
(இன்று...)
எழுந்து வாசல் பார்க்கிறேன் அழகான பூக்கோலம்...சிறிது நேரத்தில் கோலம் நகர்ந்து வீட்டுக்குள் போனது....அப்போதுதான் உணர்ந்தேன் நீ அவ்வளவு நேரம் வாசலில் அமர்திருந்தாய் என்று.. தேநீர் அருந்தி குளித்து வந்தாய் ..அடுத்து நானும் போனேன்.. என்னை பார்த்து கத்திவிட்டது உன் வீட்டு குளியலறை இது ''தேவதை குளித்த குளியலறை'' என்று என்னை வெறுப்போடு வரவேற்றது.... உன் தரிசனம் தாக்கிய குளியலறை, உன் வாசம் பூசிய சோப்பு ,நீ ஒட்டி வைத்த போட்டும் என்னை வெறித்தவன்னம் இருக்க...உன் வாசம் பூசிய சோப்பை நானும் பூசிக் கொண்டேன்...என்னை சபித்து வெளியனுப்பியது உன் குளியலறை... அடுத்து அலங்காரம் செய்வதற்காய் கண்ணாடி பார்கிறாய் உன்னை பார்த்து தன்னை சரிசெய்துகொள்கிறது கண்ணாடி...பின் எங்கோ மறைந்து ஆடை மாற்றி வருகிறாய்...உனக்காக எழுதிய கவிதையை ஒவ்வொரு முறையும் சாரிபார்பதுபோல் ஒவ்வொன்றாய் சரிசெய்கிறாய்...பூச்சுடுகிறாய். பூ உன்னை காட்டி கேட்கிறது...இது என்ன பூ...!!!???இவ்வளவு அழகாய் இருக்கிறதே....?என் மூச்சை எல்லாம் களவாடி புறப்படுகிறாய்....வெளியே பூவில் தேன் குடிக்கிறது வண்டு ..ஆம் நீ குடை பிடித்து போகிறாய்.... உன் நினைவுகளோடு நானும் ஊர் திரும்புகிறேன்....(தொடரும்...)
5 comments:
சரிபற்பதுபோல் சரிபார்ப்பதுபோல்
இவளவு இவ்வளவு
பூச்துடுகிறாய் பூச்சூடுகிறாய்
திருத்துங்கள் சீமான்
அருமை
நன்றி சக்தி....பிழைகளை சுட்டி காட்டியதற்கும், வருகைக்கும்,உற்சாகத்திற்கும்
பிழைகள் சரிசெய்து விட்டேன்.....
//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
வருகைக்கும் பதிவிர்ற்கும் நன்றி பிரபா..இதோ இப்போதே வந்து விடுவோம்.......
Post a Comment