
சொல்லடி என் ஸ்நேகிதியே!!!
`பல முறை...`
என் கண்களை பார்த்து
நேர் முகங்கண்டு என்னிடம் பேசிட
துணிவில்லாமல் தன் செய்கையினாலும்
அசைவினாலும் என்னோடு
உரையாடியவர்களை மட்டுமே
நான் இது வரைக் கண்டிருக்கிறேன்!!!
`முதல் முறை... `
என் கண் பார்வையையும்
அதின் சபதங்களையும் எதிர்த்து
முறைத்து பேசிடும் அளவுக்கு உன்னையும்
ஆண்டவன் படைத்திருக்கிறான் என்று உன்னை
பார்த்து போதே நான் புறிந்து கொண்டேன்!!!
`பல முறை...
`என்னிடம்
பழகிடவருவோர்கள் எல்லாம் தயங்கி
தயங்கி ஒரு பிழையின்றி பேசிட யோசித்து
யோசித்து கவனமாய் என்னோடு பேசியோர்களை
மட்டுமே நான் இது வரைக் கண்டிருக்கிறேன்!!!
`முதல் முறை ...`
என் பேச்சுத்
திறனையும்சொற்களையும் திக்கித் தடுமாறிநாவு
தடம் புரல செய்திடும் அளவுக்கு உன்
ஒரு சொல் நயம் மிக்க சொல் கண்டு நான்
சற்றே சட்டென்று வியந்தும் போனேன்!!!
`பல முறை...`
என்னிடம் பேசியோர்களை கண்டு
நான் எகத்தாளமாய் பேசி சிரித்து
பரிதாபப் படுத்தியது உண்டு!!!!
`முதல் முறை...`
என் சிரிப்பையும் கூட
சிந்திக்கச் செய்து சிரிக்க வைத்தாயடி!!!
உன்னை நான் என்னவென்று
சொல்லி கவிதை
கிறுக்குவேன் சொல்லடி என் ஸ்நேகிதியே!!!`
-கவியழகன்!
4 comments:
உறையாடியவர்களை
உரையாடியவர்களை எழுத்துப்பிழை மாற்றவும்
அழகான கவிதை
உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி சக்தி...
ஓ என் இனிய காதலியே .......ஏன் என்னை மாற்றினாய்
Thanks, great blog post
Post a Comment