
நிலா கவிதைகள்
அடி என்னவளே,
ஏங்குகிறேன் உன்மேல் -எங்கே
திருடினாய் இவ்ளவு அழகை.,
ஒளியால் உன்வசபடுதுகிறாய் உலகை.
அடி என்னவளே,
ஏங்குகிறேன் உன்மேல் -எங்கே
திருடினாய் இவ்ளவு அழகை.,
ஒளியால் உன்வசபடுதுகிறாய் உலகை.
உன் பால் முகம் வடிகிறது என் இரவுகளில்...
நட்சத்திரங்களை காண தவம் கிடக்கிறோம் இங்கே
நட்சத்திரங்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன -உன்னை
காண அங்கே கண்ன்சிமிட்டியவாரே .,
நாணத்தால் மேகத்தில் ஒழிகிறபோது ,
வானத்தில் விழி அலைகிறது .,
நீ இல்லாத அந்த கொடுமை இரவுகளுக்கு -இங்கே
அம்மாவாசை என்று பெயர்.,
நீ ஏழைகளின் ,....
இருள் துடைககவந்த விரல்- உன்னை
அடைந்த ஆனந்தத்தில் ஆர்பரிகிறது கடல்,.
வளர் பிறைகளில் உறைகிறேன்,
தேய் பிறைகளில் உருகுகிறேன்.,
மாலையில் மலரும் மகரந்தம் இல்லா பூ நீ...
காலையில் கதிரவன்(காதலன்) கண்பட்டதும்
ஏனோ மறைகிறாய் ????
உன்னை முத்தமிட்ட கார்முகிலன் -மின்னல்
காட்டி சிரிக்கிறான் என் ஜன்னலில்.,
உன் கரம் பிடித்து வலம்வர - காத்துகிடக்கிறேன்
வானம் காட்டி குட்டி போவாயா????
இவன்,
நிலாபிரியன்......
No comments:
Post a Comment