Monday, January 4, 2010

இது ரவுடிகள் ராஜியம்...


பெயர் : கடவா குரூப்ஸ்  மற்றும் நண்பர்கள்.
தொழில் : இவர்களிடம் வருபவர்களை அடித்து உடைத்து பல நேரம் கடித்து உரு தெரியாமல் ஆக்குவது...
பிடித்தது : தொழிலை சுத்தமாக செய்வது.
பிடிக்காதது : டாக்டர்களை.
பயப்படாதது : எந்த  காக்கி சட்டைக்கும். 
பயப்படுவது : இவர்களை போலவே இருக்கும் போலி குரூப்புகளை..
எங்களின்  தினசரி வாழ்வில் ஒரு நாள்....


ஒல்லியாய் சிக்கென்று கலர் கலரா  இருப்பாள்.கொடி  இடைனு சொன்னா அதுதான் கொடி இடை. இவனுக்கு மட்டும் எப்படி மாசம் ஒருத்தி  மாட்றாளோ??தெரியல... டேய் கடவா  பசங்களா  எங்க எல்லாத்தையும் விட  பெரியவன் நீங்கதான்   உங்க கிட்டதான் அவ ரெம்ப நேரம் கொஞ்சி கொழாவுறா... அவ பேரு என்னனு கேளுங்கடா... இவள் ஒருத்திதான் நம்ம மேல அக்கறைய இருக்கா பேர கேட்டு அப்டியே மடக்கி  போட்டா கொஞ்சநாளக்கு நாங்களும் ஜாலியா இருப்போம்ல....


அட போங்கடா தினமும் யாருடா அதிகமா வேலை செய்றா??நாங்கதான் அதான் எங்கள   கொஞ்ச அதிகமா கவனிக்குறா,  அது உங்களுக்கு பொறுக்கலையா??அதுவும் கொஞ்சம் லேட்டா ஆய்டுச்சுனா  அவள அனுப்பாம வெறும் தண்ணி மட்டும்தான்  குடுக்குறான்  அந்த ''இத்து''  போனவன்.
நாங்க  பாட்டுக்கு ஒரு ஓரமா எங்க  வேலைய பாத்து கிட்டு இருக்கோம்.எதாவது பொண்ணு வந்தா   எப்பவும் முன்னாடி நின்னு ஈ...னு ஈளிசுகிட்டு   போய்டுரீங்க  யாரு  அடிச்சாலும்  எங்க சைடு தான்  அடிக்கிறாகே...  .;


அதுவும் இந்த ரப்பர் தலையன் வந்தா யார அதிகமா  வேலை வாங்குறான்?? எங்களைதான்... தினமும் ஒருதடவையாவது கவனிப்பான்னு  பார்த்தா இந்த ''இத்து'' போனவன் இவ்ளோ  சோம்பேறியா இருக்கான். போன வாரம் என் நண்பன டாக்டர்கிட்ட காமீக்குரேன்னு  கூட்டி போய்    என்னவோ ஆபரேசன் பண்ணறேன்னு அவனையும்  கொன்னுடான் .இந்த ''இத்து'' போனவனுக்காக கஷ்ட்ட படுறது நாங்க;ஆனால்  எங்கள சரியாய் கவனிக்க மாட்டிங்குறான்.எத்தன நாள் வெறும் தண்ணி மட்டும் காட்டிருக்கான்  தெரிமா??அவ்வவ்வ்வ்வ்....நீங்கதான் அவனுக்கு எப்பவும் ஸ்பெஷல்.


அட போட இவனே..
 இந்த ''இத்து'' போனவன் யார்கிட்டயாவது வம்பு இழுத்து சண்டை போட்டா யாருடா அவனுக்காக  அடிவங்குறது...பன்ச்சு விட்டு எங்கலதாண்டா  மோதல அடிச்சு உடைக்குறாங்கே  நாங்க நிக்குறது டேஞ்சர் சோன் மாப்ளே.


ஒவ்வோறு தடவயும் உலகத்த பார்க்கும்போது பக்கு பக்குன்னு இருக்கு தெரிமா..!! எவளையாவது கிண்டல் பன்னிருவானோ என்னவோ ஏதோனு பயமா இருக்கும்.


