
''ஏய் !!
என்ன
எழுதுகிறாய்
என்றாய் .,
''கவிதை,
கேட்டால் காதல்வரும்''
என்றேன் ...
எரிப்பது போல்
வெறித்தாய்
''கவிதையின் மேல்''
என்றேன்
விழி மாற்றி,
மொழி மாற்றி
''அப்படியா சொல்''
என்றாய்
அவ்வளவுதான்
காகிதத்தில்
கவிதை எழுதுவதை
அன்றோடு நிறுத்திவிட்டேன்.
எனக்கான கவிதை
எங்கென
எனைக்கேட்கும்
என்னவனே...
'' நீதான் கண்களால்
அறைநோடிஇல்
ஆயிரம் கவிதை எழுதுகிறாயே ....
நான்வேறு எழுதவேண்டுமா என்ன????
உன் நினைவுகள் என்னும்
கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே
இது கூட காதல் கவிதை தானே...
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு...
இனி
வார்த்தையொன்றுமில்லை எனக்கு...
இறுதில் -அந்த
தேவ வார்த்தையை
உதிர்ர்த்துவிட்டு போனாய்
''பிடிச்சுருக்கு'' என்று.....
3 comments:
கன மழைக்குள் சிக்கி காணாமல் போகும் உங்க கவிதை
எனக்கும் பிடிச்சிருக்கு . நிலாமதி
நன்றி நிலா .....
awwwww <3
Post a Comment