Saturday, March 27, 2010

இது காதல் கடிதம் அல்ல...7(தொடர் க(வி)தை)


கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...
பாகம் 4...
பாகம் 5...
பாகம் 6...இனி...

கைபேசி  காதல் பேசியாய் மாற தனியாய் தவமிருந்த தருணங்கள்.
கை குழந்தையாய் கவனிக்கப்பட்டது கைபேசி.

காதுகளை கைபேசிக்கு கடன் கொடுத்து விட்டு 
செவிடானது  இதயம்.

ஏய் கைபேசியே கோடிக்கணக்கான குரல்களை
இணைத்துவைக்கும் இறைவனே
இனியவள் குரல் தேடி  
இணைத்துவிட மாட்டாயா???

வழக்கமாய் வரும் வட்டி அட்டை
விற்கும் வங்கி அழைப்பும்
பாட்டு கேட்க சொல்லி பாடுபடுத்தும்
குறுஞ்செய்தியும் கூட வரவில்லையே
கைபேசியில் ஏதும் கலவரமோ??

நண்பனின் நம்பர்கள் அழுத்தி அன்பாய் பேசினேன்
அவனுக்கு ஆச்சரியம்!!
ஆடிக்கு ஒருதடவை அம்மாவாசைக்கு ஒருதடவை 
அழைப்பவன்  அடிக்கடி அழைத்து
அன்பு தொல்லைக்கு ஆளாக்குகிரானே...

அலுவலக வேலைகள் அயர்ந்து
ஆழ்தூக்கத்தில் கிடந்தன.
ஆடர் செய்த காப்பி ஐயோ பாவம்
ஆறியே விட்டது.
அனுப்பவேண்டிய கோப்புகள்
அக்கடா என்று அங்கேயே அமர்ந்து விட்டன.
காகிதத்தில் கருப்பு முத்தம் இடாமல்
கிறுக்கு பிடித்து கிடக்கிறது பேனா.

தொலைபேசி ஒலித்தால் கூட - முதலில்
கைபேசிதான் கைக்கு வருகிறது.
 கால்(call ) முளைத்த  கைபேசி எதிர் திசையில்
கரைவது காதல் இல்லை என்றதும்
கணநேரத்தில் ஊமையாகி ஊனமாகி போகிறது.
கால்(call ) துண்டிக்கப்பட்டு.


கொஞ்சம் கொஞ்சமாய் மின்கலத்தின் (Battery )உயிர் குடித்து
கொண்டிருந்தது கைபேசி.
கருணை கைபேசிக்கு கை முளைக்க வில்லை - இருந்தால்!!! 
அரைந்தே  சொல்லி இருக்கும் அழுத்தாதே  என்று.

இரண்டு நாட்களாய்...
இம்மி அளவும் உறங்க வில்லை
உணவும் இறங்கவில்லை
உலகம் இயங்கவில்லை.
இது எனக்கு அல்ல கைபேசிக்கு.

பெயர் தெரியாத ஒருத்திக்காய்
பித்து பிடித்து அலைகிறோம்.
காரணம் காதல்.

கழுத்தில்  கயிறு போட்டு
தலைகிழாய் தூக்கு மாட்ட பார்க்கிறது
கைபேசி கொலைபேசியாய்.

காற்றில் கண்விழித்துக்கொண்டே
கனாகாண்கிறேன் கதறியது கைபேசி
காதுகளை கட்டி போட கடைசியாய்
கரைந்தது காதல் குயில்
க....வி என்று.

கண் சிமிட்டி மின்கலத்தின்
கடைசி சொட்டு உயிரை உறிஞ்சி  விட்டு
காலமானது கைபேசி......(தொடரும்...)



(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)





Thursday, March 25, 2010

ரெம்ப வலிக்குது...(சொந்த அனுபவம்)



டேய்... தம்பி வேண்டாம் உன்ன கெஞ்சி கேக்குறேன்...உனக்கும் எனக்கும் என்ன பகை???உன் பேரு கூட தெரியாது எனக்கு.உனக்கு ஏன்?  இந்த கொலைவெறி...??ப்ளீஸ்...இனிமேல் வராத உன்னால நான் பட்ட கஷ்ட்டம் எல்லாம் போதும்.இதுக்கு மேல முடியாது ரெம்ப வலிக்குது...உனக்கு என்ன வேணும்னு சொல்லு எவ்வளோ செலவானாலும் பரவா இல்ல நான் பாத்துக்குறேன் ஆனால் இனிமேல் நீ வரகூடாது.