அது சரி என்னடா... இவ்வளோ நேரமாச்சு இன்னும் தூங்குறான் எவ்ளோ நேரம்தான் மூக்க பிடிச்சுட்டு நிக்குறது?? தாங்க முடியல.  ''இத்து''  போனவன் நைட்டு என்னத்த தின்னான்னு  தெரியல...
 அவளை சீக்கிரம் கண்ணுல காட்டுடா... முடியல....


அவன் கொஞ்சமா கண்ணு முழிச்சு பார்த்தான்.டேய் முழிசுடாண்டா ...ரெடியா இருங்கடா...ஆனால் அவன் அவளை கூப்டாம உள்ள  போய் வெறும் தண்ணி மட்டும் குடுத்துட்டு வந்துட்டான்.. டேய்  இன்னைக்கும் தண்ணி மட்டும் தாண்டி மாப்ளே...நம்ம குடுத்து வச்சது அவ்ளோதான்.இப்படியே போச்சுனா  நம்ம எல்லோரும் சீக்கிரம் செத்துடுவோம்   போல. நாம எல்லாம் எவ்வளோவோ  பரவாஇல்லடா  எங்க அப்பன்  ''பால்''  உயிரோட   இருக்கும்போது  ரெம்பநாள் தண்ணிகூட குடுக்காம  இருந்துருகான். புண்ணியவான்  அல்பாயிசுலையே போய் சேந்துட்டான்... அட விடுடா...என்னைக்குனாலும் சாவு வரத்தான் போகுது. நாம என்ன இவன் பொறக்கும்போது இவன் கூடவே வா பொறந்தோம்.விடுங்கடா...


அவனுக்கு மனசு மாறியது அவளையும் கூப்ட்டு அவ கைல கொஞ்சம்  சரக்கை குடுத்து போய் அவேன்கேள நல்லா   கவனிச்சுட்டுவானு  அனுப்பி  வச்சான். (நாங்க பேசுனது அவனுக்கு கேட்டுருச்சோ??)

அவ வந்ததும் முதலில் கடவா  குரூப்ப  கவனிச்சா. அவ என்ன சரக்கு கொண்டு  வந்தானு தெரியல நல்ல வாசனை ,செம்ம நுரை.
அவ எங்களையும் நல்லா கவனிச்சுட்டு  போயிட்டா.


அவன் மறுபடியும் கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு  வழக்கம் போல ஆரம்பிச்சான்.முதலில் கருப்பா ரெண்டு குண்டனுகள அனுப்பி வச்சான் அவகேள  அடிச்சு ஒடச்சு உள்ள தூக்கி போட்டோம். அவகே  பேரு சீடையாம்.வரிசையா வேற வேற ஐட்டம் வழக்கம் போல ஆரம்பிச்சுட்டான் அந்த ''இத்து'' போன சாப்பாட்டு ராமன்.
இதையும்  படிங்க பிடிக்கும்...      இதுவும்...      


                                                  

Sunday, January 3, 2010

எவனோ சூனியம் வச்சுட்டாகே...

பாலாவும் நானும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். எங்கு  போனாலும் என்ன செய்தாலும் ஒன்னாதான் இருப்போம்.  எங்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இரட்டை பிள்ளைகள் என்றுதான் கூப்டுவாங்க. அதற்க்கு ஏத்த   மாதிரி உருவ ஒற்றுமையும் இருக்கும்.காலைல சண்ட போடுவோம் சாயங்காலம் ஒன்னா ஊர் சுத்துவோம். கோடை விடுமுறைக்கு அவங்க ஊருக்கு நானும் கூட போவேன், அவங்க வீட்டுல நானும் ஒரு பிள்ளை.

ஒருநாள் எங்க வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல ஒரு சின்ன ஓடை இருக்கும் கொஞ்சம் ஆழமாதான் இருக்கும்.அங்கு போனோம் எனக்கு நீச்சல் தெரியாது அவனுக்கு தெரியும்.நான் வேடிக்கை பார்த்து கால் நனைப்பதோடுசரி.

