நான் பட்டணம் விட்டு ஊர் வந்திருக்கிறேன் என்று உனக்கு எப்படித்தான் தெரிந்ததோ உன் அம்மாவை தூதுவிட்டு நீ பள்ளிக்கு போகாமல் எனக்காய் காத்திருப்பதை உறுதி படுத்தினாய் .என் பாட்டிக்கு சோப்பு போட்டு உன் வீடு வருவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது .உன், காத்திருப்பை காட்டிகொள்ளதது போல் டிவி பார்த்து கொண்டு ஒரு ஓர பார்வையால் என்னையும் பார்த்துகொள்கிறாய் ''எப்போ வந்திங்க'' என்று உன் உதடு ஒரு கேள்வி கேட்டு முடிப்பதற்குள் உன் பர்ர்வை ஆயரம் கேள்வி கேட்கிறதே!! என்ன செய்ய????இருந்தாலும் இரவுதான் என்று பதில் சொல்லி எதிரே அமர்கிறேன்...கொஞ்சம் கொஞ்சமாய் சமாதனம் ஆகிறாய் .உடம்புக்கு என்ன என்றதும் ஒண்ணுமில்லை என்றாய் உன் அண்ணனின் நண்பன் என்பதாலோ நம் உரையாடல்....சில வார்த்தைகளிலேயே முடிந்து விடுகிறது...எதற்கு!!?? நம் பார்வைதான் ஓயாமல் பேசிக்கொள்கிறதே...அதுஎன்ன மாயமோ நமக்கு பிடித்த பாடல்களை மட்டுமே உன் வீட்டு டிவி ஒளிபரப்புகிறது இடை இடையே ''இந்த பாடல் பிடிக்குமா ???ஏன் பிடிக்கும்,''?? கேள்விவேறு....பிறகு இத்தனை நாள் எனக்காய் சேர்த்து வைத்திருந்த கவிதைகளை பகிர்கிறாய் நான் காற்றோடு கரைகிறேன்....மொட்டை மாடி ரெட்டை நிலவாய் நீயும் நிலவும்....நாளை என்னோடு கோவிலுக்கு வரச்சொல்லி விடைபெறுகிறாய்,நான் வானம் பார்த்து கிடக்கிறேன்....நிலவை காணவில்லை ..ஒ....அதுதான் உன் விட்டு போர்வைக்குள் உறங்குகிறதே.....மறந்தேபோனேன்...
மீண்டும் நாளை....(தொடரும்....)
மீண்டும் நாளை....(தொடரும்....)
7 comments:
தொடருங்கள்., எதோ அரங்க்கேறப்போகிறதா? ...........அண்ணாவின் நண்பன்
என்பதால் .......? மீதிகாய் காத்திருக்கிறோம். நல்ல முடிவாய் அமையட்டும்.
மிகுதியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். அவசரமாய்த் தொடருங்கள்....
வந்து உற்சாகம் தந்ததற்கு நன்றி....
ப்ளீஸ் நாளை வரை காத்திருக்கவும்....
நன்று சீமான் தொடருங்கள்
நிலாமதி said...
//தொடருங்கள்., எதோ அரங்க்கேறப்போகிறதா? ...........அண்ணாவின் நண்பன்
என்பதால் .......? மீதிகாய் காத்திருக்கிறோம். நல்ல முடிவாய் அமையட்டும்.//வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி....
சப்ராஸ் அபூ பக்கர் said...
//மிகுதியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். அவசரமாய்த் தொடருங்கள்....
வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி....//
தொடரும் சக்தி....
வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி....
அழகு...அழகு...கவிதையோடு இணைந்த காதல் அழகு...மிகவும் ரசித்தேன்! படிக்கும் போது, நம் காதல் நாட்கள் கண்முன் வந்து நம்மையறியாமல் வெட்கம் சூழ்ந்து கொள்கிறது...
SUMAZLA/சுமஜ்லா said...
//அழகு...அழகு...கவிதையோடு இணைந்த காதல் அழகு...மிகவும் ரசித்தேன்! படிக்கும் போது, நம் காதல் நாட்கள் கண்முன் வந்து நம்மையறியாமல் வெட்கம் சூழ்ந்து கொள்கிறது...//
நன்றி அக்கா...
படித்து ரசித்து பாராட்டியதிற்கு ....
தொடர் உற்சாகதிர்ற்கும் நன்றிகள் பல ....
Post a Comment