Tuesday, June 8, 2010

உன் பார்வை சரி இல்லை கனி...


இந்த அழகுராணி பட உபயம் தமிழ்த்  தோட்டம் (முக புத்தக அக்கா).

போனவாரம் என் அறையில் நடந்த சூடான ஆரோக்கியமான விவாதம்.என் சக நண்பருக்கும் எனக்கும் நடந்தது.அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.(தேவையா உனக்கு??)

அவர் வடஇந்தியர். டி.வியில் ஏதோ ஒரு சேனலில் கல்லூரி  பெண்களின் பல்சுவை நிகழ்ச்சி வந்துகொண்டிருந்தது.அதை பார்த்து கொண்டிருக்கும் போதே என்னை அழைத்தார். ''கனி பார்த்தாயா  இந்த காலத்து பெண்களின் ஆடை நாகரீகம் எவ்வளவு  மோசமாகிவிட்டது'' என்று. வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினார்.நான் பொதுவாக இதுபோன்ற விவாதங்களில் தலை ஏன்??வாலை  கூட நுழைப்பது இல்லை. (அடிச்சுருவாங்களோனு பயம்)நானும் ஆமாம் போட்டு விட்டு வழக்கம் போல் பதிவுகள் படிக்க அமர்ந்து விட்டேன். 


அடுத்த சில தினங்களில் என்னிடம் வந்து. அவர் குடும்பம், கோடை சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள் மெயிலில் வந்திருக்கு என்று என்னையும் பார்க்க அழைத்தார். பார்த்து  கொண்டிருக்கும் பொது அவரின் 12   வயது மகள் அணிந்திருந்த உடையை காண்பித்து இது நான் விடுமுறை முடிந்து வரும்போது அவளுக்கு ஆசையாய் வாங்கித்தந்தது விலை  2000௦௦௦ ௦ரூபாய் என்றார்.(பெரிய ஆளுதான்பா !!)நான் கிண்டலாய் சொன்னேன் என்ன?ஜி நம்ம ஒரு 500  ரூபாய்க்கு துணி எடுத்தா ரெண்டு செட் தச்சுருவோம்.இந்த உடையில் துணி கம்மி இத போய்   2000ரூபாய்க்கு வாங்கி இருக்கீங்களே ஜி என்றேன்.
(மகனே உனக்கு நாக்குல  சனி  டா)

கடுப்பானவர் '' என்ன? கனி எந்த உலகத்தில் இருக்க  ?!! (அவனா ?? கனவுலகத்துல)இப்போ இதுதான் பேசன் என்றார்.ஒ அப்போ இதே பேசன்தானே அந்த கல்லூரி பெண்களுக்கும் என்றதும்(பார்ரா பாய்ண்டா  புடிக்குறாராம்)   . அவர் அவர்கள் பெரிய(வயதுவந்த) பெண்கள்,குழந்தைகளுக்கு இப்போது போட்டு அழகு பார்க்காமல் பிறகு எப்போது பார்ப்பதாம் (அதானே) என்றார்.ம்ம் ம்ம் இப்படித்தான் நம் விருப்பங்களை அவர்கள் மேல் திணித்து விட்டு வளர்ந்ததும்  அவர்களின்  உடை சரி இல்லை, நடை சரியில்லை  என்பீர்கள் என்றேன். கொஞ்சநாளுக்குதானே பின் அவர்களை நம்வழிக்கு கொண்டு வந்து விடுவோம் (நாங்கலாம் யாரு)என்றார்.

அப்படி உங்கள் விருப்பத்திற்கு ஆட்டிவைதால் அவர்களுக்கு மனஉளைச்சல் வரும்தானே.''போன வருடம் இவர்களேதான் இதே போல் உடை வாங்கி கொடுத்தார்கள்!! இப்போது நாம் அதையே விரும்பினால் வேண்டாம் என்கிறார்களே'' என்றும் இனி நின்னா குத்தம்! உக்காந்தா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க இதேல்லாம் காதில்   வாங்கவேண்டாம் என்று நினைக்க வாய்பிருக்கு இல்லையா?.(அட) உன் பார்வை சரி இல்லை கனி (அவ்வவ் ஆமாவா??)  நல்ல  குடும்ப  பிள்ளைகள் அப்படி நினைக்க மாட்டார்கள் நாம் சொல்வதை உடனே கேட்டுக்கொள்வார்கள் என்றார்.ஆஹா ரூட்டு மாறுதே கைபுள்ளே அடங்கு என்று நான் அமைதியானேன்.(கொஞ்சம் விட்டா கும்மி அடிச்சுருவாங்க).