அவன் என்னையும் தண்ணிக்குள் அழைத்தான் ''எனக்கு பயமா இருக்குடா நான் வரல ''என்றேன்.''டேய்...ஒண்ணுமே இல்லடா  நான் இருக்கேன்ல'' என்றான். ''இல்லடா எங்க அப்பாக்கு தெரிஞ்சா என்னைய  கொண்டே போடுவாருடா நான் வரலை''.
''டேய் ஒன்னும் ஆகாது நான் பாத்துக்குறேன்  வா'' என்றான். ''ம்ம்ம்ம்...தெரியும்டா  அடிக்குறத நல்லா வேடிக்கை பார்ப்ப''. ''என்னடா இவ்ளோ பயந்தாகொலியா  இருக்க'' ஆஹா நம்மள  பயந்தாகொளினு சொல்லிட்டானே...  அப்படின்னு எனக்குள்ள இருந்த சிங்கம் என்னைய தண்ணில தள்ளி விட்டுருச்சு.உள்ள போய் கொஞ்சம் தண்ணிய குடிச்சு இரும்பிகிட்டே வெளிய வந்தேன் தோள் கொடுத்தான் தோழன். அடடா அப்போதான் சட்டை, பேன்ட்  எதையுமே கழட்டாம குதுசிடேன்னு தெரிஞ்சது. உள்ள இருந்த சிங்கத்த ஆளவே காணோம். ஒரு கொரங்கு வந்து கி..கி..கி...னு சிரிச்சுட்டு ''மகனே உனக்கு இன்னிக்கு   பொறந்தநாள் கொண்டாட போராங்காடி....''

அவ்வ்வ்வ்...நிஜமாவே அன்னிக்கு எனக்கு  பொறந்தநாள் புது சட்டை போச்சு (சட்டை மட்டும்தான் புதுசு.)நான் செத்தேன்.வேகமா கரைக்கு போய் சுத்தி முத்தி யாரும்  பொம்பள புள்ளைங்க வருதான்னு பாத்துட்டு  சட்டையும் பேன்டையும் கழட்டி ஒரு பாறைல காயவசேன்.அவன் ஆனந்தமா குளிச்சுட்டு வந்தான்.நல்ல வெயில் கொஞ்ச நேரத்துல மூனும்  நல்லா   காஞ்சுருச்சு.(என்னையும் சேர்த்து)...அப்பாடா தப்பிச்சேன்டானு ரெண்டையும் மாட்டிகிட்டு கெளம்புனோம்.

வீடு வந்தாச்சு அப்பா ரெடியா இருக்காரு.?? ஆமாங்க அதேதான் எந்த சொறி புடிச்வனோ சூனியம் வச்சுட்டு எக்ஸ்ட்ரா ரெண்டு எழுமிச்சம் பழத்த  புளிஞ்சு விட்டுட்டு எங்கள போட்டு குடுத்துட்டு போயிருக்கான்.அப்பா என் முடிய பிடிச்சு இழுத்து அடி பின்னி எடுக்குறாரு...நண்பன் சொன்ன சொல்லை கரெக்ட்டா காபாதிட்டான்  கிரிகெட்  மேச் பாக்குற மாதிரி கடைசி பால் வரைக்கும் சேனல மாத்தாம நின்னு பாக்குறான்.

அப்பாவோட அடுத்த எய்ம் பாலா.அவன் கிட்ட போனாரு அப்போதான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருதுச்சு. அவன் கண்ணுல ஒரு பயம் தெரிஞ்சது.''இவன் கூட செந்தா நீயும்  கெட்டு குட்டி செவுரா போயிருவ... போடா  உங்க வீட்டுக்கு'' என்றார். அவன் ஓடி போய்ட்டான்.ஆஹா பயவுள்ள எஸ்கேப் ஆய்ட்டானே.அப்பா அவரோட செகேண்டு  இன்னிங்க்ஸ்  ஆரம்பிச்சுடாரு...

கொஞ்ச நேரத்துல பாலா அம்மா,அப்பா ரெண்டு பெரும் வந்தாங்க.தப்பிச்சுட்டோம்னு நெனச்சேன்.ரெண்டு பெரும் சண்டை போடுறாங்க.''என் புள்ளைய எப்படி நீங்க கெட்டவன்னு சொல்லலாம்...'' இது பாலா அம்மா.''என் புள்ளைய நீங்க எப்படி அடிக்கலாம்...'' இது பாலா அப்பா...எனக்கு புல்லரிச்சு போச்சு..ஆனால் அப்றம் தான் தெரிஞ்சது அவங்க பாலாவ பத்தி பேசுறாங்கனு.

