
பாலைவன
பள்ளத்தாக்குகளில்.,
பதிந்து போன
பாத சுவடுகளை
பக்குவமாய்
ஆராய்கிறேன் -நீ
இங்கு வந்திருப்பையோ என்று .,
பாளை மணலில்
பதிந்து கிடக்கும்
பாத சுவடு ஒவோன்றாய்
பார்த்து ,பார்த்து
இறுதியில்
உறுதி செய்கிறேன்
கண்டது கனவு என்று...
கண்ங்கள் மூடி கரைகிறேன்
எங்கிருந்தோ வந்து
இருக்கமாய்
இதயத்தில் முத்தம் பதித்து
மார்பில் புதைந்து
மறைந்து போகிறாய்....
காலக்காலமாய்
காத்து கிடக்கிறேன் ....
முத்த சுவடு ,
முறிந்துவிடாமல் இருக்க .
எழுதிய கவிதைகள் எல்லாம் .,
வாசிக்க காத்து கிடப்பது போல் ,
யூகம் யூகமாய் -உன்னை
நேசிக்க காத்து கிடக்கிறேன்
மீண்டுன் வருவாய் என......
No comments:
Post a Comment