பிறகு அதை பற்றி கொஞ்சம் யோசித்தேன்...அட நம்புங்க மக்கா...(நம்பிட்டோம்)
சில திருமணவிழாக்களில் பிள்ளைகள் படும் பாட்டை பார்த்திருக்கிறேன்.அவர்கள் போட்டிருக்கும் ஆடைகளால் சுதந்திரமாய் ஓடிஆடக் கூட முடியாமல்  தவிப்பதை. ஒன்று  நீளமான ஆடையாக இருக்கும்  தரையில் தேய்த்து அழுக்கானால் அடி!!(அப்றம் என்ன கொஞ்சுவாங்களா??)என்று அதை தூக்கி பிடித்து கொண்டு அலைவார்கள். அடுத்து காற்று புக முடியாத இறுக்கமான ஆடைகள் அதை அடிக்கடி இழுத்துவிட்டு  கொண்டு திரிவார்கள்.அடுத்து ரெண்டுக்கும் நடுவில் நவநாகரீக(!!!!) ஆடை. சில குடீஸ்களுக்கு அவர்களின் பிஞ்சு உதட்டில்  லிப்ஸ்டிக்  அப்பிவிட்டு நாள் முழுதும் உதடு (ஒட்டாமல்)குவித்தவன்ணமாய்  இருப்பார்கள் பேசக்கூட  தவிப்பார்கள்(பேசுறதா முக்கியம்). அப்படி குழந்தைகளை பார்த்தால் நானே துடைத்துவிட்டு சில அக்காக்களிடம்  திட்டும் வாங்கியதுண்டு.(பின்ன எவ்ளோ கஷ்ட்டபட்டு மேகப் பண்ணிருப்பாங்க) பையன்களையும் விட்டு வைத்தோமா!!   ஐந்து வயது வாண்டுக்கு கோட்டு,சூட்டு,கூலர்ஸ்(டேய் உன் போட்டோவ கொஞ்சம் பாரு) சகலமும் போட்டு இறக்கை துண்டித்த குஞ்சுகளாய் பொம்மை போல் வளம் வருவதையும் பார்த்து இருக்கிறேன்(ஐயோ இங்கேயுமா!!).எனக்கு என்னவோ இது சாதரணமான விவாதமாய் தெரியவில்லை மக்கா விழித்து கொள்வோம்.(அப்போ நாங்க தூங்கிட்டா  இருந்தோம்)

(வந்துட்டாயா புத்தி சொல்ல....!!!)ஐயோ!! இது என்ன நம்ம கனவுல இது புது தினுசா இருக்கே !!!இப்டிலாமா கனவு வரும்??(டேய்...டேய்..டேய்...) ஆமா இப்போ நான் என்ன எழுதவந்தேன்.என்ன எழுதுனேன் ஒண்ணுமே புரியல...மக்கா உங்களுக்கு எதாச்சும் புரிஞ்சதா?? பின்னூட்டத்தில் சொல்லுங்க (ஓட்டு கேக்கல??)நான் என்ன உளறி வச்சுருகேன்னு நானும் தெரிஞ்சுகிறேன். (பார்ரா....)இந்த இத்து போனவே வேற நாட்டுக்கு நாலு நல்லது சொல்ல விடுறானா... நான் வாறேன்...(ப்ளீஸ்....)

20 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ரசிக்கும் வாகியில் எழுதி இருக்கிறீர்கள் .ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் தனிமைப்படுத்தி காட்டி இருக்கும் வாசகங்கள் சிரிப்பை அள்ளித் தெளிக்கிறது
பகிர்வுக்கு நன்றி !

seemangani said...

நன்றி சங்கர் உங்கள் முதன்மை பின்னுட்டமும் வருகையும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருது...
உங்க கருத்தை சொல்லவில்லையே???

ப்ரியமுடன்...வசந்த் said...

//அதை தூக்கி பிடித்து கொண்டு அலைவார்கள். //

ம்ம் நானும் பார்த்திருக்கேன் மாப்ப்ள...

தெளிவான பார்வை நகைச்சுவையாக நன்னாருக்கு...

seemangani said...