பயவுள்ள அங்க போய் உல்ட்டாவா   போட்டு விட்டுட்டான்.ரெண்டு பெரும்  சண்டை போட்டு போய்ட்டாங்க.உள்ளுக்குள்ள இன்னொரு இன்னிங்க்ஸ் ஆடுவாரோனு பயம் நல்லவேளை இல்லை.மேச் முடிச்சுட்டு   போயிட்டாரு. ரெண்டு குடும்பமும் பேசாம கொஞ்ச நாள் இருந்தாங்க.அனால் அன்னிக்கு  சாயங்காலம் டேய் எங்க மாமா அல்லவா வாங்கிட்டு வந்துச்சுடா இந்தா...ஹாப்பி  பர்த்டே டா...னு ஊட்டி விட்டான். ரெண்டு பெரும் பாதி பாதி சாப்டோம்.
     
இதையும் படிங்க பிடிக்கும்...                                                                                                       


                                                      

Friday, January 1, 2010

கோவம் வேண்டாமடி என் செல்லமே...


ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்கள் அவர்கள். வழக்கமான காலை பொழுது ...வந்துட்டியா, வந்துட்டேன்...இந்தா உம்ம்மஹா...தினமும் காலைல உனக்கு இதேவேலை  முதலாளி இருக்காரு சத்தம்  கேக்கும்ல...அவரு அதெல்லாம் கண்டுக்க  மாட்டாரு...
இப்படி அழகான வழக்கை இவர்களுடையது......   
                  
ஒரு வாரமாவே அவனை கண்டால் அவளுக்கு என்னவோ போல் இருக்கு.(ஈகோ )இபோதெல்லாம், அவன்தொடவரும்போதெல்லாம் அவன்மேல்  மேல்எரிந்து விழுகிறாள்....  

அரை  வாய்  திறந்து, ஓட்டை பல்லோடு, எந்நேரமும்  இளித்து  கொண்டிருக்கும்   ஒஜான்  ஒல்லி பயலே  உனக்கு மட்டும்  ஏன் அப்படி ஒரு ஒய்யார வாழ்க்கை!!?

 இரவெல்லாம் கண்விழித்து மழை வெயில் பாராமல் எவன் வருவனோ என்ன பண்ணுவானோ என்று வேலை பார்ப்பது    நான், ஆம்பளை என்பதால்   உனக்கு மட்டும் ஏ.சி ரூமில் ஏகபோக வாழ்க்கையா...!!??

 பிந்து கோஸ்  என்னை, ஓமகுச்சி நீ, என்னமாய் ஆட்டி வைகிறாய் திண்டுக்கல் குண்டம்மா கூட நீ சொன்னால்  வாய் மூடி ஊமையாய் போகிறாள்.
நீ மட்டும் என்ன அவ்வளோ ஒசத்தி??ஆம்பளை என்பதாலா??? 

'' செல்லம் என் மேல என்ன கோபம் உனக்கு??  நான் வேறு,  நீவேறு என்று ஏன் என்னை பிரித்து பார்க்கிறாய் நான் இல்லாமல் நீ இல்லை  நீ...இல்.......'' நிறுத்து !! பணக்காரனின் பையிலே பவனிக்கிறாய்  அல்லவா உனக்கு இதுவும் இருக்கும் இன்னமும் இருக்கும்.
என்ன சொன்ன??  நீ இல்லாமல் நான் இல்லையா... என் ஒரு அடிக்கு நீ தாங்குவாயா!!??அதை விடு என்னை விற்றால் கொஞ்சம் பேரிச்சம்பழமாவது தேறும், உன்னை எவன் சீண்டுவான்.அவன்''......................''

நீ வேறு, நான் வேறு இல்லை என்று சொல்கிறாயே; ஒரு நாள் ராத்திரியாவது  என்னோடு ஒன்னா  தனியா இருக்க முடியுமா  உன்னால் ??.அது சரியாகாது  செல்லம்... நான் ஜான் பிள்ளை  என்றாலும் ஆண் பிள்ளை இதுதான் நியதி.முதலாளிக்கு யார் பதில் சொல்ல முடியும்??

