ஆயத்தமானாள்.அவளோடு நானும். அப்போதுதான் அது கண்ணில் பட்டது.அப்பாவின்   அலமாரியிலிருந்து  ஒரு  சிறிய பார்செல் அதில் அன்பு மகனுக்கு என்று  அவர்கைபட எழுதி  இருந்தது. உள்ளே இருப்பது ஒரு டைரி அல்லது எதாவது முக்கிய ஆவணம்  இருக்க வேண்டும் என்று அவள் சொன்னாள். மற்ற வேலைகளை அப்படியே போட்டு விட்டு அதை இருவரும் ஆர்வமாய் பிரித்தோம்.ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அப்போது எங்களுக்கு தெரியாது.


ஆம் அவள் உகித்ததுபோல அது ஒரு டைரிதான்.ஆனால் அப்பாவுக்கு டைரி எழுத்தும் பழக்கம் இல்லை அப்போ இது எதற்கு?! என்று இன்னும் ஆர்வம் அதிகமானது.முதல் இரண்டு பக்கங்களை புரட்டியதும் சில 500 ரூபாய் நோட்டுகள்.அடுத்தடுத்து  சில பக்கங்கள் விட்டு வரிசையாக 500 ,100  ,50  ரூபாய் நோட்டுகள்.அனைத்தையும் எடுத்து சேர்த்து கொண்டிருந்தாள் அவள்.கடைசி பக்கத்தில் ஏதோ எழுத பட்டிருந்தது.அதை நீங்களே படிங்க என்று அவள் சொன்னாள்.நான் படிக்க ஆரம்பித்தேன் அதில்...


அன்பு மகன் தமிழுக்கு அப்பா எழுதுவது.
நான் நலம் நீ,உன் மனைவி,பிள்ளைகள் நலமா?? 
போன முறை நீ என்னை பார்க்க வந்த பொது நடந்தது உனக்கு நினைவில் இருக்கா தெரிய வில்லை.நீ உன்னோடு வர கட்டாய படுத்தியும் நான் வரமறுதேன்.எனக்கு உங்களோடு இருக்க ஆசைதான் அனால் அந்த நகரத்து சூழ்நிலை எனக்கு ஒத்துவரவில்லை என்பது நீ அறிந்ததே. நான் உன்னிடம் வருடா  வருடம் விடுமுறைக்கு மட்டும்  தவறாமல்  பிள்ளைகளோடு வரச்சொன்னேன்.நீ அதற்க்கு சில  காரணங்கள் சொன்னாய் உனக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்...எனக்கு அது மனசில் ஓடியது...


''இல்லபா! அது ரெம்ப கஷ்ட்டம் பா... பிள்ளைகளுக்கு மட்டும் தான் விடுமுறை எனக்கும் அவளுக்கும் ஆபீசில் லீவு வாங்குவது ரெம்ப கஷ்ட்டம் பா.அப்படி லீவு  கொடுத்தாலும் சம்பளத்தில் பிடித்து கொள்வார்கள்.பிள்ளைகளுக்கு ஸ்கூலையே சாம்மர் கிளாஸ் அது இதுன்னு ஆரம்பத்திலேயே காச கறந்துடுறாங்க. அதுவும் நஷ்ட்டம் தானே பா.இது இல்லாம இங்க வர ரயில் செலவு அந்த செலவு இந்த செலவுன்னு பத்து, பதினஞ்ஜாயிரம் வீனா போகுது.அலைச்சல் வேற.சென்னைக்கு போனதும் காயிச்சல் தலைவலின்னு அது ஒரு செலவு.எவ்வளவுதான் பா நானும் சமாளிக்குறது.முடிஞ்சா அங்க வந்து எங்க கூட இருங்க இல்லனா நான் மட்டும் அப்பப்ப வந்து பாத்துக்குறேன்.அவ்ளோதான் என்னால பண்ணா முடியும்.அப்பா வாயடைத்து போனார்.மீண்டும் கடிதம் தொடர்தேன்...


அதனால் தான் நீ இவ்வளவு நாள் அனுப்பிய பணத்தை கொஞ்சம் கொஞ்சமா  சேர்த்து,மற்றும் நம்ம தோட்டத்துல வந்த காய்கறில வந்த பணம் சேர்த்து. இதில் பதினஞ்ஜாயிரம் இருக்கு. நீங்கள்  என்னை பார்க்க வர கொடுக்கும் விலைக்கு  இது சரியா  இருக்கும்னு நெனைக்குறேன்.இந்த ஒருதடவை மட்டும் எப்படியாவது நீங்கள் அனைவரும் ஊருக்கு வரவும்.
இப்படிக்கு,
அன்பு அப்பா.