ஆமா உனக்கு இது யாரு சொல்லிகொடுத்தா???யாரு உன்னை அனுப்பினா??பயங்கரமா பதிவு  போடுற ஸாதிகா அக்கா வா??இல்ல தினுசு தினுசா யோசிக்குற இந்த இத்து போன மாப்பி வசந்தா??இல்ல சமையல் ராணி ஜலி அக்கா வா???இல்ல கொஞ்சநாளா காணாம போன பலா பட்டறை ஷங்கரா??இல்ல கட்டுரை புயல் தமிழுதயன்னா??இல்ல கவிதைல கலக்குற சிவாஜியா??  இல்ல கலக்கலா கனவு கானுற ட்ரீமர் ரா??இல்ல பழனி சூப்பர் ஸ்டார் சுரேஷ் அண்ணா வா???இல்ல மறந்து போன மச்சானா??இல்ல பிரியமான  ப்ரியாவா??இல்ல சூபேரா எழுதுற சுசி யா???பாப்பா மாதிரி பாவ்லா காட்டுற பாலாசி யா?? இல்ல கடிங் போட்ட கிஷோரா??இல்ல பதிவுலகத்துல  பந்தாடுற  பிரபா வா??இல்ல கனிவான  கதிர் அண்ணா வா??இல்ல அன்பான நிலா அக்கா வா??இல்ல சூப்பர் பதிவு  சூரிய கண்ணனா??இல்ல சும்மாவே சூப்பரா எழுதுற  தேனம்மா வா??...


சொல்லு... சொல்லு... யாரு இதுக்கெல்லாம் காரணம் சொல்லு நான் அவங்கள தனியா (கால்ல விழுந்து)டீல் பண்ணிக்குறேன்.
நீ இதெல்லாம் இன்னையோட நிறுத்திக்கோ...இனிமேல்  வந்து என்னை வெறுப்பேத்தி கிண்டல் பண்ணி கடுப்பாக்குற  வேலை வச்சுக்காதே...உன்னால எனக்கு 100 ரியால் தெண்ட செலவு.எப்டினா கேக்குற....சொல்லறேன்...


 நேத்து நீ கனவுல வந்து ''எங்கே தில்லு இருந்தா என்னை அடி பார்க்கலாம்...அடி பார்க்கலாம்...''-னு..கடுப்பு ஏத்திட்டு போய்ட்ட  உன்னை அடிக்குற நெனப்புல தூக்கத்துல கட்டில் ஒடச்சு, கையையும் ஒடச்சு கிட்டேன்.கை புஷுனு வீங்கி போச்சு...ரெண்டுநாளா ஆபீஸ்- க்கு போகல...பதிவு எழுத பக்கத்துல ஆள்  தேடவேண்டி இருக்கு.நீ யாரா இருந்தாலும் பரவாஇல்ல நான் உன்னை மன்னிச்சுடேன் ஆனால் இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு மட்டும்  சொல்லிட்டு போய்டு...
இந்தா --------------------- இந்த கோட்டை தாண்டி நீனும் வராத நானும் வர மாட்டேன்...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்......சிரிக்க கூடாது...
பதிவு பிடிக்கலனா பினுட்டதுலையே திட்டிருங்க மக்கா...தாங்க முடியல....
அந்த பையன் மேல இருக்குற படத்துல இருக்கான்.நல்ல உத்து பார்த்து யாருக்கு சொந்தக்காரனு தெரிஞ்சா சொல்லிடுங்க மக்கா புண்ணியமா.... போய்டும்.



Tuesday, March 23, 2010

நரக நெருப்பிலிருந்து பட்டாம் பூச்சி...


பட்டு வண்ண சிறகுகள்;
பாவம்  அறியா தேகம்;
பாவை உடல்;
பக்குவமான படபடப்பு ;
பணி துளிக்கும் வலிக்காத பாதம்.
இப்படி தெரிந்த நான் இன்று...

உஷ்ணத்தின்  உச்சநிலை சூட்டில்
உணர்வுகள் செத்து போய்
உறக்கம் அத்து போய்
உலகமே உஷ்ணமாய்...
உங்களுக்கு பாடமாய்...