 இறுதியில் உன் ஆம்பள புத்தியை காமிசுட்ட பாத்தியா...!!எனக்கு நீ வேண்டாம் போய்விடு என்னால் தனியா வாழ முடியும்.
முடியாது!! உன்னை விட்டு என்னால இருக்க முடியாது செல்லம்... கொஞ்சம் கோபத்தை விட்டுட்டு  யோசிமா. நான் இல்லாம எப்படி உன்னால வாழ முடியும்!? நான் இல்லனா உன்ன யாரும் மதிக்க மாட்டங்க மா... சொன்னா கேளு... ப்ளீஸ் அமைதி.

இல்ல நான் முடிவு பண்ணிட்டேன், நாளைக்கு என் முகத்துல முழிக்காத இதுதான் லாஸ்ட் ப்ளீஸ் என்ன நிம்மதியா விடு...இருவரும் பிரிந்தார்கள்.அவன் முதலாளியோடு போனான்.

 வழக்கம போல் மறுநாள் காலை, அவன் வழக்கம் போல் வந்தான். ''ஹாய் செல்லம் கோபம் போயிருச்சா??'' அவள் ஏதும்  பேசவில்லை ஏ....ப்ளீஸ் வாயதொறந்து பேசுமா...ம்ம்ம்ஹும்ம்...அவள் ஊமையாய் இருந்தாள் அவன் என்னவோ தாஜா பண்ணி பார்த்தன் ஒன்னும் நடக்க வில்லை.

 ''ஹே இங்க பாரு டா..நீ வாயதொரக்கலனா நம்ம ரெண்டு பேரையும் கொன்னுடுவாங்க ப்ளீஸ்....''ரெம்ப நேரம் ஆகியும் அவள் வாய் பூட்டியே இருந்தாள்.அவன் கெஞ்சி கெஞ்சி சோர்ந்து போனான்...

திடீர் என்று யாரோ  சுத்தியால் அவளின்  தலையில் ஓங்கி அடிக்க  அவள் மயங்கி போனால் யார்!!?? என்று பார்த்தால்; அவனின்  முதலாளி அவனையும் அவளையும் பிரித்து வைத்து விட்டு அவளை மட்டும்  கூறு கூறாக அறுத்து  வீசி எறிந்தார்  முதலாளி.

 அவனை மட்டும் முதலாளி கையேடு அழைத்து   போனார். அங்கு வேலை பார்க்கும் பையன் இதையும் தூக்கி போடுங்க முதலாளி. ''பழக்க தோஷம் டா.......காலங்காதாலயே     ஒரு செலவு...சரி சரி நீ போய் நல்ல பூட்டா பார்த்து வாங்கிட்டு சிக்கிரம் வா...''அப்போ சாவி வேண்டாமா முதலாளி!!??
டேய் .....சாவி இல்லாம பூட்டு  எதுக்குடா...போட...கிறுக்கு பயலே...               

                                                                      

Wednesday, December 30, 2009

பலூன்கள் விற்பனைக்கு அல்ல...


தலைப்பு எழுதி கவிதைக்காக காத்திருந்தேன்...
வெகு நாள் திருவிழாகாக  காத்திருந்து தன் மொத்த சந்தோசத்தையும் ஒரு ரூபாய் பலூனில் ஊத்தி தீர்க்கும் விளையாட்டு பிள்ளை போல் மணம் கடந்த நாட்களை மட்டுமே அசைபோடுகிறது, கவிதை வந்த பாடில்லை.


 என் நினைவுகளை ஊதி   பெரிதாக்கி வலை பூவில் அலங்கரித்து சேர்த்து புது வருடம் வரவேற்க தோன்றியது.


எப்படியும் விற்று விட வேண்டும் என்று கால கள்வன் கையில் இருக்கும் காற்றடைத்த பலூனும்,எப்படியும் வெடிக்கும் அல்லது ஓட்டை விழுந்து காற்று போகும் எனதெரிந்தும் விரும்பி வாங்கிவந்த பலூனை போலவே  அன்னையின் வயிர் ஊதி வாங்கிவந்த இந்த வழக்கை.


