(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)
புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை
பாகம் 1...
பாகம் 2...
பாகம் 3...
பாகம் 4... இனி...
நானும் அதிர்ந்து போய்;
எழுந்து ஒழிந்து கொண்டேன்.
ஒரு அம்மா அவசரமாய் உள்ளே வந்தார்;
அவளின் அம்மாவோ ?கேட்டால் என்ன சொல்ல?
மெல்ல நகர நினைக்கும் அகர நொடியில்;
அவரின் கழுத்தை கவனிக்க சொன்னது காதல்.
இரு கைகளால் இறுக்க கட்டி கொண்டிருந்தது
இதயத்துடிப்பை காட்டிகொடுக்கும் கருவி.
அறையில் மருந்து வாசம் போய்
மருத்துவர் வாசம் வந்தது.
அந்த கண்கள் கண்ணாடிக்கு வெளியே வந்து கேட்டது
அதே கேள்விகளை...யார் நீ?இவளுக்கு என்ன வேண்டும்??பெயர்???
என்னிடமும் தயாராய் இருந்தது
அதே பதில்கள்.நான் கா....வி.சொந்தம் என்று.
உன் இதயத்துடிப்பை கணக்கெடுத்தது கருவி.
ஆச்சரியம்!!!
நேற்று இறக்கவா?இயங்கவா??இருக்கவா??போகவா என்ற
இதய துடிப்பு இன்று இரண்டாய் துடிக்கிறதே!!!
கருப்பு நிற கிறுக்கலில் கவிதை வாசிக்கிறது
கருவியின் அறிக்கை.
காயிச்சல் மட்டும் குறையவில்லை
கவலை இல்லை.
மருந்து கொடுக்க சொல்லி
மறைந்தார் மருத்துவர்.
வெறும் வயிற்றுக்கும் மருந்துக்கும் ஆகாது.
உணவு வாங்கிவர உத்தரவிட்டது வெள்ளை தேவதை.
விரைந்து பறந்து வாங்கிவந்தேன் ஆரியபவன் இட்லி.
''சத்து இழந்த உடம்பு இது இப்போது
இவளால் இயங்கமுடியாது ஊட்டி விடு'' என்றது
கமுக்கமாய் காதில் - காதல்...(தொடரும்...)
(நீளமாய் இருந்தாலும் பொறுமையாய் படித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...)
10 comments:
கருப்பு நிற கிறுக்கலில் கவிதை வாசிக்கிறது
கருவியின் அறிக்கை.
atataa..kavithai wayamikka varikaL enpathu ithuthaanoo?
அந்த கண்கள் கண்ணாடிக்கு வெளியே வந்து கேட்டது
அதே கேள்விகளை...யார் நீ?இவளுக்கு என்ன வேண்டும்??பெயர்???
என்னிடமும் தயாராய் இருந்தது
அதே பதில்கள்.நான் கா....வி.சொந்தம் என்று.
உன் இதயத்துடிப்பை கணக்கெடுத்தது கருவி.
ஆச்சரியம்!!!
நேற்று இறக்கவா?இயங்கவா??இருக்கவா??போகவா என்ற
இதய துடிப்பு இன்று இரண்டாய் துடிக்கிறதே!!!
supper.............
தொடர் கவிதை என்ற போதும், தொடர்ந்து படிக்கிறேன்.
;) நல்லா ரசிக்கும் படியான புனைவு.. தொடருங்கள்..!!
ஸாதிகா said...
கருப்பு நிற கிறுக்கலில் கவிதை வாசிக்கிறது
கருவியின் அறிக்கை.
atataa..kavithai wayamikka varikaL enpathu ithuthaanoo?
//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...ஸாதிகா..//
vidivelli said...
//அந்த கண்கள் கண்ணாடிக்கு வெளியே வந்து கேட்டது
அதே கேள்விகளை...யார் நீ?இவளுக்கு என்ன வேண்டும்??பெயர்???
என்னிடமும் தயாராய் இருந்தது
அதே பதில்கள்.நான் கா....வி.சொந்தம் என்று.
உன் இதயத்துடிப்பை கணக்கெடுத்தது கருவி.
ஆச்சரியம்!!!
நேற்று இறக்கவா?இயங்கவா??இருக்கவா??போகவா என்ற
இதய துடிப்பு இன்று இரண்டாய் துடிக்கிறதே!!!//
...
supper.............//
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி...விடிவெள்ளி
தமிழ் உதயம் said...
//தொடர் கவிதை என்ற போதும், தொடர்ந்து படிக்கிறேன்.//
தொடர் கவிதையை தொடர்ந்து படித்து தொடர்ந்து வருவதற்கு நன்றி ரமேஷ்...
Sivaji Sankar said...
//;) நல்லா ரசிக்கும் படியான புனைவு.. தொடருங்கள்..!!//
தொடர்ந்து வந்து கருத்து தருவதற்கு நன்றி...சிவாஜி...
எனது இந்த முயற்சிக்கு துணையாய் இருக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் கனியின் உள்ளம் கனிந்த நன்றிகள்...
உங்கள் காதல் க(வி)தை ஐந்தும் இப்போதுதான் படித்து முடித்தேன். நல்லா இருக்கு என்ற ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியவில்லை. பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைத்ததும் வந்து கமெண்ட் போடுகிறேன்!
//நிலம்,நீர்,தீ,ஆகயம்,காற்று ஐந்தும் கூடி
ஆறாவது பூதமாய் காதல்.//.....
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
Priya said...
//உங்கள் காதல் க(வி)தை ஐந்தும் இப்போதுதான் படித்து முடித்தேன். நல்லா இருக்கு என்ற ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியவில்லை. பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைத்ததும் வந்து கமெண்ட் போடுகிறேன்!///
//நிலம்,நீர்,தீ,ஆகயம்,காற்று ஐந்தும் கூடி
ஆறாவது பூதமாய் காதல்.//.....
///எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!///
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்...நன்றி என் எழுத்துகள் உங்களை மிகவும் கவர்திருக்கிறது என்பதில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி...நன்றி பிரியா...தொடர்ந்து வந்து ஆதரவு தருவதற்கு ....
அழகான வார்த்தைகள்..
அடுத்த கடிதத்துக்கு வெயிட்டிங்..
சுசி said...
//அழகான வார்த்தைகள்..
அடுத்த கடிதத்துக்கு வெயிட்டிங்..//
ஐ...சுசி...வங்க...
வருகைக்கும் காத்திருந்து கவிதையில் கரைவதற்கும் நன்றிகள்...
உங்கள் வருகை எனக்கு மிக பெரிய உற்சாகம் கொடுக்கிறது....
Post a Comment