நிலவு...இல்லை,இல்லை நீ.....
ஓர் முழு நிலா இரவு ...
இறைவன் பூமிஇறங்கி வந்தான்.,
தேவதை தெரு தேடி எப்படியோ உன் வீட்டு வாசல் வந்துவிட்டான்
அண்ணாந்து மொட்டை மாடி பார்கையில் அதிர்ச்சி !!!!!????
நான் படைத்து ஒற்றை நிலவு !!!???.,
இன்று எப்படி ரெட்டை நிலவு ???
இது பிழையென்று...
வானம் விரைந்தவன் நிலவு ஒன்றை உடைத்து ,
துகள்களை விண்ணில் வீசி எறிந்தான்....
மீண்டும் ஓர் முழு நிலவு நாள் ...
தேவதை தேடி இறைவனின் பயணம்...
மீண்டும் இரு நிலவு ,மீண்டும் நிலவு துகள்கள் ....
இது காலங்காலமாய் நடந்தேறி கொண்டிருக்க -பாவம்
அவனுக்குத் தெரியவில்லை -நீ
நீயே தான் இன்னொரு நிலவாய் வானம் பார்க்கிறாய்
அவனோ குழம்பிப்போய் நட்சத்திரங்களை
பிரசவிக்கிறான்....
No comments:
Post a Comment