நாம் வெகு நாட்கள் ஆசையாய் ஊதி வைத்த நியாபகங்கள் அழுகையாய் வெடித்து சிதறும் தருணங்களும், கால சுழற்சியில் மெதுவாய் காற்று போய் இருந்த சுவடே தெரியாமல்   துவண்டு போகும் தருணங்களும், ஹைட்ரஜன் அடைத்து உயரே பறக்கும் சந்தோஷ தருணகளும்  கல்லடி பட்டு கடற்கரை மணலில் வெடித்து விழும் வண்ணம் பூசிய தருணங்களும்  எப்படி ஒத்து போகிறது.


பெரிதாய் ஊதி வீட்டுக்குள்  விட்டாலும் காற்றாடியில்   பட்டு கிழிந்து போகும். வெளியே விட்டாலும் கல்லோ முள்ளோ கிழித்து விடும் என்று பயந்து .பாசம் எனும் நூலில் கட்டி பத்திரமாய் பாதுகாத்து பறக்க வேண்டிய  தூரம் வரை பாதுகாப்பாய் நம்மோடு பறந்து பாதியில் விட்டு போகும் பந்தங்கள்.


போதும் என்ற மனமில்லாமல் ஊதி ஊதி பெரிதாக்கி வெடித்ததும் வெடித்து அழுது ,கிழிந்த ஒவொரு துண்டிலும் சிறு சிறு முட்டை செய்து மகிழ்ச்சி கொள்ளும் அதே சிறு பிள்ளை மணம்.


இதய  வடிவ பலூனை இனியவளுக்கு கொடுத்து அதை அவள் இன்னும் பத்திர படுத்தி  வைத்திருக்கிறாள் என்றதும் அந்த பலூனை போலவே பெரிதாய் துடித்த  இதயத்தின் சுகமும்,அவள் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பலூன் ஊதி அலங்கரித்த மேடையும்.அவள் பிள்ளை ''மாமா ஊதி கொடு'' என்று நீட்டிய அந்த பலூனும்.


வந்து போகிரதேன் நினைவில்.நினைவுகள் கனமில்லாம இருந்தாலும் நிறைய ரணங்களோடு வெடித்து முட்டி வெளியேற துடித்து கொண்டிருகிறது.

பி.கு :
ஒரு தலைப்பை எழுதி  விட்டு அத பில்டப் பண்ண நான்பட்டபாடு...
எப்பா...முடியல சமீயோவ்வ்வ்...கடைசியா என்ன  சொல்றனு கேட்டா எல்லோரும் நிறைய பலூன் ஊதி கட்டி அலங்காரம் பண்ணி  புதுவருடத்தை கொண்டாடுங்கோ....தலைப்பில் பாதி வைரமுத்து ஐயா கொடுத்தது...பதிவுக்கும் பலூனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில்  சொல்லவும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனைவருக்கும்.     




                               

Saturday, December 26, 2009

ஓமகசியா....ஓஓஓஓ....மகசியா....



ஓ..மகசியா...ஓ.....மகசியா...நக்குமுக்கனக்க....பூம்சகளாக...ரண்டக்க...ரண்டக்க...
ஹசிலி ...பிசிலி....சக்க...ஜிக்கா...முக்கால...பல்லேலக்க..... 



என்ன மக்கள்ஸ் ஒண்ணுமே புரியலையா....இது எல்லாம் நம்ம தமிழ் படங்கள்  பாட்டுல வந்த வார்த்தைகள்...இப்போ தமிழ்படம்-னு ஒரு படம் வரபோகுதுல...

அந்த படத்துல ஒரு பாட்டு ,இப்டி நமக்கு புரியாத வார்த்தைகள் மட்டும் எடுத்து முழு பாட்டும்  எழுதி  இருக்காங்க.... என்ன கொடுமை சரவணன் இதுனுதான் கேக்கதொணுது...தமிழ்ல வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போச்சோனு ஒரு சந்தேகம்.




நம்  தமிழுக்கு இப்டி ஒரு சோதனைய???பாட்ட பாடுறது ஒரு பெரிய பாடகர்...

