பட்டு வண்ண சிறகுகள்;
பாவம் அறியா தேகம்;
பாவை உடல்;
பக்குவமான படபடப்பு ;
பணி துளிக்கும் வலிக்காத பாதம்.
இப்படி தெரிந்த நான் இன்று...
உஷ்ணத்தின் உச்சநிலை சூட்டில்
உணர்வுகள் செத்து போய்
உறக்கம் அத்து போய்
உலகமே உஷ்ணமாய்...
உங்களுக்கு பாடமாய்...
தொட்டு பாத்தாலே
துவண்டு விடும் சிறகுகளை...
சுட்டு பார்த்து ஆனந்தம் கொள்கிறது நரக நெருப்பு.
இரண்டு சென்டிமீட்டர் உடம்பை
இரண்டு மணிநேரமாய் எரித்து.
கருகிய சாம்பலில் மீண்டும் முளைக்கிறது
புதிய உடல்,புதிய சிறகுகள்-மீண்டும்...மீண்டும்...
சுட்டு பார்த்து ஆனந்தம் கொள்கிறது நரக நெருப்பு.
ஏன் இந்த தண்டனை எனக்கு...??
வெட்கம் பழகாத;
விபரம் அறியாத;
வெள்ளி மலர் மொட்டை,
காமத்தீ கொண்டு
கடைசிவரை தீண்டி;
காயம் தந்து
கலவர படுத்தியதற்காய்....
பருவம் அடையா (மலர்) பெண்ணை
திருடி தழுவ திட்டமிட்ட கள்வன் நான்...
7 comments:
சுட்டு பார்த்து ஆனந்தம் கொள்கிறது நரக நெருப்பு.//
சில சம்பவங்கள் வந்து போகின்றன.. ம்ம்ம் கள்வர்களுக்கு உரைக்கும்..
கவிதையும் அதற்கேற்ற தலைப்பும் அருமையாக இருக்கிறது!
உஷ்ணத்தின் உச்சநிலை சூட்டில்
உணர்வுகள் செத்து போய்
உறக்கம் அத்து போய்
உலகமே உஷ்ணமாய்...
உங்களுக்கு பாடமாய்
ஆகா அருமை அருமை
அழகிய கவிதை
அத்தனையும் அழகு...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....
பருவம் அடையா (மலர்) பெண்ணை
திருடி தழுவ திட்டமிட்ட கள்வன் நான்...
வித்தியாசமான கற்பனை.
நல்லா இருக்குங்க சீமான்.
அருமையான தலைப்பும்,கவிதையும்.சீமான் கனியின் கவிதைகளில் வரவர மெருகு கூடிக்கொண்டே போகிறது.வாழ்த்துக்கள்!
Sivaji Sankar said...
///சுட்டு பார்த்து ஆனந்தம் கொள்கிறது நரக நெருப்பு.//
சில சம்பவங்கள் வந்து போகின்றன.. ம்ம்ம் கள்வர்களுக்கு உரைக்கும்..///
ம்ம்ம்ம்...உரைக்கனும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவாஜி...
Priya said...
//கவிதையும் அதற்கேற்ற தலைப்பும் அருமையாக இருக்கிறது!///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா...
vidivelli said...
//உஷ்ணத்தின் உச்சநிலை சூட்டில்
உணர்வுகள் செத்து போய்
உறக்கம் அத்து போய்
உலகமே உஷ்ணமாய்...
உங்களுக்கு பாடமாய்
ஆகா அருமை அருமை
அழகிய கவிதை
அத்தனையும் அழகு...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....///
உங்கள் கருத்தும் ரசனையும் எனக்கு பிடிச்சிருக்கு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விடிவெள்ளி...
தமிழ் உதயம் said...
//பருவம் அடையா (மலர்) பெண்ணை
திருடி தழுவ திட்டமிட்ட கள்வன் நான்...
வித்தியாசமான கற்பனை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ் ஜி...
சுசி said...
//நல்லா இருக்குங்க சீமான்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..சுசி..
ஸாதிகா said...
//அருமையான தலைப்பும்,கவிதையும்.சீமான் கனியின் கவிதைகளில் வரவர மெருகு கூடிக்கொண்டே போகிறது.வாழ்த்துக்கள்!//
ஆமாவா!!!!
அக்கா நெசமாவா??வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸாதி(கா)...
Post a Comment