அப்போ என் பார்வை சரின்னு சொல்றீங்களா..? மாப்பி...
உங்க கருத்துக்கும் வருகைக்கும்... நன்றி மாப்ளே

சுசி said...

என்ன சொல்ல கனி.. எப்பாவாவதுதான் இங்க கல்யாணம் காட்சினு வருது.. அப்போ கூட பட்டு பாவாடை போட்டு அழகு பாக்கலேன்னா எப்டி??

சில சமயம் சண்டை போட வேண்டி வருது. பல சமயம் அம்மாவுக்காகனு சமாதானம் ஆகுது.

இறுக்கமான ஆடையோ, லிப்ஸ்டிக் அப்புறதோ.. இந்த கொடுமை நான் பண்றதில்லை.

seemangani said...

சுசி said...
//என்ன சொல்ல கனி.. எப்பாவாவதுதான் இங்க கல்யாணம் காட்சினு வருது.. அப்போ கூட பட்டு பாவாடை போட்டு அழகு பாக்கலேன்னா எப்டி??

சில சமயம் சண்டை போட வேண்டி வருது. பல சமயம் அம்மாவுக்காகனு சமாதானம் ஆகுது.

இறுக்கமான ஆடையோ, லிப்ஸ்டிக் அப்புறதோ.. இந்த கொடுமை நான் பண்றதில்லை.//

மகிழ்ச்சி கா...

அழகான பட்டு ஆடைகள் குட்டீஸ்களுக்கு எப்பவும் அழகுதான் சுசிகா...

அது போன்ற ஆடைகளின் நன்மையை அவர்களுக்கு இப்போ இருந்தே புரியவைக்க முயற்சிப்போம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கா..

கலாநேசன் said...

//போன வருடம் இவர்களேதான் இதே போல் உடை வாங்கி கொடுத்தார்கள்!! இப்போது நாம் அதையே விரும்பினால் வேண்டாம் என்கிறார்களே'' என்றும் இனி நின்னா குத்தம்! உக்காந்தா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க இதேல்லாம் காதில் வாங்கவேண்டாம் என்று நினைக்க வாய்பிருக்கு இல்லையா?.//


நிச்சயமா!

அன்புடன் மலிக்கா said...

சூப்பரப்பூ. நானும் இதை செய் அதைசெய்யுன்னு கட்டாயப்படுதுரதில்லை. ஆனா. நமக்கு எது சரியாகும் என அவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுவதால் நமது சூழல், சமூகம், பார்வை, அதை உணர்ந்து நடந்து கொள்கிறார்கள் அந்த வகையில் என் குழந்தைகளுக்கு ஒரு சபாஷ்..

ஸாதிகா said...

சீமான் கனி உங்களுக்கு என்ன ஆச்சு???????????

seemangani said...

கலாநேசன் said...
//போன வருடம் இவர்களேதான் இதே போல் உடை வாங்கி கொடுத்தார்கள்!! இப்போது நாம் அதையே விரும்பினால் வேண்டாம் என்கிறார்களே'' என்றும் இனி நின்னா குத்தம்! உக்காந்தா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க இதேல்லாம் காதில் வாங்கவேண்டாம் என்று நினைக்க வாய்பிருக்கு இல்லையா?.//


நிச்சயமா! //

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்...
பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...
இனி இணைந்திருப்போம்...


அன்புடன் மலிக்கா said...
//சூப்பரப்பூ. நானும் இதை செய் அதைசெய்யுன்னு கட்டாயப்படுதுரதில்லை. ஆனா. நமக்கு எது சரியாகும் என அவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுவதால் நமது சூழல், சமூகம், பார்வை, அதை உணர்ந்து நடந்து கொள்கிறார்கள் அந்த வகையில் என் குழந்தைகளுக்கு ஒரு சபாஷ்..//

மிக்க மகிழ்ச்சி கா உங்க குட்டிஸ் களுக்கு எனது பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்...நாம்தானே அவர்களின் முதல் குரு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா...கா

ஸாதிகா said...
//சீமான் கனி உங்களுக்கு என்ன ஆச்சு??????????? //

ஒன்னும் ஆகலை நான் நல்லாத்தான் இருக்கேன் ..
ஏ..................ன் அப்படி கேக்குறீக???ஸாதிகா கா!!!??