மக்கள்ஸ்...கேட்டுட்டு உங்கள் கருத்த  (கதறுங்க)சொல்லுங்க.... படம் ரெம்ப வித்யாசமா இருக்குனு ஒரு விளம்பரம் வேறு  இதுதான் வித்யாசமா???
ஏதோ கொஞ்சம் எழுதுனாங்க போருதுகிட்டோம் இப்டி ஒரே அடியா போட்டா  தமிழ்   இனி மெல்ல சாகாது..._______________________

பொதுவா சினிமா பதிவு ஏதும் எழுதுறது  இல்ல...என்ன பண்றது என் ஆதங்கத்த உங்க கிட்டதான கொட்ட முடியும்...நான்வேற எங்க போவேன்....உங்க ஆதங்கத்தயும் கொட்டிட்டு போங்க...நாம எல்லாம் எவ்ளோ பாவம்....இல்ல...

இதுவும் பிடிக்கும்...

ஆறு மனமே...ஆறு...

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

ஆறு மனமே...ஆறு...




என்னடா இவன் புதுவருஷம் வரபோகுது சோகமான தலைப்பு போட்டு இருக்கானேன்னு   பார்க்க வேண்டாம்...இன்னும் ஆறு  நாள் தான் இருக்கு அப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு (ஆமா யாருக்கும் தெரியாதத  சொல்லிடியாக்கும்...)


அனால் இந்த தலைப்பு உள்மனசின் சோகம் கூட சொல்றமாதிரி இல்ல???(ஆமா...ஆமா..)இந்த வருடம் முடிய இன்னும் ஆறு நாள் தான் இருக்கு அனால் இங்க அந்த அறிகுறியே தெரியல...நம்ம ஊர்ல இருந்தா இப்போ  இருந்தே ஆரமபிசுருபோம் நம்ம அழிசாடியத்தை.


அதெல்லாம் மிஸ் பண்றதால என் மறக்க முடியாத நியூ இயர் அனுபவம் சொல்ல ஆசை படுறேன்.(ஏன்டா படுத்துற சொல்லு...)
மூணு வருசத்துக்கு முன்னாடி நியூ இயர் டே...
வீட்டுல  எல்லோரும் சேர்ந்து வெளிய போகலாம் முடிவு ,பீச் நிறைவாட்டி போயாச்சு வேற  ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கணும்...அந்த பொறுப்பு எப்பவும் எனக்குத்தான்...நான் ரெம்ப  யோசிச்சு கண்டு புடிச்ச இடம்தான் கிண்டி சிறுவர் பூங்கா...(என்னவோ நீயே கண்டுபிடுச்சமாதிரி சொல்லற...மேட்டருக்கு  வா..)எனக்கு குழந்தைகளை ரசிக்க பிடிக்கும்(அது இல்ல உன் சொந்தகாரவங்க பாதி அங்கதான இருக்காங்க ) சோ என்னோட சாயிஸ் எப்பவுமே அதான்...


கூடவே மேல் வீட்டு அக்காவும் வர்றேன்னு சொன்னாங்க அவங்கதான் புஜ்ஜியோட அம்மா (புஜ்ஜி யாருன்னு தெரியணும்னா என்னோட இந்த பதிவ படிச்சு பாருங்க...)அம்மா,அக்கா,புஜ்ஜி குட்டி,  (நான் அவளை தூக்கி கொண்டேன்),அவங்க அம்மா,அவங்க முத்த பொண்ணு கோபிகா அவளுக்கு அப்போ 2 /12 வயசு. டீம் ஹெட் நான் எல்லோரும் கெளம்பிட்டோம்.


அங்க போய் எல்லோரு சேர்ந்து ஒரு சின்ன விளையாட்டு போட்டி நடத்துனோம்.அதுல எந்த சுவாரஸ்யமும் இல்ல.அங்க வந்த மூணு குட்டி பசங்க இல்ல புட்டி பசங்க!!! ஆம் அரை போதையில் மூவரும் நியூ இயர் விஷ் பன்றேன்ற பேர்ல பெண்களை  கிண்டல் பண்றதும் அவர்கள் அருகில் போய் ''ஹாய் மாமாக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லு....''னு சொல்லி தொல்லை  குடுத்துட்டு இருந்தாங்க.இப்படி ஒரு பொது இடத்தில நகரீனம் இல்லாம நடந்த்துகிட்டது அனைவரையும் முகம் சுளிக்க செய்தது. அதை எதிர்த்து  கேட்ட ஒருத்தருக்கும் அந்த பசங்களுக்கும் பெரிய சண்டையே வந்துருச்சு.எல்லோரும் அதையே வேடிக்கை பாத்துட்டு  இருந்தோம்.திடீர்னு புஜ்ஜி அம்மா கோபிகா எங்கனு கேட்க எல்லோரும் அக்கம் பக்கம் பார்க்க கோபிகாவை காணோம்....


அனைவரும் பதறி போய் ஆளுக்கொரு திசையாய் தெறித்து ஓடினோம்.புஜ்ஜி அம்மா அழுது கொண்டே தேடுறாங்க. நான் பூஜ்ஜிய தூக்கிட்டு தேடுறேன்.எந்த  ஒரு குட்டி பொண்ண பார்த்தாலும் அது கோபிகா மாதிரியே தெரிது.ரெம்ப நேரமா கிடைக்கவே இல்லை.அங்க இருந்தா எல்லோரிடமு விசாரிச்சு பாக்குறோம் ம்ம்கும்...


அங்க இருக்குற அலுவலகத்தில்  புகார் கொடுத்து அவங்களும் தேடுறாங்க.நான் ஒரு ரவுண்ட் அடிச்சு மீண்டும் நாங்க அமர்ந்த இடத்துக்கே திரும்பினேன்.யாரோ ஒரு ஆள் ஒரு குட்டி பொண்ணுக்கு  ஐஸ்க்ரீம் குடுக்குறான் அவ வாங்காம அழுதுட்டே இருக்கா.அது கோபியோனு சந்தேகத்துல கிட்ட போய் பார்த்தா அவளேதான்.கோபின்னு கூப்பிட்டதும் ஓடிவந்து  என் கால்களை கட்டி பிடிசுகிட்டா.  அப்பாடா... அப்போதான் உயிரே வந்துச்சு.''என்ன விட்டது  எங்க போன ...''மழலையில் கேட்க நான் அவளை கட்டி கொண்டேன்.அந்த ஆள் எங்கனு பார்த்தா அவன் மாயம்...நல்லவேளை இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டேன்.

பின்  மற்றவர்களுக்காய்  காத்திருந்து யாரும் அங்கு வரவில்லை மீண்டும் அலுவலகம் போய் எல்லோரும்   ஒன்று சேர்ந்தோம். அப்போது அந்த ஆள் பற்றி யாரிடமும்  சொல்லவில்லை மேலும் பயந்து விடுவார்கள் அல்லவா?இன்னும் யாருக்கும் தெரியாது...

இப்படி அந்த வரும் பரபரப்பாய் வந்த  வருடம். இப்போ அந்த  நியபகங்களோடு இதோ எந்த ஆரவாரமும்  இல்லாமல் இன்னொரு வருடம் வரவேற்க தயாராய்...                                                                                 


Monday, December 21, 2009

புன்னகை திருடி...


பூக்களை திருடி புன்னகைக்க 
கற்று கொண்டவள் நீ.
இப்போது பூக்கள் கூட எனக்காய்
 புன்னகைப்பது  கிடையாது. 


சிரிக்க மறந்து விட்டேன்.
சில்லறைக்கு   கூட சிரிக்க மறுக்கிறேன். 
சிந்தனை சிறகு விரித்து
சிட்டு குருவியாய்
சிறகடித்து பறந்தவன் நான்.
நீ சிறிதாய் சிரிக்கும்போது கூட
சில்லென சிலிர்த்து
சிகரம் போய் வருபவன் நான்.


சிந்தனையில் சிரகடிப்பதோ நீ.
உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்.


சின்ன சின்ன
சிறகுகள் விரித்து
சிட்டாய் பறக்கும்
பட்டாம் பூசியே 
அவளை பார்த்தால்  .
சிணுங்கள் சிரிப்பை
சிதறாமல் சேர்த்து வரச்சொல்.
சிரிக்க மறந்ததால் சீக்கிரம்
செத்து விடுவேன் போல் தெரிகிறது...                                                                                                          
இங்கே... இதையும் படிங்க...                                                    
Related Posts with Thumbnails