(இன்று...)
உன்னோடு நான் மட்டும் வருவதாய் நினைத்திருக்க...நீ வருகிறாய் ஒரு பட்டாளத்தோடு ,உன் அம்மா,எதிர் வீட்டு தோழி சகலமுமாய் வருகிறாய் பத்தாக்குறைக்கு என் எதிரி உன் அடுத்த வீட்டு நாலு வயசு குட்டி பிசாசுவேறு ... ஏக்க பார்வையை ஏளனமாய் பார்த்துவிட்டு ரெடியா என்றாய் ம்ம்...என்று நகர்ந்தோம்....வந்தான் உன் பாழாய்போன அண்ணன் பைக்கொடு என்னை பின்னால் அமர்த்தி பறந்தான்... கோவில். நிமிடத்தில் கோவில்... ஐயோ ஆசையெல்லாம் தூள் ,தூள் ஆனது....
கோவில் ...நீ எபோது உள்ளே வந்தாய் என்று தெரியவில்லை .உன்னை தேடி அலைந்த விழியை நிறுத்தியது உன் சிவப்பு துப்பட்டா அது நீதானா என்பதை உறுதிசெய்ய உன் அம்மாவின் சேலை தேடி உறுதி செய்தேன்...அது என்னவோ கடவுளே வந்து தரிசனம் தருவதுபோல் பின்னால் இருக்கும் இந்த சாத்தனை உன் முகம் திரும்ப மறுக்கிறது. என் விழியோ உன் பின்னாலே காத்துகிடக்கிறது...பள்ளி முடிந்தது. மனம் இறங்கிய உன் அண்ணன் வண்டியை எனிடம் கொடுத்துவிட்டு வேறு நண்பனோடு எங்கோ செல்கிறான்...ஆஹா..இன்று எப்படியும் உன்னை பின்னே இருத்தி பறக்கவேண்டும் என்று உன்னோடு உலா போகும் கட்சிக்காய் காத்துஇருந்தேன் ... நீ எப்போதும் எனக்காய் ஒரு பார்வை வைத்திருப்பாயே அதை பரிசளித்து விட்டு அருகே வந்து உன் அம்மாவை இருத்தி விட்டு நீ தோழிகளோடு நடந்து வருகிறாய் ஏமாற்றம் தான்.... இம்ம்ம்ம்ம்.....என்னசெய்ய உன்னை ஆழமாய் பர்ர்த்து விட்டு வீடு விரைகிறேன்.
அன்று உன்வீட்டில் தான் மதிய விருந்து...நான் உனக்காய் இடம் விட்டு அமர்கிறேன்...நீயோ அடுத்த வீட்டு குட்டி பையனை இருவருக்கும் இடையே திணிக்கிறாய் அவன் ''தை...மம்மு...ட்டு...'' மழலையில் சோறு ஊட்ட சொல்கிறான்...உன் தேன்குழல் நனைத்து ஒருவாய் ஊட்டியதும் என்னை பார்த்து இளிக்கிறான்..... நான் சொன்னது சரிதானே...குட்டி சாத்தான்...அதை பார்த்தே பசி தீர்ந்து போனது எனக்கு .குட்டி உறக்கம்.. மலர்ந்தது மலை பொழுது மாடியில் வானம் பார்த்தவாறு நான், வருகிறாய் தேநீர் கோப்பையுடன் .,கிழே இருந்து உன் அம்மாவின் குரல் ''யே...அது உங்க அப்பாவுக்கு டீ...சீனி போடலை...''என்று... ''பரவ இல்லை குடிங்க'' என்றாய் அட அதில் சீனி இருந்தது கூடவே உன் இதழ் ரேகையும்...''12-ம் வகுப்பு பாடத்திட்டம் எப்படி'' என்றேன்... ''ம்ம்ம்....ரெம்ப முக்கியம்''...என்ன!!??''ரெம்ப நல்ல இருக்கு...'' என்றாய் நிலா பிடிக்குமா ?என்றாய் உன்னை பிடிக்கும் என்றேன் ..தேநீர் தீர்ந்து போயிருந்தது அதில் கொஞ்சம் காதல் ஊற்றி நமக்கான வானில் இருவரும் பருகினோம்...வானம் பார்த்து கேள்வி கேட்டாய் நிலா என்ன செய்கிறது என்று புள்ளி வைத்து என்ன கோலம் போடலாம் என்று யோசிக்கிறாள் உன்னை போல.....வழக்கம் போல் உன் போர்வைக்குள் ஒழிந்து கொண்டது நிலவு ...நானும் உன் அண்ணனும் அங்கேயே உறங்கிபோனோம் இல்லை அவன் உறங்கிபோணன் நானும் நீயும் வானில் மீண்டும் நாளை...(தொடரும்...)
No comments:
Post a Comment