தொட்டு பாத்தாலே
துவண்டு விடும் சிறகுகளை...
சுட்டு பார்த்து ஆனந்தம் கொள்கிறது நரக நெருப்பு.
 இரண்டு சென்டிமீட்டர் உடம்பை
இரண்டு மணிநேரமாய் எரித்து.
கருகிய சாம்பலில் மீண்டும் முளைக்கிறது
புதிய  உடல்,புதிய சிறகுகள்-மீண்டும்...மீண்டும்...
சுட்டு பார்த்து ஆனந்தம் கொள்கிறது நரக நெருப்பு.
ஏன் இந்த தண்டனை எனக்கு...??

வெட்கம் பழகாத; 
விபரம் அறியாத; 
வெள்ளி மலர் மொட்டை,
காமத்தீ கொண்டு 
கடைசிவரை தீண்டி;
காயம் தந்து 
கலவர படுத்தியதற்காய்.... 

பருவம்  அடையா (மலர்) பெண்ணை
திருடி தழுவ திட்டமிட்ட கள்வன் நான்...






Wednesday, March 17, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள் தொடர் பதிவு...

முன்னுரை தேவையில்லை என நினைக்கிறேன்...

அன்னை தெரசா:
உலகுக்கெல்லாம் அன்னை இவர்.
அன்னை என்றதும்  முதலில் - என்
நினைவில் வருபவர் இவர்.
சுயநலச் சூரவளிகளுக்கு நடுவே
பொதுநல தென்றலாய்
புறப்பட்டு வந்தவர் இவர்.
கருணையின் கடவுள் உருவம் இவர்.
-----------------------------------------------------------------------------------
சின்மயி:
''ஒரு தெய்வம் தந்த பூ -வை'' தந்த குயில் இவர்.
ஒரு துறையில் சேர்க்க முடியாது
பல துறை பைகுயில் இவர்.
அவர் குரல் கலந்த காற்றையே
பல பட்டாம் பூச்சிகள் பருகி
மோட்சம் அடைவதாய் ஒரு செய்தி.
தேன் குரல் தேவதை.
-----------------------------------------------------------------------
தமிழச்சி தங்கபாண்டியன்:
கவி பேசும் தமிழச்சி இவர்.
கவியெல்லாம் பேசும் தமிழச்சியும் இவரே.
புது கவிதை புனைவதால் புதுத் தமிழச்சியும் இவரே.
பாரத கலையாம் பரத கலை படித்தவர்.
அரசியலும் அத்துபடி.
பெண்ணியத்திற்குள் பிராந்தியம் பார்ப்பவர்.
''எஞ்சோட்டு பெண்''பிடித்த கவிதை தொகுப்பு.
---------------------------------------------------------------------------------------
ரேவதி:
பாரதிராஜாவின் பார்வைக்குள் வந்த நடிகை.
மண் வாசனைக்கு பெண்வாசனை தந்தவர்.
நடிப்பு பிடிக்கும்,நடனம் பிடிக்கும்.
மிக பிடித்த நடிகை.
---------------------------------------------------------------------------
தாமரை:
தமிழ்ப்பாட்டுக்கு  வசீகரிக்கும் வார்த்தைகள் தந்த கவி இவர்.
இவர் வார்த்தைகளில் வசீகரிக்க பாட்ட பல பேரில் நானும் ஒருவன்.
பொறியியல் படித்த புலவர்  இவர்.
தமிழ் படத்துக்கு தமிழ் பாட்டு தந்து கொண்டே இருங்கள் தமிழும்  இருக்கும் கேட்டு கொண்டே...
----------------------------------------------------------------------------------------- 