என்னை ஓங்கி யாரோ அரைந்தது போல் உணர்ந்தேன்.
நான் ஹாஸ்டலில் படிக்கும்போது ஒருவாரம் கூட பார்க்க வராமல் இருந்ததில்லை. அவரின் ஆத்மாவை   இத்தனை காலம் தவிக்கவிட்டு நான் வாழ்வில் என்ன சாதித்தேன்???என்னை அறியாமலே அழுதேன். வெகுநேரமாய் பிள்ளைகள் என்னையே கவனித்து கொண்டிருந்தார்கள்.19 comments:

ஈரோடு கதிர் said...

நெகிழ்ச்சி

தமிழ் உதயம் said...

எல்லாம் முடிந்த பிறகு வரும் அழுகையினால் என்ன உள்ளது. நல்ல சிறுகதை.

ஸாதிகா said...

மனிதினை நெகிழ வைத்த சிறுகதை.இவ்வுலகில் இதுபோல் எத்தனையோ தமிழ்வாணன்கள் உலாவருகின்றார்கள்தான்.

சுசி said...

ரொம்ப நெகிழ்ச்சியா எழுதி இருக்கிங்க.

பிள்ளைகள் பாத்துட்டு இருக்கிறதா சொன்ன விதம் புரிய வைக்குது.. எதிர்காலத்தை..

நிலாமதி said...

மனதை ரொம்பவும் தொட்டுச்செல்கிறது கதை. கடைசி நேரம் ரொம்பவும் விரும்பியிருகிறார். .மகன் குடும்பத்துடன் வர வேண்டுமென்று. நிறைவேறாத ஆசைகளுடன் சென்ற உயிர். பாவம் . கண்கள் நீர் கோர்த்தன.

ப்ரியமுடன்...வசந்த் said...

நல்ல பாடம் , பெற்றோரின் அருமை பிள்ளைகளுக்கு தெரிய வைக்கிறது...

சி. கருணாகரசு said...

இந்த பகிர்வு ஒரு பாட்ம்.

சி. கருணாகரசு said...

கடைசி பத்தி மிக நெகிழ்ச்சி...

சி. கருணாகரசு said...

உங்க உணர்வுகளை அப்படியே பகிர்ந்த உங்களுக்கு வணக்கம்.

மறைந்த ஆத்மாவுக்கு எனது அஞ்சலி.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர் கனி! :)

virutcham said...

இது கதை அல்ல நிஜம். பல வீடுகளிலும். பெற்றவர்களுக்கு செலவு செய்ய, ஏன் அவர்களை போய் பார்த்து விட்டு வருவதைக் கூட செலவு, சிரமம் என்றே பார்க்கும் மனப்பான்மை இப்போது சாதாரண சராசரி உணர்வு ஆகி விட்டது. அது நியாயமான உணர்வு என்று கூட ஏற்றுக் கொண்டு விட பழக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறோம். இன்னும் கொஞ்ச காலம் கழித்து இந்தக் குற்ற உணர்வு கூட அற்றுப் போய் விடும்.

shanmuga said...

Kadhai arumai...

Sivaji Sankar said...

உணர்வுபூர்வமாக இருக்கு..!! congrats சீமான் [b]Honey[/b]

அஹமது இர்ஷாத் said...

சூப்பர் கனி.. உணர்வுகளை பிரதிபலிக்கிறது கதை... அருமை..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

பாசத்துக்கு விலை ஏது..? அருமை!

thenammailakshmanan said...

கலங்கி விட்டது கண்கள் கனி..

seemangani said...

ஈரோடு கதிர் said...
//நெகிழ்ச்சி//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணே...

தமிழ் உதயம் said...
//எல்லாம் முடிந்த பிறகு வரும் அழுகையினால் என்ன உள்ளது. நல்ல சிறுகதை.//

சிலருக்கு பட்டபின்புதானே புத்தி வருது...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரமேஷ்ஜி


ஸாதிகா said...
//மனிதினை நெகிழ வைத்த சிறுகதை.இவ்வுலகில் இதுபோல் எத்தனையோ தமிழ்வாணன்கள் உலாவருகின்றார்கள்தான். //

ஆமாம் அக்கா அவர்கள் இல்லாமல் போக வேண்டும்...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
ஸாதி(கா)..