அஹமது இர்ஷாத் said...

சூப்பர் இடுகை சகா..இது மாதிரி அடிச்சுக்கிட்டே இருங்க..நல்லாயிருக்கு

soundar said...

என்ன செய்வது பாஸ் உலகம் இப்படி ஆகிவிட்டது

Jaleela Kamal said...

நடக்குற நடப்ப எழுதி இருக்கீஙகக

//படி உங்கள் விருப்பத்திற்கு ஆட்டிவைதால் அவர்களுக்கு மனஉளைச்சல் வரும்தானே.''போன வருடம் இவர்களேதான் இதே போல் உடை வாங்கி கொடுத்தார்கள்!! இப்போது நாம் அதையே விரும்பினால் வேண்டாம் என்கிறார்களே'' என்றும் இனி நின்னா குத்தம்! உக்காந்தா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க இதேல்லாம் காதில் வாங்கவேண்டாம் என்று நினைக்க வாய்பிருக்கு இல்லையா?.//


மிகச்சரி.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆமா இப்போ நான் என்ன எழுதவந்தேன்....!!!?!?!!

அக்பர் said...

கலக்கிட்டிங்க போங்க. ரசித்தேன்.

seemangani said...

அஹமது இர்ஷாத் said...
//சூப்பர் இடுகை சகா..இது மாதிரி அடிச்சுக்கிட்டே இருங்க..நல்லாயிருக்கு

எழுதிருவோம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷா...//

soundar said...
//என்ன செய்வது பாஸ் உலகம் இப்படி ஆகிவிட்டது//
ஆமாம் பாஸ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்..


Jaleela Kamal said...
//நடக்குற நடப்ப எழுதி இருக்கீஙகக

//படி உங்கள் விருப்பத்திற்கு ஆட்டிவைதால் அவர்களுக்கு மனஉளைச்சல் வரும்தானே.''போன வருடம் இவர்களேதான் இதே போல் உடை வாங்கி கொடுத்தார்கள்!! இப்போது நாம் அதையே விரும்பினால் வேண்டாம் என்கிறார்களே'' என்றும் இனி நின்னா குத்தம்! உக்காந்தா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க இதேல்லாம் காதில் வாங்கவேண்டாம் என்று நினைக்க வாய்பிருக்கு இல்லையா?.//

மிகச்சரி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலி கா..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//ஆமா இப்போ நான் என்ன எழுதவந்தேன்....!!!?!?!! //

:)....நன்றி சரவணக்குமார்...


அக்பர் said...
//கலக்கிட்டிங்க போங்க. ரசித்தேன்.//

பின்னுட்டமும் வருகையும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்

சிவன். said...

மாப்பி...நானும் பல நேரம் இந்த அப்பன்காரன்களை திட்டுவதுண்டு...சின்ன புள்ளைக்கு போய் இப்படி எல்லாம் டிரஸ் போட்டு விடுறாங்க பாருன்னு...அத பதிவாவே எழுதீட்டீங்க...கலக்கலா இருக்கு, கமெண்டுகள் பல இடங்களில் சூப்பரப்பு...அந்த குட்டி பெண் படத்தை பற்றி சொல்லாமல் போனால் குத்தமாகிடும்,......ம்ம்ம்... அழகு.

seemangani said...

சிவன். said...

//மாப்பி...நானும் பல நேரம் இந்த அப்பன்காரன்களை திட்டுவதுண்டு...சின்ன புள்ளைக்கு போய் இப்படி எல்லாம் டிரஸ் போட்டு விடுறாங்க பாருன்னு...அத பதிவாவே எழுதீட்டீங்க...கலக்கலா இருக்கு, கமெண்டுகள் பல இடங்களில் சூப்பரப்பு...அந்த குட்டி பெண் படத்தை பற்றி சொல்லாமல் போனால் குத்தமாகிடும்,......ம்ம்ம்... அழகு.//

இந்த பழக்கத்தின் விபரீதம் பயன்கரமனதுதான்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவன் மச்சான்...

Jaleela Kamal said...

நீங்க ஒருத்தர் தான் எங்க வீட்டில். எல்லோரும் என்னை கூப்பிடுவது போல் கூப்பிடுகிறீர்கள்.

seemangani said...

நான் உங்க வீட்டு பிள்ளைதானே ஜலி கா...

Related Posts with Thumbnails