அஜித் அல்கா:
இவரை பற்றி இந்த பதிவில் பதிந்து விட்டேன்.
சமீபகாலமாய் பாட்டு பாடி உள்ளத்தில் பதிந்து போனவர்.
குரலில் பல பரிமாணங்கள் காட்டும் பாவை.
இவர் பாடும்போது பத்திர படுத்த முடியவில்லை மனதை.
பாட்டிலும் போட்டியிலும்  வெற்றி பெற வாழ்த்துகள்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------
ராணி (அக்கா)
இவர் ஒரு திருநங்கை.
சென்னை மெட்ரோ ரயிலில் சிறு வணிகம் செய்பவர்.நான் பார்த்த எத்தனையோ பேரிலிருந்து வித்தியாசமானவர்.அயராத உழைப்பாளி. கனிவான பேச்சு.உடன் இருப்பவர்களுக்கு உதவிசெயும் மணம்.பல நேரம் பார்த்து வியந்த பெண்.இந்த வரிசையில் இவரை சேர்ப்பதில் பெருமை கொள்கிறேன்.இவருக்காக தனி பதிவே போடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அலமேலு (அக்கா):
நண்பன் ஒருவனால் அறிமுகமானவர்.போலியோவால் பதிக்க பட்டவர்.துணிச்சலான பெண்.அவரிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்.எதையும் முயன்று பார்த்து முடிப்பவர்.பேசும்போது நிறைய உற்சாகம் தந்தவர்.என்னை தட்டி கொடுத்த சிற்பி என்றே சொல்லலாம்.என் நட்ப்பு வட்டத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். தேடிகொண்டிருகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
லத்திகா சரண்:
கேரளாவைச் சேர்ந்தவர்.சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவியேற்ற முதல் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி லத்திகா சரண் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் தலைமையககூடுதல் டிஜிபியாக இருந்து வந்தார். 150 ஆண்டு காலபாரம்பரியம் மிக்க சென்னை மாநகர காவல்துறையின் 90வது ஆணையர் என்றபெருமை லத்திகா சரணுக்குக் கிடைத்துள்ளது.சென்னை மாநகரின் முதல் பெண் ஆணையர் லத்திகா சரண் என்பதும் விசேஷமானஅம்சம். அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் பெண் போலீஸ் கமிஷனரும் லத்திகா சரண்தான் என்பது இன்னும் சிறப்பான விஷயம்.தேர்தல்சமையத்தில்   சிறப்பான கடமையாற்றியவர். தற்போது இவர் தமிழக காவல்துறையின் தலைவர். காவல் துறையில் என்னை கவர்ந்தவர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் தமிழ்  பெண்கள்:
எத்தனையோ போராட்டங்கள்.எவ்வளவோ இழப்புகள்.எவ்வளவோ தடைகள்.அனைத்தும் தாண்டி என் முண்டாசு கவிஞகன் கண்ட புதுமை பெண்ணாய் புரச்சி பெண்ணாய். தாயாய்,சகோதரியாய்,நட்பாய்,காதலியாய்,மனைவியாய்,மகளாய்  ஒவ்வொரு வெற்றிக்கும் உறுதுணையாய்  இருக்கும் அணைத்து மங்கையரும்.


இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த நண்பர் Dreamer - (ட்ரீமர்) அவர்களுக்கு நன்றி...எனக்கு தெரிந்து அனைவரும் எழுதி விட்டார்கள்...எழுதாதவர்கள் தொடரலாம்.




Monday, March 15, 2010

இது காதல் கடிதம் அல்ல...6(தொடர் க(வி)தை)

(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...
பாகம் 4...
பாகம் 5... இனி...

ஊட்டி தெரியும் ஊட்டிவிடுவது...?? தெரியாதே...


அடுத்த வீட்டு குழந்தைக்கு அவளின்
அம்மா ஊட்டுவதை பார்த்திருக்கிறேன்.


அம்மாவிடமும் அடிக்கடி ஆசையாய்
ஊட்ட சொல்லி உண்டது உண்டு.


என்றோ ஒருநாள் கோபத்தில் கொக்கரித்து
உணவு வெறுத்து உறங்குகையில் - உடன் பிறந்தவள் ஊட்டிவிட உறக்கத்தில் உண்டது...


''அடே..யாருக்குடா கிடைக்கும் இந்த
திருச்செயல் ம்ம்ம்...ஆரம்பி''...
காதல் கட்டளை போட்டது.


இட்டிலியில் ஆவிபறந்தது
இதய கூட்டிளிருந்தும்
பட்டாம் பூச்சியாய் பறந்தது ஆவி.


ஆரியபவன் இட்லி இன்னும்
ஆறவே இல்லை.
தொட்டதும் சுட்டது.


இப்படியே    ஊட்டினாள் இவளின்
இதழ்கள் இம்சைபடுமே???


நீ கத்து கொடுத்த வித்தை நினைவுக்கு வந்தது!!!
பேருந்து குழந்தையை குளிரூட்டினாயே!! -அதே
சூத்திரத்தில் சூடான இட்லி
சுகமான பனித்துளியாய்  மாற்றப்பட்டது.


ஐயோ வேண்டாம் ...!!!அலறினாய்.
''உன்னை விருந்துக்கு சாப்பிட சொல்லவில்லை
மருந்துக்குத்தான்!! தம்பி தாராளமாய் ஊட்டுங்க''
இது ! வெள்ளை தேவதை.
தேவதை அப்போதே அக்கா ஆனது.
ஓ...இதுதான் நாத்தனார் அதிகாரமோ!!!????


அப்பா வந்ததால் ஆபத்து....
வெறுப்பு காட்டுவதாய் நினைத்து கொண்டு
வெட்கம்  மட்டுமே காட்டினாய்.

இதழ் விரலை விழுங்கி கொண்டிருந்தது;
விழி இவனை விழுங்கி கொண்டிருந்தது;

மௌனமாய் மன்றாடினாய்.
காது  கேட்காமல் கதறினாய்.

இருந்தாலும் விறு விறுவென விழுங்கிவிட்டாய்
இரண்டு இட்லி.
பாவம்! பொதும்! காதலுக்கு கருணை வந்தது.
தீர்த்த பருகளோடு தீர்ந்தது திருச்செயல்.


உன்னை மடியில் கிடைத்த மதி  இருந்தது
பயம் காட்டி கொண்டு விதி இருந்தது.


வார்த்தை வர வாய்  இல்லை
விழிகளுக்கும் விரல்களுக்கும்
வாய் முளைத்து கொண்டது..


ஒரு காகிதத்தில் க...வி??!!என்று  எழுதி பத்து இலக்க
கணக்கு போட்டு  கையில் கொடுத்து விடை பெற்றேன்...
காதல் கசிந்தது இருவரின்  கண்களில்...(தொடரும்...)

(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)







 

Wednesday, March 10, 2010

இது காதல் கடிதம் அல்ல...5 (தொடர் க(வி)தை)


(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)


புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...
பாகம் 4... இனி...

நானும் அதிர்ந்து போய்;
எழுந்து ஒழிந்து கொண்டேன்.
ஒரு அம்மா அவசரமாய் உள்ளே வந்தார்;


அவளின் அம்மாவோ ?கேட்டால் என்ன சொல்ல?
மெல்ல நகர நினைக்கும் அகர நொடியில்;
அவரின் கழுத்தை கவனிக்க சொன்னது காதல்.


இரு கைகளால் இறுக்க கட்டி கொண்டிருந்தது
இதயத்துடிப்பை காட்டிகொடுக்கும் கருவி.
அறையில் மருந்து வாசம் போய்
மருத்துவர் வாசம் வந்தது.


அந்த கண்கள் கண்ணாடிக்கு வெளியே வந்து கேட்டது
அதே கேள்விகளை...யார் நீ?இவளுக்கு என்ன வேண்டும்??பெயர்???
என்னிடமும் தயாராய் இருந்தது
அதே பதில்கள்.நான் கா....வி.சொந்தம் என்று.


உன் இதயத்துடிப்பை கணக்கெடுத்தது கருவி.
ஆச்சரியம்!!!
நேற்று இறக்கவா?இயங்கவா??இருக்கவா??போகவா என்ற
இதய துடிப்பு இன்று இரண்டாய் துடிக்கிறதே!!!


கருப்பு நிற கிறுக்கலில் கவிதை வாசிக்கிறது
கருவியின் அறிக்கை.


காயிச்சல் மட்டும் குறையவில்லை
கவலை இல்லை.
மருந்து கொடுக்க சொல்லி
மறைந்தார் மருத்துவர்.


வெறும் வயிற்றுக்கும் மருந்துக்கும் ஆகாது.
உணவு வாங்கிவர உத்தரவிட்டது வெள்ளை தேவதை.
விரைந்து பறந்து வாங்கிவந்தேன் ஆரியபவன் இட்லி.


''சத்து இழந்த உடம்பு இது இப்போது
இவளால் இயங்கமுடியாது ஊட்டி விடு'' என்றது
கமுக்கமாய் காதில் - காதல்...(தொடரும்...)
(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)











Monday, March 8, 2010

அழகு குயில் அல்கா...

மகளிர் தின நல் வாழ்த்துகள்...
எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி...




இவள் அல்கா அஜித் ஓமன பெண்.
 தமிழ் படிக்க தெரியாதாம் ஆனால்...
அவ்வளவு அழகாய் அதரங்கள் வழியே  வழிகிறது தமிழ்.
விஜய் டிவி யில் வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ராணி இவள்.
இவள் மேடையேறி பாட கூட வேண்டாம் தமிழில் அவளுக்கு தெரிந்த சில வார்த்தைகள் பேசினால் போதும் அந்த மழலை தமிழை கேட்டு கொண்டே இருக்கலாம்.இந்த விடியோ வில் கவனிக்க ''தெரியாது''.

ஆரம்பத்தில் இருந்து  இன்னும் இனிமை கூடிகொண்டே இவளின் குரல். இவளின் குரல் தேனுக்கு சவால் விடுகிறது.இவள் குரலுக்கு நான் அடிமைஎன்றே சொல்லலாம். எனக்கு எப்போது  ஓய்வு கிடைத்தாலும் சரி நான் இணையத்தில் தேடும் ஒரே டிவி நிகழ்ச்சி இது. என்னை போல் என் நண்பர்களும் இந்த நிகழ்சியை பற்றி விரும்பினால் எழுதுங்கள்.இன்னும் சில குட்டி குயில்கள் இந்த நிகழ்ச்சியை இன்னும் அழகாய் அலங்கரித்து காதுகளில் கவி பாடுகின்றன.நேரம் கிடைக்கையில் அவர்களை பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்.
வெகு நாட்களாய் இதை பற்றி எழுத நினைத்து இபோதுதான் நேரம் கிடைத்தது.

என் நண்பர்களுக்கு எனக்கு பிடித்தவற்றை  பகிர்ந்து கொள்வதில்   மகிழ்ச்சி. இது போன்ற எங்கோ இருக்கும் திறமை சாலிகளை தேடி பிடித்து அவர்களை ஊக்குவிப்பதற்கு விஜய் டிவியை எவளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.

சினிமா செய்திகள் சாமியார் செய்திகள் பின்னால் ஓடி ஓடி களைத்து போன கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்து கிடைக்கும்.நீங்களும் உங்கள் கருத்துகளை பகிந்து கொள்ளுங்கள்..எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி என்று தொடர் பதிவாய் கூட நேரம் இருந்தால்  எழுதுங்கள்...
சரி இதை தொடர் பதிவாய் எழுத நான் அழைபவர்கள்...
1 ,என் மனதில் இருந்து...பிரியா.
2 ,தமிழுதயம்...ரமேஷ்.
3 ,சமையல் அட்டகாசங்கள்...ஜலீலா அக்கா...
4 ,பிரியமுடன் வசந்த்...மாப்பி.
5,ஆயிரத்தில் ஒருவன்
6 ,எல்லா புகழும் இறைவனுக்கே....ஸாதிகா
நீங்களும் நண்பர்களை அழைக்கலாம்.எந்த டிவி நிகழ்ச்சியாய்   இருந்தாலும் பரவாஇல்லை என்ன மொழியாய் இருந்தாலும் பரவாஇல்லை.



Sunday, March 7, 2010

சமர்பிக்கிறேன்.....(நன்றிகள்...)


எனக்கு ஆதரவு தந்து வரும் அணைத்து நல் இதயங்களுக்கும் என் மகிழ்ச்சியின்   ஒவ்வொரு வினாடியையும் சமர்பிக்கிறேன்.....நன்றிகள்...
எதற்கு இந்த பதிவு...???எங்கோ ஒரு மூளையில் கனவுகளை சமைத்து கொண்டிருந்தவனுக்கு அறிமுகமானது இந்த கனவு பட்டறை...
இப்பொது பத்தாயிரத்திற்கும் மேல் ஹிட்டுகளை வாரி வழங்கி (வாங்கி) என்னை வாழ்த்தும் இத்துணை இனிய உள்ளங்கள்...என் சொந்தமாய்....
சிலருக்கு இது பெரிய விஷயம் இல்லை எனக்கு என்னவோ வாழ்வில் நான் இழந்த மொத்த மகிழ்ச்சியும் திரும்ப கிடைத்த திருப்தி...
எனக்கு இதை தந்த என்  சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகள்  சொல்லவதை விட  என் அன்பையும் , என் மகிழ்ச்சியின் ஒவொரு நொடியையும் சமர்பிக்கிறேன்...
கனவு பட்டறையில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கம் இது...
ஆம் இந்த பக்கம் தான் சரி இல்லை என்று தமிழ்மணத்தால் என் வலைபூ தவிர்க்கப்பட்டது...
''இந்த பக்கத்தை அழித்து விட்டு முயற்சி செயிது பார்... ''
 இது நண்பன் ஒருவன் அன்பாய் சொன்னது நானும் அழிக்க நினைத்து ஏனோ பின் விட்டு விட்டேன்
இதன் மொத்த பார்வைகள்....தினமும் சரசையாக(பிப்ரவரி 19 -ல் இருந்து) 200 ... இப்போது வரை...4 ,100 .....

இந்த சந்தர்பத்தில் தமிழிஷ் ,உலவு ,ஒரு நாள் ஒரு கவிதை மற்றும் தொடர்ந்து என்னை படித்து பின்னுட்ட விருது  வழங்கி  என்னையும் தங்களோடு இணைத்து (அணைத்து) கொண்ட அணைத்து சொந்தங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.....
அன்புடன்...

Thursday, March 4, 2010

இது காதல் கடிதம் அல்ல...(4)

(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)
புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...

எங்கோ ஒரு மூலையில் சன்னமாய்-என்

உயிர் துடிக்கும் ஓசை ஒலிக்க-உன்
திசை காட்டி ஓடுகிறது உயிர்.


ஒரு கருப்பு கண்ணடி வட்ட முகம் காட்டி
ஐ.சி.யு என்று ஆங்கிலம் பேசியது.
கண்ணடி வழியே கண்களை

கடத்தி விட்டேன்.
வெள்ளை படுக்கையில் பச்சை போர்வை போர்த்தி
வாடா மல்லி வதங்கி கிடந்தது...


தலைகீழ் தவம் செய்து சொட்டு சொட்டாய்-உன்
உடலுக்குள் உயிர் ஊற்றி கொண்டிருக்கிறது ஒரு குடுவை.
அடிக்கடி இதய துடிப்பை அளந்து அளந்து
அறிக்கை வழங்குகிறது ஒரு இயந்திரம்.
படுக்கைக்கு பக்கவாட்டில் ஒரு பையில் இருந்து
குழல் ஒன்று நீண்டு போர்வைகுள் போனது!!


இரு உயிர் காக்கும் தேவதைகள் அங்கும்
இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.


கொஞ்சநேரத்தில் தேவதை ஒன்று வெளியே வந்தது
விபரம் கேட்டேன் விஷம் விழுங்கியதாய் விளக்கம் தந்தது.


அந்த நிமிடத்தின் என் கடைசி மூச்சு
முழூ உருவம் பெற்று - உன்
அருகே போய் அமர்ந்து கொண்டது.


ஐ.சி.யு கண்னாடி வழியே ’’I SEE YOU’’
இலக்கன சுத்தமாய் ’’I SAW YOU…’’


உள்ளே என் உயிர் அங்குளம் அங்குளமாய் அசைகிறது
வெளியே என் உடல் அங்குளம் அங்குளமாய் எரிகிறது.


உலகின் ஒட்டு மொத்த கடவுளின்
உருவமாய் கண்முன்னே காதல்.


நிலம்,நீர்,தீ,ஆகயம்,காற்று ஐந்தும் கூடி
ஆறாவது பூதமாய் காதல்.


கதறுகிறேன் கதலின் கால் கவ்வி.
கதலியாய் கூட வரவேண்டாம்...
கல்லுரிக்கு வந்தால் போதும்?!!


காதலிடம் கடைசி விண்ணப்பம்.


வெளியே வந்த தேவதை உள்ளே போகும்பொது
ஐ.சி.யு-குள் அனுமதி கேட்டேன்
முதலில் ’’நோ’’ என்று பின் ’’வா’’ என்றது.
வரிசையான  கேள்விகளோடு
’’நீ யார்?இவளுக்கு என்ன வேண்டும்?பெயர்???


’’நான்…. க…..வி. சொந்தம் என்றேன்.