சுசி said...
//ரொம்ப நெகிழ்ச்சியா எழுதி இருக்கிங்க.

பிள்ளைகள் பாத்துட்டு இருக்கிறதா சொன்ன விதம் புரிய வைக்குது.. எதிர்காலத்தை..//

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது அதுதான் என் ஆசை.. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சுசிக்கா...


நிலாமதி said...
//மனதை ரொம்பவும் தொட்டுச்செல்கிறது கதை. கடைசி நேரம் ரொம்பவும் விரும்பியிருகிறார். .மகன் குடும்பத்துடன் வர வேண்டுமென்று. நிறைவேறாத ஆசைகளுடன் சென்ற உயிர். பாவம் . கண்கள் நீர் கோர்த்தன.//

உணர்வு பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி நிலாக்கா...

ப்ரியமுடன்...வசந்த் said...
//நல்ல பாடம் , பெற்றோரின் அருமை பிள்ளைகளுக்கு தெரிய வைக்கிறது... //

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது அதுதான் என் ஆசை.. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மாப்பி...


சி. கருணாகரசு said...
//இந்த பகிர்வு ஒரு பாட்ம்.//
//கடைசி பத்தி மிக நெகிழ்ச்சி...//
//உங்க உணர்வுகளை அப்படியே பகிர்ந்த உங்களுக்கு வணக்கம்.

மறைந்த ஆத்மாவுக்கு எனது அஞ்சலி.//

இது கற்பனைதான் அண்ணே நிஜத்திலும் எத்தனை அப்பாக்கள் இருக்கிறார்கள் தெரியலை..நன்றி கருணா அண்ணே...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//சூப்பர் கனி! :)//

நன்றி ஷங்கர் ஜி...


virutcham said...
//இது கதை அல்ல நிஜம். பல வீடுகளிலும். பெற்றவர்களுக்கு செலவு செய்ய, ஏன் அவர்களை போய் பார்த்து விட்டு வருவதைக் கூட செலவு, சிரமம் என்றே பார்க்கும் மனப்பான்மை இப்போது சாதாரண சராசரி உணர்வு ஆகி விட்டது. அது நியாயமான உணர்வு என்று கூட ஏற்றுக் கொண்டு விட பழக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறோம். இன்னும் கொஞ்ச காலம் கழித்து இந்தக் குற்ற உணர்வு கூட அற்றுப் போய் விடும்.//

ஆம் அதை அனைவரும் நாம் உணர்ந்தால் மனிதம் காக்கப்படும்...நன்றி..

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விருட்சம்...பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து ஆதரவு தாங்க...

shanmuga said...
//Kadhai arumai...//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷண்முகா..பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து ஆதரவு தாங்க...Sivaji Sankar said...
//உணர்வுபூர்வமாக இருக்கு..!! congrats சீமான் [b]Honey[/b] //

உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி சிவா...

அஹமது இர்ஷாத் said...
//சூப்பர் கனி.. உணர்வுகளை பிரதிபலிக்கிறது கதை... அருமை.. //

உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி இர்ஷா..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

///பாசத்துக்கு விலை ஏது..? அருமை!///

அதற்கும் விலை பேசத்தானே செய்கிறது சமூகம்... தொடர் ஊக்கத்திற்கு நன்றி சரவணக்குமார்...

thenammailakshmanan said...
//கலங்கி விட்டது கண்கள் கனி..//

உங்கள் உணர்வுக்கு நன்றி தேனக்கா...முதியோர் இல்லம் மட்டும் இல்லை தனிமையும் அவர்களுக்கு நரகம் தான்... வருகைக்கும் நன்றி தேனக்கா...

SUMAZLA/சுமஜ்லா said...

நானும் அழுதேன் கதையின் முடிவில்...அருமை!!

seemangani said...

SUMAZLA/சுமஜ்லா said...

//நானும் அழுதேன் கதையின் முடிவில்...அருமை!!//

உங்கள் உணர்வுக்கும் வருகைக்கும் நன்றி அக்கா...

Related Posts with Thumbnails