காதல் காக்கும் தேவதை ஐந்து நிமிட
அவகாசம் தந்து அனுப்பிவைதது.
ஐ சி யுவின் வட்டமுகம் மூட


வசதியாய் ஒரு திரை. திரை மூடபட்டது.


பனிதுளியெல்லாம் பூ மீது படித்துறங்கும்-இந்த
பூவொ ஒரு பனிதுளிக்குள் படுத்துகிடந்தது.


அதுவரை அங்கு அமர்ந்திருந்த என் மூச்சு
இடம் மாறி இமைகளில் இதமாய் இருந்து கொண்டது.


அங்கு ஒரு வாசகம் ’’சத்தம் போடதே’’ என்று
காதல் காதில் சத்தமாய் சொன்னது ’’ஸ்பரிசம் பேசு’’ என்று.


ஸ்பரிச சிறகுகளில் இருந்து-ஒரு
இறகு எடுத்து விரல்களுக்குள் வைத்து வருடினேன்.


யார் சொன்னது வாழை எரியாது என்று
வளை உருகும் அளவுக்கு எரிந்தது அவளின் வலக்கை!!


சிறு விசும்பலுடன் விழித்து கொண்டாய்.
இப்பொது இமைகளில் இருந்த மூச்சு
இடம் பெயர்ந்து உன் மூச்சோடு கலந்தது.


ஒரு குட்டி புன்னகை குதித்து வந்தது
இரு இதழ்களுக்கு இடையே.


ஐ சி யு கதவு அதிர்ந்தது….(தொடரும்….)

(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)





இது காதல் கடிதம் அல்ல...(3)


(புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை பாகம் 1... பாகம் 2...)


இதய துடிப்பை இம்சையாய் உணர்த்திய தருணங்கள்...


வரப்போகும் விபரீதம் தெரியாமல் - உனக்கு
அனுப்பபட்டிருந்தது என் இரண்டாம் கடிதம்…
அவசரபட்டு விட்டேனோ…


அலைபாய்கிறது மனது;

இரண்டு மூன்று நாட்களாய் கல்லுரிசலையில்-உன்
கால்தடங்களை கானவில்லை!!!


காய்ந்துபோன சறுகுகள் சத்தம் போட்டு 
சொன்னது வசந்தம் வராததை.

உன்னை தொடர்வது தொல்லை என்று-சொல்லி
இருந்தால் தொடராமல் தொலைந்திருப்பேன்.

கண்டிப்பாய் தெரியும் என் கவிதைகளில்
காயபட்டிருக்க மாட்டாய்.


உன் தோழி ஒருத்தி தொடர்ந்து வந்து
நீ தொலைவாய் எங்கோ துவண்டு கிடப்பதாய்
சொல்லி அந்த விலாசம் தந்தாள்.

அங்கு...

இதய துடிப்பு இரைசலாய் கேட்கும்
எமனின் இல்லம் அது.


உடலை சல்லடையாய் துளைத்து
உயிர்களய் துவைத்து
அனுப்பும் ஆஸ்பத்திரி அது.....(தொடரும்...)



Monday, March 1, 2010

தேநீர் தேவதை...


நீ தேநீர் கோப்பையோடு அடிக்கடி என் முன்
தோன்றும் போதுதான்
நிலவில் கரை படிந்ததின்
காரணம் விளங்குகிறது.

தேநீர் கோப்பை உன் மீது புகார் வாசிக்கிறது
நீ குடித்து வைத்ததும் பெரிய  சர்க்கரை கட்டி என்று
எறும்புகளால் கடத்த படுகிறதாம்.

நீ தேநீர் குடிப்பதாய் சொல்லிவிட்டு
கோப்பையின் விளிம்பில்
கவிதை ஒன்றை பதித்து விட்டு போகிறாய்.
''இது தேவதை குடித்த தேநீர்  கோப்பை'' என்று.

நீ குடித்து மீதியை உன் வீட்டு
நாய் குட்டிக்கு பகிர்ந்தாய்
அது இன்று வரை தேநீர் தீவிரவாதியாய்
கோப்பைகுள்ளே குடிஇருக்கு. 

நீ குடித்த தேநீர்
கழிவுகள் உற்றி வளர்ந்த
காகித பூச்செடி
காதல் பூச்செடியாய் மாறி போனதாம்.





Related Posts with